என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவில், பங்குனி மாதத்தில் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
இந்த திருவிழா வருகிற 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் தினமும் தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை உலாவும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
27-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திரு உலாவும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 31-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தூக்கத் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) காலையில் தூக்க நேர்ச்சைக்காரர்களின் நமஸ்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தூக்கக்காரர்கள் அனைவரும் பங்கேற்று, கோவிலை 5 முறை சுற்றி வந்து அம்மனை வணங்கி நமஸ்காரம் மேற்கொண்டனர்.
இக்கோவிலில் இந்த ஆண்டு தூக்கத் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
இதற்கான குலுக்கல், காப்புக் கட்டு ஆகிய வெள்ளிக் கிழமை நடைபெற்றது.
குழந்தைகளை தூக்க வில்லில் சுமந்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் தூக்கக்காரர்களுக்கான விரதம் நேற்று(12-ந்தேதி) தொடங்கியது. இதையடுத்து தூக்கக்காரர்கள் அனைவரும் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அதற்கான விரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தொடர்ந்து தூக்கக்காரர்கள் அனைவரும் விழா நிறைவு நாள் வரை காலை 6 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நமஸ்காரத்தில் ஈடுபடுகிறார்கள்.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும், 5 நாள் பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். அதே போல் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
மாத பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும்.
27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28 - ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
மாத பூஜை மற்றும் விழா நாட்களில் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்கால் அம்மையார் குளக்கரையில் தயானந்த சரஸ்வதி சாமிகள் அமைப்பான தர்ம ரக்ஷணா சமிதி சார்பில் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.
மகா சிவராத்திரி விழாவையொட்டி காரைக்கால் அம்மையார் குளக்கரையில் தயானந்த சரஸ்வதி சாமிகள் அமைப்பான தர்ம ரக்ஷணா சமிதி சார்பில் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.
திருநள்ளாறு கோவில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தார். அவரை பின்தொடர்ந்து பக்தர்கள், தாங்களுக்கு வழங்கப்பட்ட சிறிய அளவிலான சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிபட்டனர்.இந்த கூட்டு பூஜையில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் நிரவி கார்க்கோடபுரீசுவரர் கோவில், காரைக்கால் ஒப்பிலார்மணியர் கோவில், தருமபுரம் யாழ்முறிநாதர் கோவில், நித்தீஸ்வரம் கோவில் மற்றும் பல்வேறு கோவில் வளாகத்திலும் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற்றது.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்ற முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி விடிய விடிய 4 கால பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் தாயாருக்குத் தேன் கொண்டு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால், விரைவிலேயே திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
சென்னை -வேலூர் சாலையில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாற்கடல். வேகவதி ஆற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்த திருப்பாற்கடலில் இருப்பது போலவே ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஊரின் பெயர் திருப்பாற்கடல் என்றே அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தீர்த்தமும் சரஸ்வதி தீர்த்தம் என்றே போற்றப்படுகிறது.
பெருமாள் - ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் -ஸ்ரீகடல்மகள் நாச்சியார். பங்குனி மாத ரேவதி நட்சத்திர நன்னாளில், உபய நாச்சியாரின் உத்ஸவத் திருமேனிக்கு பால் திருமஞ்சனம் செய்து, படியை நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டுப் பிரார்த்தித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்யும் வகையில் குழந்தை பிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தாயாருக்குத் தேன் கொண்டு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; திருமண பாக்கியம் விரைவிலேயே கைகூடும் என்பது ஐதீகம்!
விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில், அந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட்டால், சகல நோய்களும் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

ஈரோடு வளையக்கார வீதி பெரிய எல்லை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு வளையக்கார வீதியில் பிரசித்தி பெற்ற பெரிய எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று இரவு 7 மணிக்கு கோவிலில் பூச்சாட்டப்பட்டது.
நேற்று முன்தினம் கபால பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுப்பதற்காக காரைவாய்க்கால் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு சென்றனர். பின்னர் பக்தர்கள் புனிதநீராடி விட்டு தீர்த்தக்குடம், பால்குடம், அக்னி சட்டி எடுத்து, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
இதைத்தொடர்ந்து பெரிய எல்லை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வருகிறார்கள். பின்னர் இரவு 7 மணிக்கு ஊஞ்சலாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கடந்த 10-ந்தேதி சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 80 அடி நீள மூங்கில் கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டு, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கம்பத்தை பக்தர்கள் சுமந்து வந்து, திரவுபதியம்மன் கோவிலில் கொண்டு வந்து வைத்தனர்.
நேற்று முன்தினம் பக்தர்கள் மகாசிவராத்திரி விரதம் இருந்தனர். சிவராத்திரியையொட்டி கோவில் நடை விடிய, விடிய திறந்து வைக்கப்பட்டது. கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை ஆற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதை தொடர்ந்து கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி மேள, தாளம் முழுங்க கம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்து கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு செய்த பின் கொடிகம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
18-ந்தேதி காலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந்தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடக்கிறது. 28-ந்தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 29-ந்தேதி காலையில் நடக்கிறது நடக்கிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், 30-ந்தேதி திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் நடக்கிறது. 31-ந்தேதி காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் குண்டம் திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தவக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.
இலையுதிர் காலத்தில் திடீரென்று ஒரே சாரல் மழை. பூமி நனைகிறது. மண் மணக்கிறது, தளிர்கள் அரும்புகின்றன. மரங்கள் பசுமை போர்த்துகின்றன. பூக்கள் மலர்ந்து வசந்தத்தை அறிவிக்கின்றன. மனம் குளிர்ந்து போகிறது. ஒரே ஒரு மழையால் எத்தனை நன்மைகள். அவ்வாறே, தவக்காலம் என்பது ஆன்மாவின் வசந்த காலம். மனிதர்களுக்கு பல நன்மைகள் தருகின்ற காலம்.
இக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.
இயேசு கற்றுத்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற வேண்டலை (மத்தேயு 6:9-13) நினைவில் கொள்வோம். இந்த வேண்டலில், எங்கள் தந்தையே எங்களுக்கு தாரும், எங்களுக்கு எதிராக, நாங்கள் மன்னித்தது போல, எங்கள் குற்றங்களை, எங்களை சோதனைக்கு என ஆறு இடங்களில் சமூகத்தை உள்ளடக்கும் பன்மைச்சொற்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் அங்கம் என்றும், அனைவரும் இறைவனின் மக்கள் என்றும் முப்பரிமாணத்தை இயேசு இந்த வேண்டலில் நினைவு படுத்துகின்றார்.
பிறருக்கு எதிராக குற்றம் இழைக்கிற போது, அது இறைவனுக்கு எதிரான குற்றம் என்பதை ‘கடவுளுக்கு எதிராகவும், உமக்கும் எதிராகவும் பாவம் செய்தேன்’ (லூக்கா 15:21) என்று இயேசுவின் ஒரு உவமை உறுதிப்படுத்துகின்றது. பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.
இவையனைத்தும் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: சமூகத்தை உள்ளடக்காத மனமாற்றமும், சமூக அக்கறையற்ற நற்செயல்களும் பொருளற்றவை. எனவே, இத்தவக்காலத்தில் முப்பரிமாண ஆன்மிகத்தில் வேரூன்றி வளர்வோம். பிறருக்கு உதவிகள் செய்வோம்.
அருட்பணி. அ.ஸ்டீபன் மார்ட்டின், சே.ச. திண்டுக்கல்.

மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி, ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர்கள் வலம் வந்தன. இன்று அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
சுவாமி-அம்பாள் தேர்களை வடம் பிடித்து கோவில் இணைஆணையர் (பொறுப்பு) தனபால், தக்கார் ராஜா குமரன் சேதுபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னே செல்ல தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீற்றிருந்த பெரிய தேர்கள் இழுக்கப்பட்டன.
4 ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்த தேர்கள் பகல் 11.15 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தன.
மாலை 5 மணி அளவில் சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து திட்டக்குடி பகுதியில் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் 10-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாசி மாத அமாவாசையையொட்டி பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சீர்காழி கீழ வீதியில் கோமளாம்பிகை என்னும் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் மாலை காளியாட்டத்துடன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சீர்காழி கீழ வீதியில் கோமளாம்பிகை என்னும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகு காவடிகள், கரகம் எடுத்தும் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையோடு ஊர்வலமாக பிடாரி கீழவீதி, தேர் வடக்கு வீதி, தேர் மேல வீதி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலை காளியாட்டத்துடன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் புருஷாமிருக வாகனத்தில் உற்சவர் சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை புருஷாமிருக வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளினர்.
புருஷாமிருக வாகனம் சிவன் கோவில்களில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு அபூர்வ வாகனம். இந்த வாகனத்தில் காணப்படும் உருவம் சிங்கம் போன்ற ஒரு மிருகத்தின் உடலும், மனிதனுடைய தலையும், கைகளையும் கொண்டது.
இந்த மிருகத்தின் கதையை பற்றி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுதிஷ்டிரர் ஒரு யாகத்துக்கு புருஷாமிருகத்தை அழைக்குமாறு பீமனிடம் கூறுகிறார். பீமனுக்கு இரு கோரிக்கைகளை விடுக்கிறது புருஷாமிருகம். இது, அம்மிருகத்தின் முன்னால் பீமன் செல்ல வேண்டும் என்றும், அவர்களுக்கு இடையே நான்கு காத தூரம் (4 மைல்கள்) இருக்க வேண்டும் என்பது தான் புருஷா மிருகத்தின் எச்சரிக்கை. இதை மீறினால் அம்மிருகம் பீமனை உண்டு விடும்.
அவர்கள் பயணத்தைத் தொடங்கியதும், பீமன் தமக்கிடையே உள்ள தொலைவை கணிப்பதற்காக அவ்வபோது ஒருகல்லை எறிய, அது உடனே ஒரு சிவலிங்கமாக மாறியது. அம்மிருகம் சிவ பூஜை செய்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் கால தாமதம் செய்தது. அப்போது அவர்களுக்கு இடையே இருந்த தொலைவு குறைந்தது. அம்மிருகம் தன் எல்லைக்குள் உள்ள பீமனின் உடலை தான் உண்ண வேண்டும் என்றது.
அவர்கள், புருஷாமிருகத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக கூற, புருஷாமிருகம் பீமனின் உடலில் உள்ள பாகத்தை தின்றது. பீமன் இறந்தான். யுதிஷ்டிரர் அளித்த பாரபட்ச மற்ற நியாயத்தை மெச்சி தனது கோரிக்கையை கைவிட்டு விடுகிறது புருஷாமிருகம். சிவன் மீது பக்தி செலுத்திய புருஷாமிருகத்தை பெருமைப்படுத்தும் விதமாக சிவன் புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், திருச்சி வாகன செவை நடந்தது.