என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கற்பூரவல்லி இலைகள் - கைப்பிடி
    துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
    டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
    பனங்கற்கண்டு அல்லது தேன் - தேவைக்கு

    செய்முறை


    கற்பூரவல்லி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    கொதித்ததும் வடிகட்டி அத்துடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

    சூப்பரான கற்பூரவல்லித் தேநீர் ரெடி.
    அடிக்கடி ஷாப்பிங் செல்வதும், தேவையில்லாவிட்டால்கூட ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவித்துக்கொண்டிருப்பதும் ‘ஷாப்பிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஒருவகை மனநிலை பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும்.
    ஷாப்பிங் செல்லவேண்டும் என்றாலே பெண்களும், குழந்தைகளும் குஷியாகிவிடுவார்கள். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பவர்களுக்கு வெளியே செல்லும் சந்தர்ப்பத்தை ஷாப்பிங் ஏற்படுத்தி கொடுப்பதால் குதூகலமாகிவிடுகிறார்கள். மனதுக்கு பிடித்தமானதை வாங்க போகிறோம் என்றதும் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிளர்ந்தெழும். ஆனால் அடிக்கடி ஷாப்பிங் செல்வதும், தேவையில்லாவிட்டால்கூட ஏதாவது ஒரு பொருளை வாங்கி குவித்துக்கொண்டிருப்பதும் ‘ஷாப்பிங் டிஸ்ஆர்டர்’ எனப்படும் ஒருவகை மனநிலை பாதிப்பிற்கு வழிவகுத்துவிடும். அது மட்டுமின்றி தேவையற்ற ஷாப்பிங்கால் ஏராளமான பொருள் இழப்பும் உருவாகிவிடும்.

    பொருட்களை வாங்கிக் குவித்துகொண்டே இருப்பவர்கள் ஷாப்பிங்குக்கு அடிமையாகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பணம் பற்றி சிந்திக்காமல் செலவளித்துக்கொண்டே இருப்பார்கள். ஷாப்பிங் அவர்களுக்கு பணத்தை இழக்கும் பொழுதுபோக்காக மாறிவிடும். தொடக்கத்திலேயே அவர்களது மனநிலையை சீராக்காவிட்டால், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது கடினமானதாகி விடும்.

    இது பற்றி லக்னோவை சேர்ந்த மனநல நிபுணர் நானுசிங் கூறுகையில்,‘‘ஒரு நபர் ஷாப்பிங் செல்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலர் ஒரே இடத்திலேயே எல்லா பொருட்களையும் வாங்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட கடை அல்லது சந்தைக்கு செல்லலாம். அது பிரச்சினைக்குரியதல்ல. தேவை அறிந்து பொருட்களை வாங்குவது வேறு. அவசியமற்ற பொருட்களை அள்ளிக்கொண்டு வருவது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

    ஆண், பெண் இருபாலருமே ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் பெண்கள்தான் ஷாப்பிங் கோளாறு பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதற்கு குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மீது அலாதி பிரியம் கொள்வது காரணமாக இருக்கலாம். அதனை அவசியமின்றி அடிக்கடி வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இந்த சுபாவம் மன நலத்தை மோசமாக பாதிக்கும்’’ என் கிறார்.

    ஷாப்பிங்குக்கு அடிமையாகி இருப்பவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

    * ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற வேகம் அவர்களிடம் காணப்படும்.

    * ஷாப்பிங் செய்த சிறிது நேரத்திற்கு, மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்ட மகிழ்ச்சி தோன்றும்.

    * கிரடிட் கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால் ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பில் தொகை செலுத்தாமல் இருப்பார்கள். அல்லது கார்டில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு பொருட்களை வாங்கி குவித்திருப்பார்கள். ஆனாலும் புதிதாக என்ன பொருள் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பார்கள்.

    * பிடித்தமான பொருட்களை வாங்கும்போது மற்றவர்களை விட அதிகப்படியான உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

    * தேவையற்ற பொருட்களை வாங்கும்போதும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். எந்த பொருள் பிடித்துவிட்டாலும் அதை வாங்கியே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள்.

    * ஷாப்பிங் செல்வதற்கு தேவையான பணம் இல்லா விட்டால், மற்றவர்களிடம் கடன் வாங்குவதற்கு தயங்க மாட்டார்கள். ஆனால் வாங்கிய தொகையை திருப்பி கொடுப்பதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள்.

    * மனவருத்தம் தரக்கூடிய ஏதாவதொரு பிரச் சினையை சந்தித்திருந்தால் அதில் இருந்து மீள்வதற்காகவோ, அதை மறப்பதற்காகவோ ஷாப்பிங் செல்வார்கள்.

    * ஏற்கனவே ஒரு தொகையை நிர்ணயித்துவிட்டு ஷாப்பிங் சென்றிருந்தாலும், பட்ஜெட்டை மீறி தாராளமாக செலவு செய்துவிட்டு கையை பிசைந்துகொண்டிருப்பார்கள்.
    நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.
    வளர்ந்து வரும் இன்றைய நவீன உலகில் பெற்றோர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக இருக்கிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சிறுவயது முதல் பெரியவனாகும் வரை தங்களது அரவணைப்பில் வளர்த்து ஆளாக்குகிறார்கள். அதாவது பிறந்ததில் இருந்து மூன்று வயது வரை அக்குழந்தைகளுக்கு பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

    அதற்கு பிறகு பள்ளிக்கூடங்களில் சேர்த்து கல்வி அறிவையும், மற்றவற்றை பற்றியும் அறிய வழி செய்கின்றனர். பள்ளிப் படிப்புடன் அவர்களுக்கு பாட்டு, நடனம், விளையாட்டு, கணிப்பொறி கல்வி போன்றவற்றையும் பகுதி நேரமாக கற்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், கல்லூரிகளில் சேர்த்து மேல் கல்வி பயிலவும் போராடுகின்றனர்.

    கல்லூரி படிப்பை முடித்தவுடன் அவர்களின் தகுதிக்கேற்ப ஒரு நல்ல வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு, நல்ல இல் வாழ்க்கையும் அமைத்து கொடுக்கின்றனர். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்றாலும், அவ்வாறான பெற்றோருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டாமா?. நம்மை சீராட்டி, பாலூட்டி, கல்வி கற்க வைத்து, வேலை வாய்ப்பு மற்றும் மண வாழ்க்கையும் ஏற்படுத்தி கொடுத்த பெற்றோரை இன்றைக்கு எத்தனை பேர் மதிக்கிறார்கள்.

    அவர்களின் தியாகத்தை போற்றுகிறார்கள். பலபேர் பெற்றோர் செய்த அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை நிர்கதியாக விட்டு விடுகிறார்கள். பல பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். ஆகவே, நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை நாம் மதிக்க வேண்டும். தாயும்-தந்தையும் நம் இரு கண்களை போன்றவர்கள். அவர்களது உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அவர்களது ஆயுட்காலம் வரை நம்மோடு வைத்துக் கொண்டு அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
    மனித உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கியதாகத்தான் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை அறிவோம்.
    மனிதர்களின் உடலில் பல அதிசயங்கள் இருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சிறப்புகளையும், அதிசயங்களையும் உள்ளிடக்கியதாகத்தான் இருக்கிறது. அவற்றில் சிலவற்றை அறிவோம்.

    மனித உடலில் உள்ள நரம்புகளின் மொத்த நீளம், சுமார் 72 மீட்டர்.

    நம் உடலில் உள்ள மொத்த ரத்தம் 5 லிட்டர். அது ஒரு நாளில், 30 கோடி கி.மீ. பயணிக்கிறது.

    நுரையீரல் ஒரு நாளில், 23 ஆயிரத்து 40 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியிடுகிறது. நுரையீரலில் 3 லட்சம் மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இதனை ஒன்றிணைத்தால் 2 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரம் இருக்குமாம்.

    இதயம், ஒரு நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 689 முறை துடிக்கிறது.

    மனித உடலில் சதை அழுத்தம் அதிகமாக உள்ள பகுதி, நாக்கு. அதில் சுவையை அறியக்கூடிய 3 ஆயிரம் செல்கள் உள்ளன.

    உடல் எடையில் 14 சதவீதம் எலும்பும், 7 சதவீதம் ரத்தமும் உள்ளது.

    நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு சிறுநீரகமும், ஒரு மில்லியன் வடிகட்டிகளை கொண்டிருக்கிறது.

    மனித கண்கள் 24 கிராம் எடை கொண்டது. ஆனால் அதற்கு 500 விதமான ஒளியை பிரித்தறியும் சக்தி உண்டு. கண்களின் தசை ஒரு நாளில், 1 லட்சம் முறை அசைகிறது. இந்த அசைவுக்கு நிகரான வேலையை உங்களுடைய கால்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால், நீங்கள் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு.

    மனிதன் ஒரு அடி நடப்பதற்கு, 200 தசைகளின் அசைவுகள் தேவைப்படுகின்றன.

    மனித மூளை 80 சதவீதம் நீரால் ஆனது. பகலை விட இரவில் அதன் செயல்திறன் அதிகமாக இருக்கும். சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது. நம்முடைய மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒருவர் 35 வயதை எட்டியது முதல் தினமும் 7 ஆயிரம் நரம்பு செல்கள் இறந்துகொண்டே வருமாம்.

    மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம், சுமார் 6 லட்சம் மைல்கள். இந்தத் தொலைவில் நாம் இந்த உலகத்தை இரண்டு முறை சுற்றி வந்துவிட முடியும்.

    மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய செல், பெண்ணின் கரு முட்டை. சிறிய செல், ஆணின் விந்து.

    மனிதன் இறந்தபிறகு, அவனுடைய கண்கள் 30 நிமிடங்களும், மூளை 10 நிமிடங்களும், கால்கள் 4 மணி நேரமும், தசைகள் 5 நாட்களும், இதயம் சில நிமிடங்களும் இயக்க நிலையிலேயே இருக்கும்.
    இன்றைய இளம் பெண்களுக்கு தங்கத்தால் செய்த அணிகலன்களை விட பேன்சி அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம்.ஆசைபட்டு வாங்கிய அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது தான் சவாலான வேலை.
    இன்றைய இளம் பெண்களுக்கு தங்கத்தால் செய்த அணிகலன்களை விட பேன்சி அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம். உடைகளுக்கு பொருத்தமான நிறத்திலும், வடிவங்களிலும் கிடைப்பதால் விதவிதமான பேன்சி அணிகலன்களை வாங்கி குவித்திருப்பார்கள். ஆசைபட்டு வாங்கிய அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது தான் சவாலான வேலை. அதிலும் அவசரமாக வெளியில் கிளம்பும் போது கம்மல்களை ஒன்றாக குவித்துப்போட்டிருக்கும் பெட்டியில் இருந்து சரியான ஜோடியை எடுத்து காதில் மாட்டுவதற்குள் பல நிமிடங்கள் கடந்து போயிருக்கும்.

    உங்களுக்கும் இந்த அனுபவம் அடிக்கடி ஏற்படுகிறதா?அப்படியானால் இந்த கைவினை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    சதுர வடிவ அட்டை (25 செ.மீ x 25 செ.மீ) - 2
    அளவுகோல் - 1
    கத்திரிக்கோல் - 1
    கத்தி - 1
    பசை - 1
    நெட் (பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வலை) 25 செ.மீ x 25 செ.மீ - 1
    துணி 25 செ.மீ x 25 செ.மீ - 1

    செய்முறை

    * முதலில் ஒரு அட்டையை எடுத்து அதன் நான்கு புறமும் இரண்டு அங்குலம் அளவு குறித்து கொண்டு கத்தியால் போட்டோ ஃபிரேம் போல் வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதே போல் மற்றொரு அட்டையையும் வெட்டி வைத்து கொள்ளவும்.

    * இப்போது அட்டையின் நான்கு ஓரங்களிலும் பசை தடவி பிளாஸ்டிக் வலையை ஓட்டிக்கொள்ளவும்.

    * பிறகு வலையின் மீது பசையை தடவி மற்றொரு அட்டையை அதன் மேல் ஒட்டவும்.

    * ஒட்டிய அட்டையை துணியின் மீது வைத்து அளவை குறித்து படத்தில் உள்ளபடி துணியின் நடுப்பகுதியை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டி எடுக்கவும்.

    * பின்பு துணியை அட்டையின் இரண்டு பக்கங்களையும் சரியாக மூடுமாறு பசையை தடவி ஒட்ட வேண்டும்.

    * இப்போது டிரைநெட் கம்மல் ஹோல்டர் தயார்.

    * சாய்த்து வைக்க *ஸ்டாண்ட் வேண்டும் என்றால் முக்கோண வடிவில் ஸ்டாண்ட் தயாரித்து ஒட்டி கொள்ளலாம் அல்லது கம்மல் ஹோல்டரை அப்படியே சுவற்றில்சாய்த்து வைத்தும் பயன்படுத்தலாம்.
    சூரியஒளியில் நனைந்து அதன் பலன்களை பெற, காலை நேரமாக இருந்தால் 7 மணிக்கு முன்னும், மாலை நேரமாக இருந்தால் 4 மணிக்குப் பின்னாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
    நம்நாடு ஒரு வெப்பமண்டல நாடாக இருந்தாலும், சூரிய ஒளியை உடலுக்குள் அனுப்புவதை அடுக்குமாடி வீடுகள் தடுக்கின்றன. 24 மணி நேரமும் குளுகுளு வசதிகளுடன் கூடிய அலுவலகங்களும், மாறிவிட்ட வாழ்க்கைச்சூழலும் நம் உடலில் சூரிய ஒளிபடுவதை முற்றிலும் தடை செய்கின்றன.

    சூரியஒளியில் நனைந்து அதன் பலன்களை பெற, காலை நேரமாக இருந்தால் 7 மணிக்கு முன்னும், மாலை நேரமாக இருந்தால் 4 மணிக்குப் பின்னாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காலை 7 மணிக்குமேல் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து நம் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி தலைவலி, சோம்பல் போன்றவற்றையும் உண்டாக்கலாம். வெயிலில் காய்வதால் வாத நோய்கள் குணமாகும் என்கிறது, சித்த மருத்துவம். இதை நிரூபிக்கும் வகையில் உடலில் ஏற்படும் வலியை குறைக்க சூரியக்குளியல் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது மேற்கத்திய ஆய்வு ஒன்று.

    தேவையான அளவு சூரியஒளி நம் உடலில் படுவதால், எந்த செலவும் இல்லாமல், நம் உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலுக்கடியில் மறைந்திருக்கும் புரோவைட்டமின்-டி ஆனது, வைட்டமின்-டி ஆக மாற்றப்படுகிறது. இப்படி இயற்கையின் வரப்பிரசாதமாக கிடைத்த வைட்டமின்-டி, எலும்புகளை பலப்படுத்தி, தசைகளை வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியில் உள்ள கொழுப்பு சூரிய ஒளியால் எரிக்கப்படுகிறது. சூரியனால் கிடைத்த வைட்டமின்-டி, உடலில் சேர்ந்த அதீத கொழுப்பை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு சேர்ந்து சூரியனையும் நம்பலாம்.

    முகத்தில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, கருவளையம் போன்ற பிரச்சினைகளை போக்குவதற்கு முகத்தில் நல்எண்ணெயை லேசாகத் தடவிக்கொண்டு தினமும் 5 நிமிடம் சூரிய ஒளி படும்படி செய்து, பின் முகத்தை இளஞ்சூடான நீரில் கழுவிவர, சில நாட்களில் முகம் பளிச்சென ஆகும். நீர்நிலைகளில் இருக்கும் கிருமிகளை, இயற்கையான சூரியஒளி அழிப்பதுபோல, உடலில் உள்ள கிருமிகளையும் சூரிய ஒளி அழித்து உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருத்துவ வளர்ச்சி அவ்வளவாக இல்லாத கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    உடலில் செரடோனின்’ எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மனம் சோர்வடைவதை தடுக்கிறது. அத்துடன் ரத்தக் குழாய்களில் நைட்ரிக் ஆக்சைடு வெளிப்படுத்தப்பட்டு, உயர் ரத்தஅழுத்தமும் குறைகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாப்பது மட்டுமன்றி, வேறு சில புற்றுநோய்கள் வராமலும் சூரிய ஒளி தடுக்கிறது. எனவே தினமும் சூரியஒளி படும்படி ஜாலியாக ஒரு நடைபயிற்சி போய் வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் தானாக வரும் என்கிறது, சமீபத்திய ஆராய்ச்சி.
    முகநூலைத் தவறாக பயன்படுத்தும் நபர்களை ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களோடு tnpolice.gov.in என்ற தமிழக காவல் துறையின் இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
    சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வழியாக நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. ஒருவருக்கு தெரியாமலேயே அவரது சமூகவலைத்தள கணக்கை தவறான வழிகளில் பயன்படுத்தும் செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் முகநூல் கணக்கிலும் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே சமூக வலைத்தளங்களை பெண்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். முகநூலை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர் கூறும் ஆலோசனைகள் இதோ...

    தவறாக பயன்படுத்தப்படும் சூழல்

    சமூக விரோதிகள் பலர் பெண்களின் பெயரில் போலியான கணக்கை உருவாக்கி பெண்களுக்கு நட்பு கோரிக்கை அனுப்பி இணைந்து கொள்கின்றனர். பிறகு அந்த பெண்ணை அவர்களுக்கு தெரியாமல் ஆபாச காட்சிகளை பகிரும் மெசெஞ்சர் குழுக்களில் இணைத்து அவர்களையே அக்குழுவுக்கு உரிமையாளராகவும், நிர்வாகியாகவும் மாற்றி விடுகின்றனர். பெண்கள் பகிரும் புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை அப்படியே நகல் எடுத்து அவர்கள் பெயரிலேயே போலியாக ஒரு பக்கத்தை உருவாக்கிஅவர்களின் நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் பண உதவி கேட்டு ஏமாற்றுகின்றனர். மேலும் அந்த  பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் கேட்டும் மிரட்டுகின்றனர்.

    யாருக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும்?

    எப்போதாவது ஒருமுறை முகநூலைப்பயன்படுத்துபவர்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. சமூக வலைத்தளங்களை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், ஒரு வசதி அறிமுகமாகும் போதே அதற்கான பாதுகாப்பு வசதிகளையும் ஆராய்ந்து அதற்கேற்ப புதுப்பித்து கொள்வார்கள். ஆனால் எப்போதாவது பயன்படுத்துபவர்கள் இவற்றை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பார்கள். எனவே பெண்கள் தங்களின் முகநூல் பக்கத்தை அந்நியர்கள் பயன்படுத்த முடியாதவாறு பாதுகாப்புடன் கையாள வேண்டும்.

    தற்காத்துக்கொள்வது எப்படி?

    நமக்கு தெரியாத அந்நிய நபர்களின் நட்பு கோரிக்கையை ஏற்கும் முன்பு, அவரின் பக்கத்தை ஆராய்ந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.பெண்கள் பெயரிலிருந்தே நட்பு கோரிக்கை வந்தாலும் அவர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருந்தால் தான் உண்மையிலேயே பெண்ணாக இருக்க முடியும். இம்மாதிரியான விஷயங்களை ஆராய்ந்த பிறகு அவரின் நட்பு கோரிக்கையை ஏற்க வேண்டும். எப்போதாவது ஒருமுறைதான் முகநூலை பயன்படுத்துபவர் என்றால் அவ்வப்போது வரும் புதுப்புது வசதிகளை ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

    புகார் அளிப்பது எப்படி?

    முகநூலைத் தவறாக பயன்படுத்தும் நபர்களை பற்றி அந்த நிறுவனத்திடமே புகார் அளிக்க முடியும். அவர்கள் குறிப்பிட்ட நபரின் பக்கத்தை ஆராய்ந்து தடை செய்து விடுவார்கள். அதையும் தாண்டி வேறு வகைகளில் தொடர்ந்து தவறாக பயன்படுத்தும் நபர்களை ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்ட ஆதாரங்களோடு tnpolice.gov.in என்ற தமிழக காவல் துறையின் இணையதளம் வாயிலாக சைபர் கிரைமில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பார்கள்.
    சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் - 50 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    செலரி, பாஸில் இலை - சிறிதளவு,
    காய்கறி வேகவைத்த தண்ணீர் - அரை லிட்டர்,
    பால் - ஒரு கப்,
    பாதாம் - சிறிதளவு (அலங்கரிக்க),
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பாதாம்பருப்பை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 அல்லது 15 நிமிடம் வரை வைத்திருந்து தோலை உரித்தெடுக்கவும்.

    அலங்கரிக்க கொடுக்கப்பட்டுள்ள பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    செலரி, பாஸில் இலைகளை நன்றாக கழுவி வைக்கவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில், பாதாம், செலரி, பாஸில், நறுக்கிய வெங்காயம், காய்கறி வேக வைத்த தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து வேகும் வரை கொதிக்க வைக்கவும்.

    வெந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து  உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

    கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கும்போது பால் சேர்க்கவும்.

    இதனை சூப் கிண்ணத்தில் ஊற்றி, மேலே பொடியாக நறுக்கிய பாதாமை சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான பாதாம் செலரி சூப் ரெடி.
    மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகள் உட்கொள்வதை பெண்கள் தவிர்க்கக் கூடாது; அத்தகைய மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
    தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் பாரம்பரிய மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அது தவறானதாகும். மகப்பேறுக்கு பின்பு பாரம்பரிய மருந்துகளை உட்கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

    இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும்.

    பின்பு 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும். 2ஆம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இள வறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.

    3ஆம் நாளில் 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்க வேண்டும். 5ஆம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும்.

    இம் மருந்து சூதக வாயுவை நீக்கும். 9ஆம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும். 11ஆம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.

    13-ம் நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.

    15-ம் நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும்.

    அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் அது பற்றி பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தாமதிக்காமல் தெரியப்படுத்தவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.
    கடந்த சில வாரங்களாக, நம் கவனத்திற்கு வரும் தற்கொலை சம்பவங்கள், நம்மை பொறுத்தவரை வேதனை தரும் செய்தி. ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இச்செயல் வார்த்தைகளால் விவரிக்க முடியாத இழப்பு. காலம் முழுவதும் நீங்காத வலியை உண்டாக்கி சென்றிருக்கும், சோக நிகழ்வு. இத்தகைய தற்கொலையை, ஒருவிதமான மனநோய் என்கிறார், பா.சந்திரசேகர். சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மனநலத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றும் இவர், ‘தற்கொலை’ என்ற மனநோய் நமக்குள் எப்படி உருவாகிறது, எப்படி வளர்கிறது என்பதை விளக்குவதோடு, அந்த மனநோயை எப்படி விரட்டலாம், நமக்கு நெருக்கமானவர்களை எப்படி காப்பாற்றலாம் என்பதையும் விரிவாக விளக்குகிறார்.

    * தற்கொலை எண்ணம் எப்படி உருவாகிறது? இது மனநோயா?

    தற்கொலை எண்ணம் உடல் ரீதியாக, மன ரீதியாக, குடும்ப ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் பொருந்தாத வரையறைகள், அறியாமை, இயல்புக்கு மாறான எதிர்பார்ப்புகள், தவறான கணிப்புகள், எதிர்த்து போராடும் மனவலிமை இல்லாமை இவையே தற்கொலையின் அடிப்படைக் காரணங்கள்.

    எடுத்துக்காட்டாக, தேர்ச்சி பெற்றால் மட்டுமே தன்னை மற்றவர்கள் மதிப்பார்கள் என்பது ஒரு மாணவன் தனக்கு தானாகவே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பொருந்தாத வரையறை. மறுமுறை தேர்வெழுதியும் வெற்றி பெறலாம் என்ற அறியாமை. அந்தவகையில் இது ஒரு மனநோயே.

    * மனநோய்க்கான அறிகுறிகள் என்ன?

    ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருப்பதை போல தற்கொலைக்கும் அறிகுறிகள் உண்டு. எப்போதும் சிடு சிடு என இருப்பவர்கள் இயல்புக்கு மாறாக சிரித்து சிரித்து பேசுவதும், எப்பொழுதும் புன்னகையோடு இருப்பவர்கள் திடீரென அமைதியாக இருப்பதும் மிக முக்கிய அறிகுறிகள். மேலும் வெறுத்துப் பேசுவது, தூக்கமின்றி தவிப்பது, தனிமையை விரும்புவது, பிடித்தவற்றை வெறுப்பது, பிரியாவிடை சொல்வது, யாருடனும் கலந்து பேசாமல் மனச் சோர்வாக இருப்பது இவை அனைத்தும் தற்கொலையை தூண்டும் மனநோய்க்கான அறிகுறிகள்.

    * தற்கொலை செய்பவரின் மனநிலை எப்படி இருக்கும்?

    தற்கொலை செய்ய முயற்சிக்கும் ஒருவரின் மன நிலை மூன்று வகைப்படும்.

    1. தடுமாறும் மனநிலை

    இரண்டினுள் எதை எடுப்பது? எதை விடுவது? செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் மனநிலை.

    2. உணர்ச்சிப் பெருக்கு மனநிலை

    உணர்வுகளை பாதிக்கும் செயல் ஒன்று நிகழும்போது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் மனநிலைதான் இது. தேர்வு முடிவுகள் வெளியான நாளில் தோல்வியுற்ற மாணவனின் உணர்ச்சிப் பெருக்கே அவனை தற்கொலைக்கு தூண்டுகிறது.

    3. இறுக்க மனநிலை

    தான் நினைப்பதற்கு மாறாகவும் நடக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை இதற்குள்ளே அடங்கும். ‘தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்குவேன்’ என்று உறுதியாக நினைக்கும் மாணவன் 96 மதிப்பெண்கள் வாங்கி சிறப்பாகத் தேர்ச்சியுற்ற பிறகும் தற்கொலை செய்துகொள்வது இவ்வகை.

    * தற்கொலை மனநோயில் இருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?

    ஒருவரால் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும் என்றால் அம்மனிதனால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். ஆதலால் உணர்ச்சிப் பெருக்கு மனநிலை உடையவர்கள் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனநிலையை சமநிலைப்படுத்தலாம். அத்தோடு நம்பிக்கையூட்டும் சொற்பொழிவுகளை கேட்பதும், மகிழ்ச்சி தரும் நூல்களை படிப்பதும், பிடித்த இசையை கேட்பதும் என மனதை வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான செயல்களில் திசை திருப்பவேண்டும்.

    அடிக்கடி தற்கொலை எண்ணம் வந்தால் அது பற்றி பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ தாமதிக்காமல் தெரியப்படுத்தவேண்டும். மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும். ‘104’ தொலைபேசி மருத்துவ ஆலோசனையும் பெறலாம்.

    * ஆசிரியர்கள் என்ன செய்யலாம்?

    ‘தேர்வு’, ‘மதிப்பெண்’ மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி, முக்கியமாக பாடங்களோடு வாழ்க்கை திறன் கல்வி, பிரச்சினைகளை கையாளும் திறனை கற்பிக்கவேண்டும். தேர்வுக்கு எப்படி தயாராவது, தேர்வை எப்படி எதிர்கொள்வது, தோல்வியை எப்படி ஏற்றுகொள்வது போன்ற வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், மனநல ஆலோசகர்களை அழைத்து உடல்நலம், மனநலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்படவேண்டும்.

    * அரசு, எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளலாம்?

    அரசு அலுவலகங்கள், காவல் துறை, போக்குவரத்துத்துறை, வங்கிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில், மனநலம் படித்தவர்களை ‘மனநல சமூகப்பணி’, ‘மருத்துவ உளவியல்’, ‘மனநல செவிலியர்’ போன்ற பொறுப்புகளில் பணியமர்த்தி, தற்கொலை எண்ணம் முளைவிடும்போதே கிள்ளி எறியலாம்.

    மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மனநலம் சார்ந்த படிப்புகளை அனைத்து தனியார் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கலாம்.

    ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு கிராமப்புறங்களில் தற்கொலை விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
    பெற்றோர், நண்பர்கள் செய்ய வேண்டியவை?

    தற்கொலை எண்ணம் உள்ளவரிடம் கவனமாகப் பேச வேண்டும். பொறுப்பில்லாமல் பேசும் சில வார்த்தைகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடும். தற்கொலை மனநோய் அறிகுறிகள் தென்படுபவர்களிடம், அதிக நேரம் பேசுங்கள். அவர்களை சிறிது நேரம் கூட தனிமையில் விடாதீர்கள். அந்நபரின் மன வேதனைகளை உள்வாங்கிக்கொண்டு, மனவேதனையை குறைக்க முயலவேண்டும். ‘நீ தனி ஆள் இல்லை, நான் உன்னுடன் இருக்கிறேன், இருப்பேன்’ என பேசி அவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்க வேண்டும். அந்நேரத்தில் தற்கொலை செய்பவரின் மனக்குமுறல் வெளிப்படும். பின்னர் அதிலிருந்து அவரை மீட்டு விடலாம்.

    பா.சந்திரசேகர்
    அதிக ஊட்டச்சத்து கொண்ட கீன்வா, சியாவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.
    கீன்வா, சியா விதைகள் அதிக ஊட்டச்சத்து கொண்ட தானியங்கள். கீன்வா தானியத்தில் 14 சதவீதம் புரதம் செறிந்திருக்கிறது. ஐ.நா. சபை 2013-ம் ஆண்டை கீன்வாவை பிரபலப்படுத்தும் ஆண்டாக அறிவித்தது. கீன்வா, தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. அங்கிருந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, அமெரிக்காவுக்கு பரவியது.

    சியா தானியம் மெக்சிகோ, தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இதில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.

    இந்திய சியா விதைகள் வெள்ளை நிறம் கொண்டவை. இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே நன்கு வளரக்கூடியது என்பதால், அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்ய முடியும். குறைந்த அளவு நீர் இருந்தால் போதுமானது. அதாவது, நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நீரில் 5-ல் ஒரு பங்கும், கோதுமைக்கு தேவைப்படும் நீரில் இரண்டில் ஒரு பங்கும் இருந்தாலே போதும். இரு முறை நன்கு உழவு செய்து, சமன்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடலாம். போதுமான ஈரப்பதம் இருந்தால் 24 மணி நேரத்தில் முளைவிட்டு, ஒரு வாரத்துக்குள் இலைகள் துளிர்க்கும். பூச்சிகள் தென்பட்டால், வேப்ப எண்ணெய், சோப்பு நீர் கலந்து தெளித்தால் போதுமானது.

    ஆரம்ப கட்டத்தில் களை நீக்கம் வேண்டியிருக்கும். விதைக்கப்பட்ட 90 நாள் முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை நேரத்தில் மழை இல்லாமல் இருப்பது நல்லது. தானியம் முற்றிய பின் மழை பெய்தால் ஈரம் பட்ட 24 மணி நேரத்தில் முளைத்து விடும் ஆபத்தும் உண்டு. ஏக்கருக்கு 500 முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

    சியா, குளிர்கால சாகுபடிக்கு ஏற்றது. அரை அடி உயரத்துக்கு பாத்திகள் அமைத்து நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். 100 கிராம் விதையை அதே அளவு மணலுடன் கலந்து சீராக விதைக்க வேண்டும். விதைகளை மணல், மண்புழு உரம் கலந்த கலவையைக் கொண்டு மூட வேண்டும். உடனடியாக நீர் பாய்ச்சி ஈரப்பதத்தை தொடர்ந்து பேண வேண்டும். 21 நாட்களில் நாற்று தயாராகிவிடும். நன்கு உழவு செய்யப்பட்ட நிலத்தில், இரண்டு அடிக்கு ஓர் அடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 7-10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சி ஈரப்பதத்தை பேண வேண்டும். பூச்சி தாக்குதல் இருக்காது. களையின் அளவை, பொறுத்து, 2 அல்லது 3 முறை களையெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 350 முதல் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

    இந்த இரு தானியங்களுக்கும் சந்தையில் அதிக தேவை உள்ளது. ஒவ்வொரு முறையும் விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அறுவடை செய்த தானியத்தை எடுத்து வைத்து, மறுமுறை பயன்படுத்தலாம். இதனால் சக விவசாயிகளிடம் இருந்தே விதை கிடைக்கும். நெல் போன்று அரவை செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக உணவாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு இதன் உணவை கொடுப்பதன் மூலம் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.
    நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    நெல்லிக்காயை பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.

    நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்து காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

    நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும்.

    உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.

    மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது.
    ×