என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு, முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து.
    வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் அழகாக இருக்கவே விரும்புவோம். பார்ப்போரின் கண்களுக்கு பரவச உணர்வை தரக்கூடிய அழகு சாதப்பொருட்களில் பன்னீருக்கு பிரதான இடம் உண்டு. சமையல் தொடங்கி சரும பராமரிப்பு வரை முக்கியத்துவம் பெற்றிருக்கும பன்னீரின் நற்பலன்கள் உங்கள் பார்க்வைக்கு

    சருமத்தை மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளையும் மிருதுவாகவும், மென்மையாகவும். வைத்துக்கொள்ளும் தன்மை பன்னீருக்கு உண்டு. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றப்பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தக்கூடியவை. இதனால் சோர்வான தசைகள் புத்துணர்வு பெறுவதோடு புதுப்பொலிவையும் பெறும்.

    கண்களில் ஏற்படும் கருவளையம், வெப்பத்தால் ஏற்படும் அலர்ஜி, எரிச்சல், முகப்பரு முகத்தழும்புகள் தோலில் ஏற்படும் கடினத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு பன்னீர் அருமருந்து. சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்க, பன்னீருடன் காற்றாழை ஜெல்லை கலந்து சருமத்தில் தேய்ந்து 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

    உதடுகள், ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் காட்சியளிக்க, பன்னீரை உதட்டில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்க. இவ்வாறு செய்தால் உதடுகள் மீதுள்ள கருமை நிறம் மறைந்து அழகுக்கு அழகு சேர்க்கும்.

    பன்னீருடன் வெந்தய விழுதையும் கிளிசரினையும் சேர்த்து கலந்து முடியின் வேர் பகுதியில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் அலசினால் பொடுகுத்தொல்லை நீங்கி கூந்தல் பொலிவாகும்.

    பன்னீருடன் சந்தனப்பொடி, தேன் சோர்த்து குழைத்து உடலில் குறிப்பாக முகத்தில் தடவினால் சரும சுருக்கங்கள் நீங்கி, இளவை உங்கள் உடலில் இளைப்பாறுவதை உணரலாம்.

    சாதாரண பன்னீர் ரோஜா இதழ்களை வைத்து வீட்டிலேயே சுத்தமான பன்னீரை எளிமையாக தயாரிக்கலாம். இதோ செய்முறை

    ஒரு லிட்டர் நீரை கொதிக்க வைத்து அதன் சூடு ஆறும் முன்னர்  கிராம் ரோஜா இதழ்களை அதில் போட்டு மூடி வைக்கவும். இரண்டு மணிநேரம் கழித்து மூடியைத்திறந்தால் நீர் வெளிர் பிங்ப் நிறமாக மாறி இருக்கும். ஆறிய பிறகு வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் பன்னீருடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்து கலந்து வந்தால், முகம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெயில் காலங்களிலும், குளிர் காலங்களிலும் ஏற்படுகின்ற சரும பிரச்சனைகளுக்கு இது நல்லதெரு தீர்வாகும்.
    தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதற்கான மொத்த முதலீடு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதை போல இரண்டு மடங்கு முதலீட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.
    வேலைவாய்ப்பை தேடுவதை விட பிறருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் சிறு தொழில் தொடங்கி தொழில் முனைவோராக வேண்டும் என்பது பலருடைய கனவு. சிறு தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கான சில ஆலோசனைகள் இதோ...

    * முதலில் என்ன தொழிலை செய்யப்போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

    * ஒரு பொருளை உற்பத்தி செய்ய திட்டமிடும் நிலையில் அதற்கான விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது? என்பதை அறிந்திருக்க வேண்டும். விற்பனை செய்யும் பொருட்களை சம்பந்தப்பட்ட சூழலுக்கு பொருத்தமானதா? என்பதை முன்னதாகவே பரிசோதித்து கொள்ள வேண்டும்.

    * தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதற்கான மொத்த முதலீடு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதை போல இரண்டு மடங்கு முதலீட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.

    * எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படும் சூழலில் தொழிலை மீண்டும் சரியாக நடத்திச்செல்லும் தெளிவும் துணிச்சலும் அவசியம் தேவை.

    * உற்பத்தி செய்யும் பொருளுக்கும் நிறுவனத்துக்கும் ஏற்ற பெயர்களை தேர்வு செய்து முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    * வீட்டை சுற்றிலும் உணவகங்கள் அதிகமாக இருந்தால் சாப்பாட்டு இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வதற்கான வாய்ப்பை பெறலாம். உணவகங்களில் மசாலா அரைத்து தருவதை காண்ராக்ட் முறையில் பெற்று செய்யலாம். அத்துடன் பாக்கெட் பால், தயிர், மோர், பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

    * திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது முதல் தாம்பூலப்பை வரை அனைத்து பொறுப்பையும் சிறப்பாக செய்து முடிக்கும் பணியை திறமையான கூட்டணி மூலம் சாதிக்கலாம்.

    * வீடுகள் அல்லது கடைகளில் பட்ஜெட்டுக்கேற்ப எந்திரங்களை அமைத்து தொழில் தொடங்கலாம். உதாரணமாக பாப்கார்ன் தயாரிக்கும் மெஷினை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வைத்து தொழில் செய்யலாம்.

    * அதிக முதலீடு இல்லாமல் ஸ்கிரீன் பிரிண்ட்டிங், ஃபேப்ரிக் பிரிண்ட்டிங் தொழில் மூலம் திருமண அழைப்பிதழ்கள், விசிட்டிங் கார்டுகள், பைகள் போன்றவற்றை அச்சிட்டும் தொழில் செய்யலாம்.

    * குறிப்பிட்ட நபர்கள் தொழிலில் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதற்காக அதை தேர்வு செய்யாமல் அனுபவமும் ஆர்வமும் உள்ள தொழிலில் மட்டுமே ஈடுபடுங்கள்.

    * பொருட்கள் தரமாக இருப்பது போல் அதை கச்சிதமாக பேக்கிங் செய்து கொடுப்பதும் அவசியம்.

    * வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும், முகம் சுளிக்காமலும் நடந்து கொள்வதன் மூலமே வியாபாரம் அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    * அரசு அளிக்கும் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு விரும்பும் தொழிலை கற்று அதில் வருமானம் ஈட்டலாம்.
    காலையில் சத்தான உணவு சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை, அவல் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வேர்க்கடலை - ஒரு கப்,
    ஊற வைத்த கெட்டி அவல் - கால் கப்,
    கார்ன் - கால் கப்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
    சோம்பு, பச்சை மிளகாய் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை

    வேர்க்கடலையையும் கார்னையும் வேக வைத்துக் கொள்ளவும்.

    வேக வைத்த வேர்க்கடலை, கார்னையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மாங்காய்த் துண்டு, தேங்காய்த் துண்டு, சோம்பு, உப்பு ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலை அவல் சாலட் ரெடி.
    மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.
    மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும் மார்பகங்களில் வலி இருக்கும். மார்பகங்களில் வீக்கம், கனத்த உணர்வு, வலி போன்ற அந்த மாற்றங்களின் பின்னணி, தீர்வுகள், வாழ்க்கை முறை பற்றி பார்க்கலாம்.

    மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம்(premenstrual syndrome) பிரச்னைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

    இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிலக்கின்போது உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி
    விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

    எவை எல்லாம் சாதாரணமானவை?

    * வீக்கம்
    * மென்மையாதல்
    * வலி
    * எரிச்சல்

    மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?

    * கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.
    * கஃபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட்  என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.
    * மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.
    * மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.
    * உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.

    எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

    * மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்.
    * மார்பகங்களிலிருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்.
    * உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசவுகரியத்தை உணர்ந்தால். தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்.
    * மாதவிலக்கு முடிந்தபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்.
    * மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்.
    * மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்.

    இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.
    வாழ்வியல் மாற்றங்களும் அவசியம்

    * மார்பகங்களில் வலியோ, வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும்.

    * மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் இ மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

    * நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.

    சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

    * வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்
    * பசலைக்கீரை
    * ஆலிவ்
    * சோளம்
    * கேரட்
    * வாழைப்பழம்
    * பழுப்பரிசி
    கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்
    கொரோனா தொற்று ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றிய செய்திகள் நமக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது மூன்றாம் அலை தாக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரித்திருக்கிறார்கள். கொரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இங்கே பார்ப்போம்

    குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும். கொரோனா தொற்றின் பாதிப்பு குறையும் வரை நண்பர்கள், உளவினர்களின் வீடுகளுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல நேரிட்டால் பெரியவர்களின் துணையோடு அழைத்து செல்ல வேண்டும். தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்ற பழக்க வழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    குழந்தைகளை தினமும் இரண்டுவேளை குளிக்க வைப்பது அவசியமானது. கண்களை கசக்குவது, மூக்கை சொறிவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்.

    காலையிலும், மாலையிலும் இளம் சூரிய வெளிச்சத்தில் 30 நிமிடங்களாவது இருக்கும்படி செய்ய வேண்டும்.

    வீட்டை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை தினமும் தூய்மை செய்ய வேண்டும்.

    பெரியவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யாமல் குழந்தைகளை தொடக்கூடாது. சளி, இருமல், இருப்பவர்கள் குழந்தைகளை முத்தமிடுதல் கூடாது.

    படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
    குழந்தைகளை ஒருநாளுக்கு மூன்று முறை. மிதமான சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க பழக்கப்படுத்த வேண்டும்.

    புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக கொடுக்க வேண்டும். ஒருநாளுக்கு இரண்டு முட்டைகளை சாப்பிட கொடுக்கலாம். பச்சைப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா, பட்டாணி போன்றவற்றில் சுண்டல் செய்து கொடுக்கலாம்.

    பழங்கள், காய்கறிகள், கீரைகள், உலர்பழங்கள், பருப்புகள் விதைகளை தினமும் உணவில் சேர்த்து வரலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை , நெல்லிக்காய் போன்றவற்றை தினமும் கொடுக்கலாம்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், வெளியில் வாங்கிய உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. சத்துள்ள உணவுகளை வீட்டிலேயே சமைத்து கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, கண்கள், கன்னங்களில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை  அணுக வேண்டும்.

    கிருமி நாசினி, உடலின் வெப்பத்தை அளவிடும் வெப்பமானி (தெர்மோமீட்டர்) உடலின் ஆக்சிஜன் அளவை தெரிந்து கொள்ள உதவும். ஆக்சிமீட்டர் போன்றவைகளை வீட்டில் வாங்கி வைத்திருப்பது நல்லது.
    நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள். சம்பளம் மட்டும் மாறுகிறது, வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய உத்திகள், வேகத்தோடு அணுகுங்கள்
    நீங்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியாக பணியாற்ற உதவும், 3 முக்கிய யுக்திகள் இவை...

    1. நீங்கள் கற்றுக்கொள்வது உங்களுக்காக!

    அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். இங்கு கற்கும் விஷயங்கள் அலுவலக

    இலக்குகளுக்காக மட்டுமல்ல, நீங்கள் கற்றது கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கும் உதவும் என்ற திறந்த மனதோடு கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள்

    கற்றுக்கொள்வது உங்களுக்காகத் தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்.

    2. நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

    நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள். சம்பளம் மட்டும் மாறுகிறது, வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை

    விட புதிய உத்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்களுக்கு அது நற்பெயரைக் கொடுக்கும். அந்த நற்பெயர்

    உங்களது பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தும்.

    3. ‘இன்ப்ளூயன்ஸ்’ செய்யுங்கள்!

    உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ப்ளூயன்ஸ் செய்யுங்கள். இது வேலையில்

    செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள்

    சொல்லும்போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த

    செயல்கள் உத்வேகத்தை தரும்.
    மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா?
    சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார்மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது.

    இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!

    சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும்.

    தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது.

    பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.

    பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது.

    மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனப்படுகிறது.

    மார்பக பிரச்சினைகள்

    சிஸ்ட்கள் மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.

    பைரோடினோமா இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.

    காலக்டோரியா அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.  கைனகோமேஸ்டியா ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது. மஸ்டிடிஸ் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. மாஸ்டால்ஜியா மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது. மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி. மார்பக புற்றுநோய் பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.

     மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா?

    இதைப் பற்றி வெளியில் பேசவோ, சொல்லவோ தயங்கி எத்தனையோ பேர் தங்களுடைய உயிரையே பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    உங்கள் மார்பகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கினால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறியலாம்.உங்கள் உடலில் கொழுப்புச் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது என்பதை உணரலாம்.

    மாதவிடாய் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் மார்பக அளவுகளில் வேறுபாடு தெரியும். அவை உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது. இவற்றைத் தாண்டி மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
    குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது.
    வீடுகளிலும், வெளி இடங்களிலும் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை பயன்படுத்தி மீண்டும் உணவு தயாரிக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அப்படி சமைப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. அதிலிருக்கும் கொழுப்புகள், மீண்டும் சூடுபடுத்தப்படும்போது எதிர்வினை புரிந்து உடலுக்கு கேடு விளைவிக்கும்.

    தீராத நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக்கிவிடும். உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தும்போது அழற்சி பாதிப்பு தோன்றும். உடலில் உள்ள ஆரோக்கிய செல்கள் வினைபுரிந்து ஆரோக்கியமற்ற செல்களாக மாறி தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு இந்த எண்ணெய் பயன்பாடும் ஒருவகையில் காரணமாக அமைகிறது.

    அதிக வெப்பநிலையில் எண்ணெய்யை சூடுபடுத்தும்போது ப்ரீ ரேடிக்கல் என்ற நிலையை அடையும். அதே எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தும்போது ‘டோட்டல் போலார் சேர்மம்’ உருவாக வழிவகுக்கும். இந்த சேர்மம் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக மாற்றிவிடும். மேலும் இந்த சேர்மத்தில் இருக்கும் நச்சுத்தன்மை இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்களுடன் தொடர்புடையது.

    எண்ணெய் மீண்டும் மீண்டும் வெப்பமடையும்போது அதிலிருக்கும் ஊட்டச்சத்து, ரசாயன பண்புகளையும் இழந்துவிடும். டிரான்ஸ் கொழுப்பும், ப்ரீ ரேடியல் அளவும் அதிகரித்துவிடும். எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவது நச்சுகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக 48 சதவீதம் பேர் வாரத்தில் 6 முறை எண்ணெய்யில் தயாராகும் துரித உணவுகளை விரும்புவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது.

    குறிப்பாக கர்ப்பிணிகள் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் கருவில் வளரும் குழந்தைக்கும் சென்றடையும். நட்ஸ், முழு தானியங்கள், மீன்கள் போன்ற இயற்கை மூலங்களில் இருந்து கிடைக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவதும், அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வதும் தாய்க்கும்- சேய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த கொழுப்பை அதிகம் நுகர்ந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும். அதனால் கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட கூடுதல் எடை அதிகரிப்பு, இதய நோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே கர்ப்பிணிகள் எப்போதும் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

    சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்றினால் வயிறு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அசிடிட்டி பிரச்சினையும் உண்டாகும். துரித உணவுகள் பெரும்பாலும் எண்ணெய்யில் நன்றாக வறுத்தெடுக்கப்படுகிறது. ஏற்கனவே உபயோகித்த எண்ணெய்யிலும் தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் அதை தவிர்க்கவேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
    பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    வெள்ளரிக்காய் (பெரியது) - 350 கிராம்,
    பாலக்கீரை - 12,
    புதினா-10 இலைகள்,
    கொத்தமல்லி இலை - கைப்பிடி அளவு,
    இஞ்சி - 1/2 துண்டு,
    எலுமிச்சைசாறு - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    குடை மிளகாய் - 1 துண்டு,
    மிளகுத்தூள் - ருசிக்கேற்ப

    செய்முறை

    வெள்ளரிக்காயை பெரிய துண்டுகளாக வெட்டவும். சிறிதளவு வெள்ளரிக்காயை எடுத்து துருவிக்கொள்ளவும்.

    இஞ்சி, குடைமிளாகாய், பாலக், புதினா, கொத்தமல்லி, வெள்ளரி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த ஜூஸ் உடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக துருவிய வெள்ளரிக்காயை மேலே தூவி பரிமாறவும்.

    குளுகுளு வெள்ளரி, பாலக் கூலர் ரெடி.
    கூந்தல் பராமரிப்பு பொருட்கள் புதிது புதிதாக சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றுள் தலைமுடி பராமரிப்பில் நாம் பயன்படுத்தும் சீப்பு முக்கியமானது.
    கூந்தல் அழகின் மீது பெண்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். தலைமுடி லேசாக கொட்ட ஆரம்பித்தால் கூட மிகவும் வருத்தப்படுவார்கள். கூந்தல் பராமரிப்பு பொருட்கள் புதிது புதிதாக சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றுள் தலைமுடி பராமரிப்பில் நாம் பயன்படுத்தும் சீப்பு முக்கியமானது. அதிலும் மரத்தால் செய்த சீப்பை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

    மரச்சீப்பை கொண்டு தலைவாரும் போது முடியின் வேர்க்கால்களில் இயற்கையாக சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் முடியின் நுனிவரை சீராக கொண்டு போய் சேர்க்கப்படும். இதன் மூலம் தலையில் பொடுகு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

    மரத்தால் செய்த சீப்பை கொண்டு வாரும் போது தலையில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகளில் சரியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு தூண்டப்படுகின்றன. மரச்சீப்பு முடியின் வேர்க்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது.

    பிளாஸ்டிக் சீப்பு உலோகத்தால் செய்த சீப்புகளை பயன்படுத்தி தலைவாரும் போது அதிக வெப்பம் உருவாகிறது. இதன் காரணமாக வேர்க்கால்கள் பாதிக்கப்படுகின்றன. மரச்சீப்பை சரியான முறையில் பராமரிப்பது அவசியமானது. எண்ணெய் பசை அழுக்கு இல்லாமல் கழுவி ஈரப்பதம் இல்லாமல் நன்கு காயவைத்து பயன்படுத்த வேண்டும். சீப்பில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்குவதற்கு தலைமுடிக்கு உபயோகிக்கும் ஷாம்புவை கொண்டு கழுவி காயவைத்து பயன்படுத்தலாம்.

    கூந்தலின் தன்மைக்கேற்ப மரச்சீப்புகளை தேர்ந்தேடுக்க வேண்டும். சுருட்டை தலைமுடி உள்ளவர்கள் அகன்ற குட்டையான பற்களை சீப்பை பயன்படுத்த வேண்டும்.
    ஆரம்பக்கட்டத்திலேயே இந்த வழிமுறையை கையாண்டால் பொய் பேசும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடலாம். பொய் சொல்வது என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும்.
    பெற்றோரின் நடவடிக்கைகள், சுபாவங்களை பின்பற்றித்தான் குழந்தைகள் வளரும். அவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது. சில பெற்றோர் குழந்தைகளை தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கு பழக்கப்படுத்திவிடுவார்கள்.

    நெருங்கிய உறவினர்கள் தங்களை பற்றி குழந்தைகளிடம் ஏதேனும் விசாரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதற்கு ஏதுவாக குழந்தைகளை பேசுவதற்கு கற்றுக்கொடுப்பார்கள். அதுதான் குழந்தைகள் பொய் சொல்ல கற்றுக்கொள்ளும் பிறப்பிடமாக அமைந்துவிடுகிறது. நாளடைவில் மற்றவர்களிடம் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் சூழலுக்கு தக்கபடி பொய் பேசுவதற்கு குழந்தைகள் பழகிவிடுவார்கள். அதற்கு பெற்றோர் இடம் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்துவிட்டால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதாக மீட்டுவிடலாம்.

    குழந்தைகள் பொய் சொல்லும்போது சம்பந்தப்பட்டவர்களின் கண்களை நேரடியாக பார்த்து பேச மாட்டார்கள். இதுதான் பொய் பேச தொடங்கும் ஆரம்பக்கட்டமாகும். அதனை கவனத்தில் கொள்ளாமல் விட்டால் வளர ஆரம்பித்ததும், கண்களை பார்த்தே பயமின்றி பொய் சொல்ல பழகிவிடுவார்கள். ஆதலால் குழந்தைகள் பேசும்போது அவர்களின் கண்களை பெற்றோர் உற்றுநோக்கி கவனிக்க வேண்டும். அப்போது எளிதாக அவர்கள் பொய் பேசுவதை கண்டுபிடித்துவிடலாம். ஆரம்பக்கட்டத்திலேயே இந்த வழிமுறையை கையாண்டால் பொய் பேசும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளிவைத்துவிடலாம். பொய் சொல்வது என்னென்ன பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும்.

    அத்துடன் என்ன காரணத்திற்காக குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதையும் கண்டறிந்து, மீண்டும் அதுபோல் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் உடல் மொழியை வைத்துகூட அவர்கள் பொய் சொல்வதை கண்டறிந்துவிடலாம். அப்படி பொய் பேசும்போது வழக்கமான உடல் மொழியில் இருந்து அவர்களின் செயல்பாடு முற்றிலும் மாறிப்போய்விடும். சம்பந்தம் இல்லாமல் உடலை அசைத்து செய்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். ஏற்கனவே சொன்ன விஷயத்தையே, பயன்படுத்திய சொற்களையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தால் அதுவும் பொய் சொல்வதன் வெளிப்பாடாகும். மூக்கு அல்லது தலையை சொறிந்த நிலையில் பேசுவதும் கூட பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

    சொன்ன விஷயத்தையே திரும்ப திரும்ப சொல்வதிலும் முரண்பாடான கருத்தை முன்வைப்பார்கள். முன்பு சொன்ன விஷயத்தை நினைவில் வைத்திருக்காமல் வாய்க்கு வந்தபடி பேசவும் செய்வார்கள். ‘நாம் பொய்தான் சொல்கிறோம்’ என்ற உண்மையை ஒப்புக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள். அவர்களின் மனதுக்கு அது கஷ்டமாக தெரியும். தன்னை தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற உள்ளுணர்வுதான் பொய்யை நியாயப்படுத்த முயற்சிக்கும்.

    குழந்தைகள் இதுநாள் வரை உபயோகிக்காத சைகைகளை திடீரென பயன்படுத்தினால் அதுவும் பொய் கூறுவதற்கான அறிகுறியாக அமைந்திருக்கும். வழக்கத்தைவிட கண்கள் சட்டென்று சுழலும். திருதிருவென்று முழிப்பார்கள். அதனை உற்றுநோக்கினால் புன்னகையை வெளிப்படுத்தி சமாளிப்பார்கள். குறும்பாக சிரிக்கவும் செய்வார்கள். இவற்றை கொண்டே பொய் சொல்கிறார்கள் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். சிலரிடம் பொய் சொல்லும்போது பதற்றம் எட்டிப்பார்க்கும். மன குழப்பமும் உண்டாகும். அது அவர்களின் செயல்பாடுகளில் வெளிப்படும். துறுதுறுவென்று இருக்கும் குழந்தைகள் வழக்கத்தைவிட அமைதியாக இருந்தால் ஏதேனும் தவறு செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அதனை சமாளிக்க பொய் சொல்வதற்கு முயற்சிப்பார்கள். அதனை புரிந்து கொண்டு பெற்றோர் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
    பொதுவாக உடலில் 96 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். அது எவ்வளவு இருக்கிறது என்பதை ஆக்ஸிமீட்டர் கருவியில் எளிதாக கண்டறிந்துவிடலாம்.
    உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க சாதனத்தின் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக உடலில் 96 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இயல்பாக இருக்கும். அது எவ்வளவு இருக்கிறது என்பதை ஆக்ஸிமீட்டர் கருவியில் எளிதாக கண்டறிந்துவிடலாம்.

    கொரோனா வைரஸ்

    ஏதாவதொரு விரலை ஆக்ஸிமீட்டர் சாதனத்தில் பொருத்தி, அதில் உள்ள சுவிட்சை ஆன் செய்ய வேண்டும். அரை நிமிடத்திற்குள்ளாகவே ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் செறிவு டிஸ்பிளேவில் தெரியும். 95 முதல் 100 என்ற அளவில் இருந்தால் ஆக்சிஜன் அளவு சீராக இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு ஏதாவதொரு உடல்நலக்குறைபாடு இருக்கும்பட்சத்தில் ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கு குறைவாக இருக்கலாம்.

    அந்த சமயத்தில் கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடித்தும், விரித்தும் சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மீண்டும் ஆக்ஸிமீட்டரில் பரிசோதிக்கலாம். ஆனால் ஆக்சிஜன் அளவு 92-93 சதவீதமாக வீழ்ச்சியடைந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமானது. ஏனெனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் நிலையில் ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.

    அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். அத்தகைய பாதிப்புக்குள்ளாகுபவர்களை காப்பாற்றுவது கடினம். செயற்கை சுவாசம், மரணம் போன்ற கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி சுயமாகவே பரிசோதித்துக்கொள்ளலாம். அந்த சாதனத்தில் இதய துடிப்பையும் அறிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான நபரின் இதய துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்க வேண்டும்.
    ×