search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீனிவாச கல்யாணம்
    X
    சீனிவாச கல்யாணம்

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் 16-ந்தேதி சீனிவாச கல்யாணம்

    சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந்தேதி சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளதால், முன்னேற்பாடு பணிகளை கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சென்னையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. முன்னேற்பாடு பணிகளை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளது. இதுகுறித்து தேவஸ்தானத்தின் சென்னை தகவல் மைய ஆலோசனைக் குழு தலைவர், உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அன்னமாச்சாரியார் திட்ட கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து சென்னை ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக பத்மாவதி தாயார் கோவில் கட்டும் பணியை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கோவில் கட்டுமானப் பணி, மின் வயரிங் பணி ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×