என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சித்தூரில் மயானக் கொள்ளை விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் சித்தூர் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சித்தூர் பெஸ்த வீதி தெருவில் அகிலாண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்யா ஸ்வரூபியாய் எழுந்தருளியிருக்கும் சுயம்பு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி மறுநாள் மயானக் கொள்ளை விழா நடப்பது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான மயானக் கொள்ளை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இக்கோவிலில் அம்பாளை வழிபட்டால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குடும்ப கஷ்டத்துடன் வாழ்பவர்களின் கஷ்டம் நீங்கும். நோயால் அவதிப்படுவோர் பூரண குணமடைவர். கோவிலின் தீர்த்தத்தை பருகினால் நோய் நொடி வராது, குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மயானக்கொள்ளை விழாவையொட்டி நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் சக்தி கரகம், தீர்த்தம், பூஜை, மூலவருக்கு மஞ்சள் அலங்காரம் நடந்தது.
மதியம் 12 மணியளவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளான பஜார் தெரு, காந்தி ரோடு, சந்தப்பேட்டை ரோடு வழியாக மேள தாளத்துடன் ஊர்வலமாக நீவா நதி கரைக்கு கொண்டு சென்றனர். அங்கு அமைக்கப்பட்ட தட்சன் உருவப்பொம்மையை வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. விழாவில் சித்தூர் மற்றும் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மோர், குடிநீர், பிரசாதம் மற்றும் அன்னதானம் ஆகியவைகள் வழங்கப்பட்டது. அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வேலூர் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை மீது அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால், அவரது பெயராலேயே இந்த மலை அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்தில் உள்ள வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி, மான் வடிவில் அவர் முன்பு வந்தாள். முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவர் நம்பிராஜன், அந்தப் பெண் குழந்தையை எடுத்து ‘வள்ளி’ என பெயரிட்டு வளர்த்தார். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகப்பெருமான், வள்ளியை திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு.
இத்தல மூலவர் பெயர், சுப்பிரமணியர். தாயார் பெயர், வள்ளியம்மை. 1000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், முன்பு சின்னவள்ளிமலை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது. மலைக்கோவிலில் குடவறை சன்னிதியில், வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
ஒரு முறை முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது. ஆலயத்தின் தீர்த்தம், சரவணப்பொய்கை ஆகும். பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னிதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செலுத்துகிறார்கள்.
தற்போதும் இந்தப் பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாக கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப்படவில்லை. படிகளைக் கடந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோவில் நம்மை அதிசயிக்க வைக்கிறது. மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரர் கோவிலும் உள்ளது. மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கதிர்கள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாக கூறி, தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
அமைவிடம்
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளாள நேற்று தேரோட்டம் நடந்தது. தேர்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிைக தாயார் எழுந்தருளி பவனி வந்தனா்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம் நடந்தது. மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தேரோட்டம் நடந்தது.
ஒரு தேரில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அதேபோல் மற்றொரு தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மட்டும் தனியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சிவன் கோவில் அருகில் நெப்பல மண்டபத்தில் உற்சவர்களுக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை ெசய்தனர்.
தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜூ ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்கள், சாரண-சாரணியர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் ெவள்ளத்தில் தேர்கள் பவனி வந்தன.
தேர்களுக்கு முன்னால் கோலாட்டம், மயிலாட்டம், ெசண்டை மேளம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் சிவன் கோவில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வாராஹி தேவியை வணங்கி வழிபட்டு வந்தால், எதிரிகள் தொடர்பான பயம் நீங்கும். எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தூள் தூளாக்குவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள்.
பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதிப்பதற்கான அற்புதமான நாள். வாராஹி தேவிக்கு அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி!
வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.
வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம்
பாதுகாப்பாம். ஸ்வாஹா
எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும்
எனும் வாராஹி தேவியின் மந்திரத்தை தினமும் 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுத்தருளும். இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியைத் தவழச் செய்யும்.
சப்தமாதர்களில் ஒருவராகத் திகழும் வாராஹிதேவியை வணங்குவோம். மனோபலம் பெருகும். தடைகள் அகலும். இதுவரை தடைப்பட்டு வந்த விசேஷங்களும் மங்கல காரியங்களும் இனிதே நடைபெறும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வாள் வாராஹி அன்னை!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தெப்பக்குளம் பூட்டி கிடக்கிறது. இதனால் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்திப்பெற்ற ேகாவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துதல், கோழி காணிக்கை, நாணய காணிக்கை, பால்குடம் எடுத்தல், பொங்கலிடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவது வழக்கம். இவர்களில் பலர் முடிகாணிக்கை செலுத்துகிறார்கள். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக இல்லை என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது கோவில் அருகே உள்ள தெப்பக்குளமும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்துமிடத்தில் குளியலறையும் பூட்டி கிடக்கிறது. இது முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு அவதியை ஏற்படுத்தி உள்ளது.
முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகே உள்ள குடிநீர் குழாயில் வரும் சிறிதளவு தண்ணீரில் பக்தர்கள் தட்டுத்தடுமாறி குளிக்க வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களாக தெப்பக்குளம் பூட்டிக்கிடப்பதால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
கோவில் வளாகத்தை தூய்மையாக பராமரிப்பதுடன், தேவையான குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூட்டிக்கிடக்கும் கோவில் குளத்தை திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து அனுமனை தரிசிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
மாசி மாத சனிக்கிழமையில், விரதம் இருந்து அனுமனை வழிபடுவோம். வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், இனியெல்லாம் ஜெயம்தான் என்பது ஐதீகம். விரதம் இருந்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.
தெய்வங்களில் அனுமன் வித்தியாசமான தெய்வம் என்கிறார்கள் பக்தர்கள். நாம் வணங்கும் தெய்வங்கள், நின்ற திருக்கோலத்திலோ அமர்ந்த திருக்கோலத்திலோ இருப்பார்கள். சயனக் கோலத்தில் கூட காட்சி தருவார்கள். அந்தத் தெய்வங்களையெல்லாம் நாம் கைகூப்பி வணங்குவோம். ஆராதிப்போம். வழிபடுவோம். நம்முடைய பிரார்த்தனைகளை முறையிடுவோம்.
அனுமன் பராக்கிரமசாலி. பலம் வாய்ந்தவர். அதர்மத்தை அழிப்பதை முன்னின்று செய்பவர். அருளுவதில் ஆனந்தம் கொள்பவர் என்றெல்லாம் விவரிக்கிறது புராணம். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து அனுமனை தரிசிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விரதம் இருந்து... செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அனுமனை தரிசித்து வந்தால், நினைத்த காரியங்கள் அனைத்தையும் இனிதே முடித்துக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் இன்னல்களையெல்லாம் போக்கி அருளும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் ஜெயமாக்கித் தரும்.
முக்கியமாக, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.

திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடக்கிறது. அதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடக்கிறது. அதையொட்டி நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதிகாலை மூலவரை துயில் எழுப்பி தோமலா சேவா, சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவிலின் மூலவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை தூய நீரால் சுத்தம் செய்யப்பட்டது.
இதையடுத்து நமகொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலி கட்டா ஆகிய சுகந்த திரவியங்களுடன் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. காலை 10 மணியில் இருந்து இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு, கண்காணிப்பாளர் ஜி.ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் முனிரத்னம், ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

அரியாம்பகோடு முல்லைப்பள்ளிவிளை அய்யா வைகுண்ட நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
அரியாம்பகோடு முல்லைப்பள்ளிவிளை அய்யா வைகுண்ட நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பும், பணிவிடையும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதர்மம், மாலை 5.30 மணிக்கு பணிவிடை, 6 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், அன்னதர்மம், மாலை 5.30 மணிக்கு பணிவிடை, 6 மணிக்கு திருஏடு வாசிப்பும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பும், மாலை 5.30 மணிக்கு பணிவிடையும், சுருள் கொடுப்பும், 6 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு உகப்படிப்பும் தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.
ஆற்றூர் புல்லாணிவிளை அய்யா வைகுண்ட நாராயணசாமி கோவிலில் திரு ஏடுவாசிப்பு திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் பணிவிடையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, அன்னதானமும் நடைபெற்றது.
விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம் இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்து தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார். 1 யோவான் 3-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் என்று சொல்லப்ட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே தேவன் நம்மீது வைத்துள்ள அன்பின் நிமித்தமாகவே இயேசு தன்னுடைய ஜீவனையே நமக்காக கல்வாரி சிலுவையில் ஒப்பு கொடுத்தார் என்பது எவ்வளவு பெரிதான காரியம் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
ஆகவே தேவன் இவ்வளவு பெரிதான மீட்பை இரட்சிப்பை நமக்கு கொடுத்திருப்பார் என்றால், அவருடைய அன்பின் நிமித்தமாக அவர் கொடுத்திருக்கின்ற மிகப்பெரியதாக நாம் நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தகுதியில்லாத எனக்கு இவ்வளவு பெரிய அன்பு இவ்வளவு பெரிய மீட்பு சமாதானம், இவ்வளவு பெரிய விடுதலை என்பதை நாம் உணர வேண்டும்.
அநேக வேளைகளில் நாம் ஆண்டவருடைய சத்தியத்தை அறிய வேண்டிய அளவில் அறிந்திருப்பது மிக அவசியம். எல்லாச்சூழ்நிலைகளிலும் கர்த்தர் மேல் வைக்கின்ற நம்பிக்கை அவருடைய சமாதானத்தின் ஆளுமை நம் இக்கட்டான வேளைகளிலும் கர்த்தம் ஆளுமை செய்கின்றார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். தேவன் என்னை நேசிக்கிறார். ஆகவே இந்த அன்பை நாம் எந்தளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் விசுவாசித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு காரியத்திலும் செயல்படுகின்றோமோ அந்தளவுக்கே மெய்யான சமாதானம் உண்டு.
இக்கட்டான காலத்திலும் பொறுமையும் நிதானமுமாக ஆண்டவருடைய கிருபையை சார்ந்து வாழுகிற வாழ்க்கை என்பது வேதம் சொல்லுகிறபடி விசுவாசிக்கிறவன் பதறான நம்பிக்கையே உங்கள் பெலனாயிருக்கும் என்பதே . இவ்விதமான ஒரு ஆழமான நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை அவருடைய அன்பை நாம் அறிந்து அதன் அடிப்படையில் வாழுகிற வாழ்க்கையின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே என்னில் அன்புகூறுகிற தேவன் இவர். அந்த அன்பு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. இவ்வளவு பெரிதான அன்பு என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம் இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆம் தேவன் மேலும் நாம் ஒவ்வொருவரையும் தம் அன்பினால் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோ.ஜோசப், கோவில்வழி.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். பிரம்மோற்சவ விழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பங்குனி தேரோட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. எட்டுத்திக்கு கொடியேற்றத்தையொட்டி உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை தேரோட்டம் (போகிதேரு) நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை அர்ச்சகர்கள் ஏகாந்தமாக உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நந்தி வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.
மகா சிவராத்திரியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் நடைபெறும். சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

பொருளாதார பற்றாக்குறை என்பது மனிதர்களின் பெரும் குறையாக பாவிக்கப்படும் சூழலில் அந்த பொருளாதாரத்தை வசப்படுத்த ஆன்மீகத்தில் செய்யப்படும் விரத பூஜை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
உணவு, உடை, இருப்பிடம், என ஒரு மனிதனின் செளகரியம், அடிப்படை, வசதி, அந்தஸ்து, மகிழ்ச்சி என அனைத்தின் மூலமாகவும் பணம் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் பொருளாதார பற்றாக்குறை என்பது மனிதர்களின் பெரும் குறையாக பாவிக்கப்படும் சூழலில். அந்த பொருளாதாரத்தை வசப்படுத்த ஆன்மீகத்தில் செய்யப்படும் விரத பூஜை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
குபேரர் இவர் பணத்தின் அதிபதியான இந்து கடவுளாக விளங்குகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து வளத்திற்கும் இவரே அதிபதி. இவரை விரதம் இருந்து வணங்கி பூஜைகளை மேற்கொள்கிறவர்கள் பண பற்றாக்குறையை சந்திப்பதில்லை என்பது ஐதீகம்.
இதிகாசங்களில் ராவணன் குபேரனிடம் கடன் பெற்றதாக பதிவுகள் உண்டு. மேலும் இவர் விஷ்ணு பரமார்த்தாவின் ஆடம்பர திருமணத்திற்கு கடளித்ததாகவும் குறிப்புகள் உண்டு. பெரும் வணிக நிறுவனங்கள் ஏன் பல முக்கிய வங்கிகளின் முன்புறம் கூட குபேர சிலை நிறுவப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். இவை அனைத்தும் வளத்தை பெருக்க குபேரரின் எத்தனை தேவை என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்மைகளாக அமைகின்றன.
முறையான ஆன்மீக முறைகளின் படி குபேர யந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை தங்கம், வெள்ளி அல்லது ஐம்பொன் ஆகிய உலோகங்களில் செய்யப்படலாம். இந்த யந்திரத்தை முறையாக பராமரித்து பூஜைகள் செய்கிற போது ஒருவருக்கு நேரவிருக்கும் பொருளாதார நெருக்கடி நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த யந்திரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். பூஜையின் போது பூஜை அறையிலும் பின்னர் மீண்டும் அதை பணம் வைக்கும் இடத்திலும் மாற்றி வைக்கலாம்.
குபேர பூஜையை எல்லா நேரத்திலும் செய்யலாம் என்றாலும் கூட இதை செய்வதற்கு உகந்த நேரம் திரயோதசி. பூஜை நேரத்தில் இந்த யந்திரத்தை மஞ்சளாலும், மலர்களாலும் அக்ஷதையாலும் அலங்கரிப்பது உகந்தது.
மேலும் குபேரரை வணங்க மற்றொரு வழி, முதல் கடவுள் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி குபேரரின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லலாம். கடவுளுக்கு தேன், வெல்லம் மற்றும் உலர் பழங்கள் படைக்கலாம். கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிய பின் இறுதியாக அந்த யந்திரத்தின் முன் சிறிது நேரம் தியானத்தில் இடுபடலாம்.
குபேரரின் அருளை பெற்றவருக்கு குறையேதுமில்லை!!