என் மலர்
ஆரோக்கியம்
மீட்டிங்கில் நீங்கள் பேசும் 20 சதவிகிதக் கருத்துக்கள் 80 சதவிகிதம் பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மொத்த மீட்டிங்கும் உங்களது 20 சதவிகிதப் பேச்சை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அலுவலகத்திலோ அல்லது அலுவலக வேலையாக வெளியிடங்களிலோ, சந்திப்பு (மீட்டிங்) என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. இது போன்ற ‘மீட்டிங்' களில் பெரிய சவாலே, நாம் எப்படி பேசுவது, எதை முதலில் பேசுவது, அவசியமான நேரங்களில் குறுக்கீடு செய்யலாமா என்பது போன்ற கேள்விகள்தான் மனதில் ஓடும். அதை தெளிவுபடுத்துகிறது, இந்த கட்டுரை தொகுப்பு.
* எதை பேசப் போகிறீர்கள்?
பல விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்ற அழுத்தம் முக்கியமான மீட்டிங்குகளில் இடம் பெறும். ஆனால் பதற்றத்தில் எதை முதலில் பேசுவது என தெரியாமல் எதாவது ஒரு விஷயத்தில் ஆரம்பித்து எங்கேயோ கொண்டுபோய் முடித்துவிடுவோம். இதனை சமாளிக்க, மீட்டிங் ஹாலுக்குள் செல்லும் முன் பேச வேண்டிய விஷயங்களை ஒரு சிறிய தாளில் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு முறை வரிசைப்படுத்துங்கள். இதைத்தான், இந்த வரிசையில் பேசப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு பேசுங்கள். மொத்த மீட்டிங் நேரத்தில் உங்களுடைய பேச்சு 10 சதவிகித நேரம்தான் என்பதில் உறுதியாக இருங்கள். அதற்கு மேல் நீங்கள் பேசினால் உங்கள் கருத்துக்கள் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தாது. உங்களிடம் கேள்விகள் முன் வைக்கப்படும்போது அதற்கு எளிமையாக பதிலளியுங்கள்.
* 80:20 விதியை கடைப்பிடியுங்கள்!
ஒவ்வொரு மீட்டிங்கிலும் மேலாண்மை தத்துவமான 80:20 விதியை கடைப்பிடியுங்கள். ஒரு முக்கியமான மீட்டிங்கில் நீங்கள் பேசும் 20 சதவிகிதக் கருத்துக்கள் 80 சதவிகிதம் பேருக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மொத்த மீட்டிங்கும் உங்களது 20 சதவிகிதப் பேச்சை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். குறைவாகப் பேசி உங்கள் கருத்தைப் பற்றி அதிகமாக விவாதிக்க வையுங்கள்.
* அதிகம் கேளுங்கள்!
மீட்டிங்கில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள். ஒருவர் உடலளவில் மீட்டிங்கில் இருப்பவர், இன்னொருவர் முழு கவனத்தோடு இருப்பவர். நீங்கள் இரண்டாவது நபராக இருங்கள். உங்களுக்கு தேவைப்படாத விஷயம் என்றாலும் மற்றவர் சொல்லும் விஷயத்தைக் கேளுங்கள். அவர்களது பேச்சில் உங்களுக்கான ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். மேலும் மற்ற நபர்களும் உங்களைக் கவனிக்க இது உதவும்.
* குறுக்கீடு செய்யலாமா?
ஒருவர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசுவதை தவிருங்கள். ஆனால் ஒரு விஷயம் தவறான கருத்தாக முன் வைக்கப்படுகிறது என்றால், மிகவும் மரியாதையாக அதில் குறுக்கிட்டு அதனைத் தவறானதாக கூறாமல், அதற்கான சரியான விளக்கத்தை அளிக்க முயற்சி செய்யுங்கள். வேறு யாராவது இதனைச் சுட்டிக்காட்டுவார்கள் என இருப்பதை விட தானாக முன் வந்து சுட்டிக்காட்டுவதையே நிர்வாகம் விரும்பும். அதேபோல் ஒருவர் பேசும்போது அவர் முன் வைக்கும் கருத்தை விமர்சிப்பதோ, நேரடியாக இது தவறு என்றோ கூறி மீட்டிங்கில் இருக்கும் நபரைச் சங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள்.
* செல்போன் வேண்டாம்!
உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்கள் பேசப்படும்போது கான்பிரன்ஸ் ஹாலில் செல்போன் பயன்படுத்துவது, கேம் விளையாடுவது போன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள். அது சில முக்கியமான பிரசன்டேஷன்களின் போது இருட்டாக உள்ள அறையில் இருந்தால் தனியாகத் தெரியும். மேலும் உங்கள் மீது உள்ள நல்ல எண்ணம் பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் பொதுவாக மீட்டிங்கில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.
இந்த 5 விஷயங்களை கடைப்பிடித்தால் பெரும்பாலான மீட்டிங்குகள் உங்கள் வசமே இருக்கும்.

90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு.
இக்காலத்து குழந்தைகள் ரொம்பவும் ஸ்மார்ட். 10 வயதிற்குள்ளாகவே ஏதாவது ஒருதுறையில் சாதித்துவிடுகிறார்கள். குறிப்பாக கணினி, மென்பொருள் துறையில் அவர்களது ஈடுபாடு நம்பமுடியாத அளவில் இருக்கிறது. கணினி மொழிகளை வெகு சுலபமாக புரிந்து கொள்கிறார்கள். அனுபவசாலிகளை விடவும், வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்.
ஒவ்வொரு வயதிலும், குழந்தைகள் குறிப்பிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, 5-ம் வகுப்பு மாணவனுக்கு நேர மேலாண்மை, பக்குவமாய் பேசுதல், ஒழுக்கமாக உணவு சாப்பிடும் பழக்கம், விவாத கருத்தை உள்வாங்கும் திறன், முறையான பேச்சுபயிற்சி போன்ற திறன்களும், நல்ல பழக்கங்களும் இருக்க வேண்டும். அதுவே மேல்நிலைப் பள்ளி மாணவன் என்றால் மொழி அறிவு, தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், பிறரது கருத்துகளுக்கு செவிக்கொடுத்தல்... இப்படிப்பட்ட திறன்களை பெற்றிருக்கவேண்டும்.
90 சதவிகித குழந்தைகள் பெற்றோரின் விருப்ப பாடங்களையே, படிக்கிறார்கள். குழந்தைகளின் வாழக்கையே, அவர்கள் படிக்கும் படிப்பில்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் விரும்பிய படிப்பை படிக்கட்டும். ஒருசில பெற்றோர் தங்களது நிறைவேறாத கல்வி ஆசைகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது உண்டு. அதை மட்டும் செய்துவிடாதீர்கள். அவர்களை அவர்களாகவே படிக்கவிடுங்கள். வளரவிடுங்கள்.

பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.
திருமணம் முடிந்து முதலிரவுக்குள் அடியெடுத்துவைக்கும் தம்பதிகளை பற்றிய ருசிகரமான ஆய்வுகள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லா ஆய்வு களுமே, ‘அது எந்த தம்பதிக்கும் முழுமையான சுகத்தை தரும் இரவாக அமைந்ததில்லை’ என்றே குறிப்பிடுகின்றன. அடுத் தடுத்த நாட்களே அவர்களது ஆசைகளை தீர்த்துவைக்கின்றன என்று குறிப்பிடுகின்றன. சில புதுமணத் தம்பதிகளின் முதலிரவு அனுபவங்களை கேட்போம்!
அனீஷ் தனக்கு பணம், நகை எதுவும் தேவையில்லை. பெண் அழகாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் விதித்தான். அவன் எதிர்பார்த்தது போன்ற பெண்ணை பெற்றோர் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்தார்கள். அந்த பெண் மிகவும் நல்லவள். ஆனால் முதலிரவில், கணவருடன் தனிமையில் நெருங்க தயங்கினாள். அதனால் அவன், மனைவி தன்னிடம் பிரியமாக இல்லை. அவளை தன்னிடம் ஒப்படைக்க தயங்குகிறாள் என்று நினைத்துவிட்டான். அதனால் அவர்களது முதலிரவு தள்ளிப்போனது. புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து, ஒவ்வொரு நாளையும் தள்ளிக்கொண்டே இருந்தாள். அவளை ஏதோ ஒரு விஷயம் ஆட்டிப்படைப்பது, அவனுக்கு புரிந்தது.
பலமுறை அதுபற்றி அவன் பேச முயற்சித்தும், அவளிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. புதுப்பெண்ணுக்குரிய பொலிவு அவள் முகத்தில் மலராமல் போனது பெற்றோரை கவலைக்குள்ளாக்கியது. அவளது பயத்துக்கும், தயக்கத்துக்கும் உண்மையான காரணம் எது என்பதை வெகுகாலம் கழித்தே அவர்களால் கண்டறிய முடிந்தது.
திருமணமான அவளுடைய தோழிகளில் சிலர், தங்களுக்கு அன்று வலி அனுபவம் ஏற்பட்டதாக அவளிடம் பகிர்ந்திருக்கிறார்கள். அதை கற்பனை செய்துபார்த்து, தனக்கும் அதுபோன்ற வலி ஏற்பட்டுவிடும் என்று அவள் பயந்துவிட்டதாலே, கணவரின் நெருக்கத்தை தவிர்த்திருக்கிறாள். முதலிரவு என்பது பெண்களுக்கு வலியும் வேதனையும் தரக்கூடியது என்ற சிந்தனை அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த பயத்தை போக்குவதற்குள் அவளுக்கு திருமணம் நடந்துவிட்டது.
வித்யாவின் கதை இன்னொரு மாதிரியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட நிலையில் அவள் கதிகலங்கிப் போய் இருந்தாள். மணப்பெண்ணுக்குரிய மகிழ்ச்சி அவள் முகத்தில் தென்படவில்லை. பெற்றோர் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய நெருங்கிய தோழி அவளை தனியே அழைத்து விசாரித்தாள். வித்யாவோ அம்மா, அப்பாவை விட்டு பிரிந்து போக கவலையாக இருக்கிறது என்றாள். தோழி அதை நம்பவில்லை. அவள் எதையோ மறைக்க முயற்சிப்பது புரிந்தது. எதுவாக இருந்தாலும் மறைக்காமல் சொல். நான் தீர்வு சொல்கிறேன் என்று ஆறுதலாக பேசினாள்.
அப்போது தயக்கத்தில் இருந்து விடுபட்ட வித்யா, ‘முதலிரவை நினைத்து பயப் படுகிறேன்’ என்றாள். அப்படி என்ன பயம் என்று தோழி கேட்டபோது கண்ணீர் விட்டு அழுதபடி, அறியாத வயதில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டாள். ‘என்னவென்றே தெரியாத வயதில் நிகழ்ந்து விட்ட தவறுக்கு தான் காரணம் இல்லை என்றாலும் அது அடிக்கடி மனதுக்குள் வந்து காயப் படுத்துகிறது. அதனால் முதலிரவை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்படி திருமணத்தை நினைத்து மகிழ்ச்சி அடைவது?’ என்று கேள்வி எழுப்பியவள், ‘எனக்கு உறுத்தலாகவும், பயமாகவும் இருக்கிறது. என்னை பற்றிய உண்மையை தெரிந்துகொண்டால் என் கணவர், என் குடும்பத்தை பற்றியும் கேவலமாக நினைத்து விடுவார்’ என்று கதறியழுதாள்.
அவளுக்கு ஆறுதல் சொன்ன தோழி, ‘நீ அவசரப்பட்டு முடிவெடுத்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதே. இந்த மாதிரியான பாலியல் பாதிப்புகள் பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதில் ஏற்பட்டிருக்கிறது. எனக்குகூட நடந்திருக்கிறது. நான் அதை கெட்டகனவாக நினைத்து மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு. அதை திரு மணத்திற்கு பின்பு உன் கணவரிடம் சொன்னால் தேவையற்ற பிரச்சினைதான் ஏற்படும்’ என்று சரியான முறையில் விளக்கம் கொடுத்தாள்.
வித்யாவிற்கு நடந்தது என்னவென்றால், தனது பள்ளிப்பருவத்தின் இறுதிக்காலத்தில் அவள் தனது தோழனுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டாள். அதன் பின்பு தன்னை திருத்தி, அந்த உறவுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டாலும், தான் உறவு கொண்டது வருங்கால கணவருக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை வாட்டிவதைத்ததற்கான காரணம்!
இதுபோல பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக ஆக்கிவிடுகிறது.
மகளை திருமணத்திற்கு தயார் செய்யும் பெற்றோர், முதலில் அவளது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கணிக்கவேண்டும். அதில் அலட்சியம்காட்டக் கூடாது. தேவைப்பட்டால் அதற்குரிய கவுன்சலிங்கை பெறவேண்டும். அவளது மனதில் இருக்கும் குழப்பங்களை அகற்றிவிட்டு, அதன் பின்பு மணவாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தால்தான், முதல் இரவு மட்டுமின்றி எல்லா இரவுகளும் இனிக்கும்.
திருமணத்துக்கு முன்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டாலும் அதை மனதில் இருந்து தூக்கிப் போட்டு விட்டு இனி வரும் வாழ்க்கையை நேர்மையாக வாழும் மனப் பக்குவத்தை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறுகள் யாரும் தெரிந்து செய்வதில்லை. அதை தாண்டி வர பழகிக்கொள்ள வேண்டும். தான் ஒரு நேர்மையான நல்ல மனைவி என்று பெயரெடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முதலிரவில் வேண்டாத விஷயங்களை கணவரிடம் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவேளை அது கடைசிகாலம் வரை தீர்க்க முடியாத சிக்கலை உருவாக்கி விடும். கடந்த கால கசப்பான அனுபவங்கள், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் வாட்டி வதைத்து கசப்பாக்கி விட அனுமதித்துவிடக்கூடாது.
ஆய்வுகள் சொல்வதுபோல் முதலிரவு இனிக்காவிட்டாலும், அடுத்தடுத்து வரும் அனைத்து இரவுகளையும் இன்பமயமானதாக ஆக்க கணவனும்- மனைவியும் மனம்விட்டுப்பேசி, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். நம்பிக்கையும் கொள்ளவேண்டும்.

கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.
கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள்
கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி போன் றவை ஆகும்.
யாருக்கு பாதிப்பு ஏற்படும்
தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. கம்ப்யூட்டரினால் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானவை கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள். கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப் பது, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் அதற்குரிய சரியான கண்ணாடி அணியா மல் வேலை செய்வது போன் றவை ஆகும்.
கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் முறைகள்
கம்ப்யூட்டர் மானிட்டர் கண்களில் இருந்து 25 இன்ச்க்கு மேலான தொலைவில் இருக்கவேண்டும். மானிட்டர் கண்களில் மட்டத்தில் இருந்து 6 இன்ச் தனிவாக இருக்க வேண்டும்.
20-20-20 விதி
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை, 20 வினாடிகளுக்கு, 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். தொலைவில் பார்ப்பது கண்களுக்கு ஓய்வு தரும். அருகாமையில் பார்ப்பது கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதற்கு சமமாகும்.
பழைய சி.ஆர்.டி மானிட்டர்களை பயன்படுத்துவோர் ஆன்டி கிளார் ஸ்க்ரீன் மானிட்டருக்கு முன்பாக மாட்டிக் கொள்ளலாம். புதிய எல்.இ.டி மானிட்டர்களுக்கு இது தேவையில்லை.
மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏர் கண்டிஷனர் ஏசி காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரக்கூடாது.
நாம் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இதனால் கண்கள் உலர்ந்து போவதை தவிர்க்க முடியும். இருக்கைகள் பின்னால் சார்ந்து அமர வசதி யாக இருக்க வேண்டும். பாதங்கள் தரையில் படும் படியாக இருக்க வேண்டும்.
கண் கண்ணாடிகள்
எல்லோருக்கும் பொருந்த கூடிய கம்ப்யூட்டர் கண்ணாடி என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் இயற்கையாக ஏதாவது பார்வை கோளாறு உள்ளதா என்று கண்டறிந்து அவரவர் தேவைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் கண்ணாடிகள் அணிந்து கொள்வது அவசியம். கண்ணில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் உலந்து இருப்பது போல் உணருதல் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து சொட்டு மருந்துகள் உபயோகிக்கலாம்.
கம்ப்யூட்டரை தவிர்ப்பது மிகவும் கடினம். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய இந்த கம்ப்யூட்டர் விஷன் சிண்ட் ரோமை நிச்சம் தவிர்க்கலாம். கம்ப்யூட்டரை கவனமாக பயன்படுத்துங்கள்! கண்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
ராஃபா கிளினிக்
கே.டி.சி. டெப்போ எதிரில், தென்காசி.

குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். இந்த வயது குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும். ‘ரெண்டுங்கெட்டான் வயது’ எனப்படும் இந்த பருவத்தில் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். ஏதாவது சேட்டை செய்து கொண்டிருப்பார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார்கள். சில பெற்றோர் குழந்தைகளின் செயல்பாடுகளை சமாளிக்க முடியாமல் சட்டென்று கோபம் கொள்வார்கள். அது தவறானது. இந்த வயதில் குழந்தைகளிடம் இயல்பாக வெளிப்படும் சுபாவம் இது. அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது அவர்களின் குணாதிசயத்தையும், ஆளுமை திறனையும் பாதிப்புக்குள்ளாகிவிடும். குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். இந்த வயது குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
* இந்த வயதில் குழந்தைகளிடம் போதிய முதிர்ச்சி இருக்காது. குழந்தை சுபாவத்தில் இருந்து மீண்டு வந்திருக்கமாட்டார்கள். அதனால் அவர்களை குழந்தையாகவே வழிநடத்த வேண்டும். அடம் பிடிக்கும் சுபாவம் அதிகமாகவே எட்டிப்பார்க்கும். தங்களுக்கு பிடித்தமானதை கேட்டு அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அந்த சமயத்தில் பெற்றோர் கடுமை காட்டக்கூடாது. அப்படி செய்தால் சட்டென்று கோபம் கொண்டு அறைக்குள் சென்று விடுவார்கள். தனிமையில் இருந்துவிட்டு போகட்டும் என்று அப்படியே விட்டுவிடக்கூடாது. அது அவர்களின் குணாதிசயத்தை மாற்றிவிடும். மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்க தொடங்கி விடுவார்கள். அவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்ல வேண்டும்.
* குழந்தைகள் சேட்டை செய்யும்போதெல்லாம் ‘அடி வாங்கப்போறே’ என்று அதட்டுவதும், அடிப்பதும் கூடாது. அன்பாக எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். கடுமை காட்டுவது குழந்தைகள் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். பெற்றோர் தங்களை வெறுப்பதாக நினைத்து தனிமையில் இருக்க பழகிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.
* தனது சகோதரன், சகோதரியுடன் சண்டை போடும் சுபாவம் இந்த பருவத்தில் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். அப்போது யாராவது ஒருவர் கடுமையாக திட்டிவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். அழவும் செய்வார்கள். தாங்கள் செய்யும் தவறுகள், முயலாமை, அச்சம் என குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்காக ‘அழுமூஞ்சு. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறாய்’ என்று கூறி திட்டக்கூடாது. அழுவது நல்ல பழக்கமல்ல என்று கூறி அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டும்.
* ‘நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவன், கையாலாகாதவன்’ என்பது போன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துவிட வேண்டும். அவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். ‘தாங்கள் எதற்குமே உதவாத நபர்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகள் தவறுகள் செய்வது, தோல்வி அடைவது எல்லாம் சகஜம். அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர்கள்தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.
* தங்களது சகோதரன், சகோதரியுடனோ, மற்ற குழந்தை களுடனோ எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். அது அவர்களுடைய சுய மரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.
* இந்த பருவத்தில் குழந்தைகள் சுறுதுறுவென்று இருப்பார்கள். ‘அதை செய்யாதே. இதை செய்யாதே’ என்று கடிவாளம் போடக்கூடாது. எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அதுதான் தவறானது. அது அவர்களின் தனித்திறனையும், ஆளுமைத்திறனையும் பாதித்துவிடும். அவர்கள் செய்யும் செயல்களில் இருக்கும் நல்லவை, கெட்டவைகளை விளக்கி புரியவைக்க வேண்டும்.

இந்த ஜூஸை சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறுதானியம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.
தேவையான பொருட்கள்
முளைகட்டிய கம்பு - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1 கைப்பிடி
ஏலக்காய் - 2
வெல்லம் - ஒரு துண்டு
செய்முறை
கம்பை இரவில் ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதோடு வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.
சுவையான கம்பு ஜூஸ் ரெடி.

பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகுசாதன பொருட்களை முறையாக அடுக்கிவைப்பதில்லை. அவைகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. அழகு சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதும் ஒரு கலைதான்.
இளம் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ‘ஹேன்ட்பேக்’களில், தேவையான அழகு சாதன பொருட்களை எடுத்துச்செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது வெளிஇடங்களில் வைத்தும் அவைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் பெருமளவு பெண்கள் தங்கள் ஹேன்ட்பேக்குகளில் உள்ள அழகு சாதன பொருட்களை முறையாக அடுக்கிவைப்பதில்லை. அவைகளை சரியாக பராமரிப்பதும் இல்லை. அழகு சாதன பொருட்களை முறையாக பராமரிப்பதும் ஒரு கலைதான். கடந்த ஆண்டு, தானாக சீராகிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்ப மேக்கப் கிட்கள் அறிமுகமாகியிருக்கின்றன. வெளி நாடுகளில் அறிமுகமாகியிருக்கும் அந்ததொழில்நுட்ப கருவிகள் நமது கைக்கு கிடைக்க இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரை நாம் பயன்படுத்தும் மேக்கப் கருவிகளை முறையாக பராமரிக்க கற்றுக் கொள்வோமா?. இதோ அதற்கான சில டிப்ஸ்...
மேக்கப் ஸ்பாஞ்ச்
* கவனமாக பராமரிக்கப்பட வேண்டிய பொருட்களில் ‘மேக்கப் ஸ்பாஞ்ச்’ குறிப்பிடத்தக்கது. பஞ்சு போன்றது என்பதால் எளிதில் அழுக்கு மற்றும் கறை படிய வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் சுத்தம் செய்வது எளிதுதான். பவுடர் பூசுதலுக்கான ஸ்பாஞ்ச் என்றால் முதலில் சாதாரண தண்ணீரில் நனைத்துவிட்டு, பின்பு லேசான சுடுதண்ணீரில் அமிழ்த்தி சுத்தம் செய்துவிட்டு உலர்த்தி பயன்படுத்தலாம். அதில் இருக்கும் ஈரத்தை உலர்த்த கடினமாக பிழிய வேண்டாம். உலர்ந்த துண்டு மூலம் ஒற்றி எடுத்தால் ஈரத்தை விரைவில் உலர்த்தலாம்.
* தோல் உறையுடன் கூடிய ஸ்பாஞ்ச் என்றால் அதிக அளவு சுடும் நீரில் அமிழ்த்தக்கூடாது. அதில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டுமானால் சோப்பு தூள் அல்லது ஷாம்பு கலந்த நீரை பயன்படுத்தலாம்.
* இப்படி சுத்தம் செய்தபிறகு, ஸ்பாஞ்சில் உள்ள ஈரத்தன்மை நீங்காமல் இருந்தால் உட்புறத்தில் விரிசல் அல்லது சேதம் இருக்கலாம். அதை கழற்றி சரிபாருங்கள். சேதம் அடைந்திருந்தால் ஸ்பாஞ்சை மாற்றுங்கள்.
பிரஷ்கள்
* இன்று ஏராளமான வகை பிரஷ்கள் பல்வேறுவிதமான மேக்கப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. பிரஷின் தன்மை மற்றும் அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப அவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக பிரஷ்களை தண்ணீரில் கழுவிவிட்டு, பின்னர் இதமான சுடுதண்ணீரில் கழுவி உலர்த்தி பயன்படுத்தலாம்.
* எல்லா விதமான பிரஷ்களையும் குழாயை திறந்துவிட்டு வேகமாக வெளியேறும் தண்ணீரில் அலசுவது சரியாக இருக்காது. முகத்தில் பயன்படுத்தப்படும் பல பிரஷ்கள், மென்மையானவை. அவற்றை இப்படிச் செய்தால் அதன் தூரிகை முடிகள் உதிர்ந்து, சீக்கிரம் அதன் ஆயுள் முடிந்துவிடும்.
* சிறிய கோப்பையில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு, லேசாக அலம்பினாலே பிரஷ்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கிவிடும். கடினமான கறைகள், பிசுக்குகள், கிரீம்கள் பட்டிருந்தால் மென்மையாக தேய்த்து கழுவவேண்டும். சில வகை கறைகளை நீக்க, குழந்தைகளுக்கான ஷாம்புவை நீரில் கலந்து அதில் பிரஷை முக்கி சுத்தம் செய்யலாம்.
* தலை முடிகளுக்கு பயன்படுத்தப்படும் கடினமான பிரஷை விரல்களால் சுத்தம் செய்வது கடினம். அவற்றை சிறிய வகை சீப்புகள் அல்லது பற்குச்சிகளை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். கடினமான அழுக்கு என்றால் ஷாம்பு அல்லது வினிகர் கரைசல் கலந்த தண்ணீரில் சில நிமிடங்கள் அமிழ்த்தி வைத்து பின்பு தண்ணீரில் அலசி சுத்தம் செய்யலாம்.
உலோக கருவிகள்
* இமை முடிகளை சுருள வைக்கும் கருவி, புருவ முடிகளை சீராக்கும் கருவி, நகவெட்டி மற்றும் சரும அழுக்கு நீக்கும் கருவி உள்ளிட்டவற்றை கிருமி நாசினியும், சோப்பும் கலந்த தண்ணீரில் கழுவி பின்பு உலர்த்தி பயன்படுத்தலாம். இப்போது இதற்காக கிருமிகளை நீக்கும் கருவிகளே வந்துவிட்டன. அனைத்து மேக்கப் உபகரணங்களுக்கான ஸ்டெரிலைஸ்டு கருவிகளும் உள்ளன. அவைகளை பயன்படுத்தி பராமரிப்பது சிறப்பானது.
உடைந்துவிடக்கூடியவை
* பவுண்டேசன் பவுடா் மற்றும் புருவமை அடங்கிய பாக்ஸ்கள், லிப்ஸ்டிக் போன்றவைகளை கைப்பையில் சரியாக அடுக்கிவைக்கவேண்டும். கண்டபடி அவைகளை போட்டுவைத்தால், உடைந்து போகலாம். அல்லது பயன்படுத்தும்போது கைதவறுவதாலும் இவை நொறுங்கிப் போகலாம். இப்போது புதிய வரவுகளான கைப்பைகளில் அழகு சாதன பொருட்களை அடுக்கிவைக்கும் வசதிகள் இருக்கின்றன. அவைகளை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.
* லிப்ஸ்டிக் வகைகளை அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டும். கவனக்குறைவால் அது உடைந்துவிட்டால் உடனே அவற்றை வீணாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவைகளை பாதுகாத்து பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
* எரியும் அடுப்பின் அருகில் லேசான வெப்பத்தில் இரு நுனிகளையும் காட்டுங்கள். அவை இளகும் தன்மை அடைந்தவுடன் அவற்றை இணைத்துப்பாருங்கள். அவை ஒட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
* ஒருவேளை அப்படி ஒட்டிக் கொள்ளாவிட்டால், உடைந்த துண்டுகளை, சிறுகரண்டியில் வைத்து வெப்பத்தில் வாட்டுங்கள். சிறிது நேரத்தில் அது இளகிவிடும். பின்பு அதை சிறிய குப்பியில் வைத்து பிரிட்ஜ் பிரீஸரில் வைக்கலாம். அது உலர்ந்தவுடன் எடுத்து பயன்படுத்தலாம்.
அழகு சாதன பொருட்களில் பெரும்பாலானவை விலை உயர்ந்ததாகவே இருக்கின்றன. அவைகளை வாங்குபவர்கள் சரியாக பாதுகாத்து, பராமரித்து பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அதனால் பெரும் பண இழப்பு ஏற்பட்டுவிடும்.

இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பேராபத்தில் இருந்து தப்பிக்க, முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நன்கு பரிச்சயம் இல்லாதவர்களிடம் நட்பு பாராட்டாமல் இருக்க வேண்டும்.
இன்றைய நாகரிக உலகில் குழந்தைகள் முதல் குடுகுடு வயதானவர்கள் வரை செல்போன் மோகம் தொற்றிக்கொண்டுள்ளது. அதிலும் ஸ்மார்ட் போன் என்றால் சுட்டி குழந்தைகள் கூட தனது சுட்டித் தனத்தை மறந்து செல்போனில் சுணங்கி தான் போகின்றன. முன்பெல்லாம் முகம் பார்த்து பேசி, பழகிய நாம் இன்றைக்கு ‘ஹலோ, ஹாய்’ கூட நேரில் சொல்வது இல்லை. இதை எல்லாம் வாட்ஸ்-அப், பேஸ்-புக்கில் தான் குறுந்தகவலாக அனுப்பி உறவுகளையும், நட்புகளையும் நம்மை நோக்க விடாமல் செல்போனில் முடங்க வைக்கிறோம். ஒரே அறைக்குள் இருந்து கொண்டு முகம் பார்க்காமல் இருக்கும் இதுபோன்ற கலாசாரம் இன்றைக்கு பெண்களை, குறிப்பாக இளம்பெண்களை ஒரு பேராபத்தை நோக்கி அழைத்து சென்று இருக்கிறது.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வையே குறிப்பிடலாம். கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரும் ‘பேஸ்புக்’ (முகநூல்) மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி மாணவியை அந்த இளைஞர் தொடர்பு கொண்டு காரில் முதன்முறையாக அழைத்து சென்றுள்ளார். கார் சிறிது தூரம் சென்றதும், அந்த இளைஞர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை அவருடன் இருந்த நண்பர்களில் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையே மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
நல்லவேளையாக அந்த மாணவி சுதாரித்து கொண்டு தனது பெற்றோரிடம் கூறியதால், தற்போது அவரை மிரட்டிய இளைஞர்கள் சிறையில் கம்பி எண்ணுகின்றனர். அதே நேரத்தில் கைதானவர்களிடம் கேட்ட போது தான், அவர்களின் தலைவனாக செயல்பட்டவன் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவன் வீட்டில் வைத்து தான், வாட்ஸ்-அப், பேஸ்-புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டும் பழகிய, நேரடி பழக்கம் இல்லாத பெண்களை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த கொடூரமும் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் வைத்திருந்த செல்போன்களில் 30-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளன. மேலும் ஒரு சில பெண்களை அந்த வீடியோவை காண்பித்து மீண்டும் வர வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சீரழிவுகளுக்கு காரணம், இணையதள வளர்ச்சி என்று மட்டும் கூறிவிட முடியாது. எந்த வளர்ச்சியிலும் ஆபத்தும் இருக்கும், நல்லதும் இருக்கும். அதேபோல் ஆபத்தை மட்டுமே சுட்டிக்காட்டி அதை புறந்தள்ளி விட முடியாது. சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு மீட்டெடுப்பு போராட்டம் போன்ற சூழலில் இதே சமூகவலைத்தளங்கள் தான் புரட்சிக்கு வித்திட்டன. எனவே செல்போன் ஒரு அழகிய ஆபத்து என்றாலும், இந்த ஆபத்தை தவிர்க்க பெண்களிடமே உபாயம் உள்ளது.
ஆம், அந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற நவீன செல்போன்கள் இல்லாத சூழலில் பெண்களுடன் யாரும் எளிதில் பேசி விட முடியாது. நன்கு பரிச்சயமான உறவுகளிடம் மட்டுமே பெண்கள் பேசுவது வழக்கம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக படிக்கும் மாணவிகளிடம், சக மாணவர்கள், பெயர் சொல்லி அழைத்து பேசவே ஒரு ஆண்டு காலம் பிடிக்கும். இதில் பல பெண்கள், தங்கள் கல்வியை முடிக்கும் வரை சக மாணவர்களிடம் பேசாமல் தனது படிப்பை முடித்து சென்ற நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு யோசித்து யோசித்து முகம் அறியா நட்பை தவிர்த்ததால், தவறான நட்பால் தடம் மாறுவது என்பது அரிதான ஒன்றாக தான் இருந்தது.
இன்றைக்கு முகநூல், வாட்ஸ்-அப் என்று சமூக வலைத்தளங்களில், யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்று அறியும் முன்பே முகநூலில் அவர்களின் முக அழகை பார்த்து மட்டும் முக நக நட்பு பாராட்டினால் அது நட்பாக இருக்காது. அது நிச்சயம் பேராபத்தில் தான் முடிகிறது. அதிலும் பெண்ணின் அழகு மட்டுமல்ல, ஆணின் அழகும் பெண்ணுக்கு ஆபத்தாக தான் முடிகிறது. முகநூலில் வசீகரிக்கும் அழகுடன் கூடிய இளைஞர்களின் புரோபைல் படங்கள் பல இளம்பெண்களை அவர்கள் பால் ஈர்க்க வைக்கிறது. அவர்களில் பலர் கெட்டவர்களாகவும் உள்ளனர். முகநூலில் நட்பு பாராட்டும் பெண்கள் நாகரிக வளர்ச்சி என்ற உச்சாணி கொம்பில் இதுபோன்ற விபரீதங்களும் உள்ளன என்பதை உணர வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறை பெண்கள் இந்த பேராபத்தில் இருந்து தப்பிக்க, முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நன்கு பரிச்சயம் இல்லாதவர்களிடம் நட்பு பாராட்டாமல் இருக்க வேண்டும். இதை தான் ‘முகநக நட்பது நட்பன்று’ என்று வள்ளுவர் அன்றே நமக்கு உணர்த்தி உள்ளார். பெண்கள் இதை உணர்ந்து செயல்பட்டால் தான் பொள்ளாச்சி சம்பவம் போன்று வேறு சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழாது என்பதை கட்டியம் கூறலாம்.
செல்வவிநாயகன், சேலம்.

முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்போது நாம் சரியான இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோமா என்று யோசித்து செயல்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் சரியான பாதைதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.
வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது அதற்கு தீர்வு காண்பதற்கு இரு வழிகள் புலப்படும். ‘மதில் மேல் ஏறிய பூனை போல’ அந்த பக்கம் செல்லவா? இந்த பக்கம் செல்லவா? என்ற தடுமாற்றம் மனதில் குடிகொள்ளும். எந்த வழியில் என்னென்ன நிகழும், எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையுமா? என்ற குழப்பம் உண்டாகும். ஏதாவதொரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். அப்போது நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இறுதியில் ஒரு முடிவை எடுத்துவிட்டு அதன் பிறகு மனதை போட்டு குழப்பக்கூடாது. எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
நிறைய சந்தர்ப்பங்கள் நம்மை கடந்து போகும். அதை நாம் முறையாக பயன்படுத்திக்கொள்வதற்கு தவறிவிடுவோம். பிறகு யோசித்து வருத்தப்படுவோம். ஆதலால் முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்போது நாம் சரியான இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறோமா என்று யோசித்து செயல்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கும் சரியான பாதைதான் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.
திருமணம், தொழில் என்று பல இலக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை திறம்பட கையாள்வதற்கு தனித்திறமை கொண்டிருக்க வேண்டும். நன்கு யோசித்து முடிவெடுத்துவிட்டு செயல்படவும் தொடங்கிய பிறகு, எடுத்த முடிவை பாதியில் மாற்றுவதற்கு முயற்சிக்கக் கூடாது. நாம் எந்த வழியை தேர்வு செய்கிறோமோ அந்த வழியில் நேர்மையாக பயணிக்க வேண்டும். நன்மை, தீமை என்பது எல்லா வழியிலும் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் நன்மைகளை மட்டுமே எடை போடக்கூடாது. தீமைகளை கடந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு இலக்கை நிர்ணயித்த பின்பு, அதில் இருந்து பின் வாங்கக்கூடாது. அப்படி செய்தால் அதுநாள் வரை உழைத்த உழைப்பு வீணாகிப்போய்விடும். மற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், மதிப்பும், மரியாதையும் கேள்விக்குறியாகிவிடும்.
இன்றைய சூழலில் இளைஞர்கள் சரியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். இது அவர்கள் வாழ்க்கையை திசை மாற்றி விடுகிறது. மன அழுத்தம், கோபம், டென்ஷன் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து சரியான முடிவு எடுக்க விடாமல் தடுத்து விடுகிறது. முடிவு எடுக்கும் வேகத்தை வைத்துத்தான் ஒருவரின் தனித்திறமையையும், மூளையின் செயல்பாட்டையும் கண்டறிய முடியும். சரியான முடிவெடுக்க மூளை, மன நிலையை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எந்த முடிவாக இருந்தாலும் அதனை திடமான நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்து செயல்படும்போது நாம் தேர்வு செய்த வழி நம்மை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
கல்வியை தேர்ந்தெடுக்கும்போது நம் அறிவின் பலத்தை மனதில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். இதுநாள் வரை நாம் சாதித்த விஷயங்கள், புரிந்து கொள்ளும் விதம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முடிவெடுத்தால் கற்றல் எளிமையானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். நாம் ஒரு பொருளை தூக்கும்போது உடலின் பலத்தை பொறுத்துத்தான் சுமையை தீர்மானிக்கிறோம். அதுபோலத்தான், நாம் மட்டுமே சுமக்க வேண்டிய சுமை என்பதால் நம்முடைய பலம் நமக்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
ஒரு தொழிலை தேர்வு செய்யும்போது வருமானத்தை மையமாக வைத்து தேர்வு செய்யாமல் தொழில் திறமை, ஆர்வம் இதையெல்லாம் முன் நிறுத்தி முடிவு செய்ய வேண்டும். செய்யும் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, வேலை பளுவை குறைக்கும். நுணுக்கமான விஷயங்களை ஈடுபாட்டோடு கற்றுக்கொள்ள தூண்டும். இதுபோன்ற விஷயங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். எந்த வேலை நம் திறமைக்கு ஏற்றது என்பதை மனதில் கொண்டு தான் தேர்வு செய்ய வேண்டும். வருமானம் ஒன்று மட்டுமே வாழ்க்கையை வளப்படுத்தாது. அதற்கும் மேல் பல விஷயங்கள் உள்ளன. வாழ்க்கையில் முக்கியமான காலகட்டங்களில் எதை தேர்வு செய்வது என்று புரியாமல் சிந்தனையில் ஆழ்ந்து விடுவோம். நம் அறிவு மட்டுமே நமக்கு ஆசான். நமக்கு எது சாதகமாக இருக்கும் என்பது நமக்குத்தான் தெரியும். நமக்கு எது சவு கரியமானது என்பதும் நம் அறிவுக்கு புலப்படும்.
வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் போதும் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கும். ஒரு சில விஷயங்களில் நாம் விட்டுக்கொடுத்து போக வேண்டியிருக்கும். எதை எதை விட்டுக்கொடுக்க முடியும் என்பதை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதை புரிந்து கொண்டால் குழப்பம் வராது. ஏதேனும் ஒரு பிரச்சினை வந்தாலும் கூட, ‘நாம் தவறு செய்துவிட்டோமோ. சரியான வழியை தேர்வு செய்யவில்லையோ என்று ஆதங்கப்படக்கூடாது. எல்லோருடைய வாழ்விலும் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் தடுமாற்றம் தோன்றும். அப்போது நாம் கொஞ்சம் நிதானித்து, சரியான பாதையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் தேர்வு செய்த பிறகு குழப்பம் கொள்ளக்கூடாது. ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப செய்யத்தகுத்த செயலை நன்கு சிந்தித்த பிறகே துணிந்து தொடங்க வேண்டும். தொடங்கிய பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது குற்றமாகும்.

குழந்தைப் பேறு, பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கூடுதல் கடமைகளையும் கொடுக்கிறது. அதனால் தூக்கத்தை மறந்து, குழந்தைகளை கவனிக்கவேண்டி உள்ளது.
குழந்தை பிறப்பது தாய்க்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதே அளவிற்கு அன்பு தொல்லையாகவும் மாறிவிடுகிறது. இரவில் கண்விழித்து குழந்தையை பராமரிப்பது, அழும் குழந்தையை அமைதிப்படுத்தி தூங்கவைப்பது, நேரம் பார்க்காமல் பசியாற்றுவது என குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பதால், தாயின் ஓய்வு நேரம் குறைந்துவிடும். குறிப்பாக முதல் குழந்தையை பெற்ற பெண்களுக்கு நிம்மதியான தூக்கம் என்பது கேள்விக்குறியாக மாறிவிடும். இதுதொடர்பாக, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பல உண்மைகள் தெரியவந்துள்ளன.
கர்ப்ப காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் பெண்கள், குழந்தை பிறந்ததும் பரபரப்பாக மாறிவிடுகிறார்களாம். குறிப்பாக முதல் குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு, குழந்தை பிறந்ததில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு, நிம்மதியான தூக்கம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களிலேயே, பெண்கள் ஒருமணிநேர தூக்கத்தையும், தந்தை 15 நிமிட தூக்கத்தையும் இழந்துவிடுகிறார்கள். கிடைக்கும் ஓய்வுநேரங்களிலும், தாயால் நிம்மதியாக தூங்கமுடிவதில்லை. இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையை சேர்ந்தவர்கள் 4,659 பெற்றோர்களிடம் 7 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
‘‘குழந்தைப் பேறு, பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், கூடுதல் கடமைகளையும் கொடுக்கிறது. அதனால் தூக்கத்தை மறந்து, குழந்தைகளை கவனிக்கவேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் ஆண்களை விட, பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் குழந்தை பராமரிப்பில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதால், அவர்களின் தூக்கம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை’’ என்கிறார், உளவியல் ஆராய்ச்சியாளர் சகாரி லிமோலா.
தாய்மார்களின் தூக்கத்திற்கும், அவர்கள் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். காரமான மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. வெளி உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்து சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் தவறாமல் ஒரு டம்ளர் பால் பருக வேண்டும். தூக்கத்தை தூண்டும் ஆற்றல் பாலுக்கு இருக்கிறது. அதிலிருக்கும் செரோடோனின் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.

வெளியே செல்ல முடியாத சூழலில் இயற்கையோடு இணைவதும், பறவைகளை கவனிப்பதும் பல்வேறு வகைகளில் மன நலத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரும் என்கிறார்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள்.
ஊரடங்கு காலத்தில் வெளி இடங்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் வீட்டில் இருந்த படியே விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டு பால்கனியில் அமர்ந்தபடி இயற்கையை ரசிப்பவர்களின் கண்களில் கட்டாயம் பறவைகள் தென்படும். அத்தகைய பறவைகளை அடையாளம் காணவும், அவற்றை பற்றி தெரிந்துகொள்ளவும் பலர் முயற்சிக்கிறார்கள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில்தான் பறவைகளை ரசித்து பார்ப்பதை பிரதானமான பொழுதுபோக்காக பின்பற்றுகிறார்கள். அந்த கலாசாரத்தை இந்தியாவின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் கடைப்பிடிக்கத்தொடங்கி இருக்கிறார்கள். வெளியே செல்ல முடியாத சூழலில் இயற்கையோடு இணைவதும், பறவைகளை கவனிப்பதும் பல்வேறு வகைகளில் மன நலத்துக்கு நன்மைகளை பெற்றுத்தரும் என்கிறார்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள்.
ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு பலர் இயற்கையுடன் இணைவதற்கான வழிகளை தேடுகிறார்கள். அவர்களின் பொழுது போக்கு பட்டியலில் பறவைகளும் இடம் பிடித்திருக்கிறது. தொலைநோக்கிகள் மூலமோ அல்லது தொலைநோக்கிகள் இல்லாமலோ பறவைகளை பார்ப்பது, அவற்றின் ஒலியை கேட்பதன் மூலம் மனதை இலகுவாக்கலாம். "ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தரும் இன்பமான காரியங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்யும்போது மூளையில் எண்டோர்பின்ஸ் மற்றும் டோபமைன் போன்ற ரசாயனங்கள் வெளியிட தூண்டுகோலாக அமையும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் வழிவகை செய்யும். பறவைகளை ரசிக்கும் செயலில் ஈடுபடும்போது மூளையில் ஒரு வகையான இனிமையான உணர்வை அனுபவிக்க முடியும்’’ என்கிறார், பாட்னா மருத்துவ கல்லூரி மற்றும் மன நல மருத்துவ உதவி பேராசிரியர் சவ்ரப் குமார்.
பறவைகளை பார்த்து ரசிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பது குறித்து பார்ப்போமா?
உடற்பயிற்சி: இன்றைய காலகட்டத்தில் உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன. பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வாழ்க்கை முறையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். பறவைகளை கண்காணிப்பது என்பது உடல் ரீதியான உடற்பயிற்சியை உள்ளடக்கிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது.
மூளைக்கு பயிற்சி: பொழுதை போக்குவதற்கு செலவிடும் நேரத்தில் பறவைகளைப் பார்ப்பது அன்னிச்சை உணர்வுகளை தூண்டக்கூடும். மூளைக்கும் இதமளிக்கும். அதிக செறிவுடன் செயலாற்ற தூண்டுகோலாக அமையும்.
காட்சியில் மாற்றம்: தினமும் ஒரு மணி நேரத்தை பறவை கண்காணிப்புக்கு செலவிடுவது விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை கொடுக்கும். ஆகாயத்தில் மிதக்கும் தருணத்தை அனு பவிப்பதுபோல் உள்ளுணர்வு குதூகலிக்கும். கவலை, சலிப்பு போன்ற உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும். மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மன அழுத்தம் குறையும்: நவீன வாழ்க்கை முறை மின்னணு சாதனங்களை சார்ந்தே அமைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பால் ஆன்லைன் வழியாகவே பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. கணினி, லேப்டாப் திரை முன்பு செலவிடும் நேரமும் அதிகரித்திருக்கிறது. வேலை முடிந்த பிறகு ஓய்வு நேரத்தின் பெரும் பகுதியை செல்போன் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இப்படி திரை முன்பு செலவிடும் நேரம் அதிகரிப்பது மன அழுத்தத்தை உண்டாக்கிவிடும்.
இந்த சூழலில் சில நிமிடங்களையாவது பறவைகளை பார்ப்பதற்கு ஒதுக்குவது இயற்கையோடு இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மன அழுத்தத்தை வெளியிடவும் உதவும். வெளியே செல்ல முடியாவிட்டாலும் பால்கனியில் இருந்தபடி பறவைகளை பார்ப்பதும், புதிய காற்றை நுகர்வதும் மனச்சோர்வை குறைக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ‘‘நடைப்பயிற்சி, பறவைகள் பார்ப்பது, பிற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்’’ என்றும் டாக்டர் சவ்ரப் குமார் கூறுகிறார்.
மன நிறைவு: கவலை, தேவையற்ற வதந்தி, மன அழுத்தம், சிந்தனை ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் நினைவாற்றல் நிறன் மேம்படும். பண்டைய காலம் முதல் பின்பற்றப்படும் யோகா, ஆயுர் வேதம் ஆகியவை நினைவாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த வகையில் பறவைகள் பார்ப்பதை பலரும் தியானத்துடன் ஒப்பிடுகிறார்கள். பறவைகளின் அசைவுகளையும், வடிவங்களையும் ரசித்து பார்ப்பது மன நிறைவை அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கம்பைச் சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் கம்பு மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறுங்கள்.
நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள்.
உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிடலாம்.
வெந்தயக் குழம்பு அல்லது கறிக்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.