என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
    இரவில் நன்றாக தூங்கினாலும் காலையில் எழும்போது சோர்வையும், களைப்பையும் உணர்ந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது ஆரோக்கியத்தில் ஏதோ குறை இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலம் உற்சாகத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்து, சோர்வை விரட்டியடித்துவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    மன அழுத்தம்:

    பொதுவாக மன அழுத்தம் கொண்டவர்கள் இரவில் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்வார்கள். பகல் பொழுதில் தூக்க கலக்கத்தால் அவதிப்படுவார்கள். அதோடு மனச்சோர்வு அடைந்தவர்கள் தூக்கம் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள்.

    விளக்கு வெளிச்சம்:

    வீட்டு அறையில் பொருத்தப்படும் செயற்கை விளக்குகள் சிறிதளவேனும் நீல ஒளியை வெளியிடக்கூடியவை. அப்படியிருக்கையில் படுக்கை அறையில் பொருத்தப்படும் விளக்கு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். படுக்கை அறையில் இரவு விளக்கு மூலம் பரவும் வெளிச்சம் அதிகமானால் உடலின் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாட்டை சீராக்க உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு கட்டுப்படுத்தப்பட்டுவிடும்.

    அதனால் இரவில் நல்ல தூக்கம் பெறுவது கடினமாகிவிடும். மறுநாள் காலையில் சோர்வுடன் எழக்கூடும். தூங்குவதற்கு முன்பு இரவில் அதிக நேரம் செல்போன் பார்ப்பதும் தூக்கத்திற்கு கேடு விளைவித்துவிடும். காலையில் சோர்வை உண்டாக்கிவிடும்.

    நீரிழப்பு:

    உடலில் நீர்ச்சத்து அளவு குறைவது அமினோ அமிலங்களின் அளவை குறைத்துவிடும். அவைதான் தூக்கத்திற்கு வித்திடும் மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. உடலில் போதுமான அளவு மெலடோனின் இல்லாவிட்டால் இரவில் நல்ல தூக்கத்தை பெற முடியாது. பகல் பொழுதில் சோர்வை உணரக்கூடும்.

    தைராய்டு:

    தைராய்டு பாதிப்பு கொண்டவர்களும் காலையில் எழும்போது சோர்வை உணரக்கூடும். தைராய்டு பாதிப்பின் தன்மையை பொறுத்து தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நடைபெறும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். மன நிலை, உடல் எடை, உடல் தசை, மூட்டு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. தூக்க சுழற்சியிலும் பாதிப்பு நேரும் என்பதால் காலையில் சோர்வை உணரக்கூடும்.

    மதுப்பழக்கம்:

    மதுவில் கலந்திருக்கும் ஆல்கஹாலும் தூக்கத்தை சீர்குலைத்துவிடும். அது ஆழ்ந்த தூக்கத்திற்கு துணை புரிவதுபோல் தோன்றும். ஆனால் சில மணி நேரங்களிலேயே தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். குடிப்பழக்கம் உடலில் மந்த நிலையை அதிகரிக்க செய்துவிடும்.

    சோர்வு

    வாழ்க்கை முறை:

    கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது சோர்வை அனுபவிக்க நேரிடும். ஆதலால் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்த நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடமாடுவது நல்லது.

    ரத்தசோகை:

    ரத்தத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாவிட்டால் உடல் சோர்வால் அவதிப்பட வேண்டியிருக்கும். தூக்கத்திலும் அதன் தாக்கம் வெளிப்பட்டு காலையில் எழும்போது சோர்வு உண்டாகும். ஆதலால் தினமும் இரும்புச்சத்து நிறைந்த உணவை சமையலில் சேர்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கீரை, உலர் திராட்சை, ஆப்ரிகாட் பழம், பட்டாணி, பீன்ஸ், கடல் உணவுகள், கோழி இறைச்சி போன்றவற்றை சாப்பிடலாம்.

    மெத்தை:

    படுக்கும் மெத்தை தேர்விலும் கவனம் தேவை. மெத்தை உடல் அமைப்புக்கு ஏற்றதாக அமைந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் உடல் உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். தசைப்பிடிப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
    சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.
    மன ஆரோக்கியத்தை பொறுத்தே உடல் ஆரோக்கியம் அமைந்திருக்கிறது. இரண்டுமே சீராக இருக்கும் பட்சத்தில் உடல் வலு குறையாமல் இருக்கும். அதற்கு முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களில் முக்கியமானது அமுக்கரா கிழங்கு.

    சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.

    அமுக்கரா கிழங்கு செடி

    இதிலும் சிறிய வகை கிழங்கு நாட்டு இனம் என்றும், பெரிய கிழங்கு வகை சீமை இனம் என்றும் அழைக்கப்படுகிறது. உடலுக்கு இனிமையான புத்துணர்ச்சி தரும் இவை, சுவையில் கசப்பு தன்மை கொண்டது. அமுக்கரா கிழங்கு பொடியை வாங்கி வைத்துகொண்டால் போதும். இவை உலர்த்திய பொடியும் கிடைக்கும். அமுக்கரா கிழங்கு அப்படியே பச்சையாகவும் கிடைக்கும். பயன்படுத்துவதற்கு ஏதுவாக எப்படி தேவையோ அப்படி வாங்கிக் கொள்ளலாம்.

    நரம்புதளர்ச்சி பிரச்சினை இருப்பவர்கள் அமுக்கரா கிழங்கை எடுத்துக்கொள்ளலாம். காலை, மாலை வேளையில் காபி, டீக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியில் மூன்று பங்கு கற்கண்டு சேர்த்து பசுவின் பாலில் கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வலிமை கிடைக்கும்.

    இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா கிழங்கு சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது தெம்புதரும். இதய துடிப்பை சீராக்கும். மனஉளைச்சலில் இருந்து விடுதலைதரும். மூளை செல்களை தூண்டி அதிக புத்துணர்ச்சியை வழங்கும்.

    பெண்கள் அமுக்கரா கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும். ஹார்மோன் சமச்சீரின்மையால் மாதவிடாய் கோளாறுகள், குழந்தை பேறின்மை போன்றவை ஏற்படும். அதையும் இந்த கிழங்கு சீர்செய்யும். ஆண்களுக்கு இளமையிலேயே ஏற்படும் தலை  வழுக்கை, ஆண்மைக் குறைபாடு போன்றவைகளையும் சரிசெய்யும்.

    உடல் பலவீனமாக இருப்பவர்கள் அமுக்கரா கிழங்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடியை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம் போகும். உடல் சருமம் பொலிவு கிடைக்கும். ஆயுள் நீடிக்கும். வளரும் பிள்ளைகளுக்கு 2 சிட்டிகையை நெய்யில் கலந்து கொடுக்கலாம். பெரியவர்கள் அரை டீஸ்பூன் அளவு நெய்யில் குழைத்து சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். வளரும் பிள்ளைகள் பசியின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டால் தேனில் கலந்து கொடுத்தால் பசியின்மை பிரச்சினை படிப்படியாக குறையும்.

    கடைகளில் கிடைக்கும் அசுவகந்தா பலாத்தைலம் தேய்த்துக் குளித்துவர தலை மற்றும் கபம், சுரம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி உடல் வலிமை அடையும்.
    தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புகிறவர்கள் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து ஜூஸ் தயாரித்து பருகலாம். இவை ஆங்கில தொடக்க எழுத்துக்களின் பெயரில், ஏ.பி.சி ஜூஸ் என்று அழைக்கப்படுகின்றது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆகியவை கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. பீட்ரூட்டில் இருக்கும் லூட்டின், ஜியாசாந்தைன் போன்றவை விழித்திரையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    தக்காளி பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆற்றல் கொண்டவை. முக்கியமாக லூட்டின், ஜியாசாந்தைன், சாந்ஹோபில் கரோடினாய்டுகள் பல வகையான கண் நோய்களை தடுக்க உதவுகின்றன.

    அழகு சாதன பொருட்களில் அதிக அளவில் சேர்க்கப்படும் கற்றாழை ஜெல்லும் கண் குறைபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குகிறது. கற்றாழை ஜூஸ் பருகிவந்தால் கண்பார்வை திறன் மேம்படும். கண்புரை பிரச்சினை வராமல் தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    புளுபெர்ரி ஜூஸ் பருகி வந்தால் கண்புரை பிரச்சினையில் இருந்து தற்காத்து கொள்ளலாம். புற்றுநோய், இதயநோய் பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம். கண் பார்வை திறனையும் மேம்படுத்தலாம்.

    தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வை குறைபாடு பிரச்சினைக்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் தவறாமல் ஆரஞ்சுப்பழம் அல்லது ஜூஸ் பருகிவந்தால் பார்வை இழப்பு நேராமல் பார்த்துக்கொள்ளலாம்.

    மஞ்சள் நிற வாழைப்பழங்கள் சாப்பிடுவதும் பார்வையை தெளிவாக்கும். ப்ராக்கோலி ஜூஸ் பருகுவதும் கண்களுக்கு நல்லது.
    முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.
    முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பேஷியல் இந்த காலத்தில் தேவை. இதில் செலவில்லா சரும பேஷியலை பப்பாளி பழம் தரும். பப்பாளி பழக்கூழை 10 முதல் 15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தை கழுவினால் போதும். தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பப்பாளித்தோலின் அடிப்பகுதியை பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்று பொலிவடையும்.

    வெள்ளரிக்காய்களை நறுக்கிக்கண்களில் வைத்துக்கட்டினால் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் செலவிடுபவர்கள், கண்களின் மேல் வெள்ளரியை வைத்துக்கொள்வது சிறந்தது.

    அதே போல வெள்ளரிக்காயை அரைத்து பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். முகத்தில் கற்றாழை கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதே போல் கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்கிறது.

    முகச்சவரம் செய்து முடித்த பிறகு `தேங்காய் எண்ணெய் - கற்றாழை கலவையை’ தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாக குணமடையும். முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப்பசை சருமத்தை கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.

    முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதில் உள்ள சத்துகள் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு 2 முறை தக்காளியை மசித்து தயிரோடு சேர்த்து தடவிவந்தால், முகப்பருக்கள் நீங்கி முகப்பொலிவு உண்டாகும். முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.

    மன அழுத்தம் முகப்பொலிவை பெருமளவு பாதிக்கும். எனவே மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி ஆகும்.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் பெண்களின் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். இவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல் நோய் பாதிப்பையும் முக தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கலாம். சருமத்தில் வறட்சி, உதடுகளில் வெடிப்பு போன்ற அறி குறிகள் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்றநிலை ஏற்பட்டிருப்பதை வெளிக்காட்டும். உடலில் நீரின் அளவு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தைராய்டு, நீரிழிவு பற்றிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    சில பெண்களுக்கு கன்னம், உதட்டின் மேல்பகுதி, தாடை மீது தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். அது உடலில் ஹார்மோன்கள் சமநிலையில் இல்லை என்பதை குறிக்கும். கருப்பைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹார்மோன் குறைபாட்டிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களின் அடிப்பகுதியில் உள்ள சதையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதும் உடல் நல பாதிப்பை குறிக்கும். கண்கள் சோர்வடைந்திருந்தாலும், வீங்கியிருந்தாலும் அது நாள்பட்ட ஒவ்வாமை பிரச் சினையாக இருக்கக்கூடும். சருமம் திடீரென்று வெளிறிய நிறத்திற்கு மாறி இருந்தால் அது ரத்த சோகைக்கான அறிகுறியாகும். சிலருக்கு கன்னம் மற்றும் உடல் பகுதியில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள் ஏற்படும். அது குடல் அழற்சி நோய் பாதிப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு நேரும்.

    சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கே மருக்கள் போல் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். அவை அதிக அளவில் இருந்தால் டாக்டரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். பெரும்பாலானவர் களுக்கு முடி உதிர்தல் கவலை தரும் பிரச்சினையாக இருக்கிறது. அத்துடன் கண் இமைகள், புருவங்களில் இருக்கும் முடிகளும் உதிர தொடங்கினால் அவர் கள் உடனடியாக உடலை பரிசோதிக்க வேண்டும்.
    இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    கொத்தமல்லி விதை - அரை கப்
    உளுந்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகு - அரை டீஸ்பூன்
    புளி - நெல்லிக்காய் அளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தூள், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.

    பிறகு மிளகாய், கொத்தமல்லி விதையை வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும்.

    அதேபோல் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

    பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் கொட்டி அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து பொடியாக்கி பயன்படுத்தவும்.
    கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன.
    கவனச்சிதறல் என்பது, எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் விஷயம். அது, செய்து கொண்டிருக்கும் செயல்களில் சிக்கலை ஏற்படுத்திவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அதனை செய்து கொண்டிருக்கும்போது மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது முக்கியம். அப்படி முழு கவனத்தையும் செலுத்தி செய்துமுடிக்கும் காரியம்தான் நிறைவினைத் தரும். கவனச் சிதறலோடு செய்யப்படும் எந்த காரியமும் முழுமையான பலனைத்தராது. அதில் திருப்தியும் ஏற்படாது.

    நாம் என்ன செய்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை. அப்படி கவனம் செலுத்துவது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வசப்பட்டு விடாது. கவனத்தை சிதறவிடாமல் ஒன்றின் மீது முழு கவனத்தையும் குவிப்பதற்கு படிப்படியாக பயிற்சி செய்ய வேண்டும். கார் ஓட்டுவதாக வைத்துக்கொண்டால் முழு கவனமும் சாலை மீதும், கார் மீதும் பதிய வேண்டும். அப்போது கவனம் சிதறினால், விபத்து ஏற்பட்டு விடும். கண நேர கவனச் சிதறல்களே மிகப்பெரிய ஆபத்துகளை உருவாக்குகின்றன.

    செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் அதில் கவனத்தை ஒருங்கிணைக்க பழகிக் கொள்ளுங்கள். அதிகம் பேசுபவர்களும் கவனச்சிதறலுக்கு ஆளாகலாம். முக்கியமான வேலையில் ஈடுபடும்போது தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்துக்கொள்வது நல்லது. கவனம் என்பது நம் அறிவின் ஆற்றல். இதனை தியானத்தின் மூலம் பெறலாம். கண்களை மூடி அமைதியாக தியானம் செய்வதற்கு பழகுவதன் மூலம் கவனத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கலாம். கண்கள் திறந்திருந்தாலும் அதேபோன்ற கவன ஒருங்கிணைப்புக்கு மனம் பழக்கப்பட்டுவிடும்.

    மூளையின் கட்டளைப்படிதான் நம் செயல்கள் அமையும். நாம் ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது இடையில் மூளை வேறு எதையோ சிந்திக்க அனுமதித்தால் அந்த வேலையில் தடுமாற்றம் ஏற்படும். அதனால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்பது வேலையின் முக்கியத்துவத்தை பொறுத்தது. விமான ஓட்டிக்கு கவனச்சிதறல் ஏற்படுமானால் பயணிகளின் உயிருக்கு பங்கம் நேர்ந்துவிடும். ஒரு கணம் சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

    கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன. மனித வாழ்க்கையில் இதெல்லாம் இயல்பான உணர்வுகள்தான். ஆனால் நாம் செய்யும் செயல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முக்கியத்துவத்தை உணர்ந்தால் மூளை முழு கவனத்தைக்காட்டும். வேலையை ஆரம்பிக்கும்போது முழு கவனத்தையும் அதன் மீது செலுத்தினால், மூளையும் அதற்குதக்கபடி ஒத்துழைக்கும்.

    சிறுவயதில் ஏற்படும் விபரீதமான நிகழ்வுகள்கூட கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. சிறு வயதில் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மனதை வெகுவாக பாதித்து விட்டால் அந்த நினைவுகள் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கும். அப்போது மனம் தன்னை மறந்து விடும். பழைய நினைவுகளில் மூழ்கி விடும். இதுபோன்ற கவனச் சிதறல்களை சரி செய்வது கொஞ்சம் சிரமம். ஒரே மனிதன் இருவேறு நினைவுகளில் வாழ்வது விபரீதமானது. இது போன்ற மனநிலையை மனச்சிதைவு என்று குறிப்பிடு கிறார்கள். அதற்கு மனோரீதியான மருத்துவம் தான் சரியான தீர்வாக அமையும்.

    மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் கசப்பான எண்ணங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘ஹிப்னாடிசம்’ என்னும் ஆழ்ந்த மயக்க நிலைக்கு அவரை கொண்டுசென்று ஆழ் மனதை வருடும் அன்பான வார்த்தைகளை பேசும் போது மனதில் புதைந்திருக்கும் பழைய பதிவுகள் வெளிப்படும். அதே நிலையில் பேசி உண்மைகளை எடுத்துச் சொல்லி மனதை தெளிவு படுத்த வேண்டும். பழைய நினைவுகளை அப்புறப்படுத்திவிட்டு இன்றைய வாழ்க்கைக்கு மூளையை திசை திருப்பவேண்டும். இல்லை என்றால் இன்றைய வாழ்க்கை சிக்கலாகிவிடும். இந்த அற்புதத்தை ஆழ்மனதின் மூலம்தான் நிகழ்த்தவேண்டும்.

    கவனம் என்பது இறந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் சம்பந்தம் இல்லாதது. நிகழ்காலத்திற்கு மட்டுமே அது சாத்தியமானது. இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, அதை 100 சதவீத வெற்றிக்கு சாத்தியப்படுத்தவேண்டும். முழு கவனத்தோடு செய்யும் காரியங்களால் ஆபத்துகள் தவிர்க்கப்படும். கவனம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று என்பதை உணர்ந்து எடுத்த காரியத்தை கவனச்சிதறல் இல்லாமல் செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மூளைக்கு கொடுத்து கவனத்தை வசப்படுத்திக்கொள்ள வேண்டும். கவனத்தோடு செய்யும் செயல்கள்தான் அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்.
    முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர்.
    இளந்தாய்மார்கள் தங்கள் குழந்தையையும் நெஞ்சோடு இணைத்து கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு வேகமாக செல்வதை இப்போது நகர சாலைகளில் ஆங்காங்கே காணமுடிகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு செல்லும் பெண்களும், கட்டுமான வேலைகளுக்கு செல்லும் பெண்களும் தங்கள் கை குழந்தைகளை லாவகமாக முந்தானையில் இணைத்து நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டு நடந்துபோவார்கள். இப்போது அது நாகரிகமான முறையில் நகரங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர். இது பயணச் சூழலுக்கு தகுந்தபடி தாயையும்- குழந்தையையும் நெஞ்சோடு நெஞ்சாய் இணைத்து பாதுகாப்பு அளிக்கிறது.

    நவீன காலச் சூழலில் இப்படிப்பட்ட ‘கங்காரு தாய்மார்கள்’ உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வேலை தேடி நிறைய பேர் இப்போதும் பெருநகரங்களில் குவிந்துகொண்டிருக்கிறார்கள். சொந்த ஊர்களில் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டாலும், வேலை பார்க்கும் இடத்தில்தான் அவர்கள் குடும்ப வாழ்க்கையை தொடங்கவேண்டியதிருக்கிறது. அவர்கள் தனிக்குடித்தனம் அமைக்கும்போது நகர வாழ்க்கையை ஓரளவாவது நல்லவிதமாக நகர்த்தவேண்டும் என்றால், கணவன்- மனைவி இருவருமே வெளியே சென்று வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்கள்.

    அப்படிப்பட்ட பெண்கள் தாய்மையடைந்து குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் குழந்தையையும் கவனிக்கவேண்டும். வெளி வேலைகளையும் செய்தாகவேண்டும். அப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் இப்படி கங்காரு தாய்மார்களாக மாறவேண்டியதிருக்கிறது. வெளியே போகும்போது மட்டுமின்றி வீட்டில் தனியாளாக நின்று வேலைபார்க்கும்போதும் பெண்கள் இந்த பேபி வியரிங்கை பயன் படுத்துகிறார்கள். அதில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் தாயின் முழுமையான அருகாமை தனக்கு கிடைத்திருப்பதை உணர்ந்து அப்படியே தூங்கிவிடுகிறார்கள் அல்லது விழித்திருந்து வேலைபார்க்கிறார்கள். தாயாரால் பயணிப்பது, வேலைபார்ப்பது, ஷாப்பிங் செல்வது போன்ற அனைத்திற்கும் இது சவுகரியமாக இருக்கிறது. ஆனால் இதிலும் கவனிக்கத் தகுந்த சில விஷயங்கள் இருக்கின்றன. அதை சரியாக செயல்படு்த்தாவிட்டால் தாய்க்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும். பேபி வியரிங்ஸ்சில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

    பேபி வியரிங் ஸ்லிங்குகள்: தாயின் ஒரு தோளையும், உடலையும் சேர்த்துக்கட்டி அதற்குள் குழந்தையைவைக்கும் துணி இதில் முக்கியமானது. இதில் பேடு அமைப்பும் இருக்கிறது. பேடு இல்லாமல் துணிபோன்ற அமைப்பு கொண்டதாகவும் இருக்கிறது. நீளத்தை கூட்டவோ, குறைக்கவோ வசதியான ரிங் அமைப்புகளும் இதில் உள்ளன. பேபி வியரிங் ராப்ஸ்: இரண்டு தோள்கள் மற்றும் உடலோடு சுற்றிக்கட்டும் முறை இது. சவுகரியமானது. செலவு குறைந்தது. கேரியர்ஸ்: இது மிக மென்மையான பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்படுகிறது. குழந்தைக்கு இருக்கும் வசதி, ஸ்ட்ராப்புகள், குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும் பக்கிள்கள் போன்றவை இதில் இருக்கின்றன. குழந்தையை அதிக நேரம் தாயால் கைகளிலோ, இடுப்பிலோ தூக்கிவைக்க முடியாதபோது இதனை பயன்படுத்துவதே பொருத்தமாக இருக்கும்.

    இவைகளை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. குழந்தை மூச்சுவிடுவதற்கு எந்த விதத்திலும் சிரமம் ஏற்படாத அளவுக்கு இதில் உட்காரவைக்கவேண்டும். குழந்தையின் முகவாய் பகுதி தாயின் மார்போடு போய் அழுந்தும்படி உட்காரவைக்கப்பட்டிருந்தால் குழந்தை மூச்சுவிட சிரமப்படும். பேபி கேரியரின் மேற்பகுதி குழந்தையின் முகத்தில் படக்கூடாது. எப்போதும் குழந்தையின் முகவாய் சற்று மேல்நோக்கி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். குழந்தையின் காது அம்மாவின் மார்பில் சாய்ந் திருக்கும்படி உட்காரவைக்கவேண்டும்.

    இதனை பயன்படுத்தி குழந்தையோடு வெளியே செல்வதற்கு முன்பு, வீட்டில் வைத்தே இதனை உபயோகித்து பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். படுக்கை போன்ற எதையாவது கீழே விரித்து அதில் நடந்தபடி ஒத்திகைப் பார்க்கவேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தை கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்த பின்பு அதனை அணிந்துகொண்டு முதலில் அருகில் உள்ள கடைகளுக்கு செல்லவேண் டும். அடுத்து படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும். குழந்தையை முன்னோக்கி உட்காரவைக்கும் விதத்திலானவற்றை தவிர்ப்பது நல்லது. அதில் இருக்கும்போது அதிக நேரம் குழந்தை கால்களை முன்னோக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் குழந்தைக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும்.

    குழந்தையும், தாயும் முகத்தோடு முகம் பார்க்கும் விதத்திலான பேபி வியரிங் சிறந்தது. குழந்தை இருக்கும் இடம் தாழ்ந்தும் போய்விடக் கூடாது. குழந்தையின் பின்பகுதி இருக்கும் இடம் அகலமாகவும் இருக்கவேண்டும். அகலம் குறைந்திருந்தால் குழந்தையின் இடுப்பில் பிறழ்வு ஏற்படும் நிலை உருவாகும். பேபி வியரிங் வாங்க வேண்டும் என்று தீர்மானித்துவிடும்போதே அது பற்றி உங்கள் குழந்தைக்கான டாக்டரிடம் கலந்துபேசி, அவர் கூறும் ஆலோசனை களையும் கேட்டுக்கொள்ளுங்கள். வாங்கும்போது குழந்தையையும் தூக்கிச் சென்று உட்காரவைத்துப் பார்த்து குழந்தைக்கும்-தாய்க்கும் அது பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

    பேபி வியரிங் அணிந்து செல்லும்போது அவ்வப்போது ஒருகையால் குழந்தையை தாங்கி சற்று தூக்கிவிடும் பழக்கத்தை தாய்மார்கள் ஏற் படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தை நன்றாக மூச்சுவிடு வதையும், அது எந்த வித நெருக்கடியும் இன்றி உட்கார்ந்திருப்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும். இதில் ஏற்படும் ெபரிய பிரச்சினை குழந்தைக்கு நன்றாக வியர்க்கும். அதனால் அதன் உடல் எளிதாக சூடாகிவிடும். அந்த அவஸ்தையை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தைகள் அழத் தொடங்கிவிடும். அதனால் பேபி வியரிங்கை பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவியுங்கள். சிலர் நெஞ்சோடு குழந்தை ரொம்பவும் நெருக்கமாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று கருதி, இறுக்கி கட்டிவிடுவார்கள். அது குழந்தைக்கு அவஸ்தையை கொடுப்பதோடு, அடுத்தடுத்த நாட்களில் குழந்தையின் முதுகெலும்பிற்கும் பாதிப்பை உருவாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    பயணங்களிலும், ஷாப்பிங் செல்லும்போதும் குழந்தைகளுக்கு பேபி வியரிங் நல்லதுதான் என்றாலும் குறைப்பிரவசத்தில் பிறந்த குழந்தைகளையும், நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளையும் அதில் உட்காரவைக்காமல் இருப்பது நல்லது. பேபி வியரிங் பயன்படுத்தும்போது தாயின் மார்போடு குழந்தை சேர்ந்திருப்பதால் குழந்தையிடம் ஏற்படும் சின்னச்சின்ன சலனங்களையும் தாயால் கண்டறிய முடியும். தாயிடம் கண்ணுக்கு கண் பார்ப்பதால் அது பாதுகாப்பு உணர்வோடு அழாமல், தொல்லைதராமல் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும்.

    பேபி வியரிங்கில் குழந்தை உட்கார்ந்திருக்கும்போது தாய்க்கு அது சுமையாகத்தான் இருக்கும். அப்போது தாய் தனது ஒவ்வொரு செயலையும் மிக கவனமாக செய்யவேண்டும். அவள் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உருவானால் குழந்தைக்கும் பலத்த அடிபடும். அதனால் பேபி வியரிங் பயன்படுத்தும்போது தாய் மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். அதிலும் இரு சக்கர வாகன பயணத்தில் மிக அதிக கவனம் தேவைப்படும். குழந்தையின் பருவம், உடல் எடை போன்றவைகளை கருத்தில்கொண்டு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்கள்.
    ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்களையும், அதை குறைக்கும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
    சிலருக்கு தொடை பகுதியில் கொழுப்பு படிந்து காணப்படும். பொதுவாக நேராக நிமிர்ந்து நிற்கும்போது இடுப்பு பகுதியில் இருந்து மூட்டு பகுதி வரை ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் தொடைப் பகுதியில் தசைகள் குவிந்திருந்தால் அங்கு கொழுப்பு சேர்ந்திருப்பதாக அர்த்தம். அவை ‘சாடில் பேக்குகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கொழுப்பை கரைப்பது சற்று கடினமானது. ஆனால் சாத்தியமற்றது அல்ல. சில எளிய பயிற்சிகள் மூலம் கொழுப்பு சேர்வதை தடுத்துவிடலாம். ஆண்களை விட பெண்களுக்குத்தான் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்புகள் சேரும். அதற்கான காரணங்கள்:

    மரபியல்: தொடையின் வெளிப்புற பகுதியில் கொழுப்புகளை உருவாக்குவதில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாய் அல்லது பாட்டி மூலம் மரபணு ரீதியாக ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினை தோன்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

    பருவமடைதல்: இளம் பெண்களாக வளர்ந்து பருவமடையும்போது மார்பகங்கள், இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கொழுப்பு சேர தொடங்கும். சில நேரங்களில் கூடுதல் கொழுப்புகள் தொடையின் வெளிப்புற பகுதிகளில் குவிந்துவிடும்.

    கர்ப்பம்: ‘சாடில் பேக்குகள்’ பிரச்சினைக்கு கர்ப்பமும் மற்றொரு காரணியாக அமைந்திருக்கிறது. கர்ப்பகாலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் பங்களிப்பு முக்கியமானது. இவை கர்ப்பகாலம் முழுவதும் சுரக்கக்கூடியது. இதில் ஈஸ்ட்ரோஜன், தொடைப் பகுதியுடன் வயிற்று பகுதியை சுற்றி கொழுப்பு குவிவதற்கு காரணமாகிவிடுகிறது.

    உட்காருதல்: உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாதது, ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது உடல் இயக்கம் அதிகம் இல்லாததால் ரத்த ஓட்டம் குறையும். அது ‘சாடில் பேக்குகள்’ எனப்படும் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கு வழிவகுத்துவிடும்.

    கொழுப்பு: உடலில் கொழுப்புகள் சேருவதற்கு இடம் கொடுப்பது ‘சாடில் பேக்குகள்’ பிரச் சினைக்கு பிரதான காரணமாக அமைந்திருக்கும். உடலில் கொழுப்பு சதவீதத்தின் அளவை குறைப்பது ‘சாடில் பேக்குகள்’ உருவாக்கத்தை கட்டுப்படுத்திவிடும்.

    உணவு: ஒரு நாளைக்கு மூன்று முறை சாலட் சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் புட்’ சாப்பிடுவது தொடையில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும். புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சீரான உணவை உண்ணுங்கள்.

    முதுகு: முதுகின் அடிப்பகுதிக்கும், ‘சாடில் பேக்குகளுக்கும்’ இடையே நேரடி தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதுகு பகுதி ஆரோக்கியமாக இருந்தால் தொடையில் கொழுப்புகள் சேருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
    வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்க உதவும்.
    குழந்தை பருவத்தில் நிறைய பேர் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி ‘லிப்ஸ்டிக்’ பூசிக்கொண்டது போன்ற மன நிறைவை பெற்றிருப்பார்கள். பீட்ரூட்டில் இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, போலேட், வைட்டமின் பி, சி உள்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை இதயத்திற்கும், கல்லீரலுக்கும் நலம் சேர்க்கக்கூடியவை. உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு வெளிப்புற சருமத்திற்கும் பீட்ரூட் அழகு சேர்க்கக்கூடியது. அத்தகைய பீட்ரூட்டை பயன்படுத்தி செய்யப்படும் ஐந்து ‘பேஸ் பேக்குகள்’ பற்றி பார்ப்போம்.

    3. வறண்ட சருமத்திற்கு: இளஞ்சிவப்பு நிறம் கொண்ட சில நிறமிகள் வறண்ட சருமத்திற்கு புத்துணர்வு கிடைக்க செய்யும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். சரும வளர்ச்சிக்கும் துணை புரியும்.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் சாறு: 2 டேபிள்ஸ்பூன்

    பாதாம் பால் - கால் டீஸ்பூன்

    பால்- ஒரு டேபிள்ஸ்பூன்

    செய்முறை: ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, பாதாம் பால், பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்பு அதனுள் பிரஸை முக்கி முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம், பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.

    5. வயதான சருமத்திற்கு: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி, சரும செல்களை உற்பத்தி செய்யவும், மீள் உருவாக்கம் செய்யவும் உதவும். சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்கவும் உதவும்.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் - 1 துண்டு

    தேன் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை: பீட்ரூட்டை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் தேனை கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும்.

    முகப்பரு இல்லாமல் பிரகாசமாகவும், இளமையாகவும் மிளிரும் சருமத்தை பெறுவதற்கு இந்த பீட்ரூட் பேஸ் பேக் உதவும். இந்த பேக்குகளை தயாரிப்பதற்கு பயன் படுத்தப்படும் பொருட்கள் இயற்கையானவை என்றாலும் ஏதேனும் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுமா? என்பதை பரிசோதித்து பார்த்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
    நம் முன்னோர்களான முதியவர்கள் நமக்காக உழைத்தவர்கள், அவர்களை நாம் பராமரிக்க வேண்டியது நமது கடமை. அவர்களது தேவை அறிந்து செயல்படுவது மிக முக்கியம்.
    நம்பிக்கையை வளருங்கள்

    60 வயதை கடந்தாலே வாழ்க்கை மீதுள்ள நம் பிக்கை இல்லாது போய்விடும். சுற்றி இருப்பவரிகளிடம் இருந்து விலகி தனிமையை உணரத்தொடங்குவார்கள் என்பதால் முதலில் தனிமை எண்ணத்தை போக்க வேண்டும். பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவர்களுக்கு துணையாக இருக்க வேணடும். நேரம் கிடைக்கும் போது அவர்களை சுற்றி அமர்ந்து சிரித்து பேசி மகிழ்ச்சியூட்ட வேண்டும். அது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன் புது உற்சாகத்தை கொடுக்கும்.

    அறிவியல் வளர்ச்சி அவசியம்...

    இன்றைய நவீன உலகில் முதியவர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கணினி, அலைபேசி போன்ற அறிவியில் கண்டுபிடிப்புகளுடன் தங்களை இணைத்து கொள்வதில் முதியர்களிடத்தில் பல்வேறு தயக்கங்கள் உள்ளன. இதனால் பலர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். எனவே அவர்களை மதித்து அறிவியல் வளர்ச்சிகளை அவர்கள் கையாள தேவையானவற்றை கற்கு கொடுத்து அவர்களை ஒன்றிணையுங்கள்.

    ஆரோக்கியம் அவசியம்

    60 வயதை கடக்கும் போது பலருக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் வரும். தகுந்த கால இடைவெளியில் முதியவர்களுக்.க மருத்துவ ஆலோசனைகள் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு என அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனரீதியான பிரச்சனை இருப்பவர்களாக இருந்தால் தொடக்க நிலையிலேயே அவற்றை கண்டறிந்த தேவையான மருத்துவ ஆலோசனைகள் அளித்து இயல்பா சூழலை ஏற்படுத்துங்கள்.

    உணவு, உடற்பயிற்சி

    வயதுக்கேற்ற உணவு உட்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையான சத்தான உணவுகளை வழங்க வேண்டும். அன்றாட உணவில் வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் மட்டுமினறி காய்கறிகள், பழங்களை கட்டாயம் சேர்த்துக்கொளள் வேண்டியது அவசியம். அதே நேரத்தில் எளிதில் செரிமானமாகும் ணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

    புத்துணர்வுப்பயிற்சிகள்

    வயதானவர்களுக்கென புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சிரிப்பு பயிற்சி, யோகா, தியானம், புத்தகம் படிப்பத, நாடகங்கள் இயக்குவது என்று பல்வேறு விஷயங்கள் கற்று தரப்படுகின்றன. இவற்றில் அவர்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பயிற்சியில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எப்போதும் புத்துணர்வுடன் செயல்பட முடியும்.

    நேரம் ஒழுக்குங்கள்.

    இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளுவும அதனால் ஏற்படும் மனஅழுத்தமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதிலிருந்து விடுபட கட்டாயம் சிறிது மாற்றம் அனைவருக்கும் தேவை. தினமும் முதியவர்களுடன் பேசி, அவர்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நேரம் ஒழுக்குங்கள். இது அவர்களுக்கு பெரிய பலத்தை கொடுக்கும்.

    பணப்பாதுகாப்பு

    முதியவ்ர்கள் பலருக்கும் பொருளாதார ரீதியான பாதுகாப்பின்மை மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். தனக்கான சிறிய தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்திக்கிறோம் என்கிற எண்ணம் அவர்களை பாதிக்கும். எனவே அவர்களுக்கென சிறுசேமிப்பு, காப்பீடு போன்றவற்றை தொடங்குங்கள். இதுபோன்ற அடிப்படை தேவைகளை கண்டறிந்து நிறைவேற்ற வேண்டும். இது அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
    தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கம்பு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 டம்ளர்
    அரிசி - 1 டம்ளர்
    கடலை பருப்பு - 1 டம்ளர்
    உளுந்து - 1/2 டம்ளர்
    வத்தல் - 5
    சீரகம் - 1/2 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    உப்பு எண்ணெய் - தேவைக்கேற்பு

    செய்முறை

    கம்பு, அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நன்றாக ஊறியதும் அதனுடன் வத்தல், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    அரைத்த மாவில் தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

    அடுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்தது மாவை நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான கம்பு அடை ரெடி.
    ×