என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பலருக்கு என்னதான் செய்தாலும் தலையில் உள்ள எண்ணெய் பசை போகாது. முடியில் உள்ள எண்ணெய் பசையை இயற்கை முறையில் எளிதாக சரி செய்து விடலாம்.
    தலை முழுக்க எண்ணெய் பசையா இருக்கிறதா..? என்னதான் செய்தாலும் தலையில் உள்ள அழுக்குகள் பிசுக்குகள் குறையவே இல்லையா..? இதற்கெல்லாம் காரணம் பயன்படுத்தப்படும் ஷாம்பூவும், கால மாற்றமும், ஹார்மோன் குறைபாடும், ஊட்டசத்து குறைபாடும் தான். இந்த பிரச்சினைக்கு ஆயுர்வேதத்தில் ஒரு அருமையான வழி உள்ளது.

    முடியின் எண்ணெய் பசையை குணப்படுத்த ஒரு அருமையான தீர்வு தான் இந்த கற்றாழை. கற்றாழை அருமையான பலனை தரும்.

    தேவையான பொருட்கள் :

    கற்றாழை ஜெல் - 1 டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சை - 3 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் கற்றாழையின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து, இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்குகள் முற்றிலுமாக போய் விடும்.

    முடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை பெரிதும் உதவும். எண்ணெய் பசையுள்ள முடியை சரி செய்ய இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

    தேவையான பொருட்கள் :

    முட்டை 2
    எலுமிச்சை 2 ஸ்பூன்

    செய்முறை :

    முட்டையில் உள்ள வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சேர்த்து கலந்து கொண்டு தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும். இதன் பின் தலைக்கு தேய்த்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடியில் உள்ள எண்ணெய் பசை விலகி விடும்.
    உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.
    அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும், 20 குழந்தைகளாவது என்னிடம் வருகின்றனர்.

    தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.

    அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சனை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.

    குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.

    பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

    குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சனை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர்.

    இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சனை இது.
    வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.

    வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்சனையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.
    நெஞ்சு எரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாலட்டை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இன்று இந்த சலாட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளரிக்காய் - 2,
    தக்காளி, கேரட், எலுமிச்சம் பழம் - தலா 1,
    பேபி கார்ன், தயிர் - சிறிதளவு,
    உப்பு, மிளகு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெள்ளரிக்காயின் தோல், விதையை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, கேரட், பேபி கார்னை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, சாறு எடுத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பு, மிளகு, தயிர் சேர்த்துக் கலக்கவும்.

    வெள்ளரிக்காய் - பேபி கார்ன் சாலட் தயார்.

    இதை ஃப்ரீசரில் வைத்து, ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிடும்போது, கூடுதல் சுவை கிடைக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும்.
    திருமணத்துக்குப் பின் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருக்கச் சொல்லுவோம். முதலில் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஏற்பட்டு தடையற்ற தாம்பத்தியம் என்ற நிலைக்கு வர வேண்டும். தாம்பத்தியம் வைத்துக் கொள்வதை மகிழ்ச்சியாக உணர வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் வரை காத்திருந்தும் குழந்தை உருவாகாமல் போனால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

    பரிசோதனை செய்யாமல் சில தம்பதியர் தள்ளிப் போடுவார்கள். இதற்கு பதிலாக கேட்பவர்கள் சொல்லும் மருந்துகளை சாப்பிடுவது, வேண்டுதல் வைப்பது என வேறு விதமான முயற்சிகளை செய்து கொண்டிருப்பார்கள். ஆரம்பத்திலேயே சிகிச்சை செய்தால் குழந்தையின்மை பிரச்சனைக்கு எளிதாகத் தீர்வு காண முடியும். தம்பதியர் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ளாமல் தாமதிப்பதால் பல சிக்கல்களை சந்திக்கின்றனர்.

    இருவரும் மற்றவரை குறைகூறுவார்கள். குடும்பத்தினர் எப்போது குழந்தை பிறக்கும் என்று அழுத்தம் கொடுப்பார்கள். பார்ப்பவரெல்லாம் எத்தனை குழந்தைகள் எனத் தவறாமல் கேட்பார்கள். இதனால் வெளியில் செல்லவே பயமாக இருக்கும். குடும்ப விசேஷங்களில் தலைகாட்ட மறுப்பார்கள். இந்த குழந்தையின்மை மன அழுத்தத்தின் எதிரொலியாக உடலுறவு கொள்வது மகிழ்ச்சிக்காக இல்லாமல் குழந்தைக்கான முயற்சியாக மாறிப் போகும்.

    மனசு முழுக்க இந்த முயற்சியில் குழந்தை உருவாகிட வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். உடலுறவு நேரத்தையும் டென்ஷனாக மாற்றிடும். இதனால் உடலுறவின்போது ‘நல்லாப் பண்ணணும்’, ‘விந்தணுக்கள் நிறைய வெளியாகணும்’ இப்படியான எண்ணம்தான் ஆணுக்குள் ஏற்படும். நாளடைவில் அவர்களுக்கே நம்பிக்கை குறையத் துவங்கிடும்.

    ஆணுக்கு நம்பிக்கை குறையும்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மையில் பாதிப்புகள் ஏற்படும். விந்தணுக்கள் முன்கூட்டியே வெளியேறுவது, ‘நம்மால் எதுவும் முடியலை’ என்ற எண்ணம் எல்லாம் சேர்த்து உடலுறவு நேரத்தையே கசப்பானதாக மாற்றிடும்.

    இப்பிரச்சனை உள்ள தம்பதியர் செய்ய வேண்டியது என்ன?

    எல்லா மனிதர்களுமே மனதளவில் ஓரளவுக்குத்தான் வலிமையானவர்களாக இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் தாமாகவே மனதைத் தேற்றிக் கொள்வது இயலாத ஒன்று. குழந்தைக்காக முயற்சி செய்து பலமுறை தோற்று அதனால் மனம் தாங்கும் வலியில் இருந்து வெளியில் வருவது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிப்போகும். இதனால் உடலுறவின்போது அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகும். விறைப்புத் தன்மை ஏற்படாமல் போகும்.

    குழந்தையின்மைப் பிரச்சனைக்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். காரணத்தைச் சொல்லி அதனை சரி செய்து நம்பிக்கை அளித்து குழந்தை உருவாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

    ஒரு வேளை அவர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லாமல் போனால் அதற்கான மருந்துகள் கொடுத்து மேம்படுத்தலாம். அவர்கள் மேல் எந்தப் பிரச்சனையும் இல்லை. இது அவர்கள் உடலில் இயற்கையாக உண்டான பிரச்சனை என்பதைப் புரிய வைக்கலாம்.

    இயற்கையாக நடக்க வேண்டிய விஷயங்களில் பிரச்சனை இருக்கும் போது அதற்கென உள்ள சிகிச்சைகள் மூலம் விரைவாக அவர்களை மேம்படுத்தி குழந்தை உருவாவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். குழந்தை பிறந்து விட்டால் இந்த டென்ஷனில் இருந்து அவர்கள் வெளியில்  வந்து விடுவார்கள்.

    குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்வது தாம்பத்திய இன்பத்தை பாதிக்குமா?

    குழந்தையின்மைக்காக சிகிச்சை எடுப்பது தாம்பத்திய இன்பத்தை பாதிக்காது. தம்பதியர் விரைவாக வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது தாம்பத்தியம் கசப்பானதாக மாறுவதைத் தடுக்க முடியும். குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைக்காக காத்திருந்து விட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    பாலியல் கல்வி அவசியம். 8 மணி நேரத் தூக்கம் அவசியம். ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுகள், தொடர்ச்சியான உடற்பயிற்சி, பார்ட்னரோடு நன்றாகப் பேச வேண்டும். இருவரும் மகிழ்ச்சியான அன்பான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தாம்பத்தியமும் சிறக்கும், வாழ்க்கையும் இனிக்கும்!

    இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.
    செய்முறை: விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்

    பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.

    உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது.
    இப்போது அனைவரும் குளிர்சாதன வசதியை எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் தூங்கும் போது குளிர்சாதன வசதியை பெறுகிறார்கள். காரில் செல்லும் போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் ஏ.சி.யை அனுபவிக்கிறார்கள். மேலும் ஓட்டல்களுக்கு சென்றாலும் ஏ.சி. அறையை தேடி செல்கிறார்கள். இப்படி சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி குளிர்சாதன வசதியை நோக்கி செல்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர் அவர்கள் மேல் விழாத நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

    தாவரங்களுக்கு எவ்வாறு சூரிய ஒளிக்கதிர் தேவைப்படுகிறதோ அதே போன்று தான் மனிதர்களுக்கும் சூரியஒளிக்கதிர் தேவையாகிறது. மனிதன் உயிர் வாழவும், உடல் உறுப்புகள் பலமிக்கதாக இருக்கவும் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகிறது. உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது இயற்கை. சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்.

    இதனால் உடலில் எலும்பு, தசை சம்பந்தமான நோய்கள் தாக்கும். இன்று பலர் இந்த நோய்களால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சூரிய ஒளி உடலுக்கு தேவை என்பதும் அது கிடைக்காததால் இப்படி நோய் தாக்குகிறது என்பதும் தெரிகிறது. காலை வெயிலும் மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. மதியம் உச்சி வெயில் என்பது உடலுக்கு கெடுதலை தரும். பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். சூரிய ஒளி பட வேண்டும் என்பதற்காக மதியம் உச்சி வெயிலில் நடமாட கூடாது.

    காலை வெயில் தான் வைட்டமின் டி சத்து கிடைக்க ஏதுவானதாகும். எனவே வைட்டமின் டி சத்து குறைபாடு உடையவர்கள் காலை வெயிலில் காலார நடந்து வர உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும். சில ஆலயங்களில் சூரிய வழிபாடு கூட நடைபெறுவது உண்டு. யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் என்ற உடற்பயிற்சியும் சூரியனை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சூரிய நமஸ்காரம் காலை நேரத்தில் சூரிய உதயத்தில் செய்யும் போது உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.

    மாயா, திருச்சி. 
    உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சூப்பரான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    முட்டை - 4
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 4
    உருளைக்கிழங்கு - 2
    கறிவேப்பிலை
    வெங்காயம் - 1
    வெண்ணெய் - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி, உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்..

    நான் ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேக விடவும்.

    இப்பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து முக்கோணமாக கேக் வெட்டுவது போல் வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கும் இதயம் நமக்கு உணர்த்துவது நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், பிறருக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவசியத்தையும் என்றும் கூறலாம்.
    இதயம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அன்பு, காதல், பாசம் மற்றும் உறவுகள். தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கும் இதயம் நமக்கு உணர்த்துவது நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், பிறருக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவசியத்தையும் என்றும் கூறலாம். மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்பது, தனதளவிலும், தன் குடும்ப அளவிலும், தன் சமுதாய அளவிலும் மற்றும் உலகளவில் அல்லது எதிர்கால சந்ததியர்க்கு என்ற அளவிலும் விரிந்து செயல்படுவதே சிறப்பு. அந்த வகையில் இதயத்தை சிறப்பாய் காக்கும் நம் கடமையும் மேற்கண்ட வகையில் விரிந்து இருக்க வேண்டும்.

    தன்னளவில் செய்ய வேண்டியவை

    தொடர்ந்து இயங்கும் என்ஜினை எண்ணெய் போட்டு முறையாய் பராமரிப்பது போல் நம் உணவுமுறை இருக்க வேண்டும். பதப்படுத்திய உணவு, அதிகளவில் செறிவுள்ள கொழுப்பு உணவு, மாட்டிறைச்சி போன்றவகைகளை தவிர்த்து அதிகளவில் இயற்கையான பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் கோழி இறைச்சி போன்றவைகளை உண்ண வேண்டும். புகை மற்றும் மதுவை தவிர்த்து துரித நடைபயிற்சியை மேற்கொண்டு, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

    தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியவை

    குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையை கடைபிடிக்க உதவ வேண்டும். குடும்பத்தில் பாசம், வாழ்க்கை துணையின் மேல் அக்கரை, குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களையும் பழக்க வழக்கங்களையும் போதித்தல், குடும்பத்துடன் ஓய்வாக இருக்க நேரம் ஒதுக்குதல் போன்றவை குடும்பத்தின் ஆரோக்கியம் மட்டுமின்றி முழுமையான உடல் நலத்திற்கே நல்லது.

    சமுதாய அளவிலான கடமைகள்

    புகை பிடித்தல் என்பது தன்னை மட்டுமின்றி சுற்றியுள்ள மனிதர்களையும் பாதிக்கக்கூடியது. முன்பெல்லாம் விளம்பரங்களில் ‘புகை பிடித்தல் உயிரை குடிக்கும்’, புகை பிடிக்காதீர்கள் என்று மட்டுமே கூறப்படுவதுண்டு. ஆனால் தற்போது ‘இந்த இடத்தில் புகை பிடிக்கக்கூடாது’ என்றும் ‘புகை பிடித்தலை அனுமதிக்காதீர்’ என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இது வரவேற்க வேண்டிய சிறந்த மாற்றம். இன்று மக்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் தருவது வாகனம் ஓட்டுவது. பொறுப்பற்ற ஓட்டுனர்களால் இது ஏற்படுகிறது எனவே பொறுப்பாகவும், விதிகளை கடைபிடித்தும், சாலையில் விட்டுக்கொடுத்தும் பதட்டமின்றி வண்டி ஓட்டுவது தனக்கும் சமுதாயத்திற்கும் நலமளிக்கும் செயலாகும்.

    எதிர்காலத்திற்கான கடமை

    ஒவ்வொரு மனிதரும் தன்னளவிலும், தன் குடும்பத்திலும், தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திலும் மேற்கூறிய முறைகளில் மாற்றங்களை கடைபிடித்தால் அதுவே ஒரு சமுதாயத்தின் நாகரிகமாகவும் பண்பாடாகவும் மாறி விடும். மக்களின் இதயம் மட்டுமின்றி வாழ்க்கையும் கூட ‘டிக் டிக்’ என்பதற்கு பதில் தித்திப்பாக செயல்பட துவங்கி விடும். இந்த நல்ல மாற்றம் ஒன்றே ஆரோக்கிய முதலீடாகி எதிர்கால சந்ததியினர் அதன் பலனை அனுபவிக்க வழிவகுக்கும்.மேற்கண்ட கடமைகள் இதய நலனுக்கு மட்டுமல்ல முழுமையான நலனுக்குமாகும்.

    டாக்டர் ஜேக்கப் ஜேம்ஸ்ராஜ்

    மூத்த இதய அறுவை சிகிச்சை வல்லுநர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்

    சென்னை. 
    மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.
    இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. மாதவிடாய் சமயத்தில் விரிவடைந்திருக்கும் கர்ப்பப்பை, குருதி வெளியேறி சுருங்குவதால் அந்த வலி ஏற்படுகிறது. மாதவிடாய் வலி என்பது இயல்பானது.

    அனேகமான பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்றுப்பகுதியின் கீழ் பகுதியில் தசைப்பிடிப்பு, மார்பக வலி, மார்பக வீக்கம், தலைவலி, தோள்மூட்டு வலி, மனச்சோர்வு, எரிச்சல் போன்ற சில தொந்தரவான அறிகுறிகள் தோன்றுகின்றன. இது சகஜம்தான். இந்தக் காலத்தின் முன்னும் பின்னும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ரொஜெஸ்ட்ரோன் என்னும் ஹார்மோன்களால் உடலில் மேற்சொன்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனதளவிலும் உணர்வுகளும் மாறுபட்டு வித்தியாசமாக உணர்வார்கள். இந்த வலி அதிகமாகும்போது சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குக்கூட ஏற்படும் வாய்ப்புண்டு. மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும்தான். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு.

    கருப்பையில் பைப்ராய்டு கட்டிகள் (சாதாரண கட்டி) இருப்பவர்களுக்கு வலி வரலாம். Entometeriosis எனப்படும் பிரச்சனையாலும் வலி வரலாம். அதாவது கருப்பைக்குள் வளர வேண்டிய அந்த சதைப்பகுதி (உள் மென் சீத சவ்வு) கர்ப்பப்பைக்கு வெளிப்புறம், சிறுநீர்ப் பாதை அல்லது மலக்குடலின் வெளிப்புறமும் சிலருக்கு உண்டாகி இருக்கும். மாதவிடாய் சமயங்களில் அங்கும் குருதி மடிப்புகள் உருவாகும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு அவர்களுக்கு வெளிப்புறம் எங்கெல்லாம் அந்த சவ்வு இருக்கிறதோ அங்கெல்லாம் ஏற்படும்.

    அதனால் மாதவிடாயின் போது ரத்தப்போக்கு அல்லது ரத்தக்கசிவு அதிகமாக இருக்கும். மாதவிடாயின்போது ரத்தப்போக்கு பெண்களின் பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். ஆனால் கருப்பைக்கு வெளிப்புறமும் குருதி மடிப்புகள் உள்ளவர்களுக்கு ஆங்காங்கே ஏற்படும் ரத்தப்போக்கு வெளியேற வழியில்லாமல் உடலின் உள்ளேயே தங்கும்போது அது பிரச்னைகளை உண்டாக்கி அவர்களுக்கு வலி அதிகமாக ஏற்படும். இந்தப் பிரச்னை சிலருக்கு மரபுரீதியாக ஏற்படலாம்.

    சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டினாலும் ஏற்படலாம். சாதாரணமான மாதவிடாய் வலியைப் பொறுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் அதிகமான அளவில் வலி இருக்கும் போது வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். ஹெவி டோஸ் எடுக்கக்கூடாது. தாங்க முடியாத அளவு வலி வரும் போது மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டியது அவசியம். ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து தீர்வு காண்பது அவசியம். மாதவிடாயின்போது அதிகளவு உதிரப் போக்கு ஏற்படும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், கருப்பைக் கட்டிகள் அல்லது கருப்பையில் புற்றுநோயின் பாதிப்போ இருக்கக்கூடும்.

    மாதவிடாய் வலியைக் குறைக்க வைட்டமின் பி1, தையமின், வைட்டமின்பி6, பைரடாக்சின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உணவில் சரியான அளவில் இடம்பெற வேண்டும். பயறு வகைகள், தானிய வகைகள், நட்ஸ், அசைவ உணவுகள் (மீட்) போன்றவற்றை தேவையான அளவு சாப்பிட வேண்டும். கால்சியம், மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நிறுத்தம் என்பது 45லிருந்து 60 வரை உள்ள காலகட்டத்தில் நடக்கும். மாதவிடாயினால் ஏற்படும் உதிரப்போக்கு நின்றுவிடும். இந்த காலகட்டத்தில் பெண்களின் பாலின பண்பிற்கு காரணமான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பது குறைகிறது. இந்த உதிரப்போக்கு குறையும் போது வலி ஏற்படுவதும் குறைகிறது.
    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலோர் உதடுகளை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. உதட்டை பராமரிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
    உதடுகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலோர் உதடுகளை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. உலர்ந்த, வெடிப்புகள் கொண்ட மற்றும் சீரற்ற உதடுகள் முக அழகுக்கு பங்கம் விளைவித்துவிடும். வலியையும் ஏற்படுத்தும். மென்மையாக, கவர்ச்சிகரமாக உதட்டு அழகை பராமரிக்கும் வழிமுறைகள்!

    பழைய, இறந்த செல்களால் உதடுகள் கடினமானவோ, உலர்வாகவோ தோன்றும். உதடுகள் ஒருபோதும் உலராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,

    உதடுகள் மிருதுவாகவும், பொலிவாகவும் காட்சியளிப்பதற்கு மென்மையான பிரஷை பயன்படுத்தலாம். தூங்க செல்வதற்கு முன்பாக மென்மையான பிரஷ் மூலம் உதடுகளை இதமாக மசாஜ் செய்வது நல்லது.

    சிறிதளவு சர்க்கரையுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து ஒன்றாக கலந்து உதடுகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து அவ்வாறு செய்துவந்தால் உதடுகள் மென்மையாக மிளிரும்.

    சமச்சீரான சத்துணவுகளை சாப்பிட்டால் உதடுகள் பார்க்க அழகாக இருக்கும்.

    உதடுகளில் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு எண்ணெய் வகைகளை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றில் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் கலந்திருக்கின்றன. அவை சருமத்தால் உறிஞ்சப்பட்டு பொலிவை தக்கவைத்துக்கொள்ள துணைபுரியும்.

    சருமம் உலர்வடையும்போது உதடுகளும் பாதிப்புக்குள்ளாகும். சிலவகை லிப்ஸ்டிக்குகள் வாசனை திரவியங்கள் சருமத்துக்கும், உதடுகளுக்கும் ஒத்துக்கொள்ளாது. உதடுக்கான பிரத்யேக கிரீம்களை பயன்படுத்தலாம். அவை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உதடுகளை பாதுகாக்கும். 
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை பருகலாம். இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 7
    இஞ்சி - 2 துண்டு
    பட்டை - 2 இன்ச்
    தண்ணீர் - 1 லிட்டர்
    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை  :

    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.

    வடிகட்டிய டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துவலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கழுத்து வீக்கம், இடுப்புவலி, கணினி முன் வேலை செய்பவர்களுக்கான மூட்டுவலி தீரும்.
    செய்முறை :

    வலது கை: நடு விரல், சுண்டு விரல், கட்டை விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை: சுண்டு விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    பலன்கள் :

    கழுத்துவலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கழுத்து வீக்கம், இடுப்புவலி, கணினி முன் வேலை செய்பவர்களுக்கான மூட்டுவலி தீரும்.

    கட்டளைகள் :

    வாயு, சந்தி முத்திரையைச் செய்த பின், கழுத்துவலி முத்திரையை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
    ×