என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கடந்த 335 நாட்களுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகா தீப, தூப ஆராதனையும் நடக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டு கருவறையில் நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மேலும் கூடுதல் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கடந்த 3-ந்தேதி முதல் அனைத்து அர்ச்சனைகளும் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 11-ந்தேதி முதல் கோவிலுக்குள் தங்கத் தேர் உலா நடைபெற்றது. ஆனால் நகர் வீதிகளில் சுவாமி புறப்பாடு இல்லாத நிலை இருந்து வந்தது. கோவிலுக்குள் இருந்து சுவாமி மேள தாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வரும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் கடந்த 335 நாட்களுக்கு பிறகு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமியுடன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும், சர்வ அலங்காரமும், மகா தீப, தூப ஆராதனையும் நடக்கிறது. அதன்பின் மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் அமர்ந்து நகர் உலா வருகிறார். சன்னதி தெரு கீழ ரத வீதி, மேல ரத வீதி மற்றும் பெரிய ரத வீதிகளில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 335 நாட்களுக்கு பிறகு சுவாமி எழுந்தருளுவதால் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி திருவிழா தொடங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறை நிபந்தனைபடி கோவில்களில் திருவிழா நடத்த ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உத்தரவிட்டார்.
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தேர் மற்றும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மட்டும் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர் மற்றும் குண்டம் திருவிழா வருகிற மார்ச் மாதம் 16-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 20-ந்தேதி இரவு கோவில்கள் முன்பு கம்பம் நடப்படுகிறது. 30-ந்தேதி வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்குகிறார்கள்.
31-ந்தேதி சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும், ஏப்ரல் மாதம் 3-ந்தேதி கம்பம் பிடுங்கப்பட்டு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறியதாவது:-
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டதால், திருவிழா முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி, இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படி நடக்கும். அதிக கூட்டம் கூடக்கூடாது. பூச்சாட்டுதல், குண்டம் இறங்குதல், கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 பேருக்கும் குறைவாக பக்தர்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
கோவிலுக்கு வரும்போது பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பெரிய மாரியம்மன் கோவில் அருகில் 29 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இசை நிகழ்ச்சி, பிற கலை நிகழ்ச்சி, மேடை கச்சேரி, சாலை ஓர கடைகள், அன்னதானம் வழங்குதல், கூழ் ஊற்றுதல், பிரசாதம் வழங்குவதற்கு அனுமதி இல்லை. அரசு அவ்வப்போது தெரிவிக்கும் நடைமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

துர்க்கையை மனதில் நினைத்து, "ரோக நிவாரண அஷ்டகம்' எனப்படும் இந்தப் பாடலைப் பாடுவோருக்கு நோயற்ற சுகமான வாழ்வு அமையும்.
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு துர்க்கையளே
ஜெகமது யாவும் ஜெய ஜெய எனவே
சங்கரி உன்னைப் பாடிடுமே
ஹந ஹந தகதக பசபச வெனவே
தளிர்த்திடு ஜோதி யானவளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈஸ்வரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீலி
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
நாரணி மாயே நான்முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுத் தாயே
ஊர்த்துவ யாயே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானக யாயே காசி னியே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெரு நிதியானாய் பேரறிவானாய்
பெரு வலியானாய் பெண்மையளே
நறுமல ரானாய் நல்லவளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணையே
ரோக நிவாரணி சோக நிவாரணி
தாப நிவாரணி ஜெய துர்க்கா
ஜெய ஜெய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரணி சந்திர கண்டினியே
ஜெய ஜெய சூஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்யயளே
ஜெய ஜெய கால ராத்திரி கௌரி
ஸித்திகாக ஸ்ரீ நவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோக நிவாரணி தாப நிவாரணி ஜெய துர்க்கா

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்பதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் முதலாவதாக காலையில் வியூக சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து தேவியர்களுடன் பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கொடி பட்டத்தை பல்லக்கில் வைத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து கோவில் பட்டர்கள் கொடியேற்றினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு மாட வீதிகளில் பெருமாள் புறப்பாடு நடந்தது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) வரை தினமும் காலையில் பெருமாள் பல்லக்கிலும், மாலையில் கருட, அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா வருகிற 27-ந்தேதி மாலையில் டவன்ஹால் ரோட்டில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைதெப்பத்தில் தேவியர்களுடன் பெருமாள் எழுந்தருள்கிறார்.

ஒரு வருடத்துக்கு பிறகு சோலைமலை முருகன் கோவிலில், மேள தாளம் முழங்க தங்க தேரோட்டம் நடந்தது. வழக்கம் போல் பக்தர்கள் அதற்குரிய காணிக்கையை செலுத்தி விட்டு தங்க தேரோட்டம் நடத்தி கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையை அடுத்த அழகர்கோவில் அழகர்மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில்.
கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் இக்கோவிலில் தொடர்ந்து பூஜை முறைகள், நெய் விளக்கு ஏற்றுவது மற்றும் தேங்காய், பழம், மாலைகள் வைத்து சாமி தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதித்தது. இதைத் தொடர்ந்து இங்கு தங்க தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த அறநிலையத் துறை தங்க தேரோட்டம் நடைபெற அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு பிறகு நேற்று மாலை முதல் சோலைமலை முருகன் கோவிலில், மேள தாளம் முழங்க தங்க தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
முன்னதாக தக்கார் வெங்கடாசலம், உபயதாரர் சுப்பையா செட்டியார் மற்றும் பக்தர்கள் தங்க தேரை கோவில் பிரகாரத்தை சுற்றி இழுத்து வந்து தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். வழக்கம் போல் பக்தர்கள் அதற்குரிய காணிக்கையை செலுத்தி விட்டு தங்க தேரோட்டம் நடத்தி கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : ஐராவதேஸ்வரர்.
அம்பாள் : தெய்வநாயகி.
தீர்த்தம் : எமதீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.
தலச்சிறப்பு : முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது. 1987-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு கங்கை கொண்ட சோழபுரம் கோயிலும், ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன என்பது மேலும் சிறப்பு ஆகும்.
தல வரலாறு : தாரன் எனும் அரசன் தனது 100 மனைவிகளுடன் வணங்கி சிறப்புற வாழ்ந்த திருத்தலம். ஐராவதம் எனும் வெண்யானை துர்வாசர் சாபத்தால் இழந்து விட்ட வெண்மையை இச்சிவனை வணங்கி மீளப் பெற்றதிருத்தலம். ஸ்ரீ ஐராவதேஸ்வரர் என்னும் திருநாமத்தில் சிவபெருமான் திருக்கோவில் கொண்டுள்ளார். இத்திருக்கோவிலை ராஜேந்திரச் சோழன் 12-ம் நூற்றாண்டில் கட்டினார். சோழர்களின் கட்டிடக் கலைக்கு மிகப் பெரிய உதாரணமான கோவில். திருக்கோவிலின் முன்பு மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களை காண கண் கோடி வேண்டும். இங்குள்ள இறைவனை இந்திரனின் ஐராவதமும், எமதர்ம ராஜாவும் வழிபட்டு உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்குள்ள திருக்குளத்தின் பெயர் எமதீர்த்தமாகும்.
சோழ மன்னன் இரண்டாம் இராஜராஜன் (1150-1173) இக்கோவிலை எழுப்பினார். இம்மன்னர் பெயரால் இக்கோவில் இராஜராஜேச்சுரம் என அழைக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில பகுதிகள் எழுந்தன. ஐராவதேஸ்வரர் கோவில் பிற்காலச் சோழர் காலச் சிற்பக் கலைத் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இக்கோவிலின் விமானம் தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் உள்ள கோவில்களைப் போல் பிரம்மாண்டமான அமைப்பைக் கொண்டுள்ளது. இக்கோவில் முழுவதும் கல்லாலானது.
இரண்டாம் இராஜராஜன் சாளுக்கியரின் கல்யாணிநகர் மீது படை எடுத்து வெற்றி பெற்றார். தமது பரிசாக அங்கிருந்து சாளுக்கிய துவார பாலகர் சிலையைத் தாராசுரம் கோவிலுக்குக் கொண்டு வந்தார். துவார பாலர் சிற்பமும் இதர சில சிற்பங்களும் தற்பொழுது தஞ்சாவூர் சரஸ்வதி மாளிகையில் உள்ள கலைக் கூடத்தில் உள்ளன. ஐராவதேஸ்வரர் கோவிலில் காணப்படும் சில சிற்பங்கள் கல்யாணிச் சாளுக்கியர் கலையின் அம்சங்களைக் கொண்டுள்ளன.
கோவிலின் கட்டடகலை : கோனார்க் பாணி வடிவமைப்பு - ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும். ஐராவதேஸ்வரர் கோயில் கோனார்க் கோயிலை ஒத்துள்ளது. ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்று வரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ராஜகம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டி மீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன. யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஒரு அழகியச் சிற்பத்தை அந்தக் காலத்திலேயே வடிவமைத்து இருக்கிறார்கள் கலை வல்லுனர்கள். 63 நாயன்மார்கள் சிலையும் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன.
இராமாயண காட்சி வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பு எய்தும் ராமர், கையில் வீணை இல்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்று முகங்கள் மற்றும் எட்டுக் கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை.
கோயில் முகவரி :
அருள்மிகு ஐராவதேஸ்வரர் கலைக்கோவில்,
தாராசுரம் - 612 702,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார். பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு மாசித்திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது.
21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது.
இந்த திருக்கம்பம் சாட்டுவதற்காக சாமி உத்தரவின்பேரில் தேக்கந்தோட்டம் அருகே உள்ள கருப்பணசாமி கோவில் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது. பின்னர் பழனி வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டு வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளில் கம்பம் சுற்றி வந்து நள்ளிரவு கோவிலை வந்தடைந்தது. பின்பு 1.50 மணிக்கு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட பின்னர், பால், மஞ்சள்நீரை ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருந்தனர்.
திருவிழாவில் வருகிற 23-ந்தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 2-ந்தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம் ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் புனித வியாகுல அன்னை ஆலயம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். முட்டம் மறைமாவட்ட முதல்வர் ஜாண்ரூபஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழாவும், 26-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது.
27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, 10.30 மணிக்கு தேர்பவனி ஆகியவையும், விழாவின் நிறைவு நாளான 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணி மலையாள திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அய்யனார், செல்லியம்மன் கோவிலிலும், அதன்பிறகு விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் கோவிலிலும் உற்சவம் நடைபெறும்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி தேர் முகூர்த்தமும், ஜனவரி 25-ந் தேதி அய்யனார் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் ஜனவரி 26-ந்தேதி செல்லியம்மன் கோவிலில் காப்பு கட்டுதலும், கடந்த 2-ந்தேதி பால்குடம் எடுத்தல், செடல் உற்சவம் மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந் தேதி ஆழத்து விநாயகருக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்று, 14-ந்தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது.
இதையடுத்து நேற்று விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், சுப்பிரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்து உட்பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஓம் நமசிவாய கோஷத்துடன் மாசி மக பெருவிழா கொடியேற்றப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கால் மண்டபம் மற்றும் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள 3 கொடி மரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. இதில் விருத்தாசலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் வருகிற 22-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும், 27 -ந் தேதி தெப்ப உற்சவமும், 28-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும், மார்ச் 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 13-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 15-ந்தேதி முதல் மாத பூஜை 5 நாட்கள் நடைபெறும். அதைத்தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்தர ஆறாட்டு திருவிழா 19-ந்தேதி தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறுகிறது. 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.
28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறுகிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவக்காலம் தொடக்கத்தையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கத்தையொட்டி நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கையில் ஏந்தி வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து கிடைத்த சாம்பலை புனிதம்செய்து ஆலயத்துக்கு வந்தவர்களின் நெற்றியில் பூசப்பட்டது. இதையடுத்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
பூண்டி மாதா பேராலயத்தில் தவக்காலத்தின் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை சிலுவைப்பாதை நடைபெறும். அடுத்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி மைக்கேல் பட்டி ஆலயத்தில் இருந்து தவக்கால நடைபயணத்தை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.
நடைபயணம் பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தவுடன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு சிலுவைப்பாதை நடைபெறும். அடுத்த மாதம் 28-ந் தேதி ஏசு ஜெருசலேம் நகருக்கு வருகை தந்ததை வரவேற்கும் விதமாக குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. இந்த பவனி பேராலய மக்கள் மன்றத்தில் இருந்து தொடங்கி பூண்டி மாதா பேராலயத்தில் முடிவடையும். இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர், துணை அதிபர், தியான மைய இயக்குனர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழாவை வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து, கொடி கம்பத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி முதல் நாளான நேற்று காலை வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து, கொடி கம்பத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடி மரத்துக்கும், கொடிக்கும் கற்பூர ஆரத்தி, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
முன்னதாக கொடிமரம் பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பிரம்மோற்சவ விழாவில் கோவில் அதிகாரிகள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழா வருகிற 25-ந்தேதி நிறைவடைகிறது.