என் மலர்
ஆரோக்கியம்
கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.
வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் ஜிகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும். அங்கு கடந்த 1947-ல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த 1960 முதல் 1980 வரை அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த இந்த வைரஸ் 2007-க்கு பிறகு தொற்று நோயாக உருவெடுத்தது. 2015-ல் பிரேசிலில் பல முறை இந்த தொற்று பரவியது. அங்கிருந்து பிற நாடுகளுக்கும் பரவியது. தற்போதுவரை 86 நாடுகளில் இந்த வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் இந்த வைரசும் பரவுகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு லேசான காய்ச்சல், தோல் தடிமன், தசை-மூட்டு வலி, கண் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். சிலருக்கு மூளை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்படும்.
ஆனால் பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது. தொற்று பரப்பும் கொசு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும். தொற்று பாதித்தவர்கள் பெரும்பாலும் குணமடைய வாய்ப்பு உண்டு.
அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும்.
இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் இன்னும் ஆய்வு கட்டத்திலேயே உள்ளன. எனவே கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதே வைரசை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும்.

உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம். அவர்கள் பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவுகரியமாகவும் இருக்கும். அதிக இறுக்கம் கொண்ட ‘பிகர் ஹக்கிங் டிரஸ்’ வகைகள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. அதற்கு பதிலாக அதிக தளதள உடைகளை அணிவதும் சரியல்ல. இரண்டு நிலைக்கும் பொதுவான உடைகள் அவர் களுக்கு ஏற்றது. அவர்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவை சரியாக பொருந்தவேண்டும். சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் அவை இருக்கவேண்டும். உள்ளாடை தேர்வு சரியாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடை அலங்காரமும் சொதப்பிவிடும்.
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. ஒவ்வொரு பகுதி ஆடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர்களுக்கு ஏற்றதல்ல. அடர்த்தியான நிறம் அவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு உடலின் மேல்பாகமும், கீழ் பாகமும் மட்டும் குண்டாக இருக்கும். இடைப்பகுதி ஒல்லியாக காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒல்லியான பகுதியில் இறுக்கமான உடைகளை அணியலாம். அப்போது குண்டாக இருக்கும் பகுதியில் அணியும் ஆடையும் இறுக்கமாக, பொருத்தமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
சிலர் நமது உடல்தான் குண்டாக இருக்கிறதே நமக்கு எதற்கு மேக்கப் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்காமல் அவர்களும் தேவையான அளவு மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டு்ம். மேக்கப் இல்லாத இருண்ட முகம், உடல் எடையை கூட்டிக்காட்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீள கூந்தலை கொண்டிருப்பது நல்லது. தோள் அளவுக்கு குட்டையாக முடியை வெட்டிவிட்டிருந்தால் அது முகத்தை கூடுதல் குண்டாக காட்டும். முகம் குண்டாக இருப்பவர்களும், கன்னங்கள் தடிமனாக இருப்பவர்களும் கூந்தலை ஸ்ரெயிட்டனிங் செய்யக்கூடாது. லேயர்களாக்கி கூந்தலை வெட்டி முகத்திற்கு அழகு தரும் விதத்தில் அலங்காரம் செய்யவேண்டும்.
குண்டானவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், இறுக்கமான டாப் அணிவதை தவிர்க்கலாம். மெல்லிய மெட்டீரியலில் தயாரான கம்பர்ட் பிட் டாப் அணிந்தால், உடல் குண்டாகத் தோன்றாது. குர்தாவுடன் கூடிய லெகின்ஸ் அணிவதை தவிர்த்துவிடலாம். அது தடிமனான தொடைப் பகுதியை கூடுதலாக்கிக் காட்டிவிடு்ம்.
குண்டான உடலைக் கொண்டவர்கள் கனம் குறைந்த புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். பெரிய பார்டரும், லாங் ஸ்லீவ் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அவர்களுக்கு பொருந்தாது.
ஒகாயோ ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு ஒன்றில் ‘கணவரோடு சண்டைபோடும் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். கணவரோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்கள் உடலில் ஜீரண பணிகள் நன்றாக நடப்பதாகவும், கணவரோடு சண்டையிடும்போது ஜீரண சக்தி குறைவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஜீரண சக்தி குறையும்போது உடல் குண்டாகிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுபோல் மனஅழுத்தமும் உடலை குண்டாக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க மகிழ்ச்சி மிக அவசியம்.

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலை புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது. இன்று இவை இரண்டையும் வைத்து சாலட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய வெள்ளரிக்காய் - 1 கப்,
கொத்தமல்லி - சிறிது,
விதை நீக்கிய காய்ந்த மிளகாய் - 3,
வெங்காயம் - 1,
வேர்க்கடலை விழுது - 1 கப்,
எலுமிச்சைச்சாறு - சிறிது,
தேன் - சிறிது,
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு.
செய்முறை
கொத்தமல்லித்தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வேர்க்கடலையை வேகவைத்து கொரகொரப்பாக விழுது போல அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், வேர்க்கடலை விழுது, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, விதை நீக்கிய காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
சத்தான வெள்ளரிக்காய் வேர்க்கடலை சாலட் ரெடி.
ஊட்டச்சத்து குணங்கள்
வெள்ளரிக்காய் : ஞாபகத்திறனை அதிகரிக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்தது.
வேர்க்கடலை : இதன் புரதச்சத்து வளர்ச்சிக்கு உதவும். வைட்டமின் E சருமத்தின் நலம் காக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. நல்ல கொழுப்பும், கனிமங்களும் கொண்டது.
கொத்தமல்லித்தழை கெட்ட கொழுப்பை குறைக்கும். செரிமானத்துக்கு நல்லது. ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் உள்ளது. ரத்த
சோகையை சரி செய்யும். மூளை சுறுசுறுப்பை அதிகரிக்கும்.
வெங்காயம் : ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் உள்ளது. ஆஸ்துமாவை சரி செய்யும். செரிமானத்துக்கு
நல்லது. வெயில் காலத்தில் வெங்காயம் உண்ணும்போது உடல் சூடு தணியும்.
ஆலிவ் எண்ணெய் : நல்ல கொழுப்பு உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டது. இதயத்தின் நலனுக்கும் எடை பராமரிப்புக்கும் உதவி செய்யும்.

குழந்தைகள் பொய் சொல்வது பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.
குழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.
பெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.
குழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.
குழந்தைகளுக்கு உண்மை சொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.
உங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.

ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் ஒரு திறமைம ஒளிந்திருக்கும். உங்கள் திறமை சமையல் செய்வது, பாடுவது போன்று இயல்பானதாக இருந்தாலும் அதிலும் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்கான வழிகளை கண்டறிந்து தன்னை மெருக்கூட்டி கொள்பவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றனர். சுய முன்னேற்றத்துக்கு அடிப்படையானது சுய முயற்சி. சுயமுயற்சி என்பது தம்முடைய குணங்கள், தனித்திறமைகள், நிறை, குறைகள் போன்றவற்றை மதிப்பீடு செய்து நம்மை நாமே மேம்படுத்தி கொள்வதாகும். இன்றை இளைஞர்களுக்கு சுயவளர்ச்சி குறித்த விழிப்புணர்வு அவசியமானது. சுயவளர்ச்சியை ஏற்படுத்துவற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
தனித்திறமை
ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். உங்கள் திறமை சமையல் செய்வது, பாடுவது போன்று இயல்பானதாக இருந்தாலும் அதிலும் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியும். அளவுக்கு ஏதாவதொரு சிறப்பு இருக்கும். அந்த தனித்தன்மையை கண்டறிந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் திறமை மற்றவர்களில் இருந்து எப்போதும் சிறிய அளவிலாவது மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது அந்த திறமையை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வெளிக்கொண்டு வர வேண்டும்.
மனவலிமை
எஎந்த செயலில் ஈடுபட்டாலும் மன வலிமையோடு செயல்பட வேண்டும். எதையும் நேர்மறை எண்ணத்தோடு அணுக வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் சரியான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் மனதை வலிமையாக்க தியானம், மூச்சுபயிற்சியில் ஈடுபடலாம். மனதிற்கு இனிமையான இசையை கேட்கலாம்.
பழக்கததை ஏற்படுத்துதல்
நம்முடைய நேர்மறை குணங்களையும், திறமைகளையும், செய்லபாடுகளையும் மேம்படுத்தி சுய வளர்ச்சி அடைவதற்கு நல்ல செயல்களை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்றவற்றால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். நல்ல புத்தகங்களை படிப்பது. அறிவியலில் சிறந்தவர்களின் பேச்சுக்களை கேட்பது போன்றவற்றால் மனம் பக்குவப்படும். அறிவு மேம்படும்.
கட்டுப்பாடு
வளர்ச்சிக்கான பாதையில் செல்லும் போது பல விதமான நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களின் உதவியால் நாம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கும் செல்லலாம். அதுபோன்ற நபர்களின் உறவை வலிமையாக்க முற்பட வேண்டும். உறவுகளை வலிமையாக்குவதற்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அழுகை, கோபம், மகிழ்ச்சி, போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தி, சரியான இடத்தில் வெளிப்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியும்.

திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கிறார்கள். திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் முக்கியமானவைதான். ஆனால் அதற்கு பிந்தைய வாழ்க்கை என்பது அதைவிட முக்கியமானது.
திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கிறார்கள். ஜோடிப் பொருத்தம், கல்வி, உத்தியோகம், சொத்து விவரம், குடும்பப் பின்னணி போன்ற பல விஷயங்கள் அலசி ஆராயப்படுகின்றன. ஆனால் திருமணத்திற்கு பிந்தைய தாம்பத்ய உறவு பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அதைப்பற்றி மணமக்களுக்கு விழிப்புணர்வும் கொடுப்பதில்லை. அதன் விளைவால் திருமணத்திற்கு பின்பு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. தம்பதிகள் பிரிகிறார்கள். இத்தகைய விவாகரத்துக்கள் இந்தியாவில்தான் அதிகமாக நடக்கின்றன.
அதனால், ‘பிள்ளைகளின் திருமணத்திற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்கும் பெற்றோர், அவர்களின் எதிர்கால நலன் கருதி ஒரு நல்ல மருத்துவரையும் பார்க்கலாமே!’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருமணம் நடக்கும் முன்பு ஆண்-பெண் இருபாலருமே மருத்துவரை அணுகவேண்டியது காலத்தின் கட்டாயம். அது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். ஆனால் இந்த முக்கியமான உண்மையை இன்றுவரை பலரும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த உண்மைக்கு மதிப்பு இல்லாமல் போனதால்தான், தாம்பத்ய உறவுக்கே லாயக்கில்லாதவர்கள்கூட தங்கள் குறைகளை மூடி மறைத்து திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. பிறகு உண்மை வெளியே தெரியும்போது இரு குடும்பத்திற்கும் மோதல் உருவாகிறது. தேவையற்ற பல்வேறு பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. அவர்கள் முன்பே மருத்துவரின் ஆலோசனையை கேட்டிருந்தால் வாழ்க்கையை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் ‘எப்படியாவது திருமணத்தை முடித்துவிட வேண்டும். எது வந்தாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மூர்க்கத்தனமான எண்ணம்தான் இன்றும் மக்கள் மத்தியில் உலவுகிறது.
திருமண சடங்கு, சம்பிரதாயங்கள் முக்கியமானவைதான். ஆனால் அதற்கு பிந்தைய வாழ்க்கை என்பது அதைவிட முக்கியமானது. உடல், மன பொருத்தமற்ற திருமணமாக இருந்தாலும் ஆயிரம் சாஸ்திரம் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நடந்தேறிவிடும். அதன்பிறகு சம்பிரதாயங்களை மதித்து நடக்கவேண்டும். இல்லாவிட்டால் சமூக பழிக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சுறுத்தலுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர்கள் அவல வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
‘பிரி மேரிட்டல் கவுன்சலிங்’ எனப்படும் திருமணத்திற்கு முந்தைய பாலியல்- மன- உடல் சார்ந்த ஆலோசனைகள் பெரும்பாலான ஜோடிகளுக்கு வழங்கப் படுவதில்லை. அதைப்பற்றி பேசவே வெட்கப்படுகிறார்கள். வலைத்தளங்களில் பார்க்கும் தாறுமாறான விஷயங்களை அவர்கள் நம்புகிறார்கள். அது வாழ்க்கைக்கு உதவுவதில்லை. இதனால் பல சிக்கல்கள் உருவாகி, தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படும்.
வாழ்க்கைக்கு அவசியமான ஒரு விஷயத்தை இவ்வளவு ரகசியமாக வைத் திருக்க வேண்டிய அவசியமில்லை. திரு மணத்திற்கு முன் மருத்துவரை சந்தித்து தெளிவு நிலையோடு அவர்கள் புது வாழ்க்கையை தொடங்கவேண்டும்.
வலைத்தளங்களில் பார்க்கும் எந்த ஒரு விஷயமும் விஞ்ஞானரீதியான கல்வியாகாது. பல தவறான தகவல்கள் அதன் மூலம் வந்தடைகிறது. அதுதான் உண்மையிலே வாழ்க்கையை தவறான பாதையில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது. பாலியல் கல்வி வேண்டாம் என்று வாதாடுபவர்கள், தம்பதிகளுக்குள் பிரச்சினை வந்த பின்பு, எந்த டாக்டரை சந்தித்தால் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று ஓடோடிச் செல்கிறார்கள். அப்படியொரு அவலம் ஏற்படாமல் இருக்க திருமணத்திற்கு முன்பே முறையான மருத்துவ பரிசோதனை அவசியம். ஆண்-பெண் இருவரும் கட்டாயம் அதை செய்துகொள்ளவேண்டும். தான் மணம் செய்துகொள்ளப் போகிறவர் திருமண வாழ்க்கைக்கு ஏற்றவர் தானா என்பதை டாக்டர் மூலம் அறிந்துகொள்ள ஆண், பெண் இருவருக்குமே உரிமை இருக்கிறது. அவர்கள் தகுதிக் குரியவர்களாக இல்லாமல் போனால் திரு மணத்தில் இருந்து விலகிக்கொள்ளலாம். அதன் மூலம் வம்பு, வழக்கு, விவாதம், மனஉளைச்சல் இதையெல்லாம் தவிர்க்கலாம். திருமணம் செய்து வைப்பது மட்டும் பெற்றோர் கடமை அல்ல. அதன்பின் வரும் நீண்ட வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்து தருவதும் பெற்றோரின் கடமைதான்.
என் மகள் ஜாதகத்தை தருகிறேன். உன் மகன் ஜாதகத்தைக்கொடு என்று உரிமையோடு கேட்பவர்கள், அதேபோல மருத்துவ பரிசோதனையையும் பரிமாறிக்கொள்ள வேண்டும். இது முறைப்படுத்தப்பட்டால் பல திருமண முறிவுகளை தடுக்கலாம். குறையுள்ள ஒரு பொருளை தரவும் முடியாது. பெறவும் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். திருமணத்திற்கு பின் மணமகளைப் பார்த்து ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்பவர்களுக்கு மணமகனைப் பற்றிய எந்த விஷயமும் தெரிவதில்லை. ஆணோ, பெண்ணோ குறையுள்ளவராக இருக்கும்போது எப்படி ‘விசேஷம்’ உருவாகும். முந்தைய காலத்தில் ஆண், பெண்ணிடம் பாலியல்ரீதியான குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வழியில்லாமல் இருந்தது. அதனால் உண்மைகளை மறைத்து திருமணம் செய்துவைத்தார்கள். இப்போது மருத்துவதுறை வளர்ந்துவிட்டது. பெரும்பாலான குறைகளை சரிசெய்துவிடலாம். அதனால் உண்மைகளை மறைக்கவேண்டியதில்லை. ஒத்துக்கொண்டு நிவர்த்தி செய்திட வாய்ப்பிருக்கிறது.
ஒருவர் எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு ஏற்றவர் இல்லை என்று தெரியவரும் போது திரு மணத்தை ரத்து செய்துக்கொள்ளலாம் என்கிறது சட்டம். அப்படியானால் தாம்பத்ய உறவு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரிந்துகொள்ளுங்கள்.
மணமகனுக்கு குடிப்பழக்கம் உள்ளதா?
சிகரெட் மற்றும் போதைப் பொருள் வழக்கம் உள்ளதா?
ஏதேனும் பால்வினை நோய் உள்ளதா?
தாம்பத்ய உறவுக்கு தகுதியானவர் தானா?
ஏதேனும் நோய் தொற்று உள்ளதா?
மனதளவில் ஆரோக்கியமானவரா?
இதயம் பலவீனமானவரா?
இதற்கு முன் ஏதேனும் பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா?
இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடைகளை தேடி கண்டுபிடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முன்வாருங்கள். அத்தகைய திருமண வாழ்க்கையே வெற்றிகரமாக அமையும்.

நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
அழகாக திகழ வேண்டுமெனில், இரவில் படுக்கும் முன், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கும் சோம்பேறித்தனம் அதிகம் இருப்பதால், வீட்டிற்கு சென்றதுமே, கைக்கால்களைக் கூட கழுவாமல், அப்படியே சாப்பிட்டு, தூங்கிவிடுவோம். ஆனால் பெண்களை எடுத்துக் கொண்டால், இரவில் படுக்கும் முன் பல்வேறு பராமரிப்புக்களை தங்களின் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கொடுப்பார்கள்.
அதனால் தான் அவர்களுக்கு சருமம் மற்றும் கூந்தலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை. இருப்பினும் நம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படுக்கும் போது செய்வோம். அந்த தவறுகளைத் தவிர்த்தால், நிச்சயம் நீங்கள் அழகாக காட்சியளிக்கலாம்.
சில பெண்கள் இரவில் படுக்கும் போது முடியை விரித்துப் போட்டு, அதன் மேல் தூங்குவார்கள். இப்படி முடியின் மீது நாம் தூங்கினால், உராய்வின் காரணமாக மயிர்கால்கள் வலிமையிழந்து, அதனால் பல்வேறு முடி சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்
இரவில் படுக்கும் முன் ஆல்கஹால் அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி ஆல்கஹால் அருந்தி படுத்தால், இரவில் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் சரும செல்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். எனவே அழகாகத் திகழ வேண்டுமெனில் இப்பழக்கத்தைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
சிலர் தூங்கும் போது குப்புற படுப்பார்கள். அப்படி குப்புறப் படுத்தால், சருமம் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக மார்பகங்கள் வடிவிழந்து தொங்க ஆரம்பித்து, சுருக்கங்களைப் பெறும். எனவே நேராகவோ அல்லது இடது பக்கம் திரும்பியோ படுக்க பழகுங்கள்.
பகலில் தான் அலுவலகத்தில் ஏசியில் இருந்து சாகிறீர்கள் என்றால், இரவில் கூடவா ஏசி வேண்டும். இப்படி எந்நேரமும் ஏசியிலேயே இருந்தால், சரும செல்கள் தான் அதிகமாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி, எப்போதும் ஏசியில் இருப்போருக்கு சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முற்றிலும் வெளியேற்றப்பட்டு, சரும வறட்சி அதிகரித்து, சருமமானது முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்
எந்நேரமும் மொபைலைப் பார்த்தவாறு இருந்தால், அதனால் கண்கள் பொலிவிழந்து, கருவளையங்களுடன் தான் காணப்படும். மேலும் இரவில் காதலி அல்லது காதலுடன் நீண்ட நேரம் போனில் மொக்கைப் போட நன்றாகத் தான் இருக்கும். ஆனால் போனின் திரை தான் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதால், அதனை முகத்தின் அருகே வைக்கும் போது, பருக்கள் அதிகம் வரும். இவ்வளவு பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமெனில், நள்ளிரவு சாட்டிங்கை முதலில் நிறுத்துங்கள்.
தலையணை உறையை மாற்றாமல் இருப்பது அழகாக இருக்க வேண்டுமென்று விரும்பினால், வாரம் ஒருமுறையாவது தலையணை உறையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அதில் சேர்ந்துள்ள அழுக்குகளின் மூலமே முகத்தில் பருக்கள் மற்றும் தலையில் பொடுகு வர ஆரம்பித்துவிடும்.

பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது சரியா? சரியில்லை என்றால், எந்த அளவு தர வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.
குழந்தைப் பருவத்தில் புறங்கையில் வழிய வழிய வெண்ணெய் சாப்பிட்ட தலைமுறைதான், இன்றைக்கு முப்பதுகளில் இருக்கிறது. பருப்பு சாதத்திலும் வற்றல்குழம்பு சாதத்திலும் உருக்கிய நெய்யைத் தளரவிட்டு, கையும் வாயும் மணக்க மணக்கச் சாப்பிட்டவர்களும் மேலே சொன்ன தலைமுறைதான். இடையில் ஏற்பட்ட கொழுப்புப் பயத்தில், வெண்ணெயையும் நெய்யையும் சாப்பிடுவதை அவர்கள் நிறுத்தியதோடு, அடுத்தத் தலைமுறைக்கும் இவற்றைத் தருவதை நிறுத்திவிட்டார்கள். சில வீடுகளில், பாலையும் நிறுத்திவிட்டார்கள். இப்படிப் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் குழந்தைகளுக்குத் தவிர்ப்பது சரியா? சரியில்லை என்றால், எந்த அளவு தர வேண்டும்? எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும்? என்று பார்க்கலாம்.
''ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்கும் பால், வெண்ணெய், நெய் மூன்றையும் கட்டாயம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், வளரும் மற்றும் பதின் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தேவையான புரதம் மற்றும் கொழுப்பு, இந்த மூன்று உணவுப் பொருள்களில் தாராளமாக இருக்கின்றன. புரதம், குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் கொழுப்பு, ரத்த நாளங்கள் போன்ற நுண்ணுறுப்புகளின் வளர்ச்சிக்கும் தேவை.
டாக்டர் வேலாயுதம்சிலர், வெண்ணெய் மற்றும் நெய்யைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடற்பருமனாகிவிடுவார்களோ என அச்சப்படுகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? ஓட்டமும் விளையாட்டுமாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மூன்றையும் செரிமானம் செய்யும் அளவுக்கு ஜீரண சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். இதனால், வெண்ணெயிலும் நெய்யிலும் இருக்கும் புரதமும் கொழுப்பும் எனர்ஜியாக மாறி, பிள்ளைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வெண்ணெயும் நெய்யும் குழந்தைகளை குண்டாக்கிவிடும் என்றே பயமே தேவையில்லை.
நம் ஊரில் வெயில் காலம்தான் நீண்டதாக இருக்கிறது. இதனால், குழந்தைகள் உடல் சூட்டால் கஷ்டப்படுவார்கள். சித்த மருத்துவத்தின்படி, வெண்ணெய் நம் உடலை குளிர்ச்சிப்படுத்தக்கூடியது. இதில், சர்க்கரையைக் கொட்டி, க்ரீமாக மாற்றி கேக்குடன் சாப்பிடும்போதுதான் கேடு தரும் உணவாக மாறிவிடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு, மாரடைப்பை ஏற்படுத்தும். அதனால், குழந்தைப் பருவத்திலேயே அவாய்டு செய்துவிடலாம் என நிறைய அம்மாக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். உண்மை தெரிந்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து அம்மாக்களும் உணவில் சேர்த்துக்கொள்வார்கள். நெய்யில் இருக்கும் கொழுப்பானது, ரத்த நாளங்களின் உள்சுவர்களில் படியாத தன்மையைக்கொண்டது. அப்புறம் எப்படி ரத்தநாளங்களின் உள்சுவரை சுருக்கி, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும்?
நெய்யைச் சாப்பிடுவதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. வெண்ணெயைக் காய்ச்சும்போது, முருங்கையிலையைப் போட்டுக் காய்ச்சுவார்கள். முருங்கையிலையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்ஸ், நெய்யில் இருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை தனித்தனியே பிரித்துவிடும். சுடு சாதத்தில் போட்டுப் பிசையும்போதும், தோசையைச் சுற்றிலும் விடும்போதும் நெய்யானது உருகி, மறுபடியும் அதன் கொழுப்பு மூலக்கூறுகள் தனித்தனியாக பிரிய ஆரம்பிக்கும். இந்த முறையில் நெய்யை உங்கள் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு டீஸ்பூன் அளவுக்குக் கொடுத்துவந்தால், அவர்களின் உடம்பு, தேவையான சத்துக்களை உணவுகளிலிருந்து பெற்று வலுவாக மாறும். ஜீரணத் தொந்தரவுகள் வராது, மந்தமும் ஏற்படாது.
நெய்க்கு இன்னொரு நல்லத்தன்மையும் இருக்கிறது. குழந்தைகளின் சின்னச் சின்ன எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் இடையில் நல்ல லூப்ரிகேஷனை ஏற்படுத்தும். பெண்களுக்கும் கை, கால் மற்றும் கழுத்து எலும்புகளில் முப்பதுகளிலேயே வரக்கூடிய ஸ்பான்டிலிட்டிஸ் பிரச்னைகளைத் தடுக்கும்.
நார்மலான உடல்வாகுகொண்ட பெண்கள், நாளொன்றுக்கு 10 மில்லிகிராம் நெய் எடுத்துக்கொள்ளலாம். 5 முதல் 15 வயதுக்குள்ளான குழந்தைகள் என்றால், தினமும் 25 கிராம் எடுத்துக்கொள்ளலாம். வெண்ணையையும் இதே அளவில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளும் சரி, பெண்களும் சரி, இரண்டு கப் பால் தினமும் சாப்பிடலாம். ஆனால், வெள்ளைச் சர்க்கரை கூடவே கூடாது. அதற்குப் பதில் பனங்கற்கண்டும் மஞ்சள்தூளும் சேர்த்துத் தர வேண்டும். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால், நெய் இரண்டும் தரலாம். வெண்ணெய் மட்டும் கூடாது. செரிமானம் ஆகாது'' என்கிற மருத்துவர் வேலாயுதம், வெண்ணெயையும் நெய்யையும் வாங்கியதில் இருந்து எவ்வளவு நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம் என்பதுப் பற்றியும் சொன்னார் .
''வெண்ணெயோ, நெய்யோ அதை உருவாக்கியதில் இருந்து 3 மாதங்கள் வரை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதன்பிறகு அவற்றில் இருக்கிற நல்லத்தன்மைக் குறைய ஆரம்பித்து விடும் என்பதால், குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படுத்தி விடும். லேசான மஞ்சள் நிறத்துடன் இருக்கிற வெண்ணெயும், மஞ்சள் நிறத்துடன் மணல் மணலாக இருக்கிற நெய்யும்தான் பசு வெண்ணெய் மற்றும் பசு நெய். இதுவே குழந்தைகளுக்கு ஏற்றதும்கூட.''

இது புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் இது வழக்கமான பானங்களிலிருந்து வேறுபட்டது. உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர் ஜூஸ்.
தேவையான பொருட்கள்
நுங்குத் துண்டுகள் தோல் உரித்து நறுக்கியது - 1 கப்
இளநீர் - 1/2 கப்
வெல்லம் பொடித்தது - 2 டீஸ்பூன்
இளநீர் வழுக்கைத் துண்டுகள் - சிறிதளவு.
செய்முறை
மிக்சி பிளெண்டரில் நறுக்கிய நுங்கு, இளநீர், வெல்லம், இளநீர் வழுக்கையை சேர்த்து அரைக்கவும்.
அரைத்த ஜூஸை சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்த பிறகு அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே சில நுங்கு துண்டுகளை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
குளுகுளு நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.

டைபாய்டு, மலேரியா போன்றவை தொற்று நோய்கள் தான். இது உண்மை. ஆனால் இவற்றால் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதேநேரம் சில தொற்று நோய்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.

‘ஹெலிகோபாக்டர் பைலோரி' எனும் கிருமி காரணமாக இரைப்பை புண் ஏற்படுவதுதான், தற்காலத்தில் அதிகம். அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும். அதனை அருந்துபவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும். இதற்கு சிகிச்சை எடுக்க தவறினால், நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும். மற்றவர்களைவிட இந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். அடிக்கடி இரைப்பை புண் தொல்லை கொடுத்தால் ஒருமுறை ‘எண்டோஸ்கோப்பி’ பரிசோதனை செய்து, ‘ஹெலிகோபாக்டர் பைலோரி' கிருமி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்து விடக்கூடாது.
ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலை தாக்கும்போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும். இந்த நோய் கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து, பெண் பிறப்புறுப்பு திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் அது தொற்றுகிறது. பாலுறவு மூலம் இது மற்றவர்களுக்கு பரவும்.
இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கும் இந்த நோய் வருகிறது. இது நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோயாக மாறி, பின்னர் புற்றுநோயாக உருவெடுக்கும். ஹெப்படைடிஸ் பி மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி உள்ளது. குழந்தை பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளாமல் இருந்தால், வளர்ந்த பிறகும் போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
இதேபோல் ‘ஹெச்.பி.வி. பை வேலன்ட் தடுப்பூசி'யை பெண்கள் 10 வயது முடிந்ததும் முதல் தவணை போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணை, ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையை போட்டுக்கொள்ள வேண்டும்.
‘ஹெச்.ஐ.வி.’ தொற்று காரணமாக எய்ட்ஸ் நோய் ஏற்படும். இந்த நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் குறைந்து போவதால் தோல், நிணநீர் கணுக்கள், கல்லீரல், கருப்பை வாய் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருந்து, இந்த வைரஸ் கிருமிகளுக்கு எதிரான மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால், இந்தப் புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுத்துவிடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் பெரும்பாலும் இயந்திரங்கள் போல் பணியாற்றிக்கொண்டிருப்பதால், நேரத்தை சரிவர கணிக்காமல் வெகுநேரம் சிறுநீர் கழிக்காமலே இருந்துவிடுகிறார்கள்.
பெண்கள் பொதுவாக தாங்கள் செய்யும் வேலைகளில் அப்படியே மூழ்கிவிடுகிறார்கள். அப்படி மூழ்கிவிடும்போது தன்னையே மறந்துவிடுகிறார்கள். அப்போது உணவு பற்றியோ, இயற்கையான இதர விஷயங்களை பற்றியோ அவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
பெண்களின் உடல் நிலை எப்படி எல்லாம் பாதிக்கப்படும் தெரியுமா?
வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள் பெரும்பாலும் இயந்திரங்கள் போல் பணியாற்றிக்கொண்டிருப்பதால், நேரத்தை சரிவர கணிக்காமல் வெகுநேரம் சிறுநீர் கழிக்காமலே இருந்துவிடுகிறார்கள். டாய்லெட் போவதற்கு விரும்பாத அவர்கள் அதனால் தண்ணீரும் பருகுவதில்லை. இந்த மாதிரியான பழக்கம் கொண்டவர்கள் சிறுநீர் தொற்று மற்றும் சிறுநீர் பையில் கற்கள் ஆகிய இரண்டு பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள்.
கவனிக்க வேண்டியவை: தேவையான அளவு தண்ணீர் பருகவேண்டும். சிறுநீரை அடக்கிவைக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிடவேண்டும்.
சில பெண்கள் நேரத்துக்கு உணவு உட்கொள்வதி்ல்லை. காலையில் அவசர அவசரமாக உணவு தயாரித்துவிட்டு, அலுவலகத்திற்கு கிளம்பும் அவர்கள் முதலில் காலை உணவை தவிர்த்துவிடுகிறார்கள். காலை உணவை நேரத்துக்கு சாப்பிடும் சிலர், மதிய நேரங்களில் வேலையில் மூழ்கியபடி மதிய உணவுக்கு விடைகொடுத்துவிடுகிறார்கள். இப்படி உணவை தவிர்ப்பவர்கள் வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். அசிடிட்டி தொந்தரவு, இரைப்பையில் உள்ள உணவுத் துணுக்குகள் உணவுக் குழாய்க்கு மேல் எழுப்பி எரிச்சலையும்- குமட்டலையும் உருவாக்குதல், ஜீரணக் கோளாறு போன்றவை தோன்றும். நேரத்திற்கு உணவு சாப்பிடாதவர்களில் சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு சரியில்லாமல் ஆகி, கழிப் பறையை நோக்கி செல்லவேண்டிய அவஸ்தையும் உருவாகும்.
கவனிக்க வேண்டியவை: எவ்வளவு அவசரமும், பரபரப்பும் இருந்தாலும் காலை உணவை நேரத்துக்கு சாப்பிட்டுவிடுங்கள். நீங்கள் காலை உணவை தவிர்க்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் உடலை பலவீனமாக்கி, நோய்களுக்கு வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். காலை உணவுக்கும்- மதிய உணவுக்கும் இடையில் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள். இடைவேளை நேரங்களில் பிஸ்கெட், பழம் போன்றவைகளை சாப்பிடுங்கள். நேரத்துக்கு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும், இளமைக்கும் அவசியமானது.
கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவைகளை பயன்படுத்தி வேலைபார்க்கும் பெண்கள் தேவையான அளவு அவ்வப்போது ஓய்வெடுக்காவிட்டால் முதுகு வலி, கழுத்து வலி போன்றவைகளால் அவதிப்படுவார்கள். ஒரே நிலையில் இருந்தால் தசைகள் இறுக்கமாகிவிடும். அந்த இறுக்கம்தான் உடலில் ஏற்படும் பல்வேறு விதமான வலிகளுக்கு காரணம். கம்ப்யூட்டரில் மணிக் கணக்கில் வேலை பார்ப்பவர்களுக்கு முதுகெலும்பு, கழுத்தெலும்பு, கை எலும்புகள், கண்களிலும் பாதிப்பு ஏற்படும். அத்தகைய பாதிப்புகள் அவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி, நோயாளிகளாக மாற்றிவிடும்.
கவனிக்க வேண்டியவை: எப்போதும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி உட்காரவேண்டும். முதுகின் பின்பகுதி இருக்கையுடன் ஒட்டியநிலையில் அமையவேண்டும். கால் பாதங்கள் தரை அல்லது பலகையில் பதிந்திருக்கவேண்டும். கால்களை தொங்கப்போட்ட நிலையிலோ, கால்களை இருக்கையிலே மடக்கிவைத்த நிலையிலோ அமரக்கூடாது. தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலைபார்க்காமல் சிறிது நேரம் எழுந்து நிற்கவேண்டும். பின்பு சிறிது தூரம் நடக்கவேண்டும். இவ்வாறு செய்து உடலை நெகிழ்வாக்கிக்கொள்ளவேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தினை இடதும், வலதுமாக சற்று திருப்பி கழுத்தின் இறுக்கத்தை குறைத்தால், கழுத்து வலி தோன்றுவதை தவிர்க்க முடியும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.
மனஅழுத்தம் பெண்களுக்கு இப்போது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வீட்டுப் பிரச்சினைகளும், வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சினைகளும் சேர்ந்து அவர்களுக்கு மனஅழுத்தத்தை தருகிறது. இதனால் மற்றவர்கள் மீது கோபம், எரிச்சல் போன்றவை தோன்றும். குடும்ப உறவிலும் அது சிக்கலை உருவாக்கும். இந்த மனஅழுத்தத்தை சரிவர கையாண்டு, அதில் இருந்து மீளாவிட்டால் அது லைப் ஸ்டால் ேநாய்கள் உருவாக காரணமாகிவிடும். மன அழுத்தம் நீங்காவிட்டால் அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை தோன்றிவிடும்.
கவனிக்கவேண்டியவை: இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள ரிலாக்ஸ்சிங் டெக்னிக்கை கையாளவேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ளவேண்டும். அடிக்கடி மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விடவேண்டும். இதன் மூலம் மனதும், உடலும் இலகுவாகும். எப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தோன்றினாலும் அப்போதெல்லாம் ஆழமான சுவாசத்தை ஏற்படுத்துங்கள். தினமும் எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்குவதும் மிக அவசியம்.
இரவுப் பணி, காலைப் பணி என்று அடிக்கடி மாறும் ஷிப்டுகள் பெண்களின் உடல் நிலையை கடுமையாக பாதிக்கும். அவர்கள் தூங்க முடியாமலும் தவிப்பார்கள். ஒற்றைத் தலைவலியும் அவர்களை அடிக்கடி தாக்கும். எப்போதும் சோர்வாகவே இருப்பதாகவும் உணர்வார்கள்.
கவனிக்க வேண்டியவை: ஒரே மாதிரியான ஷிப்டை ஒரு மாதமாவது தொடர்ந்து கடைப்பிடியுங்கள். இரவில் வேலை என்றால் பகலில் நன்றாக தூங்கும் சூழ்நிலையை உருவாக்குங்கள். சரியான நேரத்திற்கு சமச்சீரான சத்துணவையும் உட்கொள்ளுங்கள்.

இணையதளத்தில் குழந்தைகளை கவரும் மின் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் அவர்களுக்கு பிடித்தமான கதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலான நேரத்தை செல்போன், கணினியில் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை கட்டுப்படுத்த புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை பின்பற்றவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
தற்போது பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போனில் பொழுதை போக்குவதற்கே ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய குழந்தைகளிடம் கவனச் சிதறல், சோம்பல், மந்தநிலை, பிடிவாதம், பொறுப்பின்மை போன்றவை உருவாகிவிடுகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வாசிப்பு பழக்கம் கைகொடுக்கும்.
வாசிப்பு என்பது வெறும் தகவல்களை தெரிந்து கொள்வது மட்டும் அல்ல. அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவும். சத்தமாக வாசிப்பது பேச்சாற்றலை தூண்ட உதவும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எட்டு மாதத்திலேயே குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாம். குழந்தை புரிந்து கொள்ள தொடங்கியதும் அதன் முன்பு சத்தமாக பேச வேண்டும். அந்த சத்தத்தை குழந்தைகள் உற்று கவனிக்கும். புத்தகங்களில் இருக்கும் கதைகளை சத்தமாக வாசித்து சொல்லலாம். புலி, சிங்கம் போன்ற எல்லா கதைகளுமே குழந்தைகளை ஈர்க்கும்.
உதாரணமாக, விசித்திரமான கதைகள் குழந்தைளுக்கு ரொம்ப படிக்கும். அதனை விரும்பி கேட்பார்கள். அதில் இடம் பெறும் கதாபாத்திரங்களை எளிதான மனதில் பதிய வைத்துவிடுவார்கள். அவற்றின் பெயர்களை உச்சரித்து சொல்லிக்கொடுத்தால் சட்டென்று புரிந்துகொள்வார்கள். அவற்றின் உருவமும் மனதில் எளிதில் பதிந்துவிடும். கதை சொல்லி முடித்ததும் புத்தகத்தில் இருக்கும் படக்காட்சிகளை அப்படியே வரைவதற்கு பயிற்சி கொடுக்கலாம். அப்படி வரையும்போது கதையில் இடம் பெறும் சம்பவங்களை மீண்டும் விளக்கி சொல்லலாம். அதன் மூலம் கதை கேட்கும் ஆர்வமும், அதில் இடம்பெறும் கதாபாத்திரங்களை வரைந்து பார்க்கும் ஆர்வமும் மேலிடும்.
குழந்தைகள் புதிய கதைகளை தேடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பிரிண்டிங் செய்யப்பட்ட புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் என்றில்லை. அதனை படிப்பதற்கு ஆர்வம் குறைவாக இருந்தால் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம். இணையதளத்தில் குழந்தைகளை கவரும் மின் புத்தகங்கள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் அவர்களுக்கு பிடித்தமான கதை புத்தகங்களை தேர்ந்தெடுத்து கொடுத்து, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.