என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும்.
    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும்.

    ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
    கிரணோத்கர பாஸ்வா
    தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
    சுப்ரபாதம் குருஷ்வமே.

    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும்.
    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சவுமியநாராயண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விழாவையொட்டி தினந்தோறும் சவுமிய நாராயண பெருமாள் அனுமன் வாகனம், கருட சேவை, தங்க சேஷ வாகனம், தங்க குதிரை வாகனம், அன்ன வாகனம், வெண்ணை தாழி சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    23-ந்தேதி அன்று ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும்,24-ந்தேதி அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.26-ந்தேதி அன்று பகல் 12 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி அன்று காலை 10.50 மணி முதல் 11.58 மணிக்குள் பகல் தெப்ப திருவிழாவும்,, இரவு 9 மணிக்குள் மின்னொளியில் தெப்பம் கண்டருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து கோவில் தெப்பக்குளத்தில் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி விளக்கேற்றி வழிபாடு செய்வது தனிச்சிறப்பாகும்.

    மறுநாள் (28-ந்தேதி) அன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
    தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழா வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேக தீபாராதனை, மாலையில் மண்டகப்படி பூஜை மற்றும் சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெறுகின்றன.

    விழாவின் 9-ம் நாளான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு 4 முறை கருட சேவை நடைபெறுகிறது. இதில் மூன்று கருட சேவைகளின் போது தங்கக்கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருவார். ஆனால் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் 4-ம் திருநாள் மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருவார். மாசிக்கருடனை தரிசிப்பது காசிக்குச் சென்ற பலன் தரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

    அதன்படி மாசி தெப்பத்திருவிழாவின் 4-ம் நாளான நேற்று வெள்ளி கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த ஆலயத்தை ‘பூலோக வைகுண்டம்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கோவிலில் உள்ள மூலவரான குருவாயூரப்பனின் விக்கிரகம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த விக்கிரகம், மிகவும் புனிதத்துவம் பெற்றதான ‘பாதாள அஞ்சனம்’ என்னும் கல்லில் வடிக்கப்பட்டது என்கிறார்கள்.

    குருவாயூரப்பன் கோவிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை, வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணு உருவாக்கினார். பின்னர் அதனை பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார். அதை வைத்து சில காலம் பூஜை செய்து வந்த பிரம்மன், அந்த விக்கிரகத்தை தேவர்களின் குருவான பிரஜாபதியிடம் வழங்கினார். அவரிடம் இருந்த அந்த விக்கிரகம், கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரிடம் போய் சேர்ந்தது. அதன் மூலம், அந்த விக்கிரகம் மீண்டும் மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரிடமே வந்தடைந்தது. அதனை தான் ஆட்சி செய்த துவாரகையில் வைத்து வணங்கி வந்தார், கிருஷ்ணர்.

    கிருஷ்ண அவதாரம் பூர்த்தியாகும் தருணம் வந்தபோது, தன் சிறுவயது முதலே தன்னுடன் இருந்தவரும், தன் தேரோட்டியுமான உத்தவரை அழைத்தார், கிருஷ்ணர். அவரிடம், “இன்னும் சில நாட்களில் துவாரகையை கடல் சூழ்ந்துகொள்ளப் போகிறது. அந்த பெருவெள்ளத்தில், நான் வழிபடும் விக்கிரகம் மிதக்கும். அதனை தேவர்களின் குருவான, பிரஜாபதியின் உதவியுடன் பக்தர்கள் வணங்கத்தக்க புனிதமான ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    கிருஷ்ணர் சொன்னபடியே, அடுத்த சில நாட்களில், பெரிய பிரளயம் ஒன்று உண்டானது. அந்த பிரளயத்தில் துவாரகை நகரம் தாக்கப்பட்டது. அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விக்கிரகம், குரு பகவானிடம் போய் சேர்ந்தது. அதை தன்வசப்படுத்திய குருபகவான், அவரது முதன்மை சீடரான வாயு தேவனுடன் சேர்ந்து விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிறப்பான ஒரு இடத்தைத் தேடி அலைந்தார். இறுதியில் அவர்கள் பரசுராமரால் உருவாக்கப்பட்ட, அந்த பசுமை போர்த்திய தேசத்தை அடைந்தார்கள். அதுவே கேரளம்.

    அங்கே மகாவிஷ்ணுவின் மற்றொரு அம்சமாக கருதப்படும் பரசுராமரை, குரு பகவானும், வாயு பகவானும் சந்தித்தனர். பின்னர் அவரிடம், தங்களிடம் இருக்கும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான இடத்தை காண்பித்தருளும்படி வேண்டினர். அதைக் கேட்டு பரவசம் அடைந்த பரசுராமர், ‘அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்வதற்கான சிறப்புமிக்க இடம் இதுதான்’ என்று, இருவரையும் அழைத்துப் போய் ஒரு இடத்தைக் காண்பித்தார். பன்னெடுங்காலமாக அந்த இடத்தின் அருகில்தான் சிவபெருமான், தவம் இருந்து வந்தார் என்பதை அதன் பிறகே குரு பகவானும், வாயு பகவானும் அறிந்து கொண்டனர்.

    பரசுராமர் கை காட்டிய இடத்தில், விக்கிரகத்தை குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த காரியத்தைச் செய்ததால், இந்த தலம் ‘குருவாயூர்’ என்று ஆனது. இத்தல இறைவனும் ‘குருவாயூரப்பன்’ ஆனார். கிருஷ்ண பகவானால், துவாரகையில் வைத்து பூஜிக்கப்பட்ட விக்கிரகம் என்பதால், இந்த ஆலயம் ‘தென் துவாரகை’ என்றும் போற்றப்படுகிறது.
    திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலின் வடக்கு வாசல் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலாகும். இந்தகோவிலை புதுப்பித்து கட்டும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடந்துவந்தது. இதனால் கோவிலின் வடக்குவாசல் அடைக்கப்பட்டது.

    இதன் காரணமாக பக்தர்கள் கிழக்குவாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பெருமாள்-தாயாரை வணங்கி சென்றார்கள். இது பக்தர்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. எனவே, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி வடக்கு வாசல் வழியாக பக்தர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் அங்கு திருப்பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று வடக்கு வாசல் திறக்கப்பட்டது. முன்னதாக யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்புக்கு பூஜைகள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடக்குவாசல் வழியாக கோவிலுக்குள் சென்று பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டு சென்றனர். 5 ஆண்டுகளுக்கு பிறகு வடக்குவாசல் வழியாக கோவிலுக்குள் சென்றது பக்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, ரெங்கநாதர் கோவிலின் அறங்காவலர் ரெங்காச்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும்.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைதந்து  அருளி உலகத்தின் அன்பு கூர்ந்தார். ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமையப்பட்டுபோன மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்த குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம். தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும் படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும்.

    நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:78) என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ இரக்கத்தையோ காண்பிக்கவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் காட்டாமல் கடுமையான தண்டனை அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது.

    ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களை பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார். கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும் தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையோ என ஏங்கித்தவித்த முழுமனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது.

    நல்லவனுக்கு ஒருவேளை ஒருவன் மரிக்க துணிவான். முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பை பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். இது உங்களால் உண்டானதல்ல. இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு (எபோ:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனை கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (யோ:3:16) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்திருக்க நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூறக் கடனாளிகளாயிருக்கிறோம்.

    அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தை பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்த கிருபையை பெற்றுக்கொள்ள அழைப்பு கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.

    போதகர் அமல்ராஜ்.

    பெத்தேல் ஏ.ஜி,திருச்சபை, மண்ணரை, திருப்பூர்
    திருச்சி நாகநாதசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடைபெறுகிறது.
    திருச்சி நந்தி கோவில் தெருவில் மலைக்கோட்டை கோவிலின் உப கோவிலான ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசி மக திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்று இரவு சுவாமி-அம்பாள் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) சுவாமி-அம்பாள் கற்பக விருட்சம், காமதேனு வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) பூதவாகனம், கமல வாகனத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கைலாச பர்வதம் மற்றும் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 26-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் மீன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. வருகிற 27-ந்தேதி மாசி மகத்தை ஒட்டி நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மேல் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகிற 28-ந்தேதி சுவாமி, அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளியுள்ள போது, நாக கன்னிகைகள், சாரமா முனிவர் நாகநாதரை செவ்வந்தி மலர்களால் அர்ச்சித்தல் நிகழ்ச்சியும், அதைதொடர்ந்து அன்று இரவு விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், மாலை பிச்சாண்டவர் திருக்கோலமும் நடைபெறுகிறது. 2-ந்தேதி கோவில் பணியாளர்கள் சார்பில் பிராயச்சித்தம் அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி, செயல் அலுவலர் கீதா உள்பட அலுவலகர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    ரதசப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில் அருணாசலேஸ்வரர், கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் அமாவாசை முடிந்து 7-வது நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று நடந்தது.

    இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர் அதிகாலையிலேயே கலசபாக்கம் செய்யாற்றுக்கு புறப்பட்டார்.

    செய்யாற்றின் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டு மற்றும் மேட்டுப்பாளையம் கிராம மக்கள் அருணாசலேஸ்வரருக்கு வரவேற்பு அளித்து, ஆற்றுத் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றனர்.

    அதேபோன்று செய்யாற்றின் வடகரையில் உள்ள கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனாகிய திருமாமுடீஸ்வரரை பக்தர்கள் மேளதாளத்துடன் செய்யாற்றுக்கு அழைத்து வந்தனர்.

    இரண்டு சாமிகளும் செய்யாறில் எதிர் எதிரே இறங்கி ஆனந்த நடனமாடியவாறு ஆற்றில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனகோட்டிபுரம் கிராமத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனகோட்டிபுரம் கிராம விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டு வருகின்றனர்.

    செய்யாற்றில் நடக்கும் தீர்த்தவாரிக்கு சென்ற அருணாசலேஸ்வரர் தனக்கோட்டி புரத்தில்உள்ள நிலத்துக்கு சென்றார். அங்கு நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை மாலையாக கட்டி சாமிக்கு அணிவித்தனர். பெண்கள் பொங்கல்வைத்து வழிபட்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (நாளை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    திருமலை :

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20-ந்தேதி (நாளை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருமலை, திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்க, 20-ந்தேதி மாலை 3 மணியளவில் காலியாக உள்ள அறைகளின் விவரம் ஆன்லைன் மூலமாக வெளியிடப்படுகின்றன.

    எனவே அறைகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாட்களில் திருமலை, திருப்பதிக்கு வந்து, தாங்கள் முன்பதிவு செய்த அறைகளில் தங்கி ஓய்வெடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கணவனை இழந்தவர்கள் ரத சப்தமி விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
    19-2-2021 ரத சப்தமி

    அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் ‘சப்தமி’ திதியாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரையான 6 மாத காலத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்றும், தை மாதம் முதல் ஆனி வரையான 6 மாதத்தை ‘உத்திராயன புண்ணிய காலம்’ என்றும் அழைப்பார்கள். தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கி பயணிக்கும் சூரிய பகவான், உத்திராயனம் தொடங்கும் தை மாதம் முதல் நாளில் வடக்கு நோக்கி திரும்புவார். அதனால்தான் தை முதல் நாளில் அவருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். தை முதல் நாளில் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினாலும், ஏழாவது நாளான சப்தமி தினத்தன்றுதான், அவரது 7 குதிரை பூட்டிய தேர், முழுமையாக வடக்கு நோக்கி திரும்புகிறதாம். எனவேதான் தை மாதம் வரும் சப்தமி திதியானது, ‘ரத சப்தமி’ என்று அழைக்கப்படுகிறது.

    சப்த ரிஷிகளில் முக்கியமானவர், காசியபர். இவருக்கு பல மனைவியர் உண்டு. அவர்களில் ஒருத்தியான அதிதி, கர்ப்பவதியாக இருந்தாள். அப்போது ஒரு நாள் வாசலில் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தாள். அவளது இல்லத்தின் முன்பாக முதியவர் ஒருவர், யாசகம் கேட்டு நின்று கொண்டிருந்தார். உணவு எடுத்துவருவதாகக் கூறிச் சென்ற அதிதி, கர்ப்ப அவதி காரணமாக மெதுவாக நடந்து சென்று உணவை எடுத்து வந்தாள். இதனால் தாமதம் உண்டானது. அப்போது அந்த யாசகர், “ஏன் இவ்வளவு தாமதம். நீ என்னை அவமதித்து விட்டாய். உன் வயிற்றில் வளரும் பிள்ளை, இறந்து போகும்” என்று சபித்தார்.

    இதனால் பதறிப்போன அதிதி, இதுபற்றி தனது கணவர் காசியபரிடம் கூறினாள். அவரோ “நீ வீணாக பதற்றம் கொள்ள வேண்டாம். அமிர்த உலகத்தில் இருந்து அழிவே இல்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்றார்.

    அந்த வாழ்த்தின்படி பிரகாசமான ஒளியோடு பிறந்தவர்தான், சூரிய பகவான். ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், உலகை வலம் வந்து உலக உயிர்களை காப்பதால், திதிகளில் ஏதாவது திதியான சப்தமி நாளில் இவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியது. அதிலும் ரத சப்தமி அன்று விரதம் கடைப்பிடிப்பது, நமக்கு பல்வேறு பலன்களைப் பெற்றுத்தரும்.

    இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். 7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் ெகாண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலை களுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு. கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

    ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழைம) ரத சப்தமி விழா நடக்கிறது. அதையொட்டி 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) ரத சப்தமி விழா கோலாகலமாக நடக்கிறது. அன்று 7 வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஆகையால், இவ்விழாவை ‘மினி பிரம்மோற்சவம்’ என்றும் அழைக்கலாம்.

    நாளை அதிகாலை 5.30 மணியளவில் முதல் வாகனமாக சூரிய பிரபை வாகனம் நடக்கிறது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். கோவில் எதிரே உற்சவரை சூரிய பிரபை வாகனத்துடன் நிலை நிறுத்தி, சூரியன் உதயமாகி வரும் நேரத்தில் சூரிய ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயணராக எழுந்தருளும் மலையப்பசாமிக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6.30 மணிக்கு சூரிய பிரபை வாகன ஊர்வலம் தொடங்குகிறது.

    இதையடுத்து காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன ஊர்வலம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை கருட வாகன ஊர்வலம், மதியம் 1 மணியில் இருந்து 2 மணிவரை அனுமந்த வாகன ஊர்வலம், மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணிவரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை கல்ப விருட்ச வாகன ஊர்வலம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சர்வ பூபால வாகன ஊர்வலம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை சந்திர பிரபை வாகன ஊர்வலம் நடக்கிறது. இத்துடன் வாகன ஊர்வலம் நிறைவடைந்தது.

    ரத சப்தமி விழாவால் ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    ×