என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழாவையொட்டி 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் அம்மயிறக்க திருவிழா கடந்த 23 -ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று 2007 திருவிளக்குப் பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் அம்மன் எழுந்தருளியுள்ள விழா பந்தலில் ஏராளமான பெண்கள் அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர். முதல் தீபத்தை குலசேகரம் உண்ணியூர்கோணம் அஸ்வதி பெட்ரோலியம் நிர்வாகி குமாரி விஜயன் ஏற்றினார். பெட்ரோலியம் உரிமையாளர் ஆர். விஜயன் நேர்ச்சை செய்தார். திருவிளக்கு பூஜையை நெட்டாங்கோடு சாரதா தேவி ஆஸ்ரமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி மீராபுரி மாதா நடத்தினார்.

சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும், சித்திரை பவுர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் காலசம்ஹார மூர்த்தி ஆவார். இக்கோவில் இறைவியை அமிர்தவல்லி, அபிராமி என அழைக்கிறார்கள். கொன்றை மரம், வில்வம் ஆகியவை இத்தலத்தின் விருட்சங்களாகும்.
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 47-வது தலமாகும். தேவார சிவத்தலங்கள் 276-ல் 110-வது தலமாகும். 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடமாகும். அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகும் (எமனை சம்ஹாரித்த தலம்). தருமபுரம் ஆதீனத்துக்கு கீழ் செயல்படுகிறது இக்கோவில்.
அமிர்தகடேஸ்வரர் உயர்ந்த சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் கால சம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் பாலாம்பிகையுடன் காட்சி அளிக்கிறார். காலசம்ஹார மூர்த்தியின் திருப்பாதங்களின் கீழ் மார்க்கண்டேயர் கை கூப்பிய நிலையில் இருப்பது, எமதர்மன் உதைவாங்கி கீழே விழுந்து கிடப்பது ஆகியன பீடத்தடியில் வெள்ளித்தகட்டால் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது. தீபாராதனை சமயம் இதை தரிசிக்கலாம்.
எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும் மேனியில் ஒரு தழும்பும் காணப்படுகிறது. கால சம்ஹார மூர்த்தியின் பின்னால் வலப்பக்கம் மிருத்யுங்கிய யந்திரம் உள்ளது.
தருமராஜரை வதம் செய்ததால் பூமி பாரம் குறைக்க எம சிட்சை வேண்டும் என பூமாதேவியும், திருமாலும், நான்முகனும் பிரார்த்திக்க, ஈசன் எமனை உயிர்ப்பித்தார். இறைவனின் அருளை பெற்ற தர்மராஜா காலசம்ஹார மூர்த்திக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் எருமை வாகனத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.
இங்குள்ள வில்வவனேஸ்வரர் ஆதிலிங்கம் ஆகும். இங்கு வெள்ளிப்பேழையில் உள்ள மரகதலிங்கத்திற்கு காலை, மாலை ஆராதனை நடைபெறுகிறது. 63 நாயன்மார்களில் குங்கிலிய நாயனார், காரிய நாயனார் சிவதொண்டு ஆற்றிய இடமாக திகழ்கிறது.
இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது சிறப்புடையது. சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும், சித்திரை பவுர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோவிலுக்கு சோழர், பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள்.
‘அஷ்ட வீரட்டானம்’ என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற 8 தலங்களை குறிப்பிட பயன்படும் சொல்லாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் நடந்த இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டான தலங்கள் என்று போற்றுவர்.
புராண பெயர்கள்
திருக்கடவூர், வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம் ஆகியன திருக்கடையூரின் புராண பெயர்களாகும்.
பாலகன் வடிவில் முருகப்பெருமான்
அருணகிரிநாதர் திருக்கடையூர் கோவில் முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார். இங்கு முருக பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதி தேவியின் வலப்பக்கம் தாயை தழுவியவாறு காட்சி தருகிறார் .
முருகனை போல் விநாயகருக்கு அறுபடை வீடுகள் உண்டு. அதில் ஒன்று திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார்.

ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
அதன்படி தெலுங்கு வருட பிறப்பையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை சேவை நடக்கும். பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதில் மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மை படுத்தப்படும்.
பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும். மூலவர் மீது போர்த்தப்பட்டுள்ள பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது.

பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும்.
நம்முடைய புராணங்கள் அடிப்படையில் நவிரங்களுள் முதன்மையானது, அரசன் போன்றது சூரியன். இது பூமிக்கு, பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒளி, வெப்பம், ஆற்றலைத் தருகிறது. அன்றாட நடவடிக்கைகளுக்கு சூரியன் தேவை.
பெரும்பாலும் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக உள்ளதா இல்லையா என்று பலருக்கும் உறுதியாகத் தெரியாது. பலவிதமான அறிகுறிகள் அடிப்படையில் இதை உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக தொடர்ந்து பலகீனமாக உள்ளவர்கள், சோம்பலாக உள்ளவர்கள், உடல் நலம் சரியாக இல்லாமல் இருப்பவர்கள், எலும்பு - மூட்டு பிரச்னை உள்ளவர்கள், கை - கால்கள் உணர்வின்மை பிரச்னை ஏற்படுபவர்கள், பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள், இதய நோயாளிகள், சுய மரியாதை இன்றி மோசமாக வாழ்பவர்களுக்கு சூரியன் நீசமாக, பலம் இழந்து இருப்பதாக கருதலாம்.
சூரியன் நீசமாக இருந்தால் தந்தையுடன் உறவு நிலை மோசமாக இருக்கும். தந்தைக்கு பிரச்னையை ஏற்படுத்துவார்கள். மனநல பிரச்னையால் அவதியுறுவார்கள். மகிழ்ச்சி இன்றி இருப்பார்கள். உடல் ரீதியாவும் மன ரீதியாகவும் பிரச்னைகளை சந்திப்பார்கள். அதிகம் கோபம், ஆக்ரோஷம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சூரியனை சாந்தப்படுத்தலாம். சூரிய தோஷம் நீங்க ராமரை வழிபடலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும் பலனைத் தரும்.
சூரியனை வழிபட பீஜ மந்திரம்:
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் சஹ சூர்யாய நமஹ||
இதை 40 நாட்களுக்குள் 7000ம் தடவை சொல்லி வந்தால் நற்பலன்கள் கிடைக்கும். அதிக பலன்கள் கிடைக்க 40 நாட்களுக்குள் 28 ஆயிரம் முறை சொல்ல வேண்டும்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபங்கள் பக்தர்களால் நிரம்பியிருந்தது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். அதேபோல் நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராகு-கேது பூஜை நடக்கும் மண்டபங்கள் பக்தர்களால் நிரம்பியிருந்தது.
கோவில் உள்ளே பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த மின் விசிறிகள் பழுதடைந்ததால் கடும் வெயிலால் பக்தர்கள் அவதிப்பட்டனர். எனினும், வரிசைகளில் காத்திருந்த பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் குடிநீர் வழங்கியதால் நிம்மதியடைந்தனர். நேற்று மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜையில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்று பூஜை செய்தனர்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
அதையொட்டி அதிகாலை மூலவருக்கு சுப்ர பாதம், தோமால சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து மூலவர் சன்னதி வரை உள்ள அனைத்துச் சன்னதிகள், தூண்கள், மாடங்கள், மேற்கூரை, தரை தளம், பலிபீடம், கொடிமரம் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்தும் பித்தளை, தாமிர பாத்திரங்கள் ஆகியவற்றை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர்.
அதன் பிறகு மஞ்சள், குங்குமம், சந்தனம், சீயக்காய், நாமக்கட்டி, பச்சைக்கற்பூரம், கிச்சிலி கட்டா, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது ஆகிய சுகந்த திரவியத்தை கருவறை சுவர்கள், தூண்களில் பூசினர். இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், தலைமை அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.
நம்முடைய குலத்தைக் காப்பது குலதெய்வ வழிபாடு. மாறிவிட்ட வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை காரணமாக குல தெய்வத்தை பலரும் மறந்துவிட்டனர். பல தலைமுறைக்கு முன்பு சொந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஒரு ஊரில் குடியேறியதால் குலதெய்வத்தை தொலைத்தவர்கள் பலர். தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல், குல தெய்வம் எது என்று அறிய பலரும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.
எவ்வளவு பாடுபட்டும் குல தெய்வம் பற்றிய விவரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகின்றீர்களா... கவலைப்படாதீங்க. உங்கள் குல தெய்வத்தை கண்டறிய உதவும் ஸ்லோகம் ஒன்று உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.
ஸ்லோகம்:
ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா||
இதை தினமும் தூங்கச் சொல்வதற்கு முன்பு சொல்ல வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்து வைத்து, கிழக்கு பார்த்தபடி அமர்ந்து ஊதுபற்றி ஏற்றி நம்முடைய தேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தைச் சொல்லி முடித்ததும் சொம்பில் உள்ள தண்ணீரைக் குடிக்க வேண்டும். இந்த ஸ்லோகத்தை சனிக்கிழமை காலை அல்லது மாலையில் சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் விடாமல் சொல்லி வர வேண்டும். 45 முதல் 90 நாட்களுக்குள் குல தெய்வம் பற்றிய விவரம் தெரிய வரும் என்பது நம்பிக்கை.
நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பதால் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் படி பூஜை, களபாபிஷேகத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்விபரம் வருமாறு:-
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனுக்கு விஷேச பூஜைகள் செய்ய இங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணங்களையும், கோவிலில் விற்கப்படும் பிரசாதங்களின் விலையையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது:-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மேற்கொள்ளும் படி பூஜை, களபாபிஷேகத்திற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்விபரம் வருமாறு:-
படி பூஜை ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000) சகஸ்ரகலசம் ரூ. 91,250(80,000), உதயாஸ்தமன பூஜை ரூ61,800 (50,000), உற்சவபலி ரூ. 37,500(30,000) களபாபிஷேகம் ரூ.38,400 (22,500), தங்க அங்கி சார்த்துதல் ரூ.15,000(10,000) புஷ்பாபிஷேகம் ரூ.12,500 (10,000) சதகலசம் ரூ.12,500 (10,000),
அஷ்டாபிஷேகம் ரூ.6,000(5,000), உச்ச பூஜை ரூ.3,000 (2,500), பகவதி சேவை ரூ.2,500(2,000), உஷ பூஜை ரூ.1,500(1000), கணபதி ஹோமம், ரூ.375 (300),
கெட்டு நிறைத்தல் ரூ.300(250), அபிஷேக நெய்(100 மி.லி), ரூ.100(75), நீராஞ்சனம் ரூ.125(100), அரவணை ரூ.100(80), அப்பம் 1 பாக்கெட் ரூ.45(35).
இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.
இதையும் படிக்கலாம்...வெற்றியைத் தரும் விஜயா ஏகாதசி விரதம்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருவுருவங்களில் அருள் பாலித்து வருவது சிறப்புமிக்கதாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் நம்பி சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் திருநாளன்று நடந்தது.
சிகர நிகழ்ச்சியாக 10-ந் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள், தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், கொளுத்தும் வெயிலில் “கோவிந்தா, கோவிந்தா” என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்குறுங்குடி போலீசார் செய்திருந்தனர். தேருக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட திருக்குறுங்குடி கோவில் யானைகள் சென்றன. இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.

பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக ‘பங்குனி மாதம்’ உள்ளது. இந்த மாதத்தை ‘மங்கலம் நிறைந்த மாதம்’ என்றே வர்ணிப்பார்கள். ஏனெனில் இந்த மாதத்தில்தான் தெய்வங்களின் திருமணங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி மாதத்தில் நாம் முறையாக தெய்வங்களை வழிபட்டு வந்தால், நம் வாழ்வில் வரும் பல தடைகளும் விலகும். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் ஏகாதசி திதிகள் சிறப்பு வாய்ந்தவை. மாதத்திற்கு இரண்டு ஏகாதசி என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடங்கள் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. இவை அனைத்திற்கும் தனித் தனியாக பெயர்கள் இருக்கின்றன. அந்த வகையில் பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியை ‘விஜயா ஏகாதசி’ என்பார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பு பற்றி இ்ங்கே பார்க்கலாம்.
எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி மாதம் தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசி அன்று, பெருமாளை தரிசிப்பதும், அவருக்கு துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வதும் மகத்தான பலனை பெற்றுத்தரும்.
‘ராவணனால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கும் சீதையை, இலங்கைக்குச் சென்று எப்படி மீட்பது?’ என்ற ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார், ராமபிரான். அப்போது அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர், ராமனிடம் ‘விஜயா ஏகாதசி’ விரதத்தின் மகிமையை எடுத்துக்கூறி, அந்த விரதத்தை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்திச் சென்றார். அதன்படியே ராமபிரான், விஜயா ஏகாதசி அன்று விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டார். அதன்பலனாக, இலங்கை சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததாக ஏகாதசி விரத மகாத்மியம் எடுத்துரைக்கிறது.
விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும், புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பதுஐதீகம்.
மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவு வழங்கினால், மகா புண்ணியம் என்றும், பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல், பங்குனி மாதத்தில், குரு வாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந்தேதி சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளதால், முன்னேற்பாடு பணிகளை கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னேற்பாடு பணிகளை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளது. இதுகுறித்து தேவஸ்தானத்தின் சென்னை தகவல் மைய ஆலோசனைக் குழு தலைவர், உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அன்னமாச்சாரியார் திட்ட கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து சென்னை ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டும் பணியை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கோவில் கட்டுமானப் பணி, மின் வயரிங் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.