
கொடி பட்டத்தை பல்லக்கில் வைத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து கோவில் பட்டர்கள் கொடியேற்றினர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு மாட வீதிகளில் பெருமாள் புறப்பாடு நடந்தது. வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) வரை தினமும் காலையில் பெருமாள் பல்லக்கிலும், மாலையில் கருட, அனுமார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப திருவிழா வருகிற 27-ந்தேதி மாலையில் டவன்ஹால் ரோட்டில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலைதெப்பத்தில் தேவியர்களுடன் பெருமாள் எழுந்தருள்கிறார்.