search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனாவிடம் சிக்காமல் நலமோடு வாழ 4 வழிமுறைகள்
    X
    கொரோனாவிடம் சிக்காமல் நலமோடு வாழ 4 வழிமுறைகள்

    கொரோனாவிடம் சிக்காமல் நலமோடு வாழ 4 வழிமுறைகள்

    கொரோனாவிடம் சிக்காமல் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 வழிமுறைகளை சுகாதாரத்துறையினரும், டாக்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
    கொரோனா என்ற பெயரை கேட்டாலே உலகமே அதிர்ந்து கிடக்கிறது. அந்த அளவுக்கு இந்த கொடிய வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது.

    தமிழ்நாட்டில் மட்டும் 24 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை சுமார் 33 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில், 5 கோடி பேருக்கு இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.

    2-வது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில், 3-வது அலையும் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை அலைகள் வந்தாலும்
    கொரோனா
    விடம் சிக்காமல் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கு மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 வழிமுறைகளை சுகாதாரத்துறையினரும், டாக்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகிய 4 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் கொரோனாவுக்கு முடிவு கட்ட முடியும் என்பது மருத்துவக்குழுவினரின் அறிவுரை.

    இதில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் சுய ஒழுக்கமாக கடைபிடிக்க வேண்டும். இந்த 4 விஷயங்களில் அலட்சியமாகவும், அச்சத்தோடும் இருப்பவர்களை தான் கொரோனா எளிதில் தாக்குகிறது. நலமோடு வாழ இந்த 4 விஷயங்களையும் அவசியம் மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
    Next Story
    ×