என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.
    குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்த்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்தே வளர்கிறார்கள். நம்மிடம் சேமிக்கும் பழக்கம் இருந்தால், அவர்களிடமும் அந்தக் குணம் வரும். எனவே, குழந்தைகளுக்குச் சேமிப்பு பழக்கத்தைச் சிறுவயது முதலே கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.

    1. கடைக்குச் சென்றால், குழந்தை கேட்கிறது என்று கண்களில் பட்டதையெல்லாத்தையும் வாங்கக் கூடாது. ஒரு பொருளின் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பொறுமையாக உணர்த்த வேண்டும். அதன்பின் அந்தப் பொருள் அவசியமா இல்லையா என்பதைக் குழந்தைகளையே தீர்மானிக்கச் சொல்லுங்கள்.

    2. சிறுசேமிப்பு பற்றி குழந்தைகளுக்குக் கதைகளாகவோ, அல்லது அவர்களுக்குப் புரியும் விதத்திலோ கூறி மனதில் ஆழப் பதியவையுங்கள்.

    3. சேமிப்பு என்பது காசு பணம் சேமிப்பது மட்டுமல்ல. எந்தப் பொருளானாலும் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதும் ஒரு வகை சேமிப்பே. பென்சில், ரப்பர் என எந்தப் பொருளை வாங்கினாலும், அதை முழுவதுமாக உபயோகித்த பின்னரே, அடுத்து வாங்க வேண்டும் என்ற உறுதியைக் குழந்தைகளிடம் விதைக்க வேண்டும்

    4. குழந்தையின் பிறந்தநாளிலோ, அவர்களைப் பாராட்டுவதற்காகவோ ஓர் உண்டியலைப் பரிசளியுங்கள். வீட்டில் எல்லோரின் பார்வையில் வைத்து தினமும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போடப் பழக்குங்கள்

    5. பாக்கெட் மணி கலாசாரத்துக்குப் பதில், சேவிங்க்ஸ் மணி கலாச்சாரத்துக்குக் குழந்தையைப் பழக்குங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் தொகையை உண்டியலில் போட வேண்டும் எனச் சொல்லி, மாதம் ஒருமுறை சேமித்த பணத்தைக் குழந்தையைவிட்டே எண்ணிப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள்.

    6. குழந்தைகள் நீண்ட நாட்களாகக் கேட்கும் பொருட்ளைத் தன் சேமிப்பிலிருந்தே வாங்கும் குணத்தை ஊக்கப்படுத்துங்கள். இதனால், குழந்தைகளுக்குக் காத்திருக்கும் குணமும் பொறுமையும் வளரும்.  

    7. சாக்லேட், பிஸ்கட் என எதுவானாலும் தேவையானதை மட்டுமே எடுத்துச் சாப்பிட பழக்குங்கள். மொத்த பாக்கெட்டையும் கையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைக்க கற்றுக்கொடுக்கலாம்  

    8. குழந்தையின் அம்மா அல்லது அப்பாவின் பிறந்த நாளுக்கு, குழந்தை உண்டியலில் சேர்த்துவைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியில் சிறு பரிசை வாங்கிக்கொடுக்கச் சொல்லி வாங்கிக்கொள்ளுங்க. அந்தப் பரிசை உறவினர்கள், நண்பர்களிடம் 'என் மகள் / மகன் சேமிப்பில் வாங்கித்தந்தது' எனப் பெருமையாகச் சொல்லுங்கள்.

    9. குழந்தைகள், மற்றவர்களுக்குப் பரிசு அளிக்க விரும்பினால், உண்டியலைப் பரிசளிக்க ஊக்கம் அளியுங்கள். இது, அவர்களின் மனதில் சேமிப்புக்கான முக்கியத்துவத்தை உணரவைக்கும்.
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.

    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

    * பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

    * நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

    * முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

    * எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

    * ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும். 
    சுரைக்காயில் அதிகளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இன்று சத்தான சுரைக்காயில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி - 1 டம்ளர்
    சுரைக்காய் - 150 கிராம்
    வரமிளகாய் - 4
    உப்பு - சுவைக்கேற்ப
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - 1 கப்



    செய்முறை

    கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சுரைக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    அரிசியை நன்கு ஊற வைத்து கழுவி மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த மாவில் துருவிய சுரைக்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான, சத்தான சுரைக்காய் அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும்.
    பெண்கள் தினமும் காலையில் கண்விழித்து கண்ணாடி முன்பு நின்று தங்கள் அழகை பார்க்கும்போது, அவர்களுக்கு பளிச்சென்று தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகள்தான் தெரியவரும். அதிக உடல் எடை கொண்டவர்கள் சற்று வருத்தத்தோடு ‘இன்னும் கொஞ்சம் உடல் மெலிந்தால் அழகாக இருக்கும்’ என்று நினைப்பார்கள். அளவுக்கு அதிகமாக உடல்மெலிந்து காணப்படுகிறவர்கள், ‘சற்று உடல் பூசிமெழுகியது போன்றிருந்தால் அதிக அழகு கிடைக்குமே..’ என்று மனதிற்குள் சொல்லிக்கொள்வார்கள். தங்கள் உயரத்தை குறித்தும், சரும நிறத்தை குறித்தும் கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தினமும் கவலைப்படும் பெண்கள் ஏராளம்.

    இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். தங்கள் தோற்றத்தில் இருக்கும் குறைபாடுகளே தெரியாத அளவுக்கு அவர்களை ஆடை வடிவமைப்பு மூலம் அழகில் மெரு கேற்றிகாட்டுகிறார்கள், பேஷன் டிசைனர்கள்.

    “பெண்கள் பண்டிகைகள், விழாக்கள், தங்கள் வாழ்க்கையின் முக்கிய நாட்கள் போன்ற எல்லாவற்றுக்கும் புதிய ஆடைகள் வாங்கி, அதை உடுத்திதான் கொண்டாட விரும்புகிறார்கள். திருமணம் என்றால் சொல்லவேண்டியதில்லை. அப்போது விதவிதமான ஆடைகளில் வித்தியாசமாக எல்லோரையும் கவர விரும்புகிறார்கள்.

    அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் முதலில் தனது உடல் எந்த மாதிரியான அமைப்பை கொண்டது என்பதை கணிக்கவேண்டும். பொதுவாக பெண் களின் உடல் அமைப்பை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல், செவ்வக மாடல், ஹவர் கிளாஸ் மாடல் என்று பிரிக்கிறோம். இடுப்புக்கு மேல் பகுதி பெரிதாகவும்- இடுப்புக்கு கீழ் பகுதி சிறுத்தும் காணப்படும் உடல்வாகை கொண்ட பெண்கள், ஆப்பிள் மாடல். இடுப்புக்கு மேல் பகுதி சிறுத்தும்- கீழ் பகுதி பருத்தும் காணப்படுகிறவர்கள் பேரிக்காய் உடல்வாகு பெண்கள். இந்தியாவில் இந்த இருவகை உடல்வாகு கொண்ட பெண்களே அதிகம் இருக்கிறார்கள். செவ்வக வடிவ பெண்கள், கிட்டத்தட்ட மேல் இருந்து கீழ் வரை ஒரே மாதிரியான உடல்வாகு கொண்டவர்கள். ஹவர்கிளாஸ் எனப்படும் உடுக்கை போன்ற உடல் அமைப்பை கொண்ட பெண்கள்தான், துல்லியமான கட்டுடலைக் கொண்டவர்கள்.

    இந்த நான்கில் தனது உடல் அமைப்பு எத்தகையது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ளவேண்டும். அதை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் தங்களுக்கான உடைகளை தேர்ந்தெடுக்கவேண்டும். அடுத்து தங்கள் சரும நிறத்தை அவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். நிறத்துக்கு ஏற்ற ‘பேப்ரிக்’கை தேர்ந்தெடுப்பது அவசியம். காட்டன், பட்டு போன்று ஏராளமான பேப்ரிக் உள்ளது. அவை ஒவ்வொன்றிலும் ஏராளமான உட்பிரிவுகளும் உள்ளன. ஆடை தேர்ந்தெடுக்கும்போது தங்கள் உயரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால், அவர்களது உடல் அமைப்பில் அவர்கள் குறையாக கருதும் விஷயங்களை நிறைவாக்கி, அழகாக தோன்றலாம்.

    “பேஷன் என்பது ‘பழைய ஒயின் புதிய பாட்டில்’ என்று சொல்வார்களே அது போன்றதுதான். பெயர் மாறும், அதன் தோற்றத்திலும் சிறிய மாற்றங்கள் இருக்கும். அடிப்படையை ஆராய்ந்தால் அது ஆதிகாலத்தில் இருந்தே சற்று மாறி மாறி வந்ததாகத்தான் இருக்கும். அந்த காலத்தில் நடிகைகள் பானுமதியும், சரோஜாதேவியும் சினிமாவுக்காக அணிந்த லெஹங்கா இப்போது கூடுதல் அழகுடன் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன் சோளிக்கு இப்போது கிராப்டாப் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எல்லா வயதினரும், எல்லா சூழலுக்கும் அணிந்துகொள்ளும் விதத்தில் இது வடிவமைக்கப்படுகிறது.

    மணப் பெண்கள் லெஹங்காவை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்காக இதில் அதிக வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதல் கைவேலைப்பாடுகள் செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டு, இணைப்புகள் சேர்க்கப்படும்போது, அதிக எடை இருப்பது போல் தோன்றினாலும், மூன்று கிலோவுக்கு மேல் ஆகாது. அதனால் இது கனமாக இருக்கும் என்று கருதவேண்டியதில்லை.

    தற்போது பெண்கள் பெரும்பாலும் பேஸ்டல் கலர்ஸ் எனப்படும் இள நிறங்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். அது எல்லோரையும் கவர்ந்து, அமைதியான தோற்றத்தை தருகிறது.வேட்டி கவுன் இப்போது அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சவுகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுக் கிறார்கள். இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது.

    துப்பட்டா போட்டுக்கொள்வது என்பது பெண்களை பொறுத்த வரையில் சற்று கடினமான அனுபவமாக இருக்கிறது. பயணத்தின் போதும், வேலை செய்துகொண்டிருக்கும்போதும் அவர்கள் துப்பட்டாவில் தனிக்கவனம் செலுத்தி அங்கும் இங்குமாக சரிசெய்துகொண்டிருக்க வேண்டியதிருக்கும். அந்த குறையை தீர்க்க இப்போது கேப் துப்பட்டாக்கள் வந்திருக்கின்றன. இதனை மேலாடையுடன் சேர்த்து அப்படியே தைத்துவிடுகிறார்கள். சேர்த்து அணிந்துகொள்ளும்போது தைத்திருப்பதுபோல் தெரியாது. நகர்ந்துபோகாமல் சவுகரியமான அழகுடன் இது காட்சிதரும்.

    எத்தனை நவீன உடைகள் வந்தாலும், பாரம் பரியமிக்க புடவைகளுக்கு இருக்கும் மதிப்பு பெண்கள் மத்தியில் குறையவே இல்லை. அதிலும் புதுமைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

    விலை உயர்ந்த புடவைகள்தான் கூடுதல் அழகுதரும் என்ற கருத்து இப்போது வலுவிழந்துவிட்டது. சராசரியான விலையிலே புடவை வாங்கி, அதில் தேவையான இணைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் அழகாக்கிக்கொள்ளலாம். புடவைகளில் பிராணிகளின் உருவங்களை பிரிண்ட் செய்துகொள்வது இப்போது புதிய பேஷனாக இருக்கிறது. பகல்பூர் சில்க் அதற்கு ஏற்றது. அதில் யானை, மான், வாத்து போன்றவைகளை பிரிண்ட் செய்து அழகுபடுத்தலாம். யானை உருவம் பொறித்த புடவைகள் நடுத்தர வயது பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.
    வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது.
    முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ் கலாசாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தை படைக்கிறோம். திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியே இது. வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.

    வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகி உள்ளது. அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டு உள்ளது.

    வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் எனும் சத்து மன அழுத்தத்தை குறைத்து மனதை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினை தூண்டுகிறது. ரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

    மலச் சிக்கலுக்கு வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டீன் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைட்ரேட் சத்தும், 3 மடங்கிற்கு அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. விலையும் ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.
     
    ஒருவருக்கு ஒருவர் தூய்மையான அன்பை மட்டும் செலுத்தினாலே மனிதம் என்ற உன்னதமான பூ மணம் வீச ஆரம்பிக்கும்.
    மனித பிறப்பு என்பது இவ்வுலகில் நாம் பெற்ற மிகப்பெரிய அரியதோர் பிறப்பு ஆகும். இத்தகைய அரிய பிறப்பை எடுத்த நாம், இந்த பிறவி எடுத்ததன் நோக்கம் அறியாமல் இப்பிறவியின் காலத்தை வீணாய் கழித்து வருகிறோம். தனது காலத்தை வீணாய் கழிப்பதோடு இல்லாமல் பிறரின் வாழ்க்கையில், உரிமையில் தலையிட்டு மற்றவர்களையும் சிரமப்படுத்தி வருகிறோம்.

    உயிர்களின் மகத்தான பிறவியான மனிதனின் வாழ்க்கையை பகுத்து ஆராய்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மை பண்புகளையும் தனது திருக்குறளில் தெளிவாக விளக்கி உள்ளார். அவர் கூறியபடி அறநெறியுடன் வாழ்ந்தாலே மனிதர்கள் சிறப்பு அடையலாம். ஆனால், தற்போதைய எந்திர மயமான வாழ்க்கையில் யாரும் அறநெறிகளை பற்றி கவலைப்படுவதாகவே இல்லை. பணம் ஒன்று மட்டுமே தற்போதைய மனிதர்களுக்கு பிரதானமாக தெரிகிறது. அன்பு, அறம், மனிதநேயம் எல்லாம் கானல் நீராகவே காணப்படுகிறது..

    ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாகிய அண்ணன், தம்பிகளுக்கு இடையிலேயே தற்போது ஒற்றுமை என்பதை காண்பது அரிதாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கணவன்-மனைவி இடையே உண்மையான அன்பு மலராத காரணத்தால், ஏராளமான தம்பதிகள் விவாகரத்து பெறுவதை பார்க்க முடிகிறது. ஏன்? காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கூட உண்மையான புரிதல் இன்றி விவாகரத்து பெறும் நிலையை பார்க்க முடிகிறது. ஒரு வீட்டுக்குள் இருப்பவர்களே இப்படி ஒற்றுமையாக இல்லாத நிலையில், ஒரு தெருவில் இருக்கும் நபர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இதனால் ஒரு ஊருக்குள் போட்டி, பொறாமையால் பல கோஷ்டிகள் நிலவுவதற்கு காரணமும் அன்பு இல்லாமையே.

    உலக அளவிலும் நாம் அனைவரும் மனித இனம். நமது மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற பரந்த மனப்பான்மை இல்லாததன் காரணமாகவே நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினைகளும், போர்களும் ஏற்படுகின்றன. உலக அளவிலான தலைவர்களும் நாம் அனைவரும் மனிதர்களே என்ற ஒற்றை எண்ணத்தில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாக இருந்தால், உலக நாடுகளில் பஞ்சம், பட்டினியால் மக்கள் சாகும் நிலை வரவே வராது ‘அன்பே சிவம்‘ என்கிறார்கள். எனவே, ஒருவருக்கு ஒருவர் தூய்மையான அன்பை மட்டும் செலுத்தினாலே மனிதம் என்ற உன்னதமான பூ மணம் வீச ஆரம்பிக்கும்.

    -ஜெகதீச தாசன்
    வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் அதைவிட வேறு எதற்கெல்லாம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
    கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை.

    வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

    வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.



    வல்லாரை இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

    குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.

    வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

    வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

    இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

    வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

    நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

    யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரைவீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

    வல்லாரை இலையை முறைப்படி எண்ணெயாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இனிப்பினால் ஆன சத்தான, சுவையான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம்...இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ரவை (அ) மைதா மாவு - கால் கிலோ
    சர்க்கரை - அரை கிலோ
    வறுகடலை - கால் கிலோ
    தேங்காய் - 2
    ஏலக்காய் பொடி - சிறிதளவு
    நெய் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வறுகடலையையும், சர்க்கரையையும் சமஅளவு எடுத்து தனித்தனியாக நன்கு பவுடராக அரைத்துக்கொள்ளவேண்டும்.

    தேங்காயைத் துருவி, வாணலியில் நெய் ஊற்றி லேசாக வதக்கிக் கொண்டு, அதில் அரைத்த வறுகடலை மாவையும், சர்க்கரை மாவையும் சேர்த்து சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் செய்துகொள்ள வேண்டும்.

    ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கிளறி ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு இடித்து மைதா மாவு பதத்திற்கு கொண்டுவர வேண்டும். (வேண்டுமானால் ரவைக்கு பதிலாக மைதா மாவை பயன்படுத்தலாம். ஆனால் ரவையில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.)

    அந்த மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மெல்லியதாக தேய்த்து, அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்து, அதன் ஓரப்பகுதியை கையால் நன்கு அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இப்போது சோமாஸ் ரெடி.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள சோமஸை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

    சூப்பரான இனிப்பு சோமாஸ் ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் தாம்பத்தியம் கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    செக்ஸ் மீதான ஆசையும், அது பற்றிய அறிவும் மட்டும் இருந்தால் போதாது. அதில் ஈடுபட ஆரோக்கியமாக உடலை வைத்திருப்பது அவசியம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

    சமீபத்திய உலக அளவிலான ஆன்லைன் சர்வே ‘செக்ஸில் ஈடுபடும் போது மூன்றில் ஒரு பங்கு மக்கள் முதுகுவலியால் அவதிப்படுகின்றனர்’ எனச் சொல்கிறது. கடின உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறையே பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி வர காரணமாக அமைகிறது. பிரிட்டிஷ் மருத்துவ இதழ் 58 சதவிகித மக்களுக்கு உடலுறவின் போது ஒரு முறையாவது முதுகு வலியோ, இடுப்புப் பகுதியில் வலியோ ஏற்படுகிறது என அறிவித்து இருக்கிறது.

    முதுகுத் தசைகளில் ஏற்படும் அழுத்தமும், தசைநார்கள் பலவீனமடைவதும் 80 முதல் 90 சதவிகிதம் முதுகுவலிக்கு அடிப்படை காரணம். இதனால் முதுகு தண்டுவடத்தினுள் பிரச்சனைகள் எதுவுமிருக்காது. அதனால் கவலைப்படத் தேவையில்லை. முதுகுத் தசைகளை வலுப்படுத்தினால் போதுமானது. முதுகுத் தசைகளை நல்ல நிலையில் வைக்கும் வார்ம்-அப் உடற்பயிற்சிகளை தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.



    ஒரு பிசியோதெரபிஸ்டின் ஆலோசனையின் படி முதுகு தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டால் இன்னும் நல்லது. முதுகுதசைகள் வலுவாக இருந்தாலே முதுகு தண்டுவடத்தை சரியான இடத்தில் நிறுத்தி அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். Core muscles என ஆங்கிலத்தில் குறிப்பிடும் முதுகு, இடுப்பு, வயிற்றின் முக்கிய தசைகளை வலுவாக்க வேண்டும். இதன் மூலம் உடலுறவில் எந்த வலியும் இல்லாமல் சிறந்த முறையில் ஈடுபட முடியும்.

    ஒருவருக்கு குறிப்பிட்ட நிலையில் உடலுறவு கொள்ளும் போது முதுகு வலி வருகிறது எனில், அந்த நிலையை தவிர்த்து விட வேண்டும். முதுகு வலியை ஏற்படுத்தாத நிலைகளில் மட்டுமே செக்ஸில் ஈடுபட வேண்டும். தீவிரமாக இயங்காமல் கொஞ்சம் மெதுவாக இயங்கினால் நீடித்த இன்பம் பெறலாம். படுக்கையானது கடினமான மெத்தையால் அமைந்திருக்க வேண்டும்.

    படுத்தவுடன் உள்ளே அமுங்கும் மெது மெத்தைகளை பயன்படுத்தினால் முதுகுவலிக்கான வாய்ப்பை அதிகமாக்கும். உடலுறவின் போது மூட்டுவலி வராமல் இருக்க மூட்டுகளுக்கு அடியில் தலையணை வைத்து இயங்க வேண்டும். முதுகில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இயங்க பழகிக்கொள்ள வேண்டும். யோகா, பிசியோதெரபி பயிற்சி எடுத்து முதுகை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே உங்கள் செக்ஸ் வாழ்க்கையும் நலமுடன் இருக்கும்.
    பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று பெயர்.
    ‘பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஏதேனும் சருமநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று பெயர். “பெரும்பாலும் மூன்று, நான்கு மாதக் குழந்தைகளுக்கே இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. உதிரும்படியாக இல்லாமல் சருமத்தோடு ஒட்டி இருக்கும் இந்தச் செதில்களால் வலி, அரிப்பு எதுவும் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு சற்று அருவருப்பான தோற்றத்தை தரும். இது எண்ணெய்பசை சருமத்தில் ஏற்படும் அழற்சியினால் வருகிறது.

    இந்தச் செதில் புண்கள் உச்சந்தலையில் மட்டுமல்லாது காதுமடல்கள், கண் இமைகள் மற்றும் உடலின் பிற பகுதிகளிலும் இருக்கலாம். வயிற்றிலிருக்கும் போதே தாயிடமிருந்து குழந்தைக்குள் செல்லும் ஹார்மோன்களினால் அதிகப்படியான எண்ணெய் சுரப்பின் காரணமாக வருகிறது. சில மாதங்களில் தானாகவே மறைந்துவிடக்கூடியது க்ராடில் கேப் என்பதால் இதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தையின் தலை முடியை அடிக்கடி மெல்லிய ஷாம்பூ கொண்டு அலசலாம். வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் மஞ்சள் போன்றவற்றை தடவுவதிலும் தவறில்லை.

    இருப்பினும் ஈஸ்ட் தொற்றுகளால் குழந்தையின் முகம் மற்றும் உடல் முழுவதும் ஏற்படுமானால் ஆயின்மென்ட் மற்றும் ஷாம்பூவை பரிந்துரைக்கிறோம். அதேநேரத்தில், தாங்களாகவே மருந்துகடைகளில் ஆயின்மென்ட்களை  வாங்கி குழந்தைகளுக்கு தடவுவது தவறு. குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவானது என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிப்பதே நல்லது. 
    உதான் முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

    செய்முறை:

    நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

    பயன்கள்

    * இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.
    * உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக இருக்கும்.
    * தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
    * உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும்.
    * இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது.
    * இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
    * தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
    * தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும்  நிவாரணம் கிடைக்கிறது.
    * இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.
    * சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது.
    * சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது.
    * கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

    இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
    குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வைத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து சத்தான சுவையான சாலட் செய்யலாம். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 100 கிராம்
    மஞ்சள் குடைமிளகாய் - 100 கிராம்
    வெள்ளரிக்காய் - 100 கிராம்
    கருப்பு ஆலிவ் - 15 எண்கள்
    பிராக்கோலி (Broccoli) - சிறியது
    பன்னீர் - சிறிது
    கொத்தமல்லி - சிறிதளவு,
    ஸ்பிரிங் பாஸ்தா - 100 கிராம்



    செய்முறை  :

    ஸ்பிரிங் பாஸ்தாவை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, பன்னீர், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஆலிவ் எண்ணெய், புதினா, எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பன்னீர், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய், வெள்ளரிக்காய், பிராக்கோலியை போட்டு அதனுடன் அரைத்த மசாலாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×