search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதியோர் பராமரிப்பில் கவனம் செலுத்துங்க...
    X
    முதியோர் பராமரிப்பில் கவனம் செலுத்துங்க...

    முதியோர் பராமரிப்பில் கவனம் செலுத்துங்க...

    நம் முன்னோர்களான முதியவர்கள் நமக்காக உழைத்தவர்கள், அவர்களை நாம் பராமரிக்க வேண்டியது நமது கடமை. அவர்களது தேவை அறிந்து செயல்படுவது மிக முக்கியம்.
    நம்பிக்கையை வளருங்கள்

    60 வயதை கடந்தாலே வாழ்க்கை மீதுள்ள நம் பிக்கை இல்லாது போய்விடும். சுற்றி இருப்பவரிகளிடம் இருந்து விலகி தனிமையை உணரத்தொடங்குவார்கள் என்பதால் முதலில் தனிமை எண்ணத்தை போக்க வேண்டும். பிள்ளைகள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவர்களுக்கு துணையாக இருக்க வேணடும். நேரம் கிடைக்கும் போது அவர்களை சுற்றி அமர்ந்து சிரித்து பேசி மகிழ்ச்சியூட்ட வேண்டும். அது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுடன் புது உற்சாகத்தை கொடுக்கும்.

    அறிவியல் வளர்ச்சி அவசியம்...

    இன்றைய நவீன உலகில் முதியவர்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கணினி, அலைபேசி போன்ற அறிவியில் கண்டுபிடிப்புகளுடன் தங்களை இணைத்து கொள்வதில் முதியர்களிடத்தில் பல்வேறு தயக்கங்கள் உள்ளன. இதனால் பலர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். எனவே அவர்களை மதித்து அறிவியல் வளர்ச்சிகளை அவர்கள் கையாள தேவையானவற்றை கற்கு கொடுத்து அவர்களை ஒன்றிணையுங்கள்.

    ஆரோக்கியம் அவசியம்

    60 வயதை கடக்கும் போது பலருக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் வரும். தகுந்த கால இடைவெளியில் முதியவர்களுக்.க மருத்துவ ஆலோசனைகள் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு என அனைத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனரீதியான பிரச்சனை இருப்பவர்களாக இருந்தால் தொடக்க நிலையிலேயே அவற்றை கண்டறிந்த தேவையான மருத்துவ ஆலோசனைகள் அளித்து இயல்பா சூழலை ஏற்படுத்துங்கள்.

    உணவு, உடற்பயிற்சி

    வயதுக்கேற்ற உணவு உட்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேவையான சத்தான உணவுகளை வழங்க வேண்டும். அன்றாட உணவில் வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் மட்டுமினறி காய்கறிகள், பழங்களை கட்டாயம் சேர்த்துக்கொளள் வேண்டியது அவசியம். அதே நேரத்தில் எளிதில் செரிமானமாகும் ணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

    புத்துணர்வுப்பயிற்சிகள்

    வயதானவர்களுக்கென புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சிரிப்பு பயிற்சி, யோகா, தியானம், புத்தகம் படிப்பத, நாடகங்கள் இயக்குவது என்று பல்வேறு விஷயங்கள் கற்று தரப்படுகின்றன. இவற்றில் அவர்களுக்கு பிடித்த ஏதோ ஒரு பயிற்சியில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் எப்போதும் புத்துணர்வுடன் செயல்பட முடியும்.

    நேரம் ஒழுக்குங்கள்.

    இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளுவும அதனால் ஏற்படும் மனஅழுத்தமும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதிலிருந்து விடுபட கட்டாயம் சிறிது மாற்றம் அனைவருக்கும் தேவை. தினமும் முதியவர்களுடன் பேசி, அவர்களது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள நேரம் ஒழுக்குங்கள். இது அவர்களுக்கு பெரிய பலத்தை கொடுக்கும்.

    பணப்பாதுகாப்பு

    முதியவ்ர்கள் பலருக்கும் பொருளாதார ரீதியான பாதுகாப்பின்மை மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். தனக்கான சிறிய தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்திக்கிறோம் என்கிற எண்ணம் அவர்களை பாதிக்கும். எனவே அவர்களுக்கென சிறுசேமிப்பு, காப்பீடு போன்றவற்றை தொடங்குங்கள். இதுபோன்ற அடிப்படை தேவைகளை கண்டறிந்து நிறைவேற்ற வேண்டும். இது அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
    Next Story
    ×