என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    40 வயதுகளில் சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் முதுமையை தள்ளிப்போடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
    40 வயதுகளில் சருமம் அதன் மென்மை தன்மையை இழக்கத் தொடங்கும். அப்போது சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். அது முதுமைக்கான அறிகுறிகளாகும். வயது அதிகரிக்கும்போது ரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். சூரியனில் உள்ள புற ஊதாக்கதிர்களும் சருமத்தில் உள்ள எலாஸ்டின் எனப்படும் இழைகளை பாதித்து சரும வெடிப்புக்கு வித்திடும். சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் முதுமையை தள்ளிப்போடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வைட்டமின் ஏ பற்றாக்குறை: வயது அதிகரிக்கும்போது சருமம் கொலோஜனை இழக்கத் தொடங்கும். அதுதான் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் ஏ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ரெட்டினால் எனும் மருந்து பொருளை உபயோகிக்கலாம்.

    சன்ஸ்கிரீன்: யூ.வி.ஏ, யூ.வி.பி கதிர்வீச்சுக்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்தை பாதுகாக்கும் தன்மை சன்ஸ்கிரீனுக்கு உண்டு. சன்ஸ்கிரீன் தேர்விலும் கவனம் வேண்டும். ஆல்கஹால் கொண்ட ஸ்பிரேக்கள், ஜெல்களை தவிர்ப்பது நல்லது. சருமத்தில் உள்ள கொலோஜனை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது அவசியமானது.

    இறந்த செல்கள்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சில நாட்களுக்கு பிறகு புதிய சரும அடுக்குகள் உருவாகும். இது வழக்கமான நடைமுறையாகும். ஆனால் வயது அதிகரிக்கும்போது இந்த செயல்முறை மெதுவாக நடக்கும். அதனால் சருமம் பொலிவின்றி காட்சியளிக்கும். சருமத்தில் கரடுமுரடான திட்டுகள் உருவாகக்கூடும். வாரம் ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு நலம் சேர்க்கும்.

    முகம் கழுவுதல்: வயது அதிகமாகும்போது சருமத்தில் எண்ணெய் பசைத் தன்மைகுறையும். சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட இடை வெளியில் முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது செல்களை தாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட உதவும். சருமத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக முகம் கழுவுவது நல்லது. அதன் மூலம் முகப்பரு பிரச்சினையையும் தவிர்க்க முடியும்.

    மசாஜ்: முகத்தில் உள்ள தசைகளை இலகுவாக்குவதற்கு மசாஜ் செய்ய வேண்டும். கை விரல்களை கொண்டு மென்மையாக தசைகளை அழுத்தி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது திசுக்களின் சிதைவை தடுக்கவும் உதவும்.

    தண்ணீர்: தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகுவது சரும ஆரோக்கியத்திற்கு வித்திடும். சருமம் ஜொலிப்பதற்கு ஈரப்பதமும், நீர்ச்சத்தும் தேவை.

    எண்ணெய்: இளம் வயதில் இருந்தே ஒமேகா கலந்த எண்ணெய்யை உபயோகிக்கலாம். அது சருமத்திற்கு நலம் சேர்க்கக்கூடியது. மிகவும் நுட்பமாக சருமத்தை பாதுகாக்கக்கூடியது.

    ஒப்பனை: கூடுமானவரை ரசாயனங்கள் கலந்த மேக்கப் பொருட்களை பயன்படுத்தவேண்டாம். ஒப்பனையோடு தூங்குவதும் சருமத்திற்கு நல்லதல்ல. வயதாகும்போது சரும துளைகளில் எளிதாக அடைப்பு உருவாகிவிடும். நுரைகளை வெளிப்படுத்தும் கிரீம்கள், ஜெல்களை கொண்டு முகத்தை கழுவுவது சிறந்தது.

    முக கிரீம்: வயதாகும்போது எண்ணெய் சுரப்பிகளின் செயல்திறன் குறையும். அதனால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தென்படும். சாதாரண கிரீம்களுக்கு பதிலாக பேஸ் கிரீம் உபயோகிப்பது சருமத்தை மிருதுவாக்க உதவும்.

    சர்க்கரை: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும் சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அடர் பெர்ரி பழங்கள், அவகொடா, பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் போன்றவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் வயதாகும் தன்மையை குறைக்கக்கூடியவை. அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
    நவீன சிகிச்சை முறைகளால் தற்போது 20 முதல் 30 வயது என்றால் 70 சதவீத வெற்றி வாய்ப்பும், 30 முதல் 40 வயது என்றால் 60 சதவீதம் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறோம்.
    பெண்கள் பூப்பெய்தும் காலம் முதல் தொடரும் சமச்சீரற்ற கால இடைவெளிகளில் ஏற்படும் மாத விடாய், கரு முட்டை உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்கள், கருக்குழாயில் ஏற்படும் கோளாறுகள், சினை குழாய் அடைப்பு, கரு முட்டையில் உருவாகும் பி.சி.ஓ. குறைபாடுகள், பரம்பரையின் காரணமாக மகப்பேரின்மை, கரு முட்டையில் சாக்லெட் சிட்ஸ் எனப்படும் நீர்க்கட்டிகள், கர்ப்பப் பை கட்டிகள் என பல பிரச்சினைகளால் குழந்தையின்மை ஏற்படலாம்.

    இதற்கு உரிய முறையில் பரிசோதனை செய்து அதற்குரிய தீர்வை அளிக்கிறோம். ஆண்களைப் பொறுத்தவரையில் விந்துக்களின் எண்ணிக்கை, வீரியம் மற்றும் அடர்த்தியில் குறைபாடு, அதன் நீந்தும் திறனில் இருக்கும் கோளாறுகள், விந்து உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், உடல் பருமன், வாழிட மற்றும் பணியிடச் சூழல், நீரிழிவு, ரத்த அழுத்தம் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆண்களுக்கு செய்யும் பரிசோதனையில் இவைகள் தெரிய வந்ததும் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகளால் குணப்படுத்த முயல்கிறோம். அது முழுமையான பலன்களை தராத தருணத்தில்தான் செயற்கை முறை கருத்தரிப்பு பற்றி பரிந்துரை செய்கிறோம்.

    திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டவில்லை என்றாலோ, ஐ.யூ. ஐ. என்ற சிகிச்சையை 6 முறை எடுத்து தோல்வி கண்டவர்களுக்கோ, விந்தணு எண்ணிக்கையில் முன்னேற்றம் கிட்டாதவர்களுக்கோதான் இவ்வித சிகிச்சை பொருந்தும்.

    அதே போல் பெண்களிடத்தில் ஒரு பிரிவு பெண்களுக்கு கருமுட்டை வெடிப்பதில் பிரச்சினை இருந்தாலோ, சினைக் குழாயில் அடைப்பு இருந்தாலோ, அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டாலும், மீண்டும்,மீண்டும் கருக்குழாயில் கட்டிகள் தோன்றினாலோ இவ்வித சிகிச்சையில்தான் பலன் பெற இயலும். எங்களின் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையத்தில் இது வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் டியூப் பேபியை வெற்றி கரமாக உருவாக்கி தம்பதியர்களின் சந்தோஷத்தில் பங்கெடுத்திருக்கிறோம். ஹார்மோன் ஊசி மூலம் கரு முட்டையை உற்பத்தி செய்து, குறிப்பிட்ட நாளில் அதை ஸ்கேன் மூலம் பரிசோதித்து எடுத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கணவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை சுத்திகரித்து சேமித்து வைத்திருப்பதை இணைப்போம்.

    இதன் மூலம் ஆரோக்கியமான விந்தணுவும், கரு முட்டையும் ஒன்றிணையும் வாய்ப்பை உருவாக்குகிறோம். ஒரு சிலருக்கு ஆரோக்கியமான விந்தணுவின் நீந்தும் திறன் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் போது, அதனை கரு முட்டையில் நேராக ஊசி மூலம் செலுத்தி கருத்தரிக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறோம். கடந்த 29 ஆண்டுகளுக் கும் மேலாக பல்லாயிரக்கணக் கான பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்து அவர்களுக்கு தாலாட்டு பாடும் பாக்கியத்தை அளித்திருக்கிறோம். இது பழனியில் மட்டுமல்லாது கோவை, மதுரை, சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரத்திலும் தொடர்கிறது.

    நவீன சிகிச்சை முறைகளால் தற்போது 20 முதல் 30 வயது என்றால் 70 சதவீத வெற்றி வாய்ப்பும், 30 முதல் 40 வயது என்றால் 60 சதவீதம் வெற்றி வாய்ப்பும் இருக்கிறது என்பதை நினைவுறுத்துகிறோம். குழந்தையின்மைக்கான காரணத்தை துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய தீர்வையும் முன் வைக்கிறோம். தம்பதிகளின் உச்சபட்ச சந்தோஷம் குழந்தைகள் தான். கரு பதியமிடுவதில் வெற்றியை உறுதி செய்ய இன்று ஏராளமான நவீன மருந்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. அதனால் பலன்களும், வெற்றி வாய்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆரோக்கியமாகவும், குழந்தை பிறப்பையும் உறுதி செய்கின்றன. இதனால் தாலாட்டும் தாய் மடியை தருகிறோம்.

    மேலும் விவரங்களுக்கு: 88832 52111

    -டாக்டர் எஸ்.சந்திரலேகா, மகப்பேறு மருத்துவ நிபுணர்
    செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும்.
    பழைய காலங்களில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு தடுக்கி விழுந்தால் ஒரு நொறுக்குத்தீனி கடையில் முட்டும் அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவிட்டது. ஏன் எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம் மாத்ராதீசியம் என்ற பெயரில் விளக்குகிறது. தக்க முறைப்படி உண்பதுதான் மாத்திரை. அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக் கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவை பற்றி நினைக்கவும் கூடாது; நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக் கூடாது; ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக் கூடாது.

    உணவின் அளவை பொறுத்து உடலில் இருக்கின்ற ஜடாராக்னி வேலை செய்கிறது. ஒருவருடைய செரிக்கும் சக்தியான அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்கு தேவையான உணவாகும். அக்னியின் தன்மைக்கேற்ப உணவை உண்ண வேண்டும்.

    அக்னியின் பலத்தை பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும். இலகுவான உணவுப் பொருட்களை சற்று கூடுதலாக சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.

    உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும், பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். உண்ட உணவு செரிக்காமல், வாந்தி ஆகாமல், மலம் ஆகாமல் மந்தமாக உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவது போன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல், தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.

    தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக் கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த செமிக்காத உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவ தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.

    எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். அவசரமாகவும் இல்லாமல், சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணமுடைய, இனிப்பு, அறுசுவை உணவை உண்ண வேண்டும். குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவைச் சாப்பிட வேண்டும். உணவு சற்று திரவமாக இருக்க வேண்டும். அதிகமாக தயிர், சமைக்காத முள்ளங்கி, உளுந்து, சிறுகடலை, மாவு பண்டங்கள், சர்க்கரை பாகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம், மாம்பழம் முதலியவை எளிதில் ஜீரணமாகாது.
    வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்கள் அவசர உதவிக்கு அழைக்கும் எண்களை பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.
    தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தேவையினால் பத்து ஆண்டுகளுக்கு பின்பு வரவேண்டிய தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த இரண்டு ஆண்டுகளிலேயே வந்த விட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன் வைத்திருப்பது உலகத்தையே கைக்குள் அடக்கி வைத்திருப்பதற்கு சமமாக இருக்கிறது.

    நமது அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் அத்தனை செயல்களையும் எளிதாக மாற்றும் செயலிகள் ஏராளமாக உள்ளன. பலரது ஸ்மார்ட்போன்களின் பொழுகுபோக்கு அம்சங்கள், விளையாட்டுகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இவற்றைதவிர பாதுகாப்புக்கான அம்சங்களும் ஸ்மார்ட் போன்களில் இடம் பெறுவது அவசியமாகும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தனியாக வெளியே செல்பவர்கள் அவசர உதவிக்கு அழைக்கும் எண்களை பதிவேற்றம் செய்து வைத்திருக்க வேண்டும்.

    ஆபத்து ஏற்படும் காலத்தில் யாருடைய உதவியும் கிடைக்காமல் போனாலும் சமயோசித புத்தியோடு இவற்றை பயன்படுத்தலாம். தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்று பாதுகாப்பாக இருக்கலாம்.

    தற்போது அனைத்து செல்போன்களிலும் அவசர உதவிக்கான 100, ஆம்புலன்ஸ் சேவைக்கான 108, தீயணைப்பு துறைக்கான 101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இந்த எண்கள் போன் லாக்கில் இருக்கும் போது கூட அழைக்கும் விதமாக பதியப்பட்டிருக்கும். இவற்றை தவிர நாம் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன அதை பற்றி பார்க்கலாம்.

    பெண்களுக்கான அவசர உதவிக்கு - 1091
    பெண்கள் மீதான வன்கொடுமைக்கு - 181
    தேசிய பெண்களுக்கான ஆணையம் - 01126944754. 26942369
    குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு - 1098
    பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் - 1094
    மனஉளைச்சலால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு - 9911599100
    தமிழ்நாடுபெண்கள் ஆணையம் - 044 28592750
    தமிழ்நாடு பெண்கள் உதவி எண் - 04428592750
    ராகிங் தொல்லைக்கு - 155222

    மேற்கண்ட அனைத்து எண்களையும் அவசர உதவிக்கு உங்கள் மொபைல் போனில் குறித்து வைத்து கொள்ள வேண்டும். ஆபத்து நேரங்களில் பதற்றம் அடையாமல் சரியான எண்ணை பயன்படுத்தும் சமயோசிதமும் கொண்டிக்க வேண்டும். இது தவிர மொபைலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் எண்களையும் சேமித்து வைத்திருக்க வேண்டும். முக்கியமான நெருங்கிய நண்பர்களின் எண்களையும் சேமித்து வைக்கலாம். ஏதேனும் ஆபத்தில் சிக்கினால் அவர்களின் மூலம் உதவி பெற முடியும்.

    இந்த முக்கிய எண்களை சிறு டைரியில் குறித்து கைப்பைக்குள் வைத்து கொள்ளலாம். ஒருவேளை செல்போன் தொலைந்தால் உதவக்கூடும்.
    ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த வேண்டும்.
    மாறிவரும் வாழ்க்கை முறைகள் பொருளாதார நெருக்கடி, நேரமின்னைம போன்ற காரணங்களால் பல பெற்றோர்கள், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று ஒரு குழந்தையோடு நிறுத்தி கொள்கின்றனர். இரண்டு, மூன்று குழந்தைகளை பெற்று வளர்ப்பதை காட்டிலும் ஒற்றை குழந்தையை வளர்ப்பதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வழி நடத்தினால் சிரமங்களை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழலாம். அதற்கான ஆலோசனைகளை இங்கே பர்ர்ககலாம்.

    தனிமையை தவிர்த்தல்

    ஒற்றை குழந்தைகள் தனிமையை அதிகமாக உணர்வார்கள். தனியாக வளர்வதால் மற்றவர்களிடம் சகஜமாக பழகுவதற்கு தயங்குவார்கள். அவர்களிடம் பெற்றோர்கள் தோழமை உணர்வோடு பழக வேண்டும். எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் அவர்கள் மனம் விட்டு பேசும் அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.

    சமூக நடத்தை மற்றும் பகிர்தல்

    பொது இடங்களில் மற்றவர்களுடன் நட்பாக பழகுவது, வயதில் மூத்தவர்களை மதித்து நடப்பது, தம்மிடம் இருப்பதை இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது போன்ற பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

    தவறை சுட்டிக்காட்டுதல்

    ஒரே குழந்தை என்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது. குழந்தை செய்யும் தவறுகளை நல்ல முறையில் சுட்டிக்காட்டி அறிவுரை கூறி திருத்த  வேண்டும்.

    மன்னிப்பு கேட்கப்பழகுதல்

    ஏதேனும் தவறு செய்தால், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். தவறு செய்து விட்டால் பெரியவர், சிறியவர் போன்ற பேதங்களை பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இது குழந்தையிடம் தனி மனித ஓழுக்கத்தை மேம்படுத்தும்.

    சுதந்திரம்

    ஒரே குழந்தை என்பதால் கைக்குள்ளேயே வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். தனியாக சிந்திக்கவும், செயல்படவும் அனுமதிக்க வேண்டும். அவர்களுடைய ஆர்வத்தை தெரிந்து கொண்டு அதை நோக்கி நல்ல முறையில் வழி நடத்த வேண்டும்.

    பணத்தின் மதிப்பை உணர்த்துதல்

    குழந்தை கேட்கும் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவை அறிந்து பொருள் வாங்குதல், குடும்ப பொருளாதார நிலை, கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கும் சூழல் என பொருளாதார ரீதியான அனைத்து விஷயங்களையும் சிறு வயதிலிருந்தே புரிய வைக்க வேண்டும்.

    சூழலை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்குதல்

    ஒரே குழந்தை என்பதற்காக கல்வி, உணவு, உடை போன்றவற்றுக்காக அதிகமாக செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பழக்கக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் சீரான வாழ்க்கை வாழ்வதற்கு கற்றுத்தர வேண்டும்.
    கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
    தாய்மை என்பது ஒவ்வாரு பெண்ணின் வாழ்க்கையிலும் நிகழும் முக்கியமான தருணமாகும். குழந்தையை கருவில் தாங்கும் போது உடலிலும், மனதிலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். சில வகை உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ளும். சிலவகை உணவுகள சாப்பிட்ட வேகத்திலேயே வாந்தியாக வெளியேற்றப்படும்.கர்ப்ப காலத்தில் எந்த விதமான ணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார் திருவிடைமருதூர் அரசு மருத்துவனை மகப்பேறு மருத்துவர் ஏ.ஆர்த்தி

    கர்ப்ப காலத்தில் எல்ல சத்துக்களும் சரி விகிதத்தில் அடங்கிய உணவை மட்டும் தேவையான அளவு சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் 5 முதல் 9 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உடல்எடை,  எளிதான பிரவத்துக்கு வழிவகுக்கும்.

    கர்ப்ப காலத்தில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை குறைவாக உண்ண வேண்டும். புரதச்சத்து அதிகம் உள்ள முட்டை, பால், காய்கறிகள், இறைச்சி, சோயா பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்களை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

    தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை சாறு, மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களை பருகலாம்.

    கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, இருந்தால் எவ்வகை ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

    இரும்புச்சத்து- முருங்ககைக்கீரை, முருங்கைக்காய், சுண்டடைக்காய், கடலைமிட்டாய், பேரீச்சம்பழம், முட்டை, ஈரல், கைக்குத்தல் அவல், கேழ்வரகு, உலர்திராட்சை போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

    கால்சியல்- பால், முட்டை, வெண்ணெய், கேழ்வரகு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

    ஃபோலிக் அமிலம் - பீன்ஸ், ஆரஞ்சு, கைக்குத்தல் அரிசி, பேரீச்சம் பழம், எலுமிச்சை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    வைட்டமின் சி - ஆரஞ்சி, எலுமிச்சை, நெல்லி, கொய்யா, போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    வைட்டமின் பி12 - அசைவ உணவுகள் அனைத்தையும் சாப்பிடலாம்.
    சைவ உணவு உண்பவர்கள் இந்த வைட்டமின் மாத்திரை வடிவத்தில் எடுத்துகொள்ளலாம்.

    ரத்தசோகை - இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    சர்க்கரை நோய் - மா, பழா, வாழை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சி, கொய்யா போன்ற பழங்களை சாப்பிடலாம். அரிசி உணவை குறைத்து காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

    ரத்த அழுத்தம் - உப்பு, எண்ணெய் அளவை குறைத்து கொள்ள வேண்டும். ஊறுகாய் போன்ற பதப்படுத்திய உணவுகளை சாப்பிடக்கூடாது.

    தைராய்டு - உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் கர்ப்பிணிகள் முட்டைக்கோஸ், முள்ளங்கி, காலிஃபிளவர் போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
    தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் பன்னீர். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - 2 கட்டு
    கொத்தமல்லி தழை - தேவைக்கேற்ப
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்)
    நெய் - 5 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3 (நறுக்கவும்)
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    நறுக்கிய தக்காளி - அரை கப்
    கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    நறுக்கிய பன்னீர் - 1 கப்

    செய்முறை:

    கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    பின்னர் அதனை பாத்திரத்தில் போட்டு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

    வெந்ததும், கீரை கலவையை நன்றாக கடைந்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் சீரகம், கரம் மசாலா, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

    பொன்னிறமானவுடன் தக்காளியை கொட்டி கிளறவும்.

    நன்கு வதங்கியதும் கடைந்த கீரையை சேர்க்கவும். அதனுடன் பன்னீர் சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

    கொத்தமல்லி தழையை சேர்க்கவும்.

    ஆரோக்கிய பலன்: இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்புசத்து இருப்பதால் ஆஸ்துமா வராமல் தடுக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எலும்புகளுக்கும் பலம் சேர்க்கும்.

    குறிப்பு: கீரையை சமைக்கும்போது மூடிவைக்க கூடாது. அப்போதுதான் அதன் நிறம் மாறாது.
    கொரோனாவிடம் சிக்காமல் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 வழிமுறைகளை சுகாதாரத்துறையினரும், டாக்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    கொரோனா என்ற பெயரை கேட்டாலே உலகமே அதிர்ந்து கிடக்கிறது. அந்த அளவுக்கு இந்த கொடிய வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் 24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை சுமார் 33 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில், 5 கோடி பேருக்கு இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

    2-வது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், 3-வது அலையும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை அலைகள் வந்தாலும் கொரோனாவிடம் சிக்காமல் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 வழிமுறைகளை சுகாதாரத்துறையினரும், டாக்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகிய 4 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியும் என்பது மருத்துவக்குழுவினரின் அறிவுரை.

    இதில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் சுய ஒழுக்கமாக கடைபிடிக்க வேண்டும். இந்த 4 விஷயங்களில் அலட்சியமாகவும், அச்சத்தோடும் இருப்பவர்களை தான் கொரோனா எளிதில் தாக்குகிறது. நலமோடு வாழ இந்த 4 விஷயங்களையும் அவசியம் மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
    விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம்.
    மருத்துவ குணங்கள் நிறைந்த விளக்கெண்ணெய் பாரம்பரியமான மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

    விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச்செல்லும் முன் கண்களை சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண்எரிச்சல் குணமாகும்.

    குளிப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக்கூறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    விளக்கெண்ணெய்யில் உள்ள ரிகினோலிக் அமிலம் சருமத்தில் உள்ள வீக்கம் புண்களை குணமாக்கும் சக்தி படைத்தது. சருமத்தில் ஏற்டும் சிவப்பு, தடிப்பு அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் , பூஞ்சை தொற்றுக்கும் , விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் விளக்கெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

    2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில் சுத்த்மான பருத்தி துணியை நனைத்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய்யை சமஅளவு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வருவதால் உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும, மினுமினுப்புடனும் இருக்கும்.

    விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையில்  இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.

    விளக்கெண்ணெய்யில் உள்ள ஓமேகா 9 கொழுப்பு அமிலம் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து கூந்தலின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.

    தினமும இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும்.

    பாதங்களில்ல வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச்செல்வதற்கு முன் வெடிப்புகளின் விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.
    நீங்கள் பயன்படுத்தும் இந்த 5 வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். அவை என்னென்ன தெரியுமா?
    நீங்கள் சிறப்பாக வேலை செய்பவராக இருக்கலாம். ஒழுக்கம் உட்பட அனைத்திலும் சிறப்பாக பெயர் வாங்கி இருக்கலாம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் இந்த 5 வாக்கியங்கள், நிர்வாகத்துக்கு உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். அவை என்னென்ன தெரியுமா?

    1. ‘இது முடியாது’ அல்லது ‘இதனைச் செய்வது கடினம்’

    புதிதாக நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆலோசனை கேட்கும் போது, செய்ய முடியாது அல்லது அதனை செயல்படுத்துவது கடினம் என்று கூறாதீர்கள். ஒருவேளை உண்மையிலேயே அந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றால், அதிலுள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு அதனை உங்கள் அலுவலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி, எப்படி செய்தால் அந்தத் திட்டம் வெற்றி பெறும் என யோசியுங்கள். ஆரம்பிக்கும் போதே முடியாது என்ற‌ வார்த்தையை பயன்படுத்துவதை நிர்வாகம் எப்போதும் விரும்பாது.

    2. இது என் வேலை அல்ல

    தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு துறையோ சில காரணங்களால் இயங்க முடியாமல் போகும் போது அந்த வேலையை உங்களிடம் அளித்தால், ‘இது என்னுடைய வேலை அல்ல; இதனை நான் செய்ய மாட்டேன்’ என்று கூறாதீர்கள். உங்களுக்கு அந்த வேலை தெரிந்ததால்- அல்லது அதை உங்களால் செய்ய முடியும் என்று நிர்வாகத்திற்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் - அந்த வேலை உங்களுக்கு அளிக்கப்படுக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வாய்ப்புகளை வீணாக்காமல், சிறப்பாக முடிக்க பழகுங்கள்.

    3. இது சிறப்பாக இல்லை!

    ஓர் அணி, ஏதோ ஒரு வேலையைச் செய்து அதனை அறிக்கையாக அளிக்கும்போது, இந்த வேலை சிறப்பாக இல்லை. இதில் இந்த விஷயங்கள் இல்லை என்று கூறாதீர்கள். அதில் உள்ள குறைகளை அவர்களுக்கு பரிந்துரைகளாக அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிப்பதுடன், உங்களது தலைமை பண்பையும் பிரதிபலிக்கும் விதமாக அமையும்.

    4. இல்லை என்று தொடங்காதீர்கள்!

    நீங்கள் பங்கேற்கும் முக்கியமான மீட்டிங்குகளையோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களையோ, இல்லை என்ற வார்த்தையோடு ஆரம்பிக்காதீர்கள். உதாரணமாக ஒருவர் ஒரு செயலை எப்படி செய்யலாம் என்று கேட்கும் போது ‘‘இல்லை, இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை வழங்காமல், இந்தச் செயலை இப்படிச் செய்யலாமே’’ என வழங்குங்கள். அவருக்கும் உடனடி வெறுப்பு வராமல் இருக்கும். உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    5. அவர் சரியில்லை, அவர் சோம்பேறி, நிறுவனத்தைப் பிடிக்கவில்லை!

    ஒரு நபரை ‘அவர் சரியில்லை’ என்றோ அல்லது ‘அவர் சோம்பேறித்தனமாக இருக்கிறார்’ என்றோ விமர்சிக்காதீர்கள். தனிப்பட்ட மனிதர்களை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. உயரதிகாரியாக இருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களின் வேலையை மட்டுமே விமர்சிக்க முடியும். அதேபோல் நிறுவனத்தைப் பிடிக்கவில்லை என்று விமர்சித்துவிட்டு பணிபுரியாதீர்கள். என்னதான் நீங்கள் சிறப்பாக பணிபுரிந்தாலும், இவர் விருப்பமில்லாமல் பணிபுரிகிறார் என்ற மனநிலையையே அது உருவாக்கும்.
    மாம்பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.
    உலக அளவில் இந்தியா தான் மிகச்சிறந்த மாம்பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறது. அதிக சுவை, தரம் கொண்ட மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைவிக்கப்படுகின்றன.

    மாம்பழங்கள் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் உபாதைகளை அனுபவிக்க நேரிடும்.

    நீர்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது உடலுக்குள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். வயிற்றுவலி, அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் கழித்து வேண்டுமானால் தண்ணீர் பருகலாம்.

    தயிர்: சிலர் மாம்பழ துண்டுகளுடன் தயிர் கலந்து சாப்பிடுவார்கள். அது ருசியாகவும் இருக்கும். இருப்பினும் மாம்பழம் வெப்பமானது, தயிர் குளிர்ச்சியானது. அதனால் உடலில் வெப்பத்தையும், குளிரையும் ஒருசேர உருவாக்கும்போது சரும பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    பாகற்காய்: மாம்பழம் சாப்பிட்ட உடனேயே கசப்பு தன்மை கொண்ட எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது. குறிப்பாக பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடும்போது குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    காரமான உணவு: மாம்பழம் சாப்பிட்ட பிறகு காரமான உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். அவை வயிற்றுப்பிரச்சினைகளை ஏற்படுத்தும். சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும். முகப்பரு தோன்றுவதற்கும் வழிவகுக்கும்.

    குளிர் பானம்: குளிர் பானங்களுடன் மாம்பழம் சாப்பிடுவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மாம்பழத்தில் சர்க்கரை அதிகம் இருக்கிறது. குளிர் பானங்களிலும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அப்படி மாம்பழம் சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.
    பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை.
    குழந்தை பருவத்தில் நிறைய பேர் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி ‘லிப்ஸ்டிக்’ பூசிக்கொண்டது போன்ற மன நிறைவை பெற்றிருப்பார்கள். பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் சேர்க்கக்கூடியவை. உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது.

    1. ஒளிரும் சருமத்திற்கு: பொதுவாகவே சிவப்பு நிற உணவுப்பொருட்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரக்கூடியவை. ஊட்டச்சத்தையும், நீர்ச்சத்தையும் தக்கவைக்கக்கூடியவை. அந்த வகையில் பீட்ரூட்டை மட்டுமே பயன்படுத்தி சருமத்தை ஒளிர வைக்கலாம். ஒரு பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின்பு அந்த விழுதை முகம் முழுவதும் தடவிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மிளிர தொடங்கிவிடும்.

    2. சரும பிரகாசத்திற்கு: வைட்டமின் சி, முகத்தில் பிரகாசத்தை பெற்றுத்தரும் மாயாஜால ஊட்டச்சத்து முகவராக அறியப்படுகிறது. பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு இவை இரண்டிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை ஒன்றாக பயன்படுத்தும்போது சருமத்தில் கோலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்க உதவும். சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்க துணைபுரியும்.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்

    உலர்த்தப்பட்ட ஆரஞ்சு தோலை பொடித்து தயாரித்த தூள் - 2 டேபிள்ஸ்பூன்

    செய்முறை: அகன்ற கிண்ணத்தில் ஆரஞ்சு தூளை கொட்டி அதில் பீட்ரூட் சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பசை போல் குழைத்த பிறகு அந்த பேஸ்டை முகத்தில் தடவிவிட்டு உலர விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால்
    சருமம் பிரகாசிக்கும்.

    4. முகப்பருவுக்கு: பீட்ரூட்-தயிர் இரண்டும் சேர்ந்த கலவை சருமத்தில் புள்ளி புள்ளிகளாக படர்ந்திருக்கும் துளைகளை நீக்க உதவும். முகப்பருவையும் போக்கும் தன்மை கொண்டது.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்

    தயிர் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், பீட்ரூட் இரண்டையும் கலந்து மென்மையான பேஸ்ட் தயாரித்துக்கொள்ளவும். அதனை முகம் முழுவதும் தடவி விட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி விடலாம்.

    ×