என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.
    தற்கால சூழ்நிலையில் பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் ஓய்வு பெறும் முதியோர்கள் வரை எல்லோரும் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர்.
    பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் பள்ளியில் ஹோம் ஒர்க் அதிகமாக கொடுக்கும் போதும், அதிகமாக படிக்க வேண்டிய நேரத்திலும், பரிட்சை சமயத்திலும், குழந்தைகளுக்கு பிரியமில்லாத ஒன்றை பல வந்தமாக திணிக்கும் போதும் பள்ளிப் படிப்புக்கு கட்ட வேண்டிய பணத்தை காலத்திற்கு சரியாக கட்ட முடியாத நிலையில் பள்ளி நேரத்தில் பல மாணவர்கள் முன்னால் பள்ளியின் ஆசிரியர் கண்டித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போதும், வீட்டில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னால் அடிக்கடி சண்டை போடும் போதும், சிறு வயதினர் தனக்கு ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்த போது இதுநாள் வரைக்கும் தன் மீது அதிக பிரியத்தை காட்டிய பெற்றோர்கள் தன்னைவிட பிறந்த குழந்தையின் மீது அதிக பிரியத்தை காட்டும்போதும் சிறுவயதினர் மன அழுத்தத்திற்கு உட்பட்டு தலைவலி, கழுத்துவலி, வயிற்று வலி போன்ற கோளாறுகளுக்கு உட்படுவர். மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய் காட்டும் போது மருத்துவர் பரிசோதித்து பார்த்து உடலில் எந்தவிதமான கோளாறும் இல்லை என்று கூறிவிடுவார்.

    பெற்றோர்கள் தன் பிள்ளைகள் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் பள்ளி இறுதி ஆண்டில் 90 சதவீதம் விட அதிக மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் கல்லூரியில் இடம் கிடைக்காது என்று அடிக்கடி கூறும்போது அதிக மார்க் வேண்டுமே என்று மாணவ, மாணவியர்கள் பயப்படும் போது அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு உயர் ரத்த அழுத்தம், வயிற்றில் புண், அதிக அமில சுரப்பு போன்றவைகளால் பாதிக்கப்படுவர்.

    கல்லூரி படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் அல்லது நன்கு கவனம் செலுத்தி படிப்பவர்களும் கூட காதல் போன்ற விஷயங்களில் சிக்கிக் கொண்டு பிறகு குடும்பத்திற்கு தெரியக்கூடாது என்று மறைக்க முயலும் போதும், குடும்பத்திற்கு தெரிந்த பிறகு பெற்றோர்களால் கடுமையாக கண்டிக்கப்படும் போதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் மனபாதிப்புக்கு உள்ளாவர். பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி படிப்பு முடியும் காலம் வரை நேரத்திற்கு சரியாக பிள்ளைகள் வீட்டுக்கு வரவில்லை என்றால் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டார்கள் அல்லது பிள்ளைகள் தவறான பாதையில் போகிறார்களா என நினைத்து பெற்றோர்கள் கலக்க முறுவர்.

    கல்லூரி படிப்பிற்கு பிறகு தனது படிப்புக்கு தகுந்த உத்தியோகம் கிடைக்காத போதும் தனக்கு பிரியமில்லாமல் திருமணம் செய்து கொண்ட நிலையிலும் படிப்பிற்கு எந்த ஒரு வேலையையும் செய்யாமல் ஊர்சுற்றி வரும் பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்கள் தன் சுற்றம், நண்பர்கள், அக்கம் பக்கம் உள்ள வீட்டினரிடம் குறை கூறும்போதும், வாகனங்களில் செல்லும் போது நெரிசலான இடங்களில் விபத்து ஏற்படாமல் இருக்க அதிக கவனம் செலுத்தி போகும் போதும் ஒரு பாதிப்புக்கு உள்ளாவர்.

    பெரியவர்கள் சொத்துத் தகராறு, தொழிலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, வீட்டில் யாராவது இறந்து போதல், உத்தியோகத்தில் மேலதிகாரி அல்லது தனக்கு கீழ் வேலை செய்பவர்களிடம் விவாதிக்கும்போது, தனது வேலையை சரியாக செய்யாமல் சிக்கிக் கொள்ளும் போதும், வயதானவர்கள் தன்னுடைய பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்காமல் உதாசீனப்படுத்தும் போதும், இப்படி வாழ்க்கையில் பல சூழ்நிலையில் பல கால கட்டங்களில் பல்வேறு காரணங்களினால் கோபப்படுவது தவறு செய்வதனால் ஏற்படும் குற்ற உணர்வு, பயப்படுவது, சலிப்புறுவது மற்றும் கோபப்படுவதினால் உடலும், மனமும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

    மனஅழுத்தம் ஏற்படும் ஒவ்வொரு சமயமும் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரியின் மூலம் உடலின் இயக்கம் அனைத்தும் அதிக பரபரப்புடன் செயல்படத் தூண்டுகிறது மூளை. இதனால் இருதயத்துடிப்பு அதிகரித்து தசை நரம்புகளில் ரத்தத்தை அதிகமாக நிரப்புகிறது. உமிழ்நீர் சுரப்பிகள் அடைப்பட்டு வாய் உலர்ந்து போகிறது. பிராண வாயு தேவைக்காக சுவாசம் வேகப்படுகிறது. சக்தி பெருக சர்க்கரையும் கொழுப்பும் ஏராளமாக ஈரலில் இருந்து வெளியேறுகிறது. ஜீரணிப்பு நின்று போகிறது. அதனால் ரத்தம் தசைகளுக்குள் திசை மாறி பாய்கிறது. அகண்ட கண் பார்வை உண்டாகிறது. உடலில் வியர்வை பெருகி சூடு குறைகிறது. அட்ரினலின், நாரட்னயின் போன்ற ஹார்மோன்களை அட்ரீனல் சுரப்பி வெளியிடுகின்றன. தோல் சார்ந்த உபரிக் கொழுப்பும், ரத்தத்துக்குள் கலந்து விடுகின்றன.

    கழிவு அகற்றும் குடலும், சிறுநீரகமும் வேலையை குறைத்துக் கொள்வதால் உடல் தொடங்குகிறது. இதனால் உடலின் இயல்பான இயக்கம் பாதிக்கப்படுகிறது.
    மனித உடலில் நரம்புகள் மற்றும் நாளமில்லா சுரப்பி தொகுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் வரையில் உடலும், மனமும் புற உலக பாதிப்புக்கு உட்படும் போது, சிறிது நேரத்தில் மீண்டும் தனது இயல்பான செயல் நிலைக்கு திரும்புகின்றன. ஆனால் நரம்புத் தொகுப்பு மற்றும் சுரப்பிகளின் ஹார்மோன் அளவுகள் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டால் ரத்த அழுத்தம், உடல், மனசோர்வு, மனஉளைச்சல் மற்றும் நரம்பு தொடர்பான நோய்களும் உண்டாகின்றன.

    மேலும் முக்கிய சுரப்பிகளின் செயல்பாடு சீர்குலையும் போது உடலின் வளர் சிதை மாற்ற சமநிலை பாதிக்கப்பட்டு உடலில் பல கடுமையான நோய்களை தோற்றுவிக்கின்றன. யோகாசனங்களின் ஒவ்வொரு நிலைகளும் ஒரு குறிப்பிட்ட முறையில் செயலாற்றி நரம்பு மண்டலத்தை தூய்மைப்படுத்தி பலப்படுத்துவதுடன் அங்கு நரம்பு வேதியல் செய்து பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் அனைத்து நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தையும் சீர்படுத்தி சமநிலையில் செயல்படத்தூண்டுகின்றன.

    தினமும் 15-20 நிமிடம் செய்யும் பிராணாயாமம் யோக நித்திரை, தியானம் போன்ற பயிற்சிகள் மனஇறுக்கம், அழுத்தத்தை நீக்குவதுடன் அன்றாட வாழ்க்கையில் நமது மனம் இரண்டு நிலையில் செயல்படும் ஆற்றலை அளிக்கின்றன. ஒன்றுபுற உலக பாதிப்பிற்கு மனம் உட்பட்டாலும், உடனடியாக தனது இயல்பான நிலைக்கு திரும்பும் ஆற்றல், மற்றொன்று புறவுலக பாதிப்புகளை எதிர்த்து செயல்படுதலும் அப்படி செய்யப்படும் போது உடல் இயக்கம் பாதிக்கப்படாமல் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. மனஅழுத்தத்தை நீக்குவதற்கு பல்வேறு யோகப் பயிற்சிகள் உள்ளன.

    வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.
    புகார்க் கூடங்களாக ஏன் குடும்பங்கள் மாறிவருகின்றன? என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை என்று எல்லோரும் ஏன் பேசத் தொடங்கிவிட்டோம்? வாழ்வு பாடாய்ப் படுத்துவதாக ஏன் நினைக்கத் தொடங்கியுள்ளோம்?

    சிலருக்கு இருக்கப் பிடிக்காமல் ஏன் வெறுக்கப் பிடிக்கிறது? உப்பு விற்கப்போனால் மழைபெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது. சாண் ஏறினால் முழம் சறுக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு உள்ளத்திலும் நூற்றுக்கணக்கான புகார்ப் பட்டியல்கள். என்ன ஆயிற்று நம் இந்தியக் குடும்பங்களுக்கு?

    ‘வீடு சிறையாக மாறிவிட்டது. வறட்டு கவுரவமும் தேவையில்லாப் பிடிவாதமும் எங்களை வெறுப்பில் ஆழ்த்துகின்றன’ என்கிற இளைய சமுதாயத்தின் குரல் ஒருபுறம். பொறுப்பு வெறுப்பாய் மாறி மகனை, மகளை, மனைவியைக், கணவனைத், தந்தையைக் கொலை செய்யும் அளவுகூடக் கொண்டுபோய் விடுகிறது.

    எதையும் விட்டுக் கொடுப்பதற்கு யாரும் தயாரில்லை. ஐவகை நிலமும் அறிந்தவன் பால்கனிச் செடியைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானதோ அதைப்போல் நல்ல குடும்ப அமைப்பு நம் கண் முன்சிதைந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

    வீட்டுக்குள் நுழைந்தாலே ஆளாளுக்குப் பிரச்சினைகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள், வீட்டுக்குள் நுழையவே பிடிக்கவில்லை என்று இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்குள் நுழையும் குடும்பத் தலைவர்களைக் குடும்பங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனவா?

    இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் தனிமையின் துயர் அறுக்க இணையதளங்களிலும் சமூகஊடகங்களிலும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பறவைகளை இந்தக் குடும்பங்கள் எப்படி ஆற்றுப்படுத்தப் போகின்றன? உருகத் துடிக்கிற பனியைப் பருகத் துடிக் கிற இளைய உதடுகள் இது குறித்து என்ன சொல்லப் போகின்றன?

    பொறுப்பாயிருக்கிற வரை வெறுப்பாயிருக்காது எதன்மீதும்! அந்தப் பொறுப்பை யார் யாருக்கு உணர்த்துவது? நாம் அசருகிற போதெல்லாம், ‘விடுறா இதெல்லாம் வாழ்க்கையில சகஜம். பிரச்சினையைத் தூக்கிப் போட்டுட்டு ஆத்தாளுக்கு பதினோறு ரூபாய் முடிஞ்சி வச்சிட்டு அடுத்தவேலை பாருடா’ என்று சொன்ன அந்த சுமைதாங்கி மனிதர்களை அன்னை இல்லங்களில் கொண்டு விட்டுவந்த இடரை இப்போது அனுபவிக்கிறோம்.

    கால்நூற்றாண்டு உறவுகளை எல்லாம் திருமணம் என்கிற பந்தத்தின் பொருட்டு விட்டுவிலகி வந்து தன்னையே நம்பி வாழும் மனைவிக்கு மனது என்ற ஒன்று இருக்கிறது, அவள் நலன் நாடல் என் கடமை என்று கணவன் ஏன் நினைப்பதில்லை?

    உலகம் செலுத்தும் பேரன்பில் ஓரன்பாவது நமக்குக் கிடைக்கத் தானே செய்யும்! நாம் மட்டும் ஏன் அந்த அன்பை மற்றவர்களுக்குத் தர மறுக்கிறோம்.

    நாடகங்களில் காட்டுமளவு வெகு கொடூரமாக இன்னும் மாறவில்லை குடும்பவாழ்வு. கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியைச் சரியாகப் புரிந்துகொள்கிறவர்கள் வெற்றி வந்தால் அளவுக்கதிகமாய் ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டுபோகாமலும் வெகுஇயல்பாய் இருக்கிறார்கள்.

    என்னதான் நம் வாழ்வின் வினாடிகள் வெளியில் ஆட்டமும் ஓட்டமுமாய் கழிந்தாலும் ஆன்மா ஆனந்தமயமாவதும் அமைதியடைவதும் இல்லத்தில்தான். இல்லத்தில் உள்ளது நம் உள்ளத்தின் நிம்மதி. அந்த இல்லத்தைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நாம்தான்.

    அலுவலகத்தில் மேலாளர் என்ன சொன்னாலும் பொறுமையுடன் யோசித்து அமைதியாய் பேசும் நாம் வீட்டில் எரிந்துவிழுகிறோம். ஒன்றுமில்லாத சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுகிறோம். வெளியே போய்விட்டு வீட்டிற்குள் நுழையும்போது எப்படிச் செருப்பை வெளியே கழற்றிப் போட்டுவிட்டு வருகிறோமோ அதேபோல் வெளியில் உள்ள பிரச்சினைகளைக் குடும்பத்திற்குள் கொண்டுவராமல் இருப்பதே குடும்பஅமைதிக்கு வழிவகுக்கும்.

    சொற்களால் பிரிந்த குடும்பங்கள் ஆயிரம்! கனத்த சொற்களால் தான் நம் கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதில்லை. மென்மையாக ஆனால் அழுத்தமாக நாம் சொல்லவேண்டியதைச் சொல்லலாம்.

    மீட்டித்தான் ஆகவேண்டும் இந்த வாழ்வெனும் வீணையை, வாழ்ந்து காட்டித்தான் ஆகவேண்டும் நம்மை வெறுப்போருக்கு மத்தியிலும். தொட்டிக்குள் வாழ்ந்தாலும் சலிப்பில்லாமல் நீந்துகிற மீன்களைப் போல் நம் இயக்கம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும். மூலவருக்கு முன் மனமுருகி பிரார்த்திக்கும்போது யாரேனும் மணியசைத்து அது நடக்கும் என்று குறியீடாக உணர்த்திவிடுகிற மாதிரி சுற்றிநடக்கும் சம்பவங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன.

    குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வாழ்வின் நுட்பங்களைக் கற்றுத்தந்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று எப்படி இயங்குகிறது எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது? எப்படி முடிவெடுப்பது? வெளிஉலகத்தில் எப்படி நாம் நம்மை நிலைப்படுத்திக்கொள்வது? என்று உணர்த்தியிருந்தால் அவர்கள் முகத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும்.

    அப்பா அன்பு அப்போது புரியாது, அம்மா தியாகம் தான் அம்மாவாக மாறும்போதுதான் தெரியும். பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கும் அவள் சொல்லும் ஆயிரமாயிரம் கதைகளுக்கும் எதை நாம் ஒப்பீடாகச் சொல்லமுடியும்? தன் தங்கைக்குத் தலைச்சன் பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசையோடு சேனை வைக்க ஓடிவரும் அன்பு வடிவமான தாய்மாமனுக்கு ஈடாக வேறுயாரைச் சொல்ல முடியும்? உறவுகளை மதிக்கக் கற்றுத் தாருங்கள்.

    உறவுகளின் உன்னதத்தைச் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குப் புரியவையுங்கள். பெரியவர்களின் சொற்படி நடப்பது பாதுகாப்பானது என்று சொல்லி வளருங்கள்.

    வெறுப்பில் இல்லை வாழ்வின் வெற்றி, நிறைவின் இருப்பில்தான் உள்ளது என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்வெனப்படுவது வலியோடும் வலிமையோடும் வாழ்ந்து காட்டுவது என்று புரிய வையுங்கள். குடும்பம் முழுமையான வாழ்தலுக்கான அன்பின் பயிற்சிக்கூடம். அதில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

    அன்பிற் சிறந்த தவமில்லை என்றார் மகாகவி பாரதி. அன்பைத் தவிர குடும்பத்தில் வேறில்லை.

    முனைவர் சவுந்தர மகாதேவன், கல்லூரி பேராசிரியர், நெல்லை
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டையில் கட்லெட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த கட்லெட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 5
    உருளைக்கிழங்கு - 500 கிராம்
    மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
    கரம்மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
    மிளகுத்தூள்     - 1 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தேங்காய் பால் - அரை கப்
    மைதா மாவு - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 250 கிராம்
    ரொட்டித்தூள் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    முட்டை, உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.

    முட்டையை தோல் நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.

    வெட்டிய முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு கலக்கி வைக்கவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம்மசாலாத்தூள், மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.

    இந்த முட்டையை ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த முட்டைகளை போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டை கட்லெட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒருமுறை சமைத்த உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது தவறான பழக்கம். அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீரியம் இழந்துபோய் விடும்.
    சமைக்கும்போது மீதமாகும் உணவு பொருட்களை பிரிட்ஜில் சேமித்து வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கம் நிறைய வீடுகளில் நடைமுறையில் இருக்கிறது. ஒருமுறை சமைத்த உணவு வகைகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது தவறான பழக்கம். அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீரியம் இழந்துபோய் விடும். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. முட்டையை அவித்தோ, குழம்பாகவோ, வறுவலாகவோ சமைத்தால் உடனே சாப்பிட்டுவிடவேண்டும். அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீணாவதோடு, வயிற்று உபாதைக்கும் வழிவகுத்துவிடும்.

    காளான்களில் புரதமும், தாதுக்களும் அதிகம் இருக்கிறது. அவைகளை அதிக சூடாக சமைக்கக் கூடாது. அதுபோல் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது. அப்படி சாப்பிடுவது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். நிறையபேர் கோழி குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அப்படி செய்யும்போது அதில் டாக்சின் உற்பத்தியாகி விஷத்தன்மை கொண்டதாகிவிடும். அதனால் உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும்.



    சாதத்தை முடிந்த அளவு சூடாக சாப்பிட வேண்டும். சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும். கீரை வகைகளையும் திரும்பவும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதில் நைட்ரேட் அதிகம் இருக்கிறது. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும்போது நைட்ரேட் அதிகரித்து நச்சுத்தன்மை உடையதாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    கொத்தமல்லி தழை, தக்காளிப்பழம் சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளையும் மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளையும் மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. அப்படி செய்தால் எண்ணெயில் இருந்து வெளியேறும் வாயுக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    ஹேர்கட் செய்துகொள்வதற்கு முன்பு, உங்கள் பணி மற்றும் வயதையும் கருத்தில்கொண்டு தேர்வுசெய்வது அவசியம். எந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு வடிவ முகத்துக்கும் ஒவ்வொரு முடி வடிவமைப்புப் பொருத்தமாக இருக்கும். அதைக் கவனமாகத் தேர்வுசெய்வதில்தான் இருக்கிறது நமக்கான ஃபேஷன். எந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என்று பார்க்கலாம்.

    நீள் வடிவ முகம்:

    நீள் வடிவ முகம் உடையவர்களுக்கு, தாடைப் பகுதி நீளமாக இருக்கும். இவர்கள், முடியை லூஸ்ஹேர் விடாமல், நடு வகிடு எடுத்து, முடியை இழுத்துப் பின்னலிட்டால், முகம் எடுப்பாகத் தெரியும். நீள் வடிவ முகம் உடையவர்கள், முடியை நெற்றியில் விழுவது போன்ற ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம். இது, உங்கள் முகத்தை மெச்சூர்டாகக் காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    முக்கோண வடிவ முகம்:

    நெற்றி பெரியதாகவும் தாடை சிறியதாகவும் உள்ளது எனில், உங்களுக்கு முக்கோண வடிவ முகம். இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ' கட் அல்லது `வி' கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், டிரண்ட்லி லுக் பெறலாம்.

    நீள் வட்ட வடிவம்:

    நீள் வட்ட வடிவ முகம் உடையவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எல்லா வகையான ஹேர் கட்டையும் முயன்று பார்க்கலாம். எந்த விதமான முடி அமைப்பிலும் நீள் வடிவ முகம் அழகாக இருக்கும்.

    சதுர முகம்:

    நெற்றி, தாடை, கன்னங்கள் எல்லாமே சமமாக இருந்தால், உங்கள் முகம் சதுரவடிவ அமைப்பைக் கொண்டது. இவர்களுக்குத் தோள்பட்டை வரை முடியை வைத்துக்கொள்ளும் `யூ' கட் பொருத்தமாக இருக்கும். அல்லது ஸ்கோயர் கட் முறையை முயன்று பார்க்கலாம்.

    வட்ட முகம்:

    முன் நெற்றியையும் கன்னங்களையும் இணைக்கும் விதமாகக் காதுகளுக்குப் பின்னால் முடிவருவது போன்ற லேயர் கட் பொருத்தமாக இருக்கும். லேயர் கட்டில் 90 டிகிரி லேயர் கட், 1 டிகிரி லேயர் கட், க்ராஜூவேடட் லேயர் கட், யூனிஃபார்ம் லேயர் கட் என நிறைய வகை உள்ளன. 90 டிகிரி லேயர் கட் என்பது, நிறைய லேயர்களாக முடியை வெட்டிக்கொள்வது. முடி அதிகம் உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். 1 டிகிரி லேயர் கட் என்பது, லேயர்கள் குறைவாக உள்ளது. முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். க்ராஜூவேடட் லேயர் கட் என்பது, சில இடங்களில் லேயர்களாகவும், சில இடங்களில் நார்மலாகவும் இருக்கும் .யூனிஃபார்ம் லேயர் கட் என்பது, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான லேயர்களாக இருக்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பவர்கள் இதனை யூனிஃபார்ம் கட் தேர்வுசெய்யலாம்.
    ‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.
    பெயர் விளக்கம்: ‘பவன’ என்றால் பிராணவாயு ‘முக்த’ என்றால் விடுவிப்பது. ‘ஆசனம் என்றால் இருக்கை உடலில் பிராண வாயு செல்லும் பாதைகளில் ஏற்படும் அடைப்பை நீக்கி பிராண வாயுவை மிகச் செய்வதால் இப்பயிற்சிக்கு பவன முக்தாசனம் என்று பெயர்.

    பயிற்சி 1 : கால் விரல்களை வளைத்தல் :

    தரை விரிப்பின் மேல் கால்கள் இரண்டையும் நீட்டி வைத்து (தண்டாசனத்தில்) அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருகால் விரல்களையும் முன் நோக்கி நிதானமாக வளைக்கவும். மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி நிதானமாக இரு கால் விரல்களையும் பின்னோக்கி வளைக்கவும்.
    இது ஒரு சுற்று பயிற்சி ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: பவன முக்தாசனத்தில் வரும் ஒவ்வொரு பயிற்சியிலும் உடலின் எந்த பகுதிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதோ அந்த பகுதியை மனதால் நினைத்து செய்யவும்.

    பயிற்சி 2 குதிகாலை வளைத்தல் : தண்டாசனத்தில் அமரவும். மூச்சை வெளியே விட்டபடி இருபாதங்களையும் நிதானமாக முன்னோக்கி வளைக்கவும்.
    மூச்சை உள்ளுக்கு இழுத்தபடி இருபாதத்தையும் பின்நோக்கி வளைக்கவும். இது ஒரு சுற்று ஆகும். இப்படி 10 சுற்று பயிற்சி செய்யவும்.

    பயிற்சி 3 குதிகாலை சுழற்றுதல்: தண்டாசனத்தில் அமரவும். நிதானமாக இரு பாதங்களையும் இடமிருந்து வலமாக 10 முறை சுழற்றவும். பிறகு இரு பாதங்களையும் வலமிருந்து இடமாக 10 முறை சுழற்றவும். இப்பயிற்சியில் கீழ்நோக்கி கொண்டு போகும் போது மூச்சை வெளியே விடவும். பாதத்தை நேராக கொண்டு வரும்போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

    பயிற்சி 4 : குதிகாலை முன்னுக்கும், பின்னுக்குமாக சுழற்றுதல் : தண்டாசனத்தில் அமரவும். வலது முழங்காலை மடக்கி குதிகாலை நீட்டி வைத்திருக்கும் இடது காலின் தொடைக்கு வெளியே வைக்கவும். வலது கை விரல்களால் வலது கால் மேல்பகுதியை பிடிக்கவும். நிதானமாக பாதத்தை இடமிருந்து வலமாக 10 முறையும், வலமிருந்து இடமாக 10 முறையும் சுழற்றவும். பிறகு இடது காலை மடக்கி மேல் கண்ட முறைப்படி செய்யவும். இப்பயிற்சியில் பாதத்தை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். கீழே இறக்கும்போது மூச்சை வெளியே விடவும்.
    கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
    காய்ந்த மிளகாய் - 4,
    புளி - கொட்டைப்பாக்களவு,
    உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - தாளிக்க,
    எண்ணெய் - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும்.

    நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் இன்பமாக வளர இயற்கையோடு இணைக்கவேண்டும். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும்.
    குழந்தைகள் இன்பமாக வளர என்ன செய்யவேண்டும்? அவர்களை இயற்கையோடு இணைக்கவேண்டும். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும்.

    பூமி செழித்தால்தான் மனித வாழ்க்கை செழிக்கும். பூமி செழிக்கவேண்டும் என்றால், இயற்கையை குழந்தைகள் நேசிக்கும் அளவுக்கு அவர்களை பழக்கவேண்டும். குழந்தைகள் இயற்கையை நேசித்தால் அது அவர்களது வாழ்க்கையை சுவாரசியமாக்கும்... சுகமாக்கும்..! அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாகவும் வளர்வார்கள்.

    இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் சுத்தம், சுகாதாரம், தூய்மை போன்ற நல்ல பழக்கங்கள் உருவாகும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தோன்றும். இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலும் உருவாகிறது. அது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு சிறப்பாக கைகொடுக்கும்.

    டி.வி.யில் ஒளிபரப்பாகும் சோப்பு விளம்பரம் ஒன்றில் நாலைந்து குழந்தைகள் ஒருங்கிணைந்து இன்னொருவர் வீட்டை சுத்தப் படுத்துவார்கள். அதனை மற்ற குழந்தைகள் டி.வி.யில் பார்க்கும்போது அவர்களது சிந்தனை வளப்படும். சுத்தம், சுகாதாரம், ஒருங்கிணைந்து பணியாற்றுதல், அடுத்தவர்களுக்கு உதவுதல் போன்றவைகளின் சிறப்புகளை அதன் மூலம் உணர்வார்கள். அதுபோல் இயற்கையை மேம்படுத்தவும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒரு செடியை நட்டு வளர்க்கக்கூட குழந்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருங்கிணைய வேண்டியதிருக்கும். அதனால்தான் இப்போது சில பள்ளிகளில் குழந்தைகளை குழுகுழுவாக பிரித்து, அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக்கொடுத்து, ஒருங்கிணைந்து செடி, கொடிகளை வளர்க்கத் தூண்டுகிறார்கள்.

    இந்த பூமி நாம் வாழும் இடம். எதிர்காலத்தில் நமது சந்ததிகளும் வாழவேண்டிய இடம். இதனை காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு. ஆனால் அதை உணர்ந்து கொள்ளாதவர்களாகத்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    இப்போது நிறைய பேர் ‘யூஸ் அன்ட் த்ரோ’ பொருட்களை பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு, அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம். அதன் மூலம் இந்த பூமி எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா! யூஸ் அன்ட் த்ரோ பொருட்கள் அதிகம் உருவாகாத பழைய காலத்தில் மனிதர்கள் இயற்கை சூழல் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

    அவர்களை சுற்றி மரம், செடி, கொடிகள், மலைகள், குளங்கள், ஏரிகள் இருந்தன. இன்று நாமே அவைகளை புறக்கணித்து அழித்துக் கொண்டிருக்கிறோம். மரம், செடி, கொடிகளை ஏதோ கண்காட்சியில் வைப்பது போல் நாம் வீட்டில் சிறு தொட்டிகளில் வைத்து பராமரிக்கிறோம். அதனால் தாவர இனங்கள் மட்டுமல்ல, பறவை இனங்களும் அழிந்துவிட்டன. நம்மை வாழவைப்பது பசுமையான இயற்கைதான். ஆனால் நாம் இயற்கையை வாழ விடுவதில்லை.

    அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை. சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மேன்மையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். நம்மை சுற்றியிருக்கும் தாவரங்கள் நம் நண்பர்கள். அவைகளை நாம் நேசிக்க வேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் சுற்றுப்புற தூய்மையையும் பாதுகாக்கவேண்டும். வீட்டிலுள்ள குப்பைகளை பொறுக்கி சுத்தப்படுத்தவும், பொருட்களை துடைத்து தூய்மைபடுத்தவும் கற்றுத்தர வேண்டும். வீட்டு சுத்தம் குடும்ப நலனைக்காக்கும். சுற்றுப்புற சுத்தம் நாட்டைக்காக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.

    பூமியின் நீர் வளங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்து பள்ளிக்கு செல்லவும், கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லவும் பழக்கப் படுத்திட வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி பெறுவார்கள். அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் ஏற்படும் பயன்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். தனி மனிதனுக்கு இயற்கை எவ்வளவு அரிய கொடைகளை வழங்குகிறது என்பதை குழந்தைகள் உணரும்படி செய்யவேண்டும்.

    குழந்தை பருவத்திலிருந்தே அவர்கள் இயற்கையை நேசிக்க கற்றுக் கொண்டால், அதை பாதுகாக்கும் திறன் தானே வந்து விடும். அதுவே அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிவிடும். இந்த உலகில் நம்மைத் தவிர மற்றவர்களும் வாழ்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். மற்ற உயிர்களை அழிக்கவோ, புகலிடங்களை சிதைக்கவோ நமக்கு எந்த உரிமையுமில்லை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும்.

    நாளைய தலைமுறை நலமுடன் இருக்க, இன்று நாம் செய்யும் தவறுகளை நமது குழந்தைகள் செய்யாமல் இருக்கவேண்டும். அதுவே நாம் இந்த பூமிக்கு செய்யும் பெரிய நன்றிக்கடனாக இருக்கும். மண் வளம் காக்கவும், உயிர்களை நேசிக்கவும், பயிர் பச்சைகளை வளர்க்கவும் உங்கள் குழந்தைகள் கற்று, இயற்கையோடு இணைந்து வாழட்டும்! அந்த வாழ்க்கை இனிமையாக அமையட்டும்!

    வீடுகளில் நமது குழந்தைகளுக்காக எத்தனையோ செல்வங்களை சேர்த்துவைத்தாலும், அத்தனையிலும் சிறந்தது இயற்கை செல்வம். குழந்தை களுக்கு அடிப்படை தேவையான அதனை அழித்துவிட்டு, பணத்தை சேர்த்துவைத்து எந்த பலனும் இல்லை. அதனால் மரம், செடி, கொடிகளை வளர்ப்பதில் முதலில் பெற்றோர் ஈடுபடவேண்டும். குழந்தை களையும் அதில் ஊக்கப்படுத்தவேண்டும்.

    மரக் கன்றுகளை நடவும், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பழக்குங்கள். நாளுக்கு நாள் அது வளர்ந்து பூப்பூத்து குலுங்குவதைப் பார்த்து அவர்களுக்கு உண்டாகும் ஆனந்தத்தை அனுபவிக்கச் செய்யுங்கள். இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துங்கள். தோட்டத்தில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை கையில் பிடித்து விளையாட நினைக்கும் குழந்தைகளுக்கு வண்ணத்துப் பூச்சியின் சிறப்பை எடுத்துக் கூறி அவைகளை பாதுகாக்க சொல்லிக் கொடுங்கள்.
    வறண்ட கண்கள் பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும்.
    * கண் எரிச்சல்,
    * கண்ணில் உறுத்துதல்,
    * கண் இமைகள் கனத்து இருத்தல்,
    * கண்களில் சோர்வு,
    * கண் சிவத்தல்,
    * கண் வலி,
    * அடிக்கடி பார்வை மங்கியது போல் இருத்தல்,
    * கண்ணில் லென்ஸ் போடுபவர்களுக்கு போட முடியாமல் வலி எடுத்தல் ஆகியவைகளை இதனால் ஏற்படும் பாதிப்பாக கூறுவர்.

    இந்த பாதிப்புகள் யாருக்கும் எந்த வயதிலும் வரும். என்றாலும் ஆண்களை விட பெண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் ஏற்படும். கண்ணில் நீர் வரும் முறையில் ஏற்படும் மாறுபாடு இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகின்றது. மேலும் காற்று, புகை, வறண்ட காற்று போன்ற பல காரணங்கள் வறண்ட கண் பாதிப்பிற்கு காரணம் ஆகின்றன.

    ஆனால் வயது கூடும் பொழுது இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளும் கூடுகின்றது. மேலும்,

    * லென்ஸ் அணிபவர்கள்,
    * ஹார்மோன் மாறுபாடு- குறிப்பாக பெண்களின் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் போன்றவை,
    * சர்க்கரை நோய்,
    * தைராய்டு குறைபாடு,
    * வைட்டமின் ஏ சத்து குறைபாடு,
    * சில வகை மருந்துகள்,
    * முறையாக கண் சிமிட்டாமல் கம்ப்யூட்டர், புத்தகம் போன்ற இவற்றினை உற்று பார்த்துக் கொண்டிருப்பது போன்றவைகளும் வறண்ட கண் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    இதனை முறையாக மருத்துவம் மூலம் கவனிக்காவிட்டால் கண்ணில் புண், கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படும்.  வெது வெதுப்பான வெந்நீர் ஓத்தடம் மூலம் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

    * அதிக நேரம் கம்ப்யூட்டர், படிப்பு என்று இருப்பவர்கள் கண் மருத்துவர் ஆலோசனையின் பெயரில் கண்ணுக்கான சொட்டு திரவம் பயன்படுத்தலாம்.
    * கண் சொட்டு மருந்துகளும் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
    * தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும்.
    * காபி, டீ இவற்றினை குறைத்துக் கொள்ள வேண்டும்.
    * ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்.
    * வெளியில் செல்லும் பொழுது கண்களை பாதுகாக்க கறுப்பு கண்ணாடி அணிய வேண்டும்.
    * புகை பிடிப்பதனை நிறுத்துங்கள்.
    * புகை பிடிப்பவர்கள் அருகில் நிற்காதீர்கள்.
    * கண்களை சுத்தமாக வைத்திருங்கள்.
    * கண்களை சிமிட்ட பழகுங்கள். (அதாவது ஒன்றினை உற்று பார்க்காமல் கண்களை மூடி, திறக்க பழகுங்கள்).
    * கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    (ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கை படைப்பின் வித்தியாசங்களை நாம் அறிவோம்). ஆனால் ஆண், பெண் தூக்கம் முறையிலும் படைப்பின் வித்தியாசத்தினால் சில தாக்குதல்கள் இருக்கின்றன. இதனை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதன் காரணம் அவர்களுள் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் என ஆய்வுகள் கூறுகின்றன.

    மேலும் அவைகூறுவது ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகின்றது என்பதுதான். அதற்கான காரணங்களையும் அந்த ஆய்வுகள் விவரித்துள்ளன.

    * பெண்கள் அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய அதிகம் மூளையை உபயோகிக்கின்றனர். அநேகமாக இவ்வாறு பகல் பொழுதில் அவர்கள் வேலை செய்வதால் இரவில் அவர்கள் கூடுதல் நேரம் தூங்க வேண்டியது அவசியமாகின்றது என்பது ஆய்வுகளின் முடிவு.

    * பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான அளவு தூக்கம் இருப்பதில்லை. இது அவர்களுக்கு குறைந்த சக்தியினை அளித்து விடுகின்றது. இக்காலங்களில் இவர்கள் பகலில் 20-30 நிமிடங்கள் வரை (ழிணீஜீ) எனப்படும் ஓய்வினை எடுக்க வேண்டும். இரவும் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே தூங்கச் செல்ல வேண்டும்.

    * மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்கமின்மை காரணமாக அதிக மறதி அவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவேதான் முந்தைய காலங்களில் இக்காலங்களில் அவர்களை வீட்டு வேலைகள் செய்ய விடாமல் ஓய்வு கொடுத்திருந்திருக்கலாம். ஆனால் அதன் உண்மையான பொருளை ஆராயாமல்-அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவர்களை மேலும் பலவீனமாக்கி விட்டது அறியாமையே.

    * ஆபீஸ், குடும்பம் என விடாது வேலை செய்வது அவர்களை மிகவும் சோர்வானவர்கள் ஆக்கி விடுகின்றதாம். எனவே அவர்களுக்கு கூடுதல் ஓய்வும், தூக்கமும் தேவைப்படுகின்றது என்பதனை அறிவோமாக.

    மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.
    நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க என்று சொல்லலாம். ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    நம்மில் பலருக்கு வயது ஏற, ஏற நினைவாற்றல் குறைந்து மறதி ஏற்படுவது இயல்பாகவே உள்ளது. மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும்.

    மேலும், வயது ஏற ஏற ஏற்படும் ஞாபக மறதியும் தடுக்கப்படும் என்று மெசக்யுசெட்ஸ் லோவெல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும்.

    இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. உலக அளவில் 7,500 ஆப்பிள் வகைகள் பயிரிடப்படுகின்றன.

    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    வங்கியில் வீட்டு கடன் பெற்று கட்டப்பட்ட அல்லது வாங்கப்பட்ட வீடு அல்லது பிளாட் ஆகியவற்றை நிதி நெருக்கடி காரணமாக விற்பனை செய்ய வேண்டிய சூழலில் எவ்விதமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.

    வீடு விற்பவர் பொறுப்பு

    வீட்டை விற்க விரும்புபவர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனைத்து தகவல்களையும் தெரிவித்து, கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றின் நிலுவை, வங்கியில் அளிக்கப்பட்டுள்ள வீட்டுக்கான ஆவணங்கள் குறித்த பட்டியல், நிலுவை கடன் தொகை செலுத்தப்படும் பட்சத்தில் வீட்டுக்கான அனைத்து ஒரிஜினல் ஆவணங்களும் கடன் பெற்றவருக்கு அளிக்க வங்கிக்கு ஆட்சேபணை இல்லை என்ற தகவல்கள் அடங்கிய கடிதத்தை வங்கியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு வாங்குபவர் பொறுப்பு

    அவ்வாறு வங்கியிடமிருந்து பெற்ற கடிதங்கள் மற்றும் தன்னிடமுள்ள வீடு தொடர்புடைய அனைத்து பத்திரங்களின் நகல்களையும் வீட்டை வாங்குபவரிடம் வழங்க வேண்டும். வீட்டை வாங்குபவர் மேற்கண்ட ஆவணங்கள் மீது சட்ட ரீதியான ஆலோசனை பெற்று வீட்டின் உரிமையாளருக்கு முன்பணம் கொடுக்கலாம்.

    ஒப்பந்தம் பதிவு

    பின்னர், வீட்டை விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, சார்-பதிவாளர் அலுவலகத்தில் அதை முறைப்படி பதிவு செய்யவேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள கால அளவுக்குள் வீட்டுக்கான முழு தொகையையும் பெற்று, வங்கிக்கு நிலுவையாக உள்ள தொகையை செலுத்தி விட்டு, கணக்கு முடிக்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக, வங்கியிடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வங்கியிடமிருந்து பெற்று, அவற்றை வீட்டை வாங்குபவருக்கு கொடுத்து, அவரிடம் இருந்து அதற்குரிய ரசீது ஒன்றையும் பெற்றுக்கொள்வது அவசியம். அதன் பின்னர், வீட்டை விற்பவர், வாங்குபவருக்கு கிரயப் பத்திரம் எழுதி கொடுத்து சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

    வீடு வாங்குபவரது வங்கி கடன்

    வீடு வாங்குபவரும் வங்கியில் கடன் பெற வேண்டும் என்ற நிலையில், அதே வங்கியில் பெறுவதன் மூலம், நடைமுறை சிக்கல்கள் மற்றும் கால தாமதங்கள் தவிர்க்கப்படும். அவ்வாறு இல்லாமல் வேறு வங்கியில் வீட்டு கடன் பெறும் நிலையில் கீழ்க்கண்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    வங்கி நடைமுறைகள்


    வீட்டை வாங்குபவர் அவரிடம் அளிக்கப்பட்ட முந்தைய வங்கியின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன், புதியதாக கடன் அளிக்கும் வங்கி கேட்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் கடன் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    அவற்றின் அடிப்படையில் கடன் தரக்கூடிய வங்கி உரிய பரிசீலனைக்கு பின்னர் கடன் அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கும். சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மீது முன்பே ஒரு வங்கியால் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், புதிய வங்கியின் நடைமுறைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பு உண்டு.

    பத்திரம் பதிவு

    அதன் பின்னர், வீட்டு கடன் தொகையை புதிய வங்கி, முந்தைய வங்கிக்கு நேரிடையாக அளிக்கும். அதன் அடிப்படையில், வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் புதிய வங்கிக்கு, முந்தைய வங்கியால் அளிக்கப்பட்டு விடும்.

    பின்னர், வீட்டு கடன் அளிக்கும் வங்கி அசல் மற்றும் வட்டி போக மீதம் தொகை இருக்கும் நிலையில் அதை வீட்டை விற்பவருக்கு கொடுத்துவிடும். நிறைவாக, வீட்டை வாங்குபவர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விற்பனை பத்திரத்தை வழக்கப்படி பதிவு செய்து கொள்ளலாம். 
    கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

    கொத்தமல்லி இலையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிய பின்னர் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ஜூஸ் தயார்.

    பலன்கள்:

    கொத்தமல்லி ஜூஸ் சரும பிரச்சனைகளை போக்க வல்லது. குறிப்பாக சரும வறட்சி மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை சரி செய்யக்  கூடியது.

    கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.

    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துகொள்வதால்,ரத்த அழுத்தம் குறைவதாக நிருப்பிக்கப்பட்டுள்ளது.



    கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால், உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    கொத்தமல்லியில் உள்ள என்சைம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் செயல்பட வைக்கும். இரத்த சோகை  இருப்பவர்கள் இதை குடித்தால் நல்ல பலனை பெறலாம். மேலும் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் இதை தொடர்ச்சியாக குடித்து வந்தால் இரத்த  அழுத்தம் குறையும்.

    செரிமானத்தை சீராக்கி குடல் மற்றும் இரைப்பைக்கு நன்மை அளிக்கிறது. கொத்தமல்லி அதிக அளவிலான கால்சியத்தை கொண்டுள்ளது. எனவே எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
    ×