என் மலர்
ஆரோக்கியம்
உடல் உறுப்புகளுக்கு வலிமை சேர்த்து ஆரோக்கியத்தை பேணி காக்கும் தன்மை கொண்ட உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது.
தேவையான பொருட்கள் :
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை - 1 கட்டு
தேங்காய் துருவல் - அரை கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் (செக்கு எண்ணெய்) - 3 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறி, கீரையை கொட்டி வதக்குங்கள்.
அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கி பரிமாறவும்.
ஆரோக்கிய பலன்: கரிசலாங்கண்ணி கீரையில் இரும்பு சத்து, கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவது ஈரல் மற்றும் கண்களுக்கு நல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.

கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
தாய்மையை எதிர்கொண்டு கருவை சுமக்கும் பெண்களுக்கு சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு நிகழ்ந்துவிடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.6 மில்லியன் கருச்சிதைவுகள் நடைபெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் தினமும் 10 பெண்கள் பாதுகாப்பற்ற கருச்சிதைவு காரணமாக இறக்கும் அபாயமும் இருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நோய் பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.
குழந்தையை இழந்ததை நினைத்து மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது. கருச்சிதைவின் போது அதிக ரத்தப்போக்கு, இரும்பு சத்து இழப்பு, வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்ய உணவு பழக்கவழக்கத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.
* புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது அவசியம். அவை ரத்த செல்களை அதிகரிக்கச் செய்யும். அவித்த முட்டை, மீன், அவகொடா, பாலாடை, பட்டாணி, ஆரஞ்சு, கேரட், பச்சை இலை காய்கறிகள், வாழைப்பழம், பாதாம் போன்றவற்றில் புரதம் அதிகம் கலந்திருக்கும்.
* எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. முள்ளங்கி, முலாம்பழம், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடக் கூடாது. சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.
* மீன், கோழி இறைச்சி, முட்டை, ஆட்டு இறைச்சி, ஈரல், பழங்கள், காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், மீன், கோழி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை விரும்பி சாப்பிடலாம். இவற்றுள் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி நிறைந்திருக்கிறது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
* குறைந்த அளவு கொழுப்பு கொண்ட பால் பொருட்களை உட்கொள்ளலாம். அவற்றின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெறலாம். புரதம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கும்.
* காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளிலும் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.
* கருச்சிதைவிற்கு பிறகு, அதிகமாக வியர்வை வெளியேறக்கூடும். நீரிழப்பும் ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும், உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்ளலாம்.
* உலர்ந்த பழங்கள், இஞ்சி, பூண்டு, எள், பால் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கருச்சிதைவு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பதால், உடல் நிலையை மோசமாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ‘ஜங்க் புட்ஸ்’, சர்க்கரை சார்ந்த பானங்களை தவிர்க்க வேண்டும். அத்துடன் உருளைக்கிழங்கு, சுரைக்காய் போன்ற உடலை குளிர்விக்கக் கூடிய உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
* துணி துவைத்தல், தண்ணீர் வாளிகளைத் தூக்குதல் போன்ற எடை தூக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
* கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் வலி அல்லது பிடிப்பை குறைக்க சூடான கடுகு அல்லது எள் எண்ணெய்யை தடவலாம். அத்துடன் உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு, கை, கால்கள், உள்ளங்கைகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.
* கருச்சிதைவுக்குப் பிறகு, உடலில் பிடிப்புகள் இருக்கலாம். ‘ஹாட் பேக்’ எனப்படும் சாதனத்தை பயன்படுத்துவது வலியை குறைக்க உதவும்.
* கருச்சிதைவுக்கு பின்பு உணர்ச்சிவசப்பட்ட மனச்சோர்வை அனுபவிக்கக்கூடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆறுதல், மனச்சோர்வை குறைக்க உதவும்.
* மருத்துவரின் ஆலோசனையின்படி உடலில் ஆற்றலை மீட்டெடுக்க உதவும் இரும்பு, கால்சியம் மற்றும் பிற அடிப்படை வைட்டமின்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* மரபணு பிரச்சினைகளால் கருவில் ஏற்படும் குறைபாடு, கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், தாய்க்கு நோய் பாதிப்பு ஏற்படுதல், அதிக உடல் எடை, நீண்ட தூர பயணம், அடிக்கடி பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான டென்ஷன், மன அழுத்தம் போன்ற காரணங்களால் கர்ப்பம் தானாகவே கலையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
* கருச்சிதைவுக்கு பிறகு அடுத்த கர்ப்பத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைவெளி தேவை. இது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். கருப்பையில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும் வழிவகுக்கும்.
* ரத்த இழப்பு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, மாதவிடாய் சுழற்சி தாமதமாகலாம். உடல் நலத்தை கவனித்துக்கொள்வதை பொறுத்து மாதவிடாய் சுழற்சி அமையும். சிலருக்கு கருச்சிதைவுக்கு 2-3 மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி தொடங்கலாம். எனவே பீதி அடையவேண்டாம். மிகவும் காலதாமதமானால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
* உடல் நலத்தை பேணுவதற்கு வழக்கமான பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். கருச்சிதைவு என்பது வேதனை தரும் விஷயம். அதனை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது அவசியமானது.
குழந்தைகளின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.
குழந்தைகளை பாதுகாக்கும் வழிகாட்டுதல்கள்கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று பலர் பரிந்துரைத்தாலும், இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) எனப்படும் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் இதனை மறுத்துள்ளது. ‘பெரியவர்கள் மற்றும் வயதான நபர்களைப் போலவே குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயை உருவாக்கக்கூடியது. ஆனால் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை பிரத்யேகமாக பாதிக்கும் என்பது சாத்தியமில்லாதது’ என்றும் கூறி உள்ளது.
இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உருமாறிக்கொண்டிருக்கும் வைரஸின் போக்கை கணிப்பது மருத்துவ நிபுணர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.அதனால் வைரசிடம் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதுதான் நல்லது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய ஆயுஷ் அமைச்சகம் குழந்தைகளை தாக்குவதற்கு சாத்தியமான கொரோனா அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.
தூங்கும் நேரம்: குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான நேரம் தூங்க வேண்டும். தூங்கும் நேரம் வயதுக்கேற்ப மாறுபடும்.
1 வயதுக்கும் குறைவான குழந்தைகள்:
12 முதல் 16 மணி நேரம்
1- 2 வயது :
11 முதல் 14 மணி நேரம்
3- 5 வயது:
10 முதல் 13 மணி நேரம்
6- 12 வயது:
9 முதல் 12 மணி நேரம்
டீன் ஏஜ் வயது:
8 முதல் 10 மணி நேரம்
குழந்தைகளில் யாருக்கு அதிக ஆபத்து ஏற்படக்கூடும்?
கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உடல் பருமன், டைப்-1 நீரிழிவு நோய், நாள்பட்ட இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டுடன் இணை நோய் பாதிப்பு கொண்ட குழந்தை களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்கும்?
4-5 நாட்கள் தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல், சாப் பிடும் அளவு குறைந்து போகுதல், ஆக்சிஜன் செறிவு 95 சதவீதத்திற்கும் கீழ் குறைதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பலுடன் காட்சியளித்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, அடி வயிற்றில் வலி, கண்கள் சிவத்தல், உடலில் சொறி, எரிச்சல் ஏற்படுவது, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது. இந்த கொடிய வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறையே வருமுன் காப்பது, சுகாதாரத்தை பின்பற்றுவதுதான் என்று வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள்:
ஆயுஷ் அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, குழந்தை நோயை எதிர்த்துப் போராட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்காக யோகா, தியானம், பிராணயாமா மற்றும் பிற பயிற்சிகளை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் குழந்தைகளின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.
குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாக வேண்டும். அத்தகைய உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். அவை அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவாகவும் அமைந்திருக்க வேண்டும்.
தினசரி வழக்கத்தில் கல்வி, பொழுதுபோக்கு, குடும்பத்துடன் செலவிடும் நேரம், விளையாடும் நேரம் ஆகியவற்றை வரையறை செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல், கை, கால்களை தூய்மையாக வைத்திருத்தல், அடிக்கடி சோப், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உணவு, தூக்கம், முன்னெச்செரிக்கை நடவடிக்கை மூன்றையும் முறையாக பின்பற்றுவதும் நோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்ள உதவி புரியும்.

நகத்தை பார்த்து உடல் நல குறைபாடுகளை கண்டறிவது போலவே ஒருவரின் குண நலன்களையும் கண்டறிந்து விடலாம். ஒவ்வொரு வடிவ நகமும் ஒவ்வொருவிதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.
நீளமான நகம்: நீளமான நகம் கொண்டிருப்பவர்களுக்கு வலது மூளை நன்றாக வளர்ந்திருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இவர்கள் கற்பனை திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நுணுக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். அதேவேளையில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருப்பார்கள். எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவும் செய்வார்கள்.
அகன்ற நகம்: நகங்கள் அகலமாக இருப்பதால் இடது பக்க மூளை நன்றாக வளர்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது பேச்சாற்றலை கொடுக்கவும் வல்லது. அதனால் இந்த வகை நகம் கொண்டவர்கள் பொதுவாக சொற்பொழிவாளராக இருப்பார்கள். மனதில் நினைப்பதை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் கோபக்காரராகவும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.
முட்டை வடிவம்: இந்த வகை நகம் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவராக இருப்பார்கள். இவர்களுக்கு சமூகத்தில் பொறுப்புணர்வும் அதிகம். சுற்றி இருப்பவர்கள் பிரச்சினையில் ஈடுபடும்போதெல்லாம் மத்தியஸ்தராக இருந்து சமாதானம் செய்து வைப்பார்கள். இவர்களின் ஆளுமை பலராலும் விரும்பப்படும். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாக பழகுவார்கள். ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான நபராக விளங்குவார்கள்.
சதுர வடிவம்: விடாமுயற்சியும், தைரியமும் கொண்டவர்களாக விளங்குவார்கள். உலகில் பெரும்பாலான ஆண்கள் இவ்வகை நகம் கொண்டவர்கள். எப்போதும் இறுக்கமான மன நிலையுடன் இருப்பார்கள். தலைக்கனமும் கொண்டிருப்பார்கள். பிடிவாதத்தை சற்று தளர்த்தி, சமாதானமாக செல்வது நன்மை பயக்கும்.
முக்கோணம்: முக்கோண வடிவ நகம் கொண்டவர்கள் புதிய யோசனைகளை வழங்கும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களிடம் ஐடியாக்களுக்கு பஞ்சமே இருக்காது. மற்றவர்கள் தவற விடும் சின்ன சின்ன விஷயங்களை கூட உன்னிப்பாக கவனித்து சரி செய்துவிடுவார்கள். தலைகீழ் முக்கோண வடிவில் நகம் இருந்தால், எதிலும் ஊக்கமுடையவர்களாக இருப்பார்கள். தங்களை சுற்றி நடக்கும் கொடுமையான விஷயங்களை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
பாதாம்: பாதாம் வடிவ நகம் கொண்டவர்களிடம் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். உண்மையானவர், நேர்மையானவர், கண்ணியமானவர், அமைதியானவர் என்று பெயரெடுப்பார்கள். ஆனால் சகிப்பு தன்மை குறைவாக கொண்டிருப்பார்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் குறுகிய மனநிலை கொண்டவராக இருப்பார்கள். சட்டென்று கோபம் கொள்ளவும் செய்வார்கள். அந்த சமயங்களில் சற்று ஒதுங்கி இருந்து மனதை குளிர்விப்பது நல்லது.
கூர்மையான நகம்: இவர்கள் லட்சியவாதிகள். தங்கள் குறிக்கோளை அடைவதற்காக கடுமையான உழைப்பை கொடுப்பதற்கு தயங்கவே மாட்டார்கள். தங்களுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தாலும் அது லட்சியத்தை நோக்கி முன்னேற உதவும் என்று தெரிந்தால் அதனை பின்பற்றி நினைத்ததை சாதித்துவிடுவார்கள். ஆனாலும் இவர்களிடத்தில் சகிப்பு தன்மையும், பொறுமையும் குறைவாக இருக்கும். அறிமுகமில்லாதவர்களுடன் பழகும்போது சட்டென்று பொறுமை இழந்துவிடுவார்கள்.

மன இறுக்கம், மனச்சோர்வு, மனஉளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படி தோன்றியது? எப்படி போக்குவது? என்று தெரியாமல் குழப்பம் அடைபவர்கள் பலர்.
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். அது நூறு சதவீதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனதில் மகிழ்ச்சி குறைய, குறைய உடல் நலமும் பபாதிக்க தொடங்கும். மன இறுக்கம், மனச்சோர்வு, மனஉளைச்சல், மனப்புழுக்கம் என்பவை எதனால் எப்படி தோன்றியது? எப்படி போக்குவது? என்று தெரியாமல் குழப்பம் அடைபவர்கள் பலர்.
இந்த மன இயல்பு மாற்றத்துக்கு மா மருந்தாக இருப்பது சிரிப்பு. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்றிருக்கையில் ஏன் வாய் மூடி இருக்க வேண்டும். மருந்துகளுக்கு எல்லாம் மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று எண்ணற்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். காரணம் சிரிப்பு என்றும் மருந்தே நோய்களை விரைவாக குணப்படுத்துகிறது. நோய்களை போக்கவும் மீண்டும் அவை வராமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தருகிறது சிரிப்பு. உடலில் நோய் எதிர்ப்பு என்னும் சக்தியாக செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும் விருப்பமானது சிரிப்பு.
சிரிப்பை கேட்டால் வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. உடலில் உள்ள நரம்புகள் ஒரு வகையான ரசாயனத்தை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. சிரிக்கும் போது அந்த ரசாயனம் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. மேலும் நாம் சிரிக்கும் போது மூக்கில் உள்ள சளியில் இம்யூ னோகு ளோபுலின் 8 ஏ என்னும் நோய் எதிர்ப்பு பொருள் அதிகரி க்கின்றது. அதனால் பாக்டீரியா வைரஸ், புற்று நோய் திசுக் கள் உடலு க்குள் சென்று விடா தவாறு தடுக் கப் படுகிறது.ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரி ப்பத னாலேயே மாரடைப்பு மற்றும் இதய நோய் கள் ஏற்படுகின்றன.
இது போன்ற அபாயகரமான நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால் நாள்தோறும் குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது சிரித்து பழக வேண்டும். நகைச்சுவை படங்கள், கதைகள், சொற்பொழிவுகள் போன்றவற்றை கேட்டு சிரிக்க வேண்டும். சிரிப்பினால் ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. நுரையீரல் நன்றாக செயல்படுகிறது. எனவே நோய் வராமல் தடுக்கவும், வந்த நோயில் இருந்து விடுபடவும் சிரித்து பழகுங்கள். சிரிப்பில் பல வகை இருந்தாலும் மகிழ்ச்சிக்காக சிரிக்கும் சிரிப்பே சிரிப்பு. நகைச் சுவைக்காகவும் பிறரை கேலி செய்வதற்காகவும் சிரிப்பு பயன்படுகின்றது.
சிலரது நகைச்சுவை, சிந்தனையை தூண்டக்கூடியதாகவும், அறிவுக்கு விருந்தாகவும் இருக்கும். சிலரது நகைச்சுவை பொருள் பொதிந்ததாகவும் இருக்கும். பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனதுக்கு ஊட்டமாக அமைகிறது. மனதின் சுமையை குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை புத்துணர்ச்சியை தருகிறது. நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு பலமாக இருக்கும். புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்கு தெரியாமல் உள்ளுக்குள் மறைந் திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும் போது புன்னகை தோன்றுகிறது.
ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதை போல் உடல் நலத்துக்கு ஆன்மா வழங்கும் புன்னகை முக்கியம். சிரிப்பினால் உடல் நலம்பெறும்.சிரிப்பினால் செல்வம் பெருகும். சிரிப்பினால் இந்த உலகம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை கண்கூடாக காணலாம். மனதுக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டும்தான். அந்த சிரிப்பு மருந்து கசப்போ, புளிப்போ, உவர்ப்போ, துவர்ப்போ இல்லை. சிரிப்புக்கு என்றிருப்பதும் ஒரே சுவை அது இனிப்பு. இனிப்பு பிடிக்கும் போது சிரிப்பு பிடிக்காமல் இருக்குமா? சிரியுங்கள், சிரிக்க சிரிக்க மலரும் தாமரை போல் மனம் மலர்ந்து மணம் வீச தொடங்கும் என்பது நிதர்சனமான உண்மை.

கொரோனா மட்டுமல்ல எந்த நோய் வந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அது விடைபெற்றுவிடும். யாருடைய வாழ்க்கையும் எப்போதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்காது.
கொரோனாவை நினைத்து புலம்பும் மனிதர்கள் சமூகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். தனது வாழ்க்கையில் நடந்த அத்தனை கஷ்டங்களையும் கொரோனாவோடு முடிச்சுப்போட்டு புலம்பித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே புலம்புபவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் வேலைபார்ப்பவர்கள் என்றால், எல்லா வேலையும் தன் தலையிலே விழுவதாக கூறி புலம்பியிருப்பார்கள். வீட்டிற்கு வந்தால், புதிய காரணங்களை கண்டுபிடித்து மனைவியிடமும், குழந்தைகளிடமும் புலம்புவது அவர்களது வழக்கமாக இருந்திருக்கும். இது ஆண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினை இல்லை. புலம்புபவர்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள். முன்பெல்லாம் நடுத்தர வயதுக்கு பிறகு செயல்வேகம் குறைந்த நிலையில் இருப்பவர்களே புலம்பினார்கள். கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில் இருபது வயதுகள் கூட புலம்பலோடுதான் முழுபொழுதையும் கழிக்கின்றன.
பொதுவாக எப்போதுமே புலம்பும் ரகத்தினர் மன அழுத்தம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எதிலும் திருப்தியடையாதவர்களாகவும், ஏக்கங்கள் நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள். அதனால் அவர்கள் பெரும்பாலும் நிம்மதியிழந்து தவிப்பார்கள். புலம்புகிறவர்கள் நிம்மதியாக வாழ சில வழிமுறைகள் இருக்கின்றன.
எப்போதும் புலம்புகிறவர்கள் உடல் ஆரோக்கியம் குறைந்தவர்களாக இருப்பதுண்டு. அவர்கள் உடல்நலத்தை மேம்படுத்த உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். சத்தான உணவை, அளவோடு, சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். அவர்கள் தூக்கத்திலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். நல்ல உணவும், போதுமான தூக்கமும் கிடைத்தால் மனதிற்கு பெருமளவு நிம்மதி கிடைத்துவிடும். புலம்பல் குறையும்.
புலம்புபவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யலாம். அது உடலை மட்டுமல்ல, மனதையும் சரி செய்யும். யோகாசனம் செய்வதும் சிறந்தது. ஒரே வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருக்காதீர்கள். இடைவேளையை உருவாக்கி அந்த வேலையில் இருந்து சிறிது நேரம் விடுபட்டு, சிறிது தூரம் நடக்கலாம். பாட்டு கேட்கலாம். விளையாடலாம். இவை புலம்பலில் இருந்துவிடுபட உதவும்.
உங்கள் பிரச்சினைகளை மட்டுமே எப்போதும் நினைத்து வேதனைப்படாமல் மற்ற மனிதர்களையும் திரும்பிப் பாருங்கள். இந்த உலகம் மிக பெரியது. ஒவ்வொருவர் வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் கவனியுங்கள். உங்களுக்கான நல்ல பொழுதுபோக்கையும் கண்டுபிடியுங்கள். நம்பகமானவர்கள், தன்னம்பிக்கை தருகிறவர்களை பார்த்து பேசவேண்டும் என்று விரும்பினால் அவர்களைப் போய் பாருங்கள். சிரிப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்களோடு சேர்ந்து சிரித்து பேசுவது புலம்பலைக்குறைக்கும்.
கொரோனா மட்டுமல்ல எந்த நோய் வந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அது விடைபெற்றுவிடும். அதனால் எந்த கஷ்டமும் நிலையானதல்ல. யாருடைய வாழ்க்கையும் எப்போதும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருக்காது. நினைத்துப்பார்க்க நிறைய நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினைகள் ஏற்படும்போது அதையே நினைத்து வேதனைப்படாமல், உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களையும் நினைத்துப்பாருங்கள். சின்னச்சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடி, உங்களையே நீங்கள் உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.

உடல் நலத்திற்கு வலுசேர்க்கும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்கள் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி உடல் உறுப்புகளின் இயக்கத்தையும் மேம்படுத்தலாம்.
தேவையான பொருட்கள் :
சாம்பார் வெங்காயம் - 1 கையளவு
சிவப்பு குடைமிளகாய் - 2
மஞ்சள் குடைமிளகாய் - 2
பச்சை குடைமிளகாய் - 2
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டு- 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
இந்துப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
3 நிற குடைமிளகாய்களையும் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் அகன்ற பாத்திரத்தை சிறு தீயில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் சிறிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை கொட்டி தாளிக்கவும்.
பின்னர் குடைமிளகாய்களை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி, உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.
நன்கு மொறுமொறுவென்று இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக தண்ணீர் சேர்த்து வேகவைத்தால் அதிலிருக்கும் புரத சத்து வீணாகிவிடும்.
ஆரோக்கிய பலன்: பச்சை குடைமிளகாயை காட்டிலும் சிவப்பு குடைமிளகாயில் பீட்டா கரோட்டின் 11 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் சியும் ஒன்றரை மடங்கு அதிகம் இருக்கிறது. இரும்பு சத்தும் அதிகம் நிரம்பியிருக்கிறது. எனவே கண்களுக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும். சருமம், முடி, விரல் நகங்களுக்கும் அதிக வலிமையை கொடுக்கும்.
குறிப்பு: பெரிய வெங்காயத்தை காட்டிலும் சாம்பார் வெங்காயத்தில் புரதசத்து அதிகம் இருக்கிறது. அதனை பச்சையாகவோ அல்லது தயிர் பச்சடியாகவோ சாப்பிட்டுவந்தால் அதிக புரத சத்து உடலுக்கு கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் நுனி மற்றும் அடி பகுதிகளை லேசாக நறுக்கினாலே போதும். அதிகமாக நறுக்கி வீணாக்கினால் அதிலுள்ள புரத சத்துகள் குப்பைக்கு சென்றுவிடும்.

பள்ளி சென்று படித்தால் மாணவர்கள், ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆன்-லைன் வகுப்பில் அதற்கு வழியில்லை. பெற்றோரின் கவனத்தின் கீழ்தான், பிள்ளைகள் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
கொரோனாவின் 2-வது அலையும் கிட்டத்தட்ட முடிவை எட்டியிருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் ஆன்-லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி சென்று படித்தால் மாணவர்கள், ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆன்-லைன் வகுப்பில் அதற்கு வழியில்லை. பெற்றோரின் கவனத்தின் கீழ்தான், பிள்ளைகள் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனவே பெற்றோர்களும் இங்கே சில விஷயங்களை நினைவில் நிறுத்த வேண்டியதிருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.
* ஆன்-லைன் மூலம் பிள்ளைகள், பாடங்களைப் படிக்கும் போது, கவனித்துப் பார்க்கிறார்களா? என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
* ஆசிரியர்களுடன், பெற்றோர்கள் அடிக்கடி பேசி, பிள்ளைகள் சரியாக ஆன்-லைன் வகுப்பை கவனிக்கிறார்களா? என்பது பற்றி கேட்டுக் தெரிந்துகொள்ளலாம்.
* பிள்ளைகள் ஆன்-லைன் வகுப்பில் இருக்கும்போது, அதற்கு தகுந்த அமைதியை வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை படிக்க சொல்லிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பது, வீட்டில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது போன்ற விஷயங்கள், பிள்ளைகளின் படிப்பு மீதான கவனத்தை சிதறடிக்கும்.
* ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு, அதற்கு ஏற்ற வகையில் அவர்களை படிக்க வைக்க வேண்டும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம்.
* படிப்பு நேரம் முடிந்தபிறகு, அவர்கள் விளையாடுவதற்கும் கொஞ்சம் அனுமதிக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது அவர்களுக்கும் மன இறுக்கத்தை உண்டாக்கக்கூடும்.
மேற்கண்ட குறிப்புகளை கடைப்பிடித்து வந்தாலே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்த நிலையை அடைவார்கள்.

திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான நாட்களுக்கு இடையே மணமகள், எளிமையான, நிலையான உணவு திட்டத்தை கடைப்பிடிப்பது நல்லது.
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட உடனேயே மணமகன்-மணமகள் வீடு விழா கோலம் பூண்டுவிடும். திருமண ஆடை, அலங்கார ஷாப்பிங், வரவேற்பு, உபசரிப்புகள், நெருங்கிய உறவினர்கள் அழைப்பு, அழைப்பிதழ் அச்சடிப்பு என திருமண பணிகள் சுறுசுறுப்பு அடைந்துவிடும். திருமண தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் பரப்பரப்பான நாட்களுக்கு இடையே மணமகள், எளிமையான, நிலையான உணவு திட்டத்தை கடைப்பிடிப்பது நல்லது. அதுவே இயற்கையான அழகை பராமரிக்க பக்கபலமாக அமைந்திருக்கும். திருமண கோலத்தில் பார்க்கும்போது அழகுக்கு அழகு சேர்க்கும்.
கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்:
1. தினமும் இரவு 7.30 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.
2. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதில் 30 நிமிட நடைப்பயிற்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.
3. மினி உணவுக்கொள்கையை பின்பற்ற வேண்டும். அதாவது மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தவறாமல் சிறிதேனும் ஏதாவதொரு உணவை சாப்பிட வேண்டும்.
4. இதுநாள் வரை துரித உணவுகள், நொறுக்குத்தீனிகளை விரும்பி சாப்பிட்டிருக்கலாம். ஆனால் திருமணத்திற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக இவற்றையெல்லாம் அறவே தவிர்த்துவிட வேண்டும். முழு கோதுமை, ராகி, ஓட்ஸ், கோதுமை பிரெட், பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். புரதம், பச்சை இலை காய்கறிகள், சாலட்டுகள் உணவில் தவறாமல் இடம்பெற வேண்டும். வெள்ளை அரிசி, அரிசி மாவு, மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற வெள்ளை நிற உணவு பதார்த்தங்களை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
5. அவகொடா, நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை, சியா விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. அவை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கொழுப்புகளாக கருதப்படுகின்றன.
6. கீரைகளை மறந்துவிடாதீர்கள். உணவின் ஒரு பகுதியாக ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுங்கள்.
7. தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருகுவதை இலக்காக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். எப்போதும் கைவசம் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது. எல்லா நேரங்களிலும் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்திருக்க வேண்டும். இளநீர், அதிக நீர்ச்சத்தை உள்ளடக்கிய பழங்கள், காய்கறி ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் பருகலாம். அப்படி நீரேற்றமாக வைத்துக்கொள்வது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவும். பொலிவான சருமம், அழகான நகங்கள், பளபளப்பான கூந்தல் போன்ற அம்சங்களை தக்க வைத்துக்கொள்ளவும் உதவும். உடல் எடை குறைவதற்கும் வித்திடும்.
8. மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒதுக்கி வையுங்கள். கேக்குகள், பிஸ்கெட், பதப்படுத்தப்பட்ட சாறு போன்ற டிரான்ஸ் கொழுப்பு உணவுகளை தவிருங்கள்.
தினமும் பின்பற்ற வேண்டியவை:
காலை: காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து ஊறவைத்த 4-5 பாதாம், ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். இஞ்சி, எலுமிச்சை கலந்த நீர் அல்லது சீரகம் ஊறவைக்கப்பட்ட நீர் பருகலாம். தண்ணீரில் ஊறவைத்த லவங்கப்பட்டையை சிறிதளவு சாப்பிடலாம். கிரீன் டீ பருகலாம்.
காலை உணவு: இட்லி, காய்கறிகள் கலந்த சாம்பார் அல்லது ஓட்ஸ், உப்புமா சாப்பிடலாம். ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடலாம். சிறிதளவு பப்பாளி அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம்.
காலை 11 மணி: சுண்டல் / வேர்க்கடலை / முளையிட்ட தானியங்களால் செய்யப்பட்ட சாலடுகள் இவற்றுள் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம். கீரை சாலட் / பழ சாலட்டும் சாப்பிடலாம். சாலட்டுகளுடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரி, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் தூவி அலங்கரித்துக்கொள்ளலாம்.
மதிய உணவு: சிறிதளவு அரிசி சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். வெந்தயம் இலை, முருங்கை இலையில் தயாரான குழம்பை சேர்த்துக்கொள்ளலாம். தயிர் சாதம் அல்லது தயிர் கலந்தும் சாப்பிடலாம்.
மாலை நேர சிற்றுண்டி: பழ சாலட் / நட்ஸ் / ஒரு டம்ளர் மோர் / வேர்க்கடலை சாலட் ருசிக்கலாம்.
இரவு: அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் சாப்பாத்தியுடன் கோழி குழம்பு, கிரில் சிக்கன் சாப்பிடலாம். சைவ பிரியர்கள் சப்பாத்தியுடன் பருப்பு குழம்பு, சால்ஜி மற்றும் காய்கறி சாலட் சேர்த்துக்கொள்ளலாம்.
திருமண ஏற்பாட்டில் கடைசி நேரங்களில் செய்யும் சிறு தவறுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதற்கு இடம் கொடுக்காமல் புன்னகையுடன் காட்சியளியுங்கள்.
ஊட்டச்சத்தியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி சீரான உணவுப்பழக்கத்தையும், வழக்கமான உடற்பயிற்சியையும் பின்பற்றுவது திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.
சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும் பொருட்கள்:
திருமணத்திற்கு முன்பு ஒளிரும் சருமத்தை பெறுவதற்கு அவசியம் சாப்பிட வேண்டிய ஐந்து உணவுகள் என்னென்ன தெரியுமா?
பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முகப்பருவை தடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். ரத்தத்தையும் சுத்திகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாதுளை: இது மிருதுவான, குழந்தை போன்ற மென்மையான சரும பொலிவை ஏற்படுத்தி கொடுக்கும். மாதுளை பழத்தை அப்படியே சாப்பிடலாம். ஜூஸாக தயாரித்தும் ருசிக்கலாம்.
பாதாம்: இதில் வைட்டமின் ஈ சத்து நிரம்பியுள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
தக்காளி: இதில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட் லைகோபீன் சருமம் வயதாவதை தடுக்கக்கூடியது. சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தையும் அளிக்கும்.
மேலும் தக்காளியில் உள்ள அமில தன்மையானது, கரும் புள்ளிகள், பருக்களை விரட்டியடிக்கும் சக்தி கொண்டது.
ஸ்ட்ராபெர்ரி: இது சரும நிறத்தை மேம்படுத்தும் தன்மை வாய்ந்தது. தோல் சுருக்கங்களை குறைக்கவும் உதவி செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
திருமணத்திற்கு முன்பு என்ன சாப்பிட வேண்டும்?
புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட சீரான உணவை உண்ணுங்கள். உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் பருகுங்கள்.
தொப்பை, கொழுப்பை கரைக்கும் உணவுகள் எவை?
அவகொடா, வாழைப்பழம், பெர்ரி, கிவி, அத்தி, அன்னாசி போன்ற பழங்கள், தயிர், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள். இவற்றை சாப்பிடுவதுடன் வழக்கமான உடற்பயிற்சியை பின்பற்றுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.
திருமணத்திற்கு முன்பு எப்படி உடல் மெலிய முடியும்?
மூன்று முறை சாப்பிடுவதற்கு பதிலாக ஐந்து, ஆறு முறை என பிரித்து சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள். உணவில் கலோரிகளைத் தவிருங்கள். குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட இறைச்சியை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
முகத்தை பளபளப்பாக்கும் உணவு எது?
பாதாம், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட், மாதுளை தவிர, அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள், சிவப்பு அல்லது மஞ்சள் குடை மிளகாய் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் (சால்மன் மற்றும் ஹெர்ரிங்) ஆகியவை முகத்திற்கு பிரகாசம் ஏற்படுத்தி கொடுக்கக்கூடியவை.

உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஒருவித ஹோமியோபதி மருந்தை உபயோகிக்கலாம் என்றும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் உலா வந்தது.
கொரோனா வைரஸ் பரவு வதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் அதனை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் வேகமாக பரவி வருகின்றன. ஏற்கனவே கொரோனா பற்றிய பீதியில் இருப்பவர்கள் எளிய முறையில் கூறப்பட்டிருக்கும் டிப்ஸ்களை பின்பற்றுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் ‘இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்குக்குள் விட்டால் கொரோனா வைரஸ் அழிந்து விடும். உடலில் ஆக்சிஜன் அளவும் அதிகரித்துவிடும்’ என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
‘லெமன் தெரபி’ என்ற பெயரில் அந்த வீடியோவில் பேசும் நபர், ‘‘எலுமிச்சை சிகிச்சை மேற்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்தும் காப்பாற்றும். இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கிற்குள் விட்டால் போதும். அப்படி செய்தால் கண், காது, மூக்கு, இதயம் உள்ளிட முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் ஐந்து நிமிடங்களில் சுத்திகரிக்கப்படும். சளி, இருமல் தொல்லைகளை எதிர்கொள்பவர்களுக்கு இந்த எலுமிச்சை சிகிச்சை நிவாரணம் அளிக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.
உண்மையில் எலுமிச்சை சாற்றை மூக்கினுள் விட்டால் கொரோனா வைரஸ் அழியாது. அது ஒரு கட்டுக்கதை என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் உண்மை தன்மை பற்றி பலரும் பதிவிட்டிருக்கிறார்கள்.
பி.ஐ.பி எனப்படும் பத்திரிகை தகவல் பணியகம் என்னும் அமைப்பும், ‘‘அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள டிப்ஸ் நம்பகத்தன்மையற்றது. மூக்கில் எலுமிச்சை சாறு விடுவதன் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை’’ என்று கூறியுள்ளது.
உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது ஒருவித ஹோமியோபதி மருந்தை உபயோகிக்கலாம் என்றும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் உலா வந்தது. அதனை ஆயுஷ் அமைச்சகம் நிராகரித்தது. ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் சுய மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக செயல்படக்கூடாது. நோயின் தன்மை அறிந்து எந்தவிதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள், லேசான பாதிப்பை எதிர்கொள்பவர்கள், வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் தனிமை சூழலில் இருக்க வேண்டியது அவசியமானது. கொரோனா பரவலால் வெளிப்புற சூழலும் ஆபத்தானது. அதனால் மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கான ஒரே வழி சமூக ரீதியாக தனிமைப்படுத்திக்கொள்வதுதான்.
குறிப்பாக நோய்த்தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கடினமான சூழலை எதிர்கொள்கிறார்கள். மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமை உணர்வை அனுபவிக்கிறார்கள். இதனால் கவலை, மனச்சோர்வு, மனநல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையும். இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமானது.
தகவல் தொடர்பு: கொரோனா வைரஸ் பற்றிய பயம் நிறைய பேரிடம் இருக்கிறது. அதுபற்றிய எதிர்மறையான தகவல்களையே கேட்டுக்கொண்டிருப்பார்கள். அது பதற்றத்திற்கு வழிவகுக்கும். நேர்மறையான செய்திகளை கேட்டறிவதுதான் இயல்பு நிலைக்கு திரும்ப வழிகாட்டும். மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தனிமை உணர்வையும் தவிர்க்க உதவும். சுகாதாரம் சார்ந்த தகவல்களை கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டுவது சிறந்த உளவியல் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
இணைந்திருங்கள்: இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அன்புக்குரியவர்களுடன் தொழில்நுட்பத்தின் துணையுடன் இணைந்திருப்பது அவசியமானது. வீடியோ அழைப்புகள், மெசேஜ்கள், சாட்டிங், ஆன்லைன் தளங்கள், சமூக ஊடகங்கள் என ஏதாவதொரு வகையில் நண்பர்கள், உறவினர்கள், மனதுக்கு பிடித்தமானவர்களுடன் இணைந்திருங்கள். இதுநாள் வரை பகைமை உணர்வு கொண்டிருந்தவர்களுடன் கூட இணைந்திருக்கலாம். அது வாழ்க்கையின் வேறு சில அம்சங்களை அறிய உதவும். கடிதம் எழுதும் பழக்கம் மறைந்துபோய் விட்டது. அதற்கு புத்துணர்வு ஊட்டலாம். மனதுக்கு பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் கடிதம் எழுதலாம். அது அவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுக்கும்.
சுறுசுறுப்பு: மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியமானது. நாள் முழுவதும் ஒரே அறையில் தனிமையில் உட்கார்ந்திருப்பது கடினமானது. தனிமையை உணரும்போதெல்லாம் மன நலத்தை சமாளிக்க உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி செய்யலாம். யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். மூளைக்கு வேலை கொடுக்கும் விளை யாட்டுகளில் கவனம் செலுத்தலாம். இது மனநிலையை சிறந்த பாதையில் பயணிக்க வைக்க உதவும்.
ஆன்லைன் விளையாட்டுகள்: தனிமையில் அமர்ந்து கொண்டு ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது நல்லதல்ல. ஆனால் தனிமை சூழலில் ஆன்லைன் விளையாட்டுகள், வீடியோ கேம்கள் விளையாடுவது தவறில்லை. அப்போதும் தனிமையில் விளையாடாமல் ஆன்லைன் வழியாக நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். இருவராகவோ, குழுவாகவோ விளையாடி மகிழலாம். இவை சலிப்பு, மன சோர்வில் இருந்து விடுவிக்கும். விளையாட்டு தவிர ஆன்லைன் வழியாக கலந்துரையாடல்களில் ஈடுபடலாம். இணையதளங்களில் வேடிக்கையான வீடியோக்கள், நகைச்சுவை உணர்வை தூண்டும் வீடியோக்கள், மனதை இலகுவாக்கும் வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அவைகளை பார்த்து ரசிக்கலாம்.
முயற்சி: கொரோனா பரவலுக்கு முன்பு பிஸியான கால அட்டவணையில் இயங்கி இருப்பீர்கள். புதிதாக ஏதாவது முயற்சி செய்து பார்ப்பதற்கு நேரம் கிடைத்திருக்காது. இப்போது கிடைத்திருக்கும் தனிமை சூழலை புதிய முயற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில், உங்கள் வாழ்க்கைக்கு அதிக மதிப்பை கொடுக்கக்கூடிய புதிய மற்றும் அர்த்தமுள்ள செயலில் ஈடுபடுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
பொழுதுபோக்கு: விரும்பிய விஷயங்களில் ஈடுபட முடியவில்லை, அதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று கவலைப்படுபவர்கள் இந்த தனிமை காலத்தை வரப்பிரசாதமாக்கி கொள்ளலாம். படிப்பது, எழுதுவது, திரைப்படங்களைப் பார்ப்பது, நடனம், பாடுவது, ஓவியம் வரைவது, கைவினை பொருட்களை தயார் செய்வது, இசையை கேட்பது என பிடித்தமான செயல்களில் முழு மனதோடு ஈடுபடலாம். ஏனெனில் பிடித்தமான செயல்களை செய்து மகிழ்ச்சியாக இருக்கும்போது நியூரான்கள் மூளைக்கு நேர்மறையான கருத்துகளை தரும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும், செயல்திறனையும் அதிகரிக்க துணைபுரியும். ஆரோக்கியமான மனதுக்கும், நேர்மறை எண்ணங்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு இருக்கிறது. சமூக தனிமை அன்புக்குரியவர்களுடன் உணர்வு பூர்வமாக இணைவதற்கான வாய்ப்பையும், நேரத்தையும் வழங்கும்.

உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு உதட்டை ஒன்றோடு ஒன்றாக உரசி விடக்கூடாது. ஏனெனில் திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் பொலிவு பாதிப்புக்குள்ளாகும்.
உதட்டுக்கு அழகு சேர்க்கும் லிப்ஸ்டிக் புதுப்புது பரிணாமங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. திரவ வடிவிலான லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதற்கு பல பெண்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இவை நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.
நிறமும் மங்காமல் இருக்கும். நேர்த்தியாக காட்சியளிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. ஒரு கோட்டிங் தேய்த்தாலே அழகிய தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் இந்த உதட்டு சாயத்தை பயன்படுத்துவதற்கு கண்ணாடியும், பொறுமையும் தேவை. மற்ற உதட்டு சாயத்தை போல் ஐந்து விநாடிகளில் இதனை பயன்படுத்த முடியாது. அவசரமாக உபயோகித்தால் முறையற்ற அவுட்லைனரை கொடுக்கலாம். அவுட்லைன் கொடுப்பதற்கு சிறிது அவகாசம் தேவைப்படும்.
மேலும் திரவ லிப்ஸ்டிக்கை உதட்டில் மட்டும் பூசினால் அதன் அழகு வெளிப்படாது. முகத்திற்கும் நன்றாக ஒப்பனை செய்ய வேண்டும். முதலில் உதடுகள் மீது பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொள்ள வேண்டும். பின்பு மற்ற மேக்கப்புகளை முடித்துவிட வேண்டும். அதன் பிறகு லிப்ஸ்டிக் உபயோகிப்பது உதட்டின் உலர் தன்மையை கட்டுப்படுத்த உதவும்.
உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு உதட்டை ஒன்றோடு ஒன்றாக உரசி விடக்கூடாது. ஏனெனில் திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் பொலிவு பாதிப்புக்குள்ளாகும். முதலில் கீழ் உதட்டில் லிப்ஸ்டிக்கை பூசி விட்டு அது உலர்ந்த பிறகு மேல் உதட்டில் போட வேண்டும்.
திரவ லிப்ஸ்டிக் நீண்ட நேரம் நீடித்திருப்பவை என்பதோடு அதற்கு பராமரிப்பும் தேவையில்லை. ஒருமுறை தடவிக்கொண்டால் போதும். பின்பு அதனை சரி செய்ய வேண்டியதில்லை. மீண்டும் லிப்ஸ்டிக் பூச வேண்டியதில்லை.
முதல் முறையிலேயே உதடுகள் ஜொலிப்புடன் காட்சியளிக்கும். மேலும் திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீண்ட நேரம் நீடித்திருப்பதோடு உலர் தன்மையும் கொண்டவை. அதனால் எளிதாக அவற்றை அகற்றிவிட முடியாது. எப்போதும் கைவசம் லிப்ஸ்டிக் ரிமூவர் வைத்திருப்பது நல்லது.