search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Tea"

    கொய்யா இலை டீ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு  பராமரிக்கப்படும்.

    தேவையான பொருட்கள் :

    கொய்யா இலை - 5
    டீத்தூள் - அரை டீஸ்பூன்
    தண்ணீர் - 2 கப்
    ஏலக்காய் - 2
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் டீத்தூள், கொய்யா இலை, ஏலக்காய் போட்டு மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி வடிகட்டி பருகவும்.

    சத்தான கொய்யா இலை டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று துளசியில் டீ தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துளசி இலை - 1/2 கப்
    தண்ணீர் - 2 கப்
    டீத்தூள் - 2 டீஸ்பூன்
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    பால் - தேவையான அளவு



    செய்முறை :

    துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.

    பின் டீத்தூள், நாட்டு சர்க்கரை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும்.

    தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ளவும்.

    சுவையான ஆரோக்கியமான துளசி டீ தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் வெந்தய டீ குடித்தால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும். இன்று வெந்தய டீ போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்
    நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    வெந்தயத்தின் சாறு தண்ணீரில் இறங்கியவுடன் அதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    நாட்டு சர்க்கரை நன்றாக கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

    சத்தான வெந்தய டீ ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை பருகலாம். இன்று இந்த டீயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம் - 1 டீஸ்பூன்
    மல்லி - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கிராம்பு - 7
    இஞ்சி - 2 துண்டு
    பட்டை - 2 இன்ச்
    தண்ணீர் - 1 லிட்டர்
    கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை  :

    ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.

    வடிகட்டிய டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×