என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கும். பாதாமை ஊறவைக்கும்போது அதன் கடினத்தன்மை மென்மையாக மாறிவிடும். அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். எளிதில் ஜீரணமாகிவிடவும் செய்யும். பாதாமின் வெளிப்புற தோலில் இருக்கும் டானின், ஊட்டச்சத்துகளை உறிஞ்ச விடாமல் தடை செய்யும் தன்மை கொண்டது. பாதாமை நீரில் ஊறவைத்துவிட்டு தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். அதனால் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதே சிறந்ததாக கருதப்படுகிறது.

    பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் பாதாம் ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம் நீண்ட நேரம் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதில் உள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    பாதாமை ஊறவைப்பதன் மூலம் அதில் இருக்கும் பைடிக் அமிலத்தையும் குறைக்க முடியும். இந்த அமிலம் கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களை உறிஞ்சுவதற்கு இடையூறாக அமையும். பாதாமில் இருக்கும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் பசியை தடுக்கக்கூடியவை. அதனால் சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

    உடல் பருமன் கொண்டவர்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவது நல்லது. பாதாம் கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். பாதாமில் உள்ள வைட்டமின் ஈ ஒரு ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படக்கூடியது. விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும். பாதாமில் வைட்டமின் பி 17 அதிகம் உள்ளது. அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்தன்மை கொண்டது. பாதாமில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. சிசுவின் குறைபாடற்ற வளர்ச்சிக்கு இது உதவும்.

    ஒரு கப் தண்ணீரில் தினமும் இரவு 6 பாதாமை போட்டு மூடிவைத்துவிட வேண்டும். காலையில் அதை எடுத்து தோலை நீக்கிவிட்டு நன்றாக மென்று சாப்பிடவேண்டும். தினமும் இந்த வழக்கத்தை தொடரவேண்டும்.

    காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
    காதல் மனித வாழ்க்கையை துளிர்க்கவும் வைக்கிறது. துடிக்கவும் வைக்கிறது. எத்தனையோ காதலர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினாலும், தோல்வியடையும் ஒரு சில காதலர்களின் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்துவிடுகிறது. காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

    கட்டுக்கடங்காத காதல் தீயால் ஏற்படும் கோர சம்பவங்களையும், இழப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும். அதை பற்றி விரிவாக அலசுவோம்!

    காதலிக்கும் ஒவ்வொரு ஆணும் தனக்குள் `காதல்வசப்பட்டிருக்கும் நான் எதற்காக அவளை விரும்புகிறேன்?' என்ற கேள்வியை முதலில் தனக்குள் எழுப்பவேண்டும்.

    ஒருவர், தான் பார்க்கும் பெண்களில் தனக்கு பொருத்தமானவளாக எந்த பெண்ணை கருதுகிறாரோ அந்த பெண் மீது அவருக்கு காதல் பூக்கிறது. அப்போது அவர் கீழ்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் விடைதேடுவது மிக முக்கியம்.

    * அந்த பெண் தனக்கு பொருத்தமானவள் என்று கருதுகிறீர்களா?

    * அவளது விருப்பு, வெறுப்புகள் என்ன என்பது தெரியுமா?

    * அவளது வாழ்வியல் மற்றும் குடும்ப சூழல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    *அவளது குணாதிசயம் என்ன?

    *அவளது அனைத்து விஷயங்களும் உங்களோடு பொருந்தும் என்று கருதுகிறீர்களா?

    இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிந்து, அவள் தனக்கு பொருத்தமானவள் என்று அறிந்த பின்புதான் காதலிக்கத் தொடங்கவேண்டும். ஆனால் பலரும் தனது வாழ்க்கையில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காகவும், தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காகவும்தான் காதலிக்கிறார்கள். அதனால்தான் அவர்களது காதலின் அஸ்திவாரமே ஆட்டம் காண்கிறது. தனது உணர்வுகளையும், உற்சாகத்தையும், தனிமையையும், தவிப்பையும் பங்கிட ஒரு பெண் தேவை என்ற எண்ணத்தில் தொடங்கும் காதல், நாளடைவில் கசப்புகளால் நிரம்பிவழிகிறது. அவர்களுக்குள்தான் பிரச்சினைகள் எழுகிறது.

    சிலர் காதல் தரும் கிளர்ச்சியை அனுபவிப்பதற்காக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். `என் நண்பர்களுக்கெல்லாம் காதலி இருக்கிறாள். எனக்கு மட்டும் இல்லை' என்ற குறையை போக்கிக்கொள்ள காதலில் இறங்குகிறவர்களும் உண்டு. பொழுதுபோக்குக்காக காதலில் ஈடுபடுகிறவர்களும் இருக்கிறார்கள். அழகான பெண் ஒருவரை பார்த்துவிட்டால் அவரை எப்படியாவது அடையவேண்டும் என்பதற்காக காதலிப்பவர்களும் நம் மிடையே உண்டு. நண்பர்களி டையேயான போட்டியில் வெல்வதற்காக காதல்களம் காண்பவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் காதல் கரையேறுவது இல்லை. பெண்கள் மீது ஏற்படும் அழகையும், ஈர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டு எழும் காதல் பெரும்பாலும் அற்ப ஆயுள் கொண்டதாகவோ, ஆபத்தில் முடிவதாகவோதான் இருக்கிறது.

    பெண்ணின் அழகால் ஈர்க்கப்பட்டு அவளை காதலிக்க விரும்பும் ஆணின் மனதில் பாலியல் தேவைகள் இருந்துகொண்டிருக்கக்கூடும். அதற்கு பெண் இடம்கொடுத்துவிட்டால் அந்த ஆணின் தேவை முழுவதும் அதை சுற்றியே இருக்கும். அதை அனுபவித்து பழகியவனுக்கு, அதில் தடை ஏதாவது ஏற்பட்டால் அவனால் அதை தாங்கிக்கொள்ள இயலாது. அப்போது அவன் வன்முறை, மிரட்டல், கொலை முயற்சி போன்றவைகளில் ஈடுபடக்கூடும்.

    சிலர் காதல் என்ற பெயரில் பெண்களை விடாமல் துரத்துவார்கள். அந்த பெண்ணுக்கு அதில் விருப்பம் இருக்காது. உடனே `நான் இத்தனை நாட்கள் உன் பின்னால் சுற்றியும் நீ என் காதலை அங்கீகரிக்கவில்லை. அதனால் உனக்கு நான் தக்கபாடம்புகட்டப் போகிறேன்' என்று கூறிக்கொண்டு பழிவாங்க முயற்சிப்பார்கள். இவர்கள் ஒருதலைக்காதலர்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இத்தகைய ஆண்கள், தங்களிடம் சிரித்துப்பேசும் பெண்கள் அனைவரையுமே தங்களை காதலிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தவறான புரிதல் கொண்டவர்களே `அவள் என்னை பார்த்தாள்.. சிரித்தாள்.. பேசினாள்.. பின்பு காதலை நிராகரித்துவிட்டாள்' என்று கூறிக்கொண்டு அவளுக்கு உயிரிழப்பைகூட ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

    ஒரு பெண், ஆணின் காதலை நிராகரிக்கிறாள் என்றால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அந்த காரணங்களை ஆண் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதே நேரத்தில் அந்த காரணத்தைக் கேட்டு பெண்ணை பின்தொடர்ந்து காயப்படுத்த முயற்சிக்கக்கூடாது. ஒருவரது காதலை நிராகரிக்க பெண்ணுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். எல்லா காரணங்களையும் எல்லா நேரத்திலும், எல்லோரிடமும் அவளால் விளக்கிக்கொண்டிருக்க முடியாது. அதனால் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ, காதலை இடையில் முறிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலோ அதில் இருந்து விலகிவிடவேண்டும். காதலித்துதான் ஆகவேண்டும் என்று எந்த பெண்ணையும் நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  

    வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை மாவு (மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும்) - ஒரு கப்,
    கோதுமை மாவு - ஒரு கப்,
    சோயா மாவு - கால் கப்,
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.

    செய்முறை

    ஒரு அகலமான பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.

    இதை சிறிய அளவு உருண்டையாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் (அ) நெய் விட்டு, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான வேர்க்கடலை-சோயா மசாலா சப்பாத்தி ரெடி.
    உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் இளநரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.
    பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கருப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும்.

    ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது. முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வையும், இளநரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.

    பொதுவான உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்பு, முடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உடலை ஆரோக்கியமாகவும், மனதை உற்சாகமாகவும் வைத்திருந்தால் அகால நரையை பெருமளவு தவிர்த்துவிடலாம்.

    புரோட்டின் நிறைந்த கோழி இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகள், பால் பொருட்கள், பயறு- பருப்பு வகைகளை சாப்பிடுவது முடியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. முட்டையில் இருக்கும் புரோட்டினும், பயோட்டினும் முடிக்கு அதிக நலன் சேர்ப்பவை.

    நேந்திரன் பழம், காளான், பாதாம், கீரை வகைகள், மீன் வகைகள், ஈரல் போன்றவைகளையும் உட்கொள்ளுங்கள். முடியின் நிறத்தை பாதுகாக்கும் தன்மை இந்த உணவுப் பொருட்களுக்கு இருக்கிறது. குடைமிளகாய், வெள்ளரிக்காய், முட்டைகோஸ் ஆகியவைகளும் ஏற்றது.

    உடல் எடையை கட்டுக்குள்கொண்டு வர சிலர் உணவு சாப்பிடாமலே இருந்துவிடுவார்கள். இது தவறான நடைமுறையாகும். உணவு சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது. சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் முடி உதிர்தல், முடியில் கீறல் விழுந்து வெடித்தல் ஆகியவை ஏற்படுவதோடு நரையும் உருவாகும்.

    முடி எப்போதும் கருப்பாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஒன்றிரண்டு நரை ஏற்படும் போதே அதில் கவனம் செலுத்தி, டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அதிகமாக நரை விழுந்த பின்பு சிகிச்சைக்கு செல்வது அதிக பலனைத்தராது. அகால நரை தோன்றும்போதே சிகிச்சைக்கு முன்வாருங்கள். சத்துக்குறைபாடு, ஹார்மோன் குறைபாடு போன்றவைகளை கண்டறிந்து சரிசெய்தால் அது முடியின் நலனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் சிறந்தது.
    இயற்கையாக கர்ப்பமடைந்த பெண்கள் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கவேண்டியதில்லை. உறவுகொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
    பெண்கள் உறவுக்குள் திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது விஞ்ஞானரீதியாக நல்லது. உறவுக்குள் திருமணம் செய்து கொள்ளும்போது ரத்தம் வழியாக பரம்பரை நோய்கள் கடத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

    கணவரின் புகைப்பழக்கம் பெண்களின் கருவைப் பாதிக்கும். புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் அவருடைய உயிரணுக்களைப் பாதிப்பதால், அவருக்குக் குறைபாடான அணுக்கள் உருவாகி பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைப் பேற்றை உருவாக்கக்கூடும். பிறக்கும் குழந்தையும் எடை குறைவாகப் பிறக்க நேரிடும்.

    கர்ப்பிணிகள் கணவர் வெளியிடும் புகையை உள்ளிழுக்கும்போது அதில் உள்ள நிக்கோட்டின் நச்சு கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கர்ப்பிணிகளின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால் குழந்தைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதன் விளைவாக, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் அபாயம் உண்டு.

    பெண்கள் கருத்தரித்திருப்பதை அவர்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும். மாதவிலக்கு தள்ளிப்போகுதல், குமட்டல், மசக்கை, அடிக்கடி சிறுநீர் பிரிதல், புண்ணோ, எரிச்சலோ இல்லாமல் வெள் ளைப்படுதல், வாசனையைக் கண்டால் தலைச்சுற்றல், மார்பகங்கள் பெரியதாகவும், வலி மற்றும் உறுத்தலுடன் இருத்தல், மார்பக நரம்புகள் புடைத்தும், காம்புகள் கறுப்பாகவும் தோன்றுவது போன்றவை அதன் அறிகுறிகளாகும். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தோன்றும்.

    இயற்கையாக கர்ப்பமடைந்த பெண்கள் கர்ப்பகாலத்தில் தாம்பத்தியத்தை தவிர்க்கவேண்டியதில்லை. உறவுகொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கருப்பைக் கழுத்தின் தசைகளும், கர்ப்பத்தின்போது உருவாகும் சளித் தொகுப்பும் கருப்பையை முற்றிலுமாக மூடி சிசுவை பாதுகாப்பாக வைத்திருக்கும். அதனால் பொருத்தமான முறையில் உடலுறவு கொள்ளலாம். இருந்தாலும், இதற்கு முன்பு கருச்சிதைவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கர்ப்பமான முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

    இப்போது குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தொடர்ச்சியாக தாம்பத்திய உறவு கொண்டாலும், குறைந்தது ஆறு மாதம் வரையில் கருத்தரிக்காவிட்டால் கவலைப்பட வேண்டாம். முப்பது வயதுக்குள் உள்ள பெண்கள், திருமணமாகி இரண்டாண்டு வரை கருத்தரிப்புக்காகக் காத்திருக்கலாம். அதன் பின்பும் கருத்தரிக்காவிட்டால் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையை பெறவேண்டும்.

    புகையிலையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுத்தன்மை உள்ள பொருள்கள் உள்ளன. இவற்றில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவை, புற்றுநோயைத் தூண்டக்கூடியவை. அவற்றுள் பல மலட்டுத்தன்மையையும் உருவாக்குகிறது.

    பெண்ணின் கரு முட்டையானது சினைப்பையில் இருந்து வெளியான பிறகு 24 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். கருத்தரிப்பு நடைபெற, இந்த 24 மணி நேரத்தில் அது உயிரணுவோடு சேர்ந்துவிட வேண்டும். உயிரணுவானது 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும்.
    சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம்.
    `வயது 58 ஆகியும் எனது முடி நரைக்கவில்லை. ஆனால் 28 வயதிலே உனக்கு இத்தனை முடிகள் நரைத்துவிட்டதே' என்று யாராவது ஒரு இளம் பெண்ணை பார்த்து சொன்னால், அவர் வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாக தனது கூந்தலைத்தான் ஆராய்வார். நரைத்திருக்கும் தனது முடிகளை கண்ணாடியில் பார்த்தால், முடியை விட நீளமாக அவருக்கு எரிச்சல் ஏற்படும். அதற்கு காரணம் நரை, முதுமையின் அடையாளமாக கருதப்படுவது தான். அப்படி எரிச்சல்கொள்ளும் பலருக்கும் எதனால் இளமையிலே நரை ஏற்படுகிறது என்ற அடிப்படை காரணம் தெரிவதில்லை. அடிப்படையை தெரிந்துகொண்டால் பெரும்பாலானவர்களால் அகால நரைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

    பொதுவாக நாற்பது வயதை நெருங்கும்போதுதான் முடி நரைக்கத் தொடங்கும். முடிக்கும், சருமத்திற்கும் மெலனின் என்ற பொருள்தான் கறுப்பு நிறத்தை தருகிறது. இதனை உற்பத்தி செய்யக்கூடிய மெலானோசைட் திசுக்களின் செயல்திறன் குறையும்போது தான் நரை தோன்றுகிறது. வயதாகும் முன்பே, அதாவது 25 வயதிற்கு முன்பு நரை தோன்றினால் அது அகால நரையாகும். ஆனால் சிலருக்கு 20 வயதுக்கு முன்புகூட நரைக்கத் தொடங்கிவிடுகிறது.

    மெலானோசைட் திசுக்களின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தால் இளம் வயதிலேயே நரைக்கும். மூதாதையருக்கு இளம் வயதிலேயே நரைத்தால், பாரம்பரியமாக அது இளந்தலைமுறைக்கும் தொடரும். இன்னொரு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. புரோட்டின், இரும்பு, தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவைகளில் ஒன்றிலோ, ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலோ குறைபாடு ஏற்பட்டாலும் அகால நரை தோன்றும். முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்க மேற்கண்ட சத்துக்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

    தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் (ஹைப்பர் தைராய்டிஸம்), குறைவாக சுரந்தாலும் (ஹைப்போ தைராய்டிஸம்) இளமையிலே முடி நரைக்கும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பாதிக்கக்கூடிய ஆட்டோ இம்யூன் வகையை சார்ந்த நோய்களாலும் நரை தோன்றும். மலேரியா போன்ற சில நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகளும் தற் காலிகமாக நரையை உருவாக்கலாம். அத்தகைய மருந்துகளை உட்கொள்ளுவதை நிறுத்திய பின்பு இயல்புநிலைக்கு மாறிவிடவும் கூடும். பதற்றம், மனஅழுத்தம், புகையிலை பயன்பாடு போன்றவைகளாலும் விரைவில் நரை தோன்றும்.

    முடியில் வெயில் அதிகம்படுவது அதன் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். முதலில் முடி உதிர்தல், பின்பு முடி வெடித்து கீறுதல் போன்ற பாதிப்புகள் தோன்றி, அடுத்து அகால நரைக்கு கொண்டு செல்லும். வீரியம் அதிகம் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் முடியின் வேர்களை பாதிக்கும். அது முடி உதிர்வை யும், அகால நரையையும் தோற்றுவிக்கும். அதற்கு பதிலாக பொருத்தமான ஆர்கானிக் ஷாம்புவை தேர்ந்தெடுத்து பயன் படுத்தலாம்.

    சிறுவர்-சிறுமியர்களும் நரையால் பாதிக்கப்படுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் சத்துக்குறைபாடு. அதனால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை தொடர்ந்து வழங்கிவருவது அவசியம். பத்து வயது வரை சிறுவர், சிறுமியர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழங்கிவருவது மிக முக்கியம். கர்ப்பிணிகள் தங்கள் வயிற்று சிசுவின் முடி வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகளை தொடக்க மாதத்தில் இருந்தே சாப்பிட்டு வருவது அவசியம்.

    குழந்தைகளின் உடலில் யுமெலானின், பியோமெலானின் என்ற இரண்டு வகை மெலானின் இருக்கிறது. கறுப்பு மற்றும் பிரவுன் முடிக்கு யுமெலானின் காரணம். சில குழந்தைகள் பிரவுன் முடியுடன் தோன்றுவார்கள். அதற்கு யுமெலானின் மாறுபட்ட தன்மையே காரணமாக இருக்கிறது.

    பரிசோதனையும், சிகிச்சையும்..

    அகால நரைக்கு சிகிச்சை பெற விரும்புகிறவர்கள், முதலில் ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். சத்துக்குறை பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிவதோடு, தைராய்டு பாதிப்பு இருந்தாலும் கண்டுபிடிக்கவேண்டும்.

    சத்துக்குறைபாடு, ஹார்மோன்களின் சீரற்ற நிலை போன் றவைகள் தெரியவந்தால் அதற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ளவேண்டும். சத்துணவுகளையும் சாப்பிடுவது அவசியம்.

    அகால நரை பாரம்பரியத்தால் ஏற்பட்டது என்றால் அதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நரை முடிக்கு கறுப்பு நிறம் தருவதற்கு பயோட்டின், கால்சியம் பாந்தோதெனேட்டட், பாரா அமினோ பென்சோயிக் ஆசிட் போன்ற மருந்துகள் ஏற்றது.

    முடியின் வெளிப்பகுதியில் பூசுவதற்கு ஸொராலென் வகை மருந்துகள் ஏற்றது. அதனை பூசிவிட்டு சிறிது நேரம் வெயிலில் நின்றால், முடிக்கு கறுப்பு நிறம் கிடைக்கும்.

    எந்த மருந்தாக இருந்தாலும் டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். டாக்டர் குறிப்பிடும் அளவில்தான் அதை எடுத்துக்கொள்ளவேண்டும். இணையதளத்தை பார்த்து சுய சிகிச்சைகள் மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கி விடும்.
    முருங்கைக்காய் பச்சை நிறமாக இருக்கவேண்டும். அதிக கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக்கூடாது. வளையவேண்டும். முற்றிய முருங்கைக்காயை வளைத்தால் முறிந்துவிடும்.
    தேங்காயை கையில் எடுத்து குலுக்கிப்பாருங்கள். உள்ளே தண்ணீர் இருக்கவேண்டும். தேங்காயின் கண்கள் இருக்கும் பகுதியை லேசாக அழுத்திப்பாருங்கள். அமுங்காமல் இருந்தால் நல்ல தேங்காய்.

    முட்டைக்கோஸ் கெட்டியாக, பளிச்சென்று புதிதாக இருக்கவேண்டும்.

    உருளைக்கிழங்கு பழையது என்றால் அமுங்கும். புதியது கெட்டியாக இருக்கும். அமுக்கிப்பார்த்து வாங்குங்கள்.

    கீரைத்தண்டுவை ஒடித்துப்பாருங்கள். வளையாமல் ஒடிந்துவிடவேண்டும்.

    முள்ளங்கியில் வேர்கள் தோன்றாமல் இருப்பது நல்லது. நிறமும் நம்மை கவரும்படி அமைந்திருக்கவேண்டும்.

    பூண்டுவை கையில் எடுத்து அழுத்திப்பாருங்கள். கனமாக, கெட்டியாக இருப்பதே சிறந்தது.

    கருணைக்கிழங்கு நல்லதாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிவந்து, இரண்டு நாட்கள் வீட்டில் வைத்துவிட்டு சமைக்க பயன்படுத்துங்கள்.

    கோவக்காய் சீராக, பளிச்சென்று இருக்கவேண்டும். அமுங்கினால் வாடிவிட்டதாக அர்த்தம். வாடிப்போனதை வாங்கக்கூடாது.

    வெண்டைக்காய் இளசாக இருக்கவேண்டும். நுனியை லேசாக அழுத்தினாலே ஒடிந்துவிடும்.

    பீன்ஸ், அவரையை கையில் எடுத்து பார்த்தாலே நாரை எளிதாக உரித்தெடுக்க முடியுமா என்பது தெரிந்துவிடும். எளிதாக உரிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

    கொத்தவரை, வெண்டைக்காய் மாதிரிதான் வளையாமல் முறியவேண்டும்.

    வாழைத்தண்டு அதிக தண்ணீர்தன்மையோடு வாடாமல் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருப்பது அவசியம்.

    சேனைக்கிழங்கு அதிக சிவப்பாக இல்லாமல் மஞ்சள் நிறம் கலந்திருப்பதை பார்த்துவாங்குங்கள். அதிக சிவப்பை குழந்தைகள் சாப்பிட்டால் நாக்கு அரிப்பதாக சொல்வார்கள்.

    வெங்காயம் சிவப்பு நிறத்தில் இருப்பது நல்லது. வாடலாக, அழுகலாக இருந்தால் நிறம் மாறும். பொதுவாக கருநீலநிறத்தில் இருப்பது அழுகலின் அடையாளம்.

    முருங்கைக்காய் பச்சை நிறமாக இருக்கவேண்டும். அதிக கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக்கூடாது. வளையவேண்டும். முற்றிய முருங்கைக்காயை வளைத்தால் முறிந்துவிடும்.

    புடலையில் நார் இருக்கக்கூடாது. எளிதாக உடையும் விதத்தில் இருந்தால் நல்லது.

    கேரட் இப்போதே பச்சையாக கடித்துவிடலாமா? என்று தோன்றும் விதத்தில் பளிச்சென்ற நிறத்துடன் மீடியமான சைசில் இருக்கவேண்டும்.

    பாகற்காய் சிறியதுமில்லாமல், பெரியதுமில்லாமல் நடுத்தரமாக, நல்ல நிறமாக, அமுங்காமல் இருக்கவேண்டும்.

    வாழைப்பூ இதழை தூக்கிப்பார்த்தால், கறுப்பாக பீலிகள் இருந்தால் நல்லதல்ல. கெட்டியாக, இளசாக இருக்கவேண்டும். முற்றல் அதிக துவர்ப்பாகிவிடும்.
    பெரும்பாலான பெண் குழந்தைகள் தொடக்க கல்வி படிப்பை எவ்வித சிரமமும் இன்றி படித்து முடித்துவிடுகிறார்கள். பருவம் அடைதல், குழந்தை திருமணம் போன்ற விஷயங்கள் பெண்கள் கல்வியை தொடர்வதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
    பெண்கள் ஒருபக்கம் உயர் கல்வி பயின்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து சாதித்துக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

    கர்நாடகா, அசாம், பீகார், அருணாச்சலபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வி நிலை இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் புதிதாக சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உயர் நிலை கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே பள்ளிப்படிப்பை நிறுத்திவிடும் நிலை நீடிக்கிறது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் தொடக்க கல்வி, இடை நிலை கல்வியை தொடர முடியாமல் இடை நிறுத்தம் செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    2014-2015-ம் ஆண்டில் இடை நிலை கல்வியை பொறுத்தவரை படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களின் எண்ணிக்கை 17.79 சதவீதமாக இருந்திருக்கிறது. அதுபோல் தொடக்க கல்வியை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருக்கிறது. 2015-16-ம் ஆண்டுகளில் இடைநிலைக்கல்வியில் இடை நிற்றல் விகிதம் 16.88 சதவீதமாகவும், தொடக்க கல்வி இடைநிற்றல் சதவீதம் 4.09 ஆகவும் இருந்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் இந்த சதவீதம் உயர்ந்திருக்கிறது. அந்த கல்வி ஆண்டில் இடை நிலை கல்வி மட்டத்தில் இடை நிற்றல் சதவீதம் 19.81 சதவீதமாகவும், தொடக்க கல்வி இடை நிற்றல் 6.34 சதவீதமாகவும் பதிவாகி இருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் இடை நிலைக்கல்வி 18.39 சதவீதமாகவும், தொடக்க கல்வி 4.1 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. 2018-19-ம் ஆண்டில் இடை நிலை கல்வியை பாதியிலேயே முடித்துக்கொண்டவர்களின் சதவீதம் 17.3 ஆகவும், தொடக்க கல்வியை கைவிட்டவர்களின் சதவீதம் 4.74 ஆகவும் உள்ளது.

    பெரும்பாலான பெண் குழந்தைகள் தொடக்க கல்வி படிப்பை எவ்வித சிரமமும் இன்றி படித்து முடித்துவிடுகிறார்கள். உயர் நிலை வகுப்புகளில் படிப்பை தொடர்வதில்தான் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். பருவம் அடைதல், குழந்தை திருமணம் போன்ற விஷயங்கள் பெண்கள் கல்வியை தொடர்வதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் ஆங்காங்கே அத்தகைய திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 2020-ம் ஆண்டில் மட்டும் தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், குழந்தை திருமணம் தொடர்பாக 111 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
    பரங்கிக்காய் குளிர்ச்சியானதாக இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். மூல நோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
    தேவையான பொருட்கள்

    பரங்கிக்காய் - 1 பெரிய பத்தை,
    புளி - எலுமிச்சை அளவு,
    பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
    சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    தாளிக்க...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்,
    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - 1 துளி,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    பரங்கிக்காயின் தோலையும் விதைகளையும் நீக்கி விட்டு சின்னச் சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.

    புளியை கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பரங்கி துண்டுகளை போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு இத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பரங்கிக்காய் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.

    கரைத்த புளியை கொதிக்கும் பரங்கிக்காயில் சேர்த்து இத்துடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதித்தவுடன் ஆற வைத்து  மசிக்கவும்.

    எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூப்பரான பரங்கிக்காய் பச்சடி ரெடி.
    இறுக்கமான பிராக்களை அணிவது ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, நிணநீர் திசுக்களையும் தாக்கும். இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
    பெண்கள் இறுக்கமான பிரா அணிவதனால் பல்வேறுவிதமான உடல்சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. சரியான அளவுகொண்ட பிராவை தேர்வு செய்து அணிவது உடல் தோற்றத்துக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பொருத்தமாக அமையும். இறுக்கமான பிராக்களை அணிவது ரத்த ஓட்டத்தை பாதிப்பதோடு, நிணநீர் திசுக்களையும் தாக்கும். இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

    ஆக்சிஜன் பற்றாக்குறை: இறுக்கமான பிரா அணிவது ஆக்சிஜன் பற்றாக் குறைக்கும் வழிவகுக்கும். அதாவது மார்பக பகுதியில் போதுமான அளவு ஆக்சிஜன் உட்செல்ல முடியாமல் தடுக்கப்படும் நிலை உருவாகும். அடிப்பகுதியில் மெல்லிய கம்பிகள், இழைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பிராக்களை அணியும்போது அவை இறுக்கமாக இருந்தால் பாதிப்பு அதிகமாகும். மார்பக பகுதியில் வடுக்கள் ஏற்படலாம். நுரையீரல் திசுக்கள் சேதமடையவும் கூடும். இவையும் புற்றுநோய் உருவாகுவதற்கான சூழலை அதிகப்படுத்திவிடும்.

    சரும சேதம்: மார்பக பகுதியில் சிவந்து போகுதல், கீறல் போன்ற தழும்புகள் தென்பட்டால் அணியும் பிரா மிகவும் இறுக்கமாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். இறுக்கமான பிரா மார்பக சருமத்தை பலவிதங்களில் பாதிக்கிறது.

    நிணநீர் பாதிப்பு: இறுக்கமான பிராக்கள் மார்பகத்தின் ஆரோக் கியத்தை பெரிதும் பாதிக்கும். மார்பகங்களில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுதான் நிணநீரின் இயல்பான செயல்பாடாகும். ஆனால் இறுக்கமான பிராக்கள் நிணநீர் திரவங்களின் ஓட்டத்தை குறைப்பதோடு மார்பகங்களில் நச்சுக்களை உருவாக்கவும் செய்யும். இதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

    மார்பக அழுத்தம்: இறுக்கமான பிராவை அணிவது மார்பக பகுதியில் தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும். அது மார்பக திசு செல்களுக்கு சேதத்தை விளைவிக்கும். அதனால் பிரா தேர்வில் அலட்சியம் கொள்ளக்கூடாது. மார்பகத்திற்கு ஏற்றதாக சரியான அளவில் மட்டுமே அணியவேண்டும்.

    இறுக்கமான பிராவை நாள் முழுவதும் அணிவது உடலுக்கு அசவு கரியத்தை ஏற்படுத்தும். அன்றாட நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்பவர்கள் பொருத்தமான பிராவை தேர்ந்தெடுக்காவிட்டால் நீண்ட கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். உங்களுக்கு தொடர்ச்சியாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் நீங்கள் அணியும் பிரா இறுக்கமாக இருக்கிறதா என்றும் பாருங்கள்.

    கழுத்து புண்: மிகவும் இறுக்கமான பிராவை அணிவது, தசைகளுக்கு கூடுதல் இறுக்கத்தை ஏற்படுத்துவதால், கழுத்து மற்றும் முதுகு வலி தோன்றக்கூடும். இறுக்கமான பிராக்கள் தோள்பட்டை வலியையும் உண்டாக்கும். அதனால் நெஞ்சை நிமிர்த்தி இயல்பாக நடக்க முடியாத சூழலும் ஏற்படலாம்.
    தூக்கத்தில் கனவு பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, களைப்பு, ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்றவை பொதுவான காரணங்களாகும்.
    இரவில் தூங்கும்போது கனவு காண்பது இயல்பானது. குழந்தைகளும் இரவு தூக்கத்தில் கனவு காண்பார்கள். அவர்களை பயமுறுத்தும் கனவுகள் என்றால் அலறி எழுந்து அழுவார்கள். இப்படிப்பட்ட சம்பவம் எப்போதாவது நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. அடிக்கடி குழந்தைகள் இதுபோன்று விழித்து அலறினால் அதனை கவனித்து தீர்வு காணவேண்டும்.

    இத்தகைய குழந்தைகளிடம் இரவில் அழுததற்கான காரணத்தை கேட்டால் பதிலளிக்க மாட்டார்கள். ஏன்என்றால் அந்த கனவே அவர்களின் நினைவில் இருக்காது. இரவு தூக்கத்தில் கனவு பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, களைப்பு, ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்றவை பொதுவான காரணங்களாகும். காய்ச்சல் அல்லது உடலில் அதிக வெப்பநிலை, மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது, சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுவது போன்றவையும் காரணமாக அமையலாம்.

    காய்ச்சல் காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புகளும் பயத்தை உருவாக்கலாம். இரவில் தூங்கும்போது திடீரென்று சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதும் தூக்கத்தை கலைத்து பயத்தை உண்டாக்கலாம். அதிக வெளிச்சம், இரைச்சல் போன்ற சூழல்களும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும்.

    தூக்கத்தில் நடப்பது, தூங்கும்போது வேகமாக சுவாசிப்பது, அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது, கை, கால்களை ஆக்ரோஷமாக அசைப்பது, வித்தியாசமான சுபாவங்களை வெளிப்படுத்துவது, பயத்தில் உறைந்து போவது போன்ற அறிகுறிகளை குழந்தைகள் வெளிப்படுத்தினால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் தூக்கத்தில் காணும் கனவால் பயந்துபோய் எழுந்தாலும் உடனேயே மீண்டும் தூங்கிவிடுவார்கள்.

    அப்படி தூக்கம் வராவிட்டால் மனக்குழப்பம் அடைவார்கள். மீண்டும் தூங்குவதற்கு முயற்சிப்பார்கள். அப்போது அவர்களை எழுப்ப முயற்சிக்க வேண்டாம். பயத்தில் எழுந்து அலறிக்கொண்டிருந்தால் அவர்களை ஆசுவாசப்படுத்தலாம். அவர்களை அரவணைத்து தலைமுடியை கோதிவிட்டு தூங்க வைக்கலாம். பெற்றோர் அருகாமையில்தான் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்குள் தோன்றும். பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள்.

    தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அது தூக்கத்தில் எழும் வழக்கத்தை தவிர்க்க உதவும். சாப்பிடாமல் குழந்தையை தூங்கவும் அனுமதிக்கக்கூடாது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குழந்தைகளுக்கு ஏதாவதொரு கதை சொல்லுங்கள். அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியிலே ஆழ்ந்து தூங்கிவிடுவார்கள்.
    உடலையும், மனதையும் அமைதி அடையச் செய்ய மசாஜ் சிறந்த சிகிச்சை ஆகும். இரவு நேரத்தில் மசாஜ் செய்வதால், வலி குறைந்து, பதற்றம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் ஆழ்ந்த தூக்கமும் வரும்.
    தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மன அழுத்தம், எதிர்பார்க்காத விஷயம், உறக்க சுழற்சி உள்ளிட்டவை மாறுபடும் போது உறக்கமின்மை ஏற்படுகிறது.

    எனவே தூக்கம் கண்களை தழுவ சில விஷயங்களை வீட்டிலேயே நாம் முயற்சி செய்யலாம்.

    நீண்ட ஓய்வில்லா நாளின் இறுதியில் சூடான நீரில் குளியல் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நிம்மதி அளிப்பதுடன், உறக்கத்தை வரவழைக்கவும் உதவுகிறது. தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சூடான நீரில் குளிக்கலாம்.

    உடலையும், மனதையும் அமைதி அடையச் செய்ய மசாஜ் சிறந்த சிகிச்சை ஆகும். இரவு நேரத்தில் மசாஜ் செய்வதால், வலி குறைந்து, பதற்றம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் ஆழ்ந்த தூக்கமும் வரும்.

    இதற்காக பயிற்சி பெற்றவர்களை அழைக்க வேண்டும் என்றில்லை. நீங்களாகவே வீட்டில் மசாஜ் செய்து கொள்ளலாம்.

    உணர்வுகளை தூண்டி, சிறந்த தூக்கம் அளிக்க லாவெண்டர் ஆயில் உதவுகிறது. பாலும், தேனும் சேர்ந்த கலவை தூக்கத்தை வரவழைக்க சிறப்பான மருந்து. பாலில் அமினோ அமிலம், டிரிப்டோபான் உள்ளது. இது ஹார்மோன் அளவை அதிகரித்து, இயற்கையான உத்வேகம் அளிக்கிறது. இரவில் தூங்க செல்லும் முன், கொஞ்சம் மூலிகை டீ எடுத்துக் கொண்டால் தானாக தூக்கம் வரும். இது உடலை சாந்தமடைய செய்கிறது. மேலும் பேஷன்பிளவர் டீ மற்றும் சமோமைல் டீ போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.

    உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தாது மக்னீசியம் ஆகும். இது உடல் தசைகளை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்கிறது. மேலும் ஆரோக்கியமான உறக்கத்தையும் வரவழைக்கிறது. எனவே இதற்கான பவுடரை நீரில் கலந்து குளிக்கலாம்.

    நிக்கோட்டீன், காபைன், ஆல்கஹால் போன்றவற்றை உறங்கும் முன் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவில் எளிய உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். உறங்கும் முன் லேப்டாப், டி.வி., மொபைல் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
    ×