search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூக்க நேர்ச்சைகாரர்கள் நமஸ்காரம் நடத்திய போது எடுத்த படம்.
    X
    தூக்க நேர்ச்சைகாரர்கள் நமஸ்காரம் நடத்திய போது எடுத்த படம்.

    கொல்லங்கோடு கோவிலில் தூக்க நேர்ச்சைக்காரர்களின் நமஸ்காரம்

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தூக்கத் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) காலையில் தூக்க நேர்ச்சைக்காரர்களின் நமஸ்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தூக்கத் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) காலையில் தூக்க நேர்ச்சைக்காரர்களின் நமஸ்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தூக்கக்காரர்கள் அனைவரும் பங்கேற்று, கோவிலை 5 முறை சுற்றி வந்து அம்மனை வணங்கி நமஸ்காரம் மேற்கொண்டனர்.

    இக்கோவிலில் இந்த ஆண்டு தூக்கத் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தூக்க நேர்ச்சை வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.

    இதற்கான குலுக்கல், காப்புக் கட்டு ஆகிய வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

    குழந்தைகளை தூக்க வில்லில் சுமந்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் தூக்கக்காரர்களுக்கான விரதம் நேற்று(12-ந்தேதி) தொடங்கியது. இதையடுத்து தூக்கக்காரர்கள் அனைவரும் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அதற்கான விரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து தூக்கக்காரர்கள் அனைவரும் விழா நிறைவு நாள் வரை காலை 6 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நமஸ்காரத்தில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×