என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குடும்ப ரீதியாக அவ்வப்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளுக்கு மத்தியில் வீட்டு கடன் மாதாந்திர தவணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே கவனிக்கலாம்.
    சொந்த வீடு என்ற கனவை நிஜமாக்க உதவும் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை ஒவ்வொரு மாதமும் கட்டி முடிக்கும்போது ஏற்படும் நிம்மதியை நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். குடும்ப ரீதியாக அவ்வப்போது ஏற்படக்கூடிய எதிர்பாராத செலவுகளுக்கு மத்தியில் வீட்டு கடன் மாதாந்திர தவணையை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் குறிப்புகளை இங்கே கவனிக்கலாம்.

    தவணைக்கான கால அவகாசம்


    வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வீட்டு கடன் பெறும் சமயங்களில் அதற்கான மாதாந்திர தவணையை, வருட வருமானத்தை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் நீண்டதாக தேர்ந்தெடுத்தால், கட்ட வேண்டிய மாத தவணை குறைவாக இருக்கும்.

    அதனால், மாத செலவுகளில் பட்ஜெட் பெரிதாக பாதிக்காது. அதே சமயம் எதிர்காலத்தில் கிடைக்கலாம் என்று எதிர்நோக்கும் வருமான உயர்வை கணக்கில் கொண்டு அதிக இ.எம்.ஐ கட்ட இயலும் என்ற நிலையில் தவணை காலத்தை குறைத்து நிர்ணயம் செய்தால், வட்டிக்கான தொகை கணிசமாக குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

    தவறாத மாதாந்திர தவணை

    கடனுக்கான மாத தவணைகளை இடையிடையே கட்டாமல் தவற விடும் காரணத்தால் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் மீது கொண்ட நம்பகத்தன்மை பாதிக்கப்படுகிறது. அது கிரெடிட் புள்ளிகளை பாதிப்பதால் எதிர்காலத்தில் மற்ற வகை கடன்களை பெற முயற்சிக்கும்போது தடைதாமதங்கள் ஏற்படலாம். அதனால், கடன் தவணைகள் சரியாக திரும்ப செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

    ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’

    மாத தவணைகளை முறையாக செலுத்துவதில் சிக்கல்கள் இருக்கும் நிலையில் மொத்த வீட்டு கடன் தொகையை, குறைவான வட்டி விகிதம் கொண்ட மற்றொரு வங்கி அல்லது கடன் வழங்கும் நிதி நிறுவனத்துக்கு ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’ என்ற முறையில் மாற்றம் செய்து கொள்ளலாம். வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் பல்வேறு கால இடைவெளிகளில் வட்டி விகிதத்தை மாற்றலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் வட்டி விகிதம் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இன்னொரு வங்கி அல்லது நிறுவனத்துக்கு கடனை மாற்றுவது கூடுதல் செலவு மற்றும் நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தற்போதைய வங்கியிலேயே வட்டி விகிதத்தை குறைக்கும்படி கோரிக்கை அளிப்பதும் நல்ல அணுகுமுறை.

    முன்கூட்டியே செலுத்தும் முறை

    பல்வேறு சமயங்களில் கைகளில் கூடுதலான பணம் இருக்கும்போது, கடன் தொகையில் குறிப்பிட்ட அளவை முன்கூட்டியே செலுத்தி விட்டால், வீட்டு கடன் மாதாந்திர தவணை குறைவதுடன், நிதிச்சுமையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    ‘பிரி பேமெண்ட்’ முறை

    கடனுக்கான வட்டி தொகை மற்றும் மாத தவணையின் கால அவகாசத்தை குறைக்கும் விதமாக, குறிப்பிட்ட அளவு தொகையை மொத்தமாக ‘பிரி பேமென்ட்’ என்ற முறையில் திருப்பி செலுத்தலாம். பொதுவாக, மாறுபடும் வட்டி முறையில் பெற்ற கடன்களுக்கு பகுதி கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்த, வங்கிகள் உள்ளிட்ட வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் எந்தவித கட்டணத்தையும் விதிப்பதில்லை. ‘பிரி பேமென்ட்’ தொகை சில ஆயிரங்களில் கூட இருக்கலாம்.

    மேலும், முதலீடு செய்துள்ள பங்குகள் மற்றும் பண்டுகள், பத்திரங்கள், சொத்து விற்பனை, போனஸ், வைப்பு நிதி திட்டம், வரி சேமிப்பு முதலீடுகள் முதிர்வு ஆகியவற்றில் கிடைக்கும் தொகை மூலம் வீட்டு கடனை முழுமையாக அல்லது பகுதியாக செலுத்துவதும் பாதுகாப்பானது.

    நிதி மேலாண்மை

    வடிக்கையாளரின் பி.எப், பி.பி.எப், தபால் நிலைய வைப்பு நிதி போன்ற சேமிப்புகள் உள்ளிட்ட முதலீடு ஆகியவற்றை பட்டியலிட்டு அவற்றில் குறைவான வருமானம் கொண்டவற்றை நீக்குவதன் மூலம் நிதி நிலையை மேம்படுத்தலாம். அதன் மூலம் கிடைத்த முதலீடு அல்லது சேமிப்புகளின் மூலம் வீட்டு கடனுக்கான மாதாந்திர தவணையை செலுத்துவதும் சிறப்பான நிதி நடவடிக்கையாக அமையும்.

    பலாக்காய் சிப்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம். இன்று வீட்டிலேயே பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பலாச்சுளை பழுக்காதவை - 10,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
    மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேகவிடுங்கள்.

    உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.

    இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி தூவிக் கலந்தால் பலாக்காய் சிப்ஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொரித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். யாரெல்லாம் அரைவேக்காடு முட்டை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
    அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. பொரித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.

    அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும் மற்றும் 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.

    அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
    அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் அரிப்புகளை காண முடியும். இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புக்கு சிகிச்சை அளிக்கலாம்.
    பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்.

    மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சாதாரணமான ஆனால் அதிகளவில் இருக்கும் பிரச்சனையாக டையபர் அரிப்பு உள்ளது. அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த வகை அரிப்புகளை காண முடியும்.

    இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும்.

    டையபர் அரிப்புகளை தீர்க்கும் நிவாரண வழிகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி எந்தவொரு அரிப்பு புண்களையும் சரி செய்யுங்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுக்கவும் செய்யுங்கள்.



    இயற்கையான கிருமிநாசினியான தேங்காய் எண்ணெயில் உள்ள மூலப்பொருட்கள் டையபர் அரிப்புகளையும் சரி செய்து விடுகின்றன. உங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் மெலிதாக தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள் மற்றும் கை, கால் மடங்கும் இடங்களிலும் மற்றும் பிளவுகளிலும் விரலை வைத்து இதமாக மசாஜ் செய்து விடுங்கள்.

    மிகவும் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல் டையபர்களை பயன்படுத்தினால் அரிப்புகள் வரும். எனவே மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.

    டையபர் அரிப்பு உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடங்களை சரி செய்ய முடியும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதத்தையும் பாதுகாக்க முடியும். பாதிக்கப்பட்ட இடத்தை காய வைத்து விட்டு, அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். நீங்கள் தடவி விட்ட ஆலிவ் எண்ணெய் ஒரு அடுக்கு போல செயல்பட்டு, தண்ணீர்; சருமத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.

    உங்கள் குழந்தை சில மணி நேரங்கள் டையபர் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்திற்கு காற்றுடன் நேரடியான தொடர்பு ஏற்படும். டையபர் அரிப்புகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டிய மிகச்சிறந்த இயற்கையான வழிமுறைகளில் இதுவும் சிறந்த வழிமுறையாகும். 
    சிலருக்கு காரசாரமாக சாப்பிட பிடிக்கும். இன்று பச்சை மிளகாயில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 15,
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  
    கடுகு - அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    வறுத்துப் பொடிக்க :

    பச்சரிசி - 2 டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிதளவு.



    செய்முறை:

    வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.

    பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும்.

    புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும்.

    அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும்.

    குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

    சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

    இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்றாகும்.
    பெண்கள் ஆண்களிடம் பழகும் போது ஒருசில விஷயங்கள் கவனிப்பார்கள். அதில் ஆண்களின் பழக்கவழக்கங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அவர்களின் சுகாதாரமும் ஒன்று. ஆண்கள் நன்கு சுத்தமாக, ஹேண்ட்சம்மாக இருந்தால், பெண்கள் அவர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவார்கள். ஏனெனில் பெண்கள் எதிலும் சுத்தமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரின் சுகாதாரம் மற்றவர்களின் முன் நல்ல மரியாதையையும் வழங்கும். சரி, இப்போது பெண்கள் ஆண்களிடம் மறைமுகமாக கவனிக்கும் சுகாதார விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

    உடல் முழுவதும் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருக்காது. அளவுக்கு அதிகமான பெர்ப்யூம் அருகில் வருவோருக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தும். ஆகவே குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீங்கள் பெர்ப்யூம் அடித்தால் போதும். அதிலும் காதுகளுக்கு பின், மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற இடங்களில் மட்டும் ஆண்கள் பெர்ப்யூம் அடித்துக் கொண்டால் மட்டும் போதும். அதுவே அவர்கள் மீது அளவாக நல்ல நறுமணத்தை வீசும்.

    சில பெண்கள் ஆண்களின் முடியால் மயங்குவார்கள். அதற்காக ஆண்களின் முடியை அடிக்கடி வருடிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உங்கள் காதலி அல்லது மனைவி உங்கள் முடியை அதிகம் தொட்டுப் பேசும் போது, தலையில் பொடுகு இருந்தால் எப்படி இருக்கும். ஆகவே தினமும் மைல்டு ஷாம்பு போட்டு குளித்து உங்கள் முடியை சுத்தமாக வைத்திருங்கள்.



    ஆண்களின் உதடுகளைப் பார்த்தால் முத்தம் கொடுக்க தோன்ற வேண்டும். அதைவிட்டு உலர்ந்து காணப்பட்டால், யாருக்கு தான் பிடிக்கும். ஆகவே உதடுகளை எப்போதும் வறட்சியின்றி நீர்ப்பசையுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு வேஸ்லினை உதடுகளுக்கு தடவி வாருங்கள்.

    பற்கள் காலையில் காபி குடிப்பதில் இருந்து சிகரெட் மற்றும் இதர குளிர் பானங்களைக் குடிப்பதால், முத்துப் போன்ற பற்கள் மஞ்சள் நிறத்தில் அழுகிப் போன பற்கள் போன்றாகிவிட்டன. மஞ்சள் நிறத்தில் பற்கள் இருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட ஏன் பேச கூடமாட்டாள். ஆகவே தினமும் பற்களை துலக்கும் போது பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி துலக்குங்கள். அல்லது வேறு ஏதேனும் இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குங்கள்.

    வயதாக ஆக உடலின் பல பகுதிகளில் தேவையற்ற முடிகள் அதிகம் வளர ஆரம்பிக்கும். ஆனால், சில ஆண்களுக்கு இளமையிலேயே மூக்குகளில் வளரும் முடியானது வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும். அப்படி மூக்குகளில் முடி நீட்டிக் கொண்டிருந்தால், அது மோசமான தோற்றத்தை வெளிக்காட்டும். ஆகவே அவ்வப்போது மூக்கில் வளரும் முடியை வெட்டிவிடுங்கள்.
    சிலருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடும். இத்தகைய சுருக்கங்களை அழகு நிலையங்களுக்கு சென்று நீக்குவதை விட, வீட்டில் இருந்தே ஈஸியாக சரிசெய்யலாம்.
    பொதுவாக சுருக்கங்கள் வருகிறதென்றால் அதற்கு காரணம் வயதாகிவிட்டது என்று அர்த்தம். அவ்வாறு வயதாகி சுருக்கங்கள் வந்துவிட்டால் பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று அதனை நீக்கி அழகுப்படுத்திக் கொள்கின்றனர்.

    அவ்வாறு அழகுபடுத்தும பெண்கள் முகம், கழுத்து மற்றும் கைகளை மட்டும் தான் பராமரிப்பார்கள். சுருக்கங்களானது முகம், கைகளுக்கு மட்டும் வருவதில்லை, வயதானால் உடல் முழுவதும் தான் வரும். மேலும் சிலருக்கு சுருக்கங்கள் இளம் வயதிலேயே வந்துவிடும். இத்தகைய சுருக்கங்களை அழகு நிலையங்களுக்கு சென்று நீக்குவதை விட, வீட்டில் இருந்தே ஈஸியாக சரிசெய்யலாம்.

    சருமத்தில் எப்போதும் ஈரப்பசையானது இருக்க வேண்டும். அதுவும் முகம் மற்றும் கைகளுக்கு மட்டும் அல்ல, கால்களுக்கும் தான். அவ்வாறு ஈரப்பசை இல்லாமல் இருந்தாலும் சுருக்கங்கள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இருமுறை உடம்புக்கு தடவும் லோசனை தடவ வேண்டும். அதுவும் காலையில் குளித்த பின்னும் மற்றும் இரவில் படுக்கும் முன்னும் தேய்த்து 15 20 நிமிடம் தேய்த்து, பிறகே ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் லோசனானது சருமத்தில் நுழைய சிறிது நேரம் ஆகும். ஆகவே இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் நாளடைவில் சுருக்கங்கள் போய்விடும்
    தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்
    கேரட் - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    உருளைகிழங்கு - 50 கிராம்
    வெங்காயம் - 50 கிராம்
    ப.மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    கடுகு, உளுந்தம்பருப்பு, எண்ணெய்.



    செய்முறை :

    கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.

    காய்கறிகள் வெந்தவுடன் அதில் வறுத்த கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.

    தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சத்தான கேழ்வரகு வெஜிடபிள் உப்புமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அந்த பிரச்சனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தால், அது அவர்களுக்கு ஒரு மறு ஜென்மம்.

    மேலும் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறு சொல்வார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் எப்படி ஒரு கட்டிடத்திற்கு அடித்தளம் நன்றாக இருந்தால் தான் அக்கட்டிடம் வலிமையாக நீண்ட நாட்கள் இருக்குமோ, அதேப்போல் குழந்தைக்கு உருவாகும் உறுப்புக்கள் அடிப்படையிலேயே ஆரோக்கியமாக இருந்தால் தான், குழந்தையின் வளர்ச்சி நன்கு இருக்கும்.

    அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் தான் குழந்தைக்கு சில முக்கிய உறுப்புக்களும், வடிவமும் கிடைக்கும். ஆகவே இக்காலத்தில் சற்று கவனமாக இருந்தால், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். இங்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் எந்தெந்த உறுப்புக்கள் வளரும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை நன்கு கேட்கலாம். இதயம் இக்காலத்தில் தான் உருவாகும் என்பதால், சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், குழந்தை இதய பிரச்சனையுடன் பிறக்கக்கூடும்.

    மனித உடலில் மூளை மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த மூளையும் முதல் மூன்று காலத்தில் தான் உருவாகும். மேலும் ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும் இம்மூளையானது வளர்ச்சியடையும். இருப்பினும், கர்ப்பிணிகள் ஆரம்பத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    முதல் மூன்று மாத காலத்தில் உருவாகும் மற்றொரு முக்கியமான ஒன்று தான் சிறு மூட்டுகள் உருவாவது. இக்காலத்தில் மூட்டுகள் உருவாகி, அதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் மூன்று மாத காலத்தில் மூட்டுகளைச் சுற்றி தசைகள் உருவாகும்.

    மூட்டுகள் உருவாவதைத் தொடர்ந்து கைகள், கால்கள் மற்றும் விரல்களுடன் நகங்களும் உருவாக ஆரம்பமாகும். எனவே இக்காலத்தில் கர்ப்பிணிகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், இவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

    சில கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாத காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக்கூடும். எனவே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை தவறாமல் பிரசவம் நடைபெறும் வரை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் மலச்சிக்கல் இருந்தால், அதனாலேயே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி சில பெண்கள் முதல் மூன்று காலத்தில் வாந்தி, மயக்கம், கடுமையான சோர்வை உணர்வார்கள். ஆகவே அதற்கேற்ற உணவை தவறாமல் எடுத்து வருவது, சற்று ஆறுதலாக இருக்கும்.

    முதல் மூன்று மாத காலத்தில் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதற்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் தான் காரணம். அதுமட்டுமின்றி, இக்காலத்தில் மார்பகங்களின் அளவு அதிகரிப்பதோடு, மென்மையாகவும் இருக்கும்.
    ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.

    15 வயது தொடக்கத்தில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது.

    20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.

    30 வயது முதல் 40 வயது வரை உள்ள காலகட்டத்தில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.

    40 வயதின் தொடக்கத்தில், 50 வயது முடிவில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.

    60 வயதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால் நடப்பயிற்சியை செய்து வரலாம்.
    கிரீன் டீ உண்மையாகவே உடலுக்கு நல்லதா? எடையைக் குறைக்கிறதா? கிரீன் டீயில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.அரசியல்

    கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

    கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

    பற்களில் ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மியூட்டன்ஸ்  (Streptococcos mutans) என்ற பாக்டீரியா வளர்ந்தால், பற்கள் பாதிக்கப்பட்டு, சொத்தையாக மாறும் அபாயம் உண்டு. கிரீன் டீ குடித்தால், அதில் இருக்கும் கேட்டசின், இந்த வகை பாக்டீரியாக்களை அழித்து, பற்களைக் காக்கும்.அரசியல்

    கிரீன் டீ இன்சுலின் செயல்பாட்டை சிறிதளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, டைப்-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது. சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ அருந்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரையும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

    இதயத்துக்குச் செல்லும் வால்வுகளில் கொழுப்புக் கட்டிகள் சேர்வதைத் தடுக்கும் வல்லமை பெற்றது கிரீன் டீ. இதய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கும், பக்கவாதம் வராமல் இருக்கவும் கிரீன் டீ அருந்தலாம். கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச்சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

    கிரீன் டீ  ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு அணில் கொழுக்கட்டை மாவை பயன்படுத்தி பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1/2 கப்
    பால் - 1 கப்
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை



    செய்முறை :

    ஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.

    2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

    அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.

    பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

    சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.

    இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.

    குறிப்பு:
    வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×