என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
இறையச்சம் மிக்க மனிதனின் அன்றாட வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக சொல்லி இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது “உண்மை”.
ஆம், ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான நற்குணம்- “உண்மை பேசுதல். சொல்லிலும், செயலிலும் உண்மையாக நடந்துகொள்ளுதல்”.
இஸ்லாத்தின் பார்வையில் உண்மை என்பது மிகவும் முக்கியமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களை எடுத்துக்கொள்ளலாம். முதல் இறைத்தூதர் ஆதம் நபி முதல், கடைசியாக வந்த முகம்மது நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அனைத்து இறைத்தூதர்களும் உண்மையைப் பேசி அதன் வழி நடந்துள்ளார்கள்.
எத்தனை சோதனைகள் வந்த போதிலும் உண்மையில் இருந்து அவர்கள் தவறவில்லை. இதை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளது.
“(நபியே!) இவ்வேதத்தில் இப்ராகீமை பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராகவும் நபியாகவும் இருந்தார்”, என்று இப்ராகீம் நபி குறித்து (திருக்குர்ஆன் 19:41) தெரிவிக்கின்றது.
இத்ரீஸ் நபியைக் குறித்து (திருக்குர்ஆன் 19: 56) கூறும்போது: “(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார்”.
இறுதித்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களை மக்கள் ‘உண்மையாளர்’, ‘நம்பிக்கையாளர்’ என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு ஜாதி, மத வேறுபாடு இன்றி அவரது சொல்லும், செயலும் அன்றாட வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் உண்மையாக அமைந்திருந்தது.
இறை நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது, இறைவனுக்கு அஞ்சி நடக்க வேண்டும், மறுமை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:
“இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள், மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்”. (திருக்குர்ஆன் 9:119).
ஒரு மனிதன் உண்மையைப்பேசி, உண்மையாக நடந்து கொண்டால் அந்த செயலின் மூலம் அவன் சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று நபிமொழிகள் குறிப்பிடுகின்றன.
‘உண்மை நன்மைக்கே வழிகாட்டும். நன்மை சுவனத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் உண்மையையே பேசி, உண்மையையே தேடினால் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஓர் உண்மையாளன் என்று எழுதப்படுவான். பொய் பாவத்திற்கு வழிகாட்டும். பாவம் நரகிற்கு வழிகாட்டும். ஒரு மனிதன் பொய் பேசும் காலமெல்லாம் அல்லாஹ்வின் ஏட்டில் அவன் ஒரு பொய்யன் என்று எழுதப்படுவான்’. (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘உண்மை பேசுவதாக எனக்கு உத்தரவாதம் தாருங்கள்; சுவனத்தை நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகின்றேன்’. (நூல்: அஹ்மத்).
‘உண்மை என்பது மன அமைதியைத் தரும். பொய் என்பது கலக்கத்தைத் தரும்’. (நூல்: திர்மதி, அஹ்மத்).
மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது. இந்த வாழ்க்கையில் உள்ள உலக இன்பங்களில் மயங்கி பொய்யும், புறமும் பேசி வாழ்வது நமது மறுமை வாழ்வை வீணடித்துவிடும். அந்த பாவச்செயல்களில் இருந்து நாம் விலகி இருப்போம்.
உண்மையே பேசுவோம், நன்மைகளையே நாடுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக. ஆமீன்.
பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலுக்கு யானை மீது சந்தனகுட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 9-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு, திருப்பள்ளி உணர்த்தல், தீபாராதனை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது.
தொடர்ந்து கருமன்கூடல் அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் இருந்து சமய வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற யானை மீது சந்தனகுடம் ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை நிழல்தாங்கல் நிர்வாகி கிருஷ்ணானந்தம் தொடங்கி வைத்தார். இதில் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர்கள் நீலகண்டன் நாடார், குமரேசன், சடையன், நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், தங்கத்துரை, ஜெகன், சுரேஷ் ராமன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலமானது சிங்காரி மேளத்துடன் புறப்பட்டு கருமன்கூடல், லெட்சுமிபுரம், பருத்திவிளை, மண்டைக்காடு, மணலிவிளை வழியாக கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
விழாவின் 10-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, பள்ளி உணர்த்தல், தீபாராதனை, காலை 7 மணிக்கு கடலுக்கு சென்று நீராடி புனிதநீர் எடுத்து வருதல், மதியம் 2.30 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாணசுந்தரம் உபயமாக வழங்கும் சிலம்பாட்டம், இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து 10 மணிக்கு கொடை சிறப்பு பூஜை, 11 மணிக்கு கொடைவிழா, நள்ளிரவு 2 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

நாம் நமது குழந்தைகளுக்கு தண்ணீரின் அவசியத்தை குழந்தை பருவத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அது பல வாழ்வின் பயிற்சியை அவர்கள் கற்று கொள்ள உதவியாக இருக்கும்.
நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி(1 பேதுரு 1:25)
இன்று விரும்புவது போன்று எதையும் செய்யும் நிலை வாழ்கின்ற வாழ்க்கை முறை நிலவி வருகிறது. அளவுக்கு அதிகமாக பொருட்களை உபயோகப்படுத்துவது இன்றைய குழந்தைகளிடம் மிக அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் சேமிப்பு நமக்கு மிக முக்கியம். குறிப்பாக தண்ணீரை சேமிப்பது மிக மிக முக்கியம். இரண்டாவது நாம் அடுத்த தலைமுறைக்கு பரிசாக கொடுக்க வேண்டியது தண்ணீர் தான்.
சிவராமலிங்கம் என்ற 75 வயதுடைய மனிதர் 39 ஆண்டுகள் இங்கிலாந்து ராயல் விமானப்படையில் விஞ்ஞானி அதிகாரியாக பணியாற்றியவர். தற்போது சென்னை பெசன்ட் நகரில் உள்ள கடற்கரை சாலையில் வசித்து வருகிறார். தண்ணீரை சேமிப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு மனிதர் இவர். சாலையோரம் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு இருக்கிறார். அதற்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கிறார். எப்படி என்றால் சமையல் மற்றும் குளியல் அறையில் இருந்து வெளியேறுகின்ற நீரை மட்டும் மறுசுழற்சி செய்து அதை சேமித்து மரம் செடி கொடி குழாய் மூலம் ஊற்றி வருகிறார்.
தண்ணீரை சேமிப்பது குறித்த கருத்தரங்கை பிற நாடுகளுக்கு சென்று செய்து வருகிறார். நாம் தினமும் 750 மில்லியன் லிட்டர் தண்ணீரை செலவழிக்கிறோம். இது கழிவு நீராய் கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரில் 80 சதவீதம் தண்ணீர் குளிப்பது, சமையலுக்கு பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 20 சதவீதம் தண்ணீரில் 15 சதவீதம் கழிவறைக்கு சென்று விடுகிறது.
அன்றாடம் ஒரு நபர் குடிப்பதற்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் நமது குழந்தைகளுக்கு தண்ணீரின் அவசியத்தை குழந்தை பருவத்திலேயே சொல்லி கொடுக்க வேண்டும். அது பல வாழ்வின் பயிற்சியை அவர்கள் கற்று கொள்ள உதவியாக இருக்கும். எனவே முடிந்த அளவு தண்ணீரை சேமிப்பதன் மகத்துவத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து குழந்தைகளை நாம் முறையான பாதையில் வளர்ப்பதற்கு முயற்சி செய்வோம்.
- அருட்பணியாளர் குருசு கார்மல், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.

பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி பங்குனி மாத அமாவாசை, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நேற்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷமான இன்று காலை பக்தர்கள் தாணிப் பாறை அடிவாரத்தில் இருந்து 7 மணிக்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.
அதன்படி தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.
பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டு மூலவர் மீது போர்த்தப்பட்டிருந்த பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
திருப்பதியில் நேற்று 62,956 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,837 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இந்த கோவிலுக்கு அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் வர ஒரு வரலாற்று சிறப்பு நிகழ்வு காரணமாக அமைந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானின் அஷ்ட வீர தலங்களில் 8-வது வீரத்தலமாக இந்த கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள இந்த கோவிலுக்கு அமிர்தகடேஸ்வரர் கோவில் என பெயர் வர ஒரு வரலாற்று சிறப்பு நிகழ்வு காரணமாக அமைந்துள்ளது.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயன்ற போது முழு முதற் கடவுளான விநாயகரை அவர்கள் வழிபடவில்லை. இதனால் சினம் கொண்ட விநாயகர் இக்கோவிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்து வைத்தார்.
இந்த அமிர்த குடமே பிற்காலத்தில் கோவிலில் சிவலிங்கமாக உருவானதால் இங்குள்ள சிவபெருமானுக்கு ‘அமிர்தகடேஸ்வரர்’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அமிர்த குடத்தை மறைத்து வைத்த விநாயகர் இக்கோவிலில் ‘கள்ளவிநாயகர்’ என்று ஒரு தனி சன்னதி பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டவிழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும் வீதி உலா வருகின்றனர்.
பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரமோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரமோற்சவ விழா கடந்த மாதம் 11-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பங்குனி தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.15 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கோவில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது 3-ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடிமரங்களுக்கு மரியாதை செலுத்தியது. இரவு சோமாஸ்கந்தர், அம்மன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விழாவின் 2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுவாமி சூரியபிறை வாகனத்திலும், அம்மன் சந்திரபிறை வாகனத்திலும், நாளை (புதன்கிழமை) இரவு பூதவாகனம், காமதேனு வாகனத்திலும், 31-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 1-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 2-ந்தேதி நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான 3-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளிமஞ்சத்திலும், 4-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 5-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும், 6-ந்தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏகசிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மௌனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 16-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 17-ந்தேதி சாயாஅபிஷேகம், 18-ந் தேதி மண்டலாபிஷேகத்துடன் பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 30-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. அதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அங்குரார்ப்பணம், சேனாதிபதி உற்சவம், சிறப்புப்பூஜைகள் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து 30-ந்தேதி ரிஷப லக்னத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் இரவு பெரிய சேஷ வாகனச் சேவை, 31-ந்தேதி காலை சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை சிம்ம வாகனச் சேவை, இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவை, 2-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனச் சேவை, யுகாதி ஆஸ்தானம், இரவு சர்வ பூபால வாகனச் சேவை.
3-ந்தேதி காலை பல்லக்கு சேவை, இரவு கருட சேவை, 4-ந்தேதி காலை அனுமந்த வாகனச் சேவை, மாலை வசந்த உற்சவம், இரவு யானை வாகனச் சேவை, 5-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனச் சேவை, இரவு சந்திர பிரபை வாகனச் சேவை.
6-ந்தேதி காலை மரத்தேரோட்டம், இரவு குதிரை வாகனச் சேவை, 7-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
மேற்கண்ட வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் முதல் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்காமல் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை முதல் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அந்தத் தீர்த்தத்தை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு ஆகியோர் வழங்கினர். அப்போது கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவரது வழிபாட்டு கடவுளான சொக்கநாத பெருமாளுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவரது வழிபாட்டு கடவுளான சொக்கநாத பெருமாளுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார்.
குடமுழுக்கை முடித்துவிட்டு நேற்று மாலை தருமபுரம் ஆதீனம் மாலை சொக்கநாதருடன் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். முன்னதாக ஆதீனத்துக்கு மட விளக்கத்தை சுற்றியுள்ள கணேச குருக்கள் உள்பட பல்வேறு குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். மேலும் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்ததும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்ய பெற்றதுமாக இக்கோவில் திகழ்கிறது. வெங்கடாசலபதி பெருமாள் திருவோண நட்சத்திரத்தில் இத்தலத்தில் அவதரித்த தினத்தையொட்டி பங்குனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை வெள்ளிப்பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் கடந்த 22-ந் தேதி ஆதிசேஷ வாகனத்திலும், 23-ந் தேதி கருட வாகனத்திலும், 24-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 25-ந் தேதி யானை வாகனத்திலும், 26-ந் தேதி புன்னை மர வாகனத்திலும், 27-ந் தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவரான பொன்னப்பன், பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.
தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், இரவு 8 மணிக்கு சப்தாவரணமும், நாளை (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 31-ந் தேதி பகல் 12 மணிக்கு அன்னப்பெரும்படையல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகிறார்கள்.

மார்ச் மாதம் 29-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 4-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
29-ம் தேதி செவ்வாய் கிழமை :
* பிரதோஷம்
* கரிநாள்
* இன்று நந்தீஸ்வரர் வழிபாடு நன்று
* சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்
30-ம் தேதி புதன் கிழமை :
* சுபமுகூர்த்தம்
* மாத சிவராத்திரி
* ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் அம்பாள் புஷ்ப விமானத்தில் பவனி
* சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்
31-ம் தேதி வியாழக்கிழமை:
* சர்வ அமாவாசை
* சித்தயோகம்
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்
1-ம் தேதி வெள்ளிக்கிழமை:
* தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகன பவனி
* சித்த, அமிர்தயோகம்
* சந்திராஷ்டமம்: மகம், பூசம்
2-ம் தேதி சனிக்கிழமை:
* ஸம்வத்ஸர கௌரீ விரதம்
* சந்திர தரிசனம் நன்று
* தெலுங்கு வருட பிறப்பு
* யுகாதி பண்டிகை
* கரிநாள்
* சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:
* சித்தயோகம்
* சௌபாக்கிய கௌரீ விரதம்
* ஒழுகை மங்கலம் மாரியம்மன் உற்சவாரம்பம்
* மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கல்யாணம்
* ரமலான் முதல் தேதி
* சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்
4-ம் தேதி திங்கட்கிழமை:
* கார்த்திகை விரதம்
* முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் உலா
* குடந்தை ஸ்ரீராமபிரான் சேஷ வாகன புறப்பாடு
* சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை