என் மலர்

  வழிபாடு

  திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் (பழைய படம்)
  X
  திருப்பதியில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் (பழைய படம்)

  திருப்பதியில் 5 மணி நேரத்திற்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படும்.

  அதன்படி தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

  மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகா துவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.

  பின்னர் பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிக்கட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டு மூலவர் மீது போர்த்தப்பட்டிருந்த பட்டு வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

  பின்னர் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

  திருப்பதியில் நேற்று 62,956 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32,837 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.13 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
  Next Story
  ×