search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை பயமுறுத்தும் கனவுகள்
    X
    குழந்தைகளை பயமுறுத்தும் கனவுகள்

    குழந்தைகளை பயமுறுத்தும் கனவுகள்

    தூக்கத்தில் கனவு பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, களைப்பு, ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்றவை பொதுவான காரணங்களாகும்.
    இரவில் தூங்கும்போது கனவு காண்பது இயல்பானது. குழந்தைகளும் இரவு தூக்கத்தில் கனவு காண்பார்கள். அவர்களை பயமுறுத்தும் கனவுகள் என்றால் அலறி எழுந்து அழுவார்கள். இப்படிப்பட்ட சம்பவம் எப்போதாவது நிகழ்ந்தால் பிரச்சினையில்லை. அடிக்கடி குழந்தைகள் இதுபோன்று விழித்து அலறினால் அதனை கவனித்து தீர்வு காணவேண்டும்.

    இத்தகைய குழந்தைகளிடம் இரவில் அழுததற்கான காரணத்தை கேட்டால் பதிலளிக்க மாட்டார்கள். ஏன்என்றால் அந்த கனவே அவர்களின் நினைவில் இருக்காது. இரவு தூக்கத்தில் கனவு பயம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், சோர்வு, களைப்பு, ஏதேனும் நோய்க்கு மருந்து சாப்பிடுவது போன்றவை பொதுவான காரணங்களாகும். காய்ச்சல் அல்லது உடலில் அதிக வெப்பநிலை, மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவது, சரியாக தூங்க முடியாமல் அவதிப்படுவது போன்றவையும் காரணமாக அமையலாம்.

    காய்ச்சல் காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்புகளும் பயத்தை உருவாக்கலாம். இரவில் தூங்கும்போது திடீரென்று சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதும் தூக்கத்தை கலைத்து பயத்தை உண்டாக்கலாம். அதிக வெளிச்சம், இரைச்சல் போன்ற சூழல்களும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும்.

    தூக்கத்தில் நடப்பது, தூங்கும்போது வேகமாக சுவாசிப்பது, அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது, கை, கால்களை ஆக்ரோஷமாக அசைப்பது, வித்தியாசமான சுபாவங்களை வெளிப்படுத்துவது, பயத்தில் உறைந்து போவது போன்ற அறிகுறிகளை குழந்தைகள் வெளிப்படுத்தினால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும்
    குழந்தை
    கள் தூக்கத்தில் காணும் கனவால் பயந்துபோய் எழுந்தாலும் உடனேயே மீண்டும் தூங்கிவிடுவார்கள்.

    அப்படி தூக்கம் வராவிட்டால் மனக்குழப்பம் அடைவார்கள். மீண்டும் தூங்குவதற்கு முயற்சிப்பார்கள். அப்போது அவர்களை எழுப்ப முயற்சிக்க வேண்டாம். பயத்தில் எழுந்து அலறிக்கொண்டிருந்தால் அவர்களை ஆசுவாசப்படுத்தலாம். அவர்களை அரவணைத்து தலைமுடியை கோதிவிட்டு தூங்க வைக்கலாம். பெற்றோர் அருகாமையில்தான் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்குள் தோன்றும். பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள்.

    தூங்க செல்வதற்கு முன்பு சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். அது தூக்கத்தில் எழும் வழக்கத்தை தவிர்க்க உதவும். சாப்பிடாமல் குழந்தையை தூங்கவும் அனுமதிக்கக்கூடாது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு குழந்தைகளுக்கு ஏதாவதொரு கதை சொல்லுங்கள். அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியிலே ஆழ்ந்து தூங்கிவிடுவார்கள்.
    Next Story
    ×