search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு
    X
    கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு

    இரும்பு சத்து நிறைந்த கரிசலாங்கண்ணி கீரைத்தொக்கு

    உடல் உறுப்புகளுக்கு வலிமை சேர்த்து ஆரோக்கியத்தை பேணி காக்கும் தன்மை கொண்ட உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது.
    தேவையான பொருட்கள் :

    மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை - 1 கட்டு
    தேங்காய் துருவல் - அரை கப்
    நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
    உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
    நல்லெண்ணெய் (செக்கு எண்ணெய்) - 3 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறி, கீரையை கொட்டி வதக்குங்கள்.

    அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கி பரிமாறவும்.

    ஆரோக்கிய பலன்: கரிசலாங்கண்ணி கீரையில் இரும்பு சத்து, கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிடுவது ஈரல் மற்றும் கண்களுக்கு நல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவும்.
    Next Story
    ×