என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருமலையில் உள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருமலையில் கோகர்ப்பம் அணை அருகில் சேத்திராபாலகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சேத்திராபாலகர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா நடந்தது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அதிகாரிகள், அர்ச்சகர்கள் சேத்திராபாலகர் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள சேத்திராபாலகருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்று வழிபட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிமாதத்தில் மயானக் கொள்ளை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான மயானக்கொள்ளை வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று பகல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக அதிகாலை தவளக்குப்பம் அருகே சுண்ணாம்பாற்றில் புனித நீர் திரட்டு, கரகம் புறப்பாடு நடந்தது.
பின்னர் முக்கிய வீதிகள் வழியாக கரகம் வீதியுலா சென்று கோவிலை அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முதல் மயானக் கொள்ளைக்கு சென்றது. விழா நாட்களில் தினமும் இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 18-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் ரணகளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய விழாவான மயானக் கொள்ளை தேரோட்டம் வரும் 19-ந்தேதி மாலை நடக்கிறது. 20-ந் தேதி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. கோவில் அறங்காவல் குழு தலைவர் எழில்ராஜா, துணைத்தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி, கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருமால் எடுத்த அவதாரங்கள் தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த வகையில் இன்று மச்ச அவதாரத்திற்கான தியான ஸ்லோகத்தையும், மூலமந்திரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே
மூல மந்திரம்
இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.
மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே
மூல மந்திரம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ
மந்திர ஜப பலன்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7 மணியில் இருந்து காலை 8 மணி வரை தேரோட்டம் (போகிதேரு) நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடுத்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை அர்ச்சகர்கள் ஏகாந்தமாக உற்சவர் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் ஆகியோருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை நந்தி வாகனச் சேவை, ஆஸ்தானம் நடந்தது.
மகா சிவராத்திரியையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை அபிஷேகம் நடைபெறும். சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாஸ்நாயக் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை பெரியகோவில் முழுவதும் விளக்குகள் எரியவிடப்பட்டன. இதனால், கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. இந்தப் பொலிவான காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
தஞ்சை பெரியகோவில் கோபுரத்தை நோக்கி மின் விளக்குகள் இருந்தாலும், அது போதுமான அளவுக்கு பொலிவை தரவில்லை எனவும், இரவு நேரத்திலும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாமல்லபுரத்தை போல் தஞ்சை பெரியகோவிலையும் இரவு நேரத்தில் மிளிர வைக்கும் வகையில் மின்னொளி விளக்குகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கான அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, 216 அடி உயர கருவறை கோபுரம், பெரியநாயகி சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள், ராஜராஜன் வாயில் கோபுரம், கேரளாந்தகன் வாயில் கோபுரம், மராட்டி வாயில் உள்ளிட்டவற்றில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இந்த விளக்குகள் சில நாள்களுக்கு முன்பு எரிய விடப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவில் முழுவதும் இந்த விளக்குகள் நேற்றுமாலை முதல் எரியவிடப்பட்டன. இதனால், கோவில் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. இந்தப் பொலிவான காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது சோதனை அடிப்படையில் எரிய விடப்பட்டு வருகிறது. விரைவில் தொடர்ந்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மின்னொளியில் ஜொலித்த தஞ்சை பெரியகோவில் தஞ்சை பெரியகோவில் கோபுரத்தை நோக்கி மின் விளக்குகள் இருந்தாலும், அது போதுமான அளவுக்கு பொலிவை தரவில்லை எனவும், இரவு நேரத்திலும் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாமல்லபுரத்தை போல் தஞ்சை பெரியகோவிலையும் இரவு நேரத்தில் மிளிர வைக்கும் வகையில் மின்னொளி விளக்குகள் அமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது சோதனை அடிப்படையில் எரிய விடப்பட்டு வருகிறது. விரைவில் தொடர்ந்து எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் ‘லே பட்சி’ என்கிற கிராமத்தில் உள்ள கோவில்களுக்கும், புராண கதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக ராமாயண இதிகாசத்திற்கும், லே-பட்சி பகுதிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ளது ‘லே பட்சி’ என்கிற சிறிய கிராமம். பெங்களூரிலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் இருந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் லே-பட்சி பகுதியில் அமைந்திருக்கும் கோவில்களில், எத்தனையோ அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என சொல்லப்படும் இங்குள்ள கோவில்களுக்கும், புராண கதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறுகிறார்கள். குறிப்பாக ராமாயண இதிகாசத்திற்கும், லே-பட்சி பகுதிக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.
ராமனும், சீதையும் வனவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, சீதையை தூக்கிச் சென்றான் ராவணன். ராமனையும், லட்சுமணனையும் திசைமாற்றி விட்டு, சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான். அந்த சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற பருந்து, ராவணனிடம் சண்டையிட்டது. அதில் ஜடாயுவிற்கு காயம் ஏற்பட, தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும், லட்சுமணனும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஜடாயு பறவை மோட்சத்தை வேண்டியது.
ராமனோ ‘எழுந்திரு பறவையே’ என்றார். இத்தகைய புராண நிகழ்ச்சி இந்த ஊரில் நடந்ததாலேயே, ‘லே பட்சி’ என்ற பெயர் வந்ததாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன. தெலுங்கு மொழியில் ‘லே பட்சி’ என்பதற்கு ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.
விஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் சிற்ப வேலைபாடுகளுக்கும், சுவர் ஓவியங்களுக்கும் பஞ்ச மில்லை. திரும்பிய திசையெல்லாம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.
வீரபத்திர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்களும் நிறைந்துள்ளன. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. பல தூண்களுடன் நாட்டிய மண்டபமும், கர்ப்பக்கிரகமும் அமைந்துள்ளது. நாட்டிய மண்டபத்தில் தேவலோக கன்னியர்களான ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.
இன்னொரு முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கமும், இக் கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி, தன் தாய் மதிய உணவை சமைத்து முடிப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண்
இதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், முடிந்தும்-முடியாமலுமாக பாதியிலேயே நிற்கிறது. ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும், சீதாதேவியின் பாதம் பதிந்த இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால், சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போது வற்றாமல் நீர் சுரக்கிறது. மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை.
ஆமை வடிவ மலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில், பிரம்மாண்ட நந்தி சிலையும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரியகோவில் நந்தியை போன்றே கோவிலின் முன்பு ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறது இந்த நந்தி. 4 மீட்டர் உயரமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நந்தி சிலை, கோவிலுக்கு வெளியே இருந்தாலும், அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர பத்திரகாளி மற்றும் லட்சுமிக்கான சன்னிதிகளும் மலையை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாறையிலேயே செதுக்கப்பட்ட சங்கிலி கண்ணிகள் என கடவுள் வழிபாட்டுடன், கலைநயத்தையும் புகுத்தியுள்ளனர். ராமாயணம், மகாபாரத கதைகளை ஓவியங்களாக பார்க்க நினைப்பவர்கள், லே-பட்சி கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானின் 14 வடிவங்களை இங்கு காணலாம்.
ஆன்மிக தலமா, ஆச்சரிய தலமா? என்னும் வகையில் கலைநயத்துடன் ஜொலிக்கிறது லே-பட்சி பகுதி.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண் :
வீரபத்திர சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் தொங்கும் தூண், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. லே- பட்சி கோவில்களின் கலை சிறப்பும் அதுவே. முடிந்தும், முடியாமல் நிற்கும் கல் மண்டபத்தில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டும் தரையை தொடாமல், அந்தரத்தில் மிதந்தபடி இருக்கிறது. தரைக்கும், தூணிற்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதால் பக்தர்கள் ஆச்சரியத்தோடு அதை ரசிக்கிறார்கள்.
வேறு சிலரே இருக்கும் இடைவெளியில் குச்சிகளையும், துணிகளையும் உள்நுழைத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலுக்கு வந்த பிரிட்டிஷ் பொறியாளர், இந்த தொங்கும் தூணை சீரமைக்க பெரும்பாடு பட்டாராம். ஆனால் 3 ஆண்டுகால இணைப்பு பணி இடம் தெரியாமல் போனாதல், விரக்தியுடன் ஊர் திரும்பியதாக ஒரு செவிவழி செய்தியும் உலவுகிறது.
ராமனும், சீதையும் வனவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது, சீதையை தூக்கிச் சென்றான் ராவணன். ராமனையும், லட்சுமணனையும் திசைமாற்றி விட்டு, சீதையை பறக்கும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு இலங்கை நோக்கி புறப்பட்டான். அந்த சமயத்தில் ராமனுக்காக ஜடாயு என்ற பருந்து, ராவணனிடம் சண்டையிட்டது. அதில் ஜடாயுவிற்கு காயம் ஏற்பட, தரையில் விழுந்தது. அது இறக்கும் தருணத்தில் ராமனும், லட்சுமணனும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் ஜடாயு பறவை மோட்சத்தை வேண்டியது.
ராமனோ ‘எழுந்திரு பறவையே’ என்றார். இத்தகைய புராண நிகழ்ச்சி இந்த ஊரில் நடந்ததாலேயே, ‘லே பட்சி’ என்ற பெயர் வந்ததாக செவி வழிக் கதைகள் கூறுகின்றன. தெலுங்கு மொழியில் ‘லே பட்சி’ என்பதற்கு ‘எழுந்திரு பறவையே’ என்று பொருள்.
விஜய நகர மன்னர்களின் கலை பொக்கிஷமாக விளங்கும் லே-பட்சியில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திர சுவாமி ஆகியோருக்கு பிரத்தியேக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் வீரபத்திர சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் சிற்ப வேலைபாடுகளுக்கும், சுவர் ஓவியங்களுக்கும் பஞ்ச மில்லை. திரும்பிய திசையெல்லாம், நுணுக்கமான சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.
வீரபத்திர கோவில் கிரானைட் பாறையால் கட்டப்பட்டுள்ளது. சுவர்கள் முழுக்க அக்காலத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள், தூண்களில் புராணத்தை குறிக்கும் செதுக்கல்களும் நிறைந்துள்ளன. இக்கோவில் மூன்று பகுதிகளாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. பல தூண்களுடன் நாட்டிய மண்டபமும், கர்ப்பக்கிரகமும் அமைந்துள்ளது. நாட்டிய மண்டபத்தில் தேவலோக கன்னியர்களான ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நாட்டியம் இடம் பெற்றுள்ளது.
இன்னொரு முக்கிய ஈர்ப்பாக ஏழு தலை நாகத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் சிவலிங்கமும், இக் கோவிலின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பி, தன் தாய் மதிய உணவை சமைத்து முடிப்பதற்குள் இந்த நாகத்தை செதுக்கி முடித்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் என்பது கூடுதல் சிறப்பு.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண்இதன் அருகில் அமைந்துள்ள கல்யாண மண்டபம், முடிந்தும்-முடியாமலுமாக பாதியிலேயே நிற்கிறது. ஜடாயு விழுந்து கிடந்த இடத்தையும், சீதாதேவியின் பாதம் பதிந்த இடத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால், சீதாதேவியின் கால்பட்ட இடத்தில் எப்போது வற்றாமல் நீர் சுரக்கிறது. மேலும், சிவன்-பார்வதி திருக்கல்யாணம், ராமாயண காட்சிகள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை.
ஆமை வடிவ மலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வீரபத்திர சுவாமி கோவிலில், பிரம்மாண்ட நந்தி சிலையும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரியகோவில் நந்தியை போன்றே கோவிலின் முன்பு ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறது இந்த நந்தி. 4 மீட்டர் உயரமும், 8 மீட்டர் நீளமும் கொண்ட இந்த நந்தி சிலை, கோவிலுக்கு வெளியே இருந்தாலும், அது சிவனைப் பார்ப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர பத்திரகாளி மற்றும் லட்சுமிக்கான சன்னிதிகளும் மலையை சுற்றி அருகருகே அமைந்துள்ளன. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பாறையிலேயே செதுக்கப்பட்ட சங்கிலி கண்ணிகள் என கடவுள் வழிபாட்டுடன், கலைநயத்தையும் புகுத்தியுள்ளனர். ராமாயணம், மகாபாரத கதைகளை ஓவியங்களாக பார்க்க நினைப்பவர்கள், லே-பட்சி கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். சிவபெருமானின் 14 வடிவங்களை இங்கு காணலாம்.
ஆன்மிக தலமா, ஆச்சரிய தலமா? என்னும் வகையில் கலைநயத்துடன் ஜொலிக்கிறது லே-பட்சி பகுதி.
கவனம் ஈர்க்கும் தொங்கும் தூண் :
வீரபத்திர சுவாமி கோவிலில் அமைந்திருக்கும் தொங்கும் தூண், பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. லே- பட்சி கோவில்களின் கலை சிறப்பும் அதுவே. முடிந்தும், முடியாமல் நிற்கும் கல் மண்டபத்தில் மொத்தம் 70 தூண்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டும் தரையை தொடாமல், அந்தரத்தில் மிதந்தபடி இருக்கிறது. தரைக்கும், தூணிற்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பதால் பக்தர்கள் ஆச்சரியத்தோடு அதை ரசிக்கிறார்கள்.
வேறு சிலரே இருக்கும் இடைவெளியில் குச்சிகளையும், துணிகளையும் உள்நுழைத்து, சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் இந்தக் கோவிலுக்கு வந்த பிரிட்டிஷ் பொறியாளர், இந்த தொங்கும் தூணை சீரமைக்க பெரும்பாடு பட்டாராம். ஆனால் 3 ஆண்டுகால இணைப்பு பணி இடம் தெரியாமல் போனாதல், விரக்தியுடன் ஊர் திரும்பியதாக ஒரு செவிவழி செய்தியும் உலவுகிறது.
சிவராத்திரியையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நான்கு கால சாம பூஜை நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருந்தது.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. இரவு 10 மணி அளவில் முதலில் கொன்றையடி நாதருக்கு அபிஷேகமும், தொடர்ந்து மூலவராகிய தாணுமாலய சாமிக்கு அபிஷேகம் நடந்தது.
முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தாணுமாலய சாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய 8 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு முதல் கால பூஜை நடந்தது.
நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், அதிகாலை 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4-வது கால பூஜையும் நடந்தது. ஒவ்வொரு கால பூஜை நடக்கும் போதும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதனை காண நேற்று இரவு முழுவதும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் கோவில் நடை திறந்தே இருந்தது.
தொடர்ந்து சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடிய பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரள பக்தர்களும் திரளானோர் சுசீந்திரத்தில் நான்கு கால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளை சார்பில் மூலவராகிய தாணுமாலயன் சன்னதியின் எதிரே உள்ள மகாமண்டபத்தில் பல வண்ண கோலப்பொடியால் நீலகண்ட ரவுத்திரன் உருவத்தை கோலமாக வரைந்து அதனை சுற்றிலும் தோரணங்கள் கட்டி குத்துவிளக்கேற்றி பக்தர்களை பரவசப்படுத்தினர்.
கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கலையரங்கத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

மகா சிவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரேநாளில் லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகம் முழுவதும் பழங்கள், மலர்கள், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு குடிநீர், மோர் மற்றும் குழந்தைகளுக்கு பால் ஆகியவை வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய லட்டு, அன்னப் பிரசாதம் ஆகியவை கூடுதலாக தயாரித்து இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இதுதவிர சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு இலவச பிரசாதங்களும் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக சொர்ணமுகி ஆற்றில் தேவஸ்தான அதிகாரிகள் குளியல் அறைகள் மற்றும் குழாய்கள் அமைத்திருந்தனர். அதில் பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் அருகில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் நேற்று காலையில் இருந்து இரவு முழுவதும் மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
கண் விழித்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்காக பல்வேறு பகுதிகளில் அன்னதானம், குடிநீர் மற்றும் குளிர்பானம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. நகரில் கடும் வாகனப் போக்குவரத்து ெநரிசல் காணப்பட்டது. வாகனங்களில் வந்த முக்கிய நபர்கள் மட்டும் நகருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்று விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது. கோவிலில் கார்த்திகை தீபம் உள்பட பல்வேறு விழாக்கள் நடக்கிறது. திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி முடி காணாமல் திகைத்தபோது, அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது. இதனால் மகா சிவராத்திரி உருவான திருத்தலம் என்ற சிறப்பும் பெற்றாகும்.
கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் கோவிலில் நேற்று உபயதாரர்கள் சார்பில் நடக்கும் லட்சார்ச்சனை உள்பட பல்வேறு சிறப்புப்பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கோவில் சார்பில் அனைத்துப் பூைஜகளும் ஆகம விதிபடி எந்தத் தடையும் இல்லாமல் நடந்தது.
நேற்று காலை கோவிலில் பல்வேறு வண்ண மலர்களால் சாமி லட்சார்ச்சனை நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் பரவலாக காணப்பட்டது. மாலைக்கு பின் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் கொடிமரம் அருகில் பல்வேறு மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடந்தது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது.
பக்தர்கள் கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமி சன்னதியின் பின்பகுதியில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இந்தப் பூஜையில் மட்டும் லிங்கோத்பவருக்கு தாழம்பூ பயன்படுத்தப்படும். பின்னர் தீபாராதனை நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. முகக் கவசம் அணியாமல் வந்த பக்தர்களை கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்தினர்.
மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

திட்டுவிளை பக்கீர் பாவா தர்கா கந்தூாி பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களால் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை, மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் அவுலியா தர்காவும் ஒன்று. இந்த தர்காவில் வருடாந்திர பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர கந்தூரி பெருவிழா கடந்த, 2-ந் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் மற்றும் பக்தர்களால் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிறைக்கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஜமாத் இமாம் அசன் அலியார், தர்கா இமாம் அப்துல் லத்தீப், நல்லாசிரியர் முகமது ஜாபர் உள்ளிட்டோர் துவா ஓதினார்கள். இதில் ஜமாத் தலைவர் மைதீன் பிள்ளை, தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் சேக் முகம்மது, ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்கள், விழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் தர்காவில் இருந்து பிறைக்கொடி எடுத்து வந்து தர்கா மைதானத்தின் முன்பாக உள்ள அலங்கார கொடி மரத்தில் இறைநாம முழக்கத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களால் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து முஸ்லீம்கள் புனிதம் நிறைந்த இரவாக கருதப்படும், மிஹ்ராஜ் இரவு என்பதையொட்டி, இஸ்லாமிய மார்க்கப் பேருரை நடந்தது. இதில் உதுமான் லெப்பை, சாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி அறக்கட்டளை தலைவர் மைதீன் பிள்ளை தலைமை தாங்கினார். அல்ஹாபிழ், ஷேக்ஹஸன் அலியார் ஸமதானி இமாம், வரவேற்புரை ஆற்றினர். ஓய்வு பெற்ற வன அலுவலர் முகமது ஹனிபா, ஓய்வு பெற்ற, பி.எஸ்.என்.எல். உதவிப் பொறியாளர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் செய்யது மீர் காஸிம் ஆலிம் சிறப்புரையாற்றினார்.
முடிவில் தர்கா நிர்வாக தலைவர் உதுமான் மைதீன் நன்றி கூறினார். விழாவின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தப்றூக் என்கிற நேர்ச்சை வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. முடிவில் தர்கா நிர்வாக செயலாளர் முகமது ரபீக் நன்றி கூறுகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை திட்டுவிளை, உதுமான் லெப்பை, சாகிபு சுன்னத் ஜமாத் ஜூம்மா பள்ளி டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் தர்கா நிர்வாகத்தினருடன், பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.

சிவராத்திரியையொட்டி நாகர்கோவில் வடசேரி தழுவிய மகாதேவர் கோவிலில் 1008 சங்குகளால் நடராஜர் உருவம் வடிவமைக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சிவராத்திரி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் இரவு முழுவதும் 4 கால பூஜை நடந்தது. மேலும், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகளும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஆவுடையம்பாள் உடனாகிய அருள்பொழி தழுவிய மகாதேவர் கோவில், காசி விஸ்வநாதர் ஆலயம், ஒழுகினசேரி சோழராஜா கோவில், இருளப்பபுரம் பசுபதீசுவரர் கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில், சுங்கான்கடை சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் விடிய விடிய பூஜை வழிபாடுகள் நடந்தன. மேலும் சிவாலய ஓட்டம் நடைபெற்ற 12 சிவன் கோவில்களிலும் 4 கால பூஜை நடந்தது.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஆவுடையம்பாள் உடனாகிய அருள்பொழி தழுவிய மகாதேவர் கோவிலில் சிவராத்திரியையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு சாமி, அம்பாளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. மேலும் ஒவ்வொரு கால பூஜையிலும் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
முன்னதாக கோவிலில் 1008 சங்குகளை கொண்டு நடராஜர் உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நெல்லை தரையில் பரப்பி அதன் மீது நடராஜர் வடிவில் ஒவ்வொரு சங்குகளாக வைக்கப்பட்டன. சங்குகளால் வடிவடைக்கப்பட்ட நடராஜருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமரியில் சிவாலய ஓட்டம் நேற்று நிறைவடைந்தது. கோவிந்தா... கோபாலா... கோஷங்களுடன் பக்தர்கள் 12 கோவில்களிலும் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர்.
சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடியும், நடந்தும் சென்று சாமியை வழிபடுவார்கள். இந்த சிவாலய ஓட்டம் சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் விரதத்தை தொடங்கினர்.
நேற்று முன்தினம் மாலையில் 12 சிவாலயங்களில் முதல் தலமாகிய முன்சிறை சிவன் கோவிலில் சிவ பக்தர்கள் சாரை, சாரையாக குவிந்தனர். அங்கு புனித நீராடி காவி துண்டுகள் அணிந்து கையில் பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். முன்சிறை என்ற திருமலையில் தொடங்கிய ஓட்டம், 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயம் வரை சிவ நாமத்தை உச்சரித்தபடியே இந்த ஓட்டம் நடைபெற்றது.
அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக வெட்டுமணி, மார்த்தாண்டம் வழியாக திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், திருபன்னிபாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில், மேலாங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு சிவன்கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்களுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய சிவாலய ஓட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போது அங்குள்ள நீர் நிலைகளில் நீராடி சாமி கும்பிட்டு பிரசாதம் வாங்கிவிட்டு அடுத்த கோவிலை நோக்கி சென்றனர். இரவு முழுவதும் தொடர்ந்து 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் கால்நடையாக நடந்தும், ஓடியும் தரிசனம் செய்தனர்.
ஓட்டத்தின் போது கோவிந்தா... கோபாலா... என்று சரணம் கோஷம் எழுப்பி ஒவ்வொரு கோவிலாக சென்று 12-வது ஆலயமான திருநட்டாலம் ஆலயத்தில் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்தனர். இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றிவந்தனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு வழியெங்கும் மோர், தயிர், கஞ்சி, பழ வகைகள் மற்றும் சைவ உணவுகள் வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்கள் நேற்று இருசக்கர வாகனங்கள், வேன், ஆட்டோ, பஸ்களிலும் பயணம் செய்து 12 சிவாலயங்களையும் வழிபட்டு இரவு கண் விழித்து கோவிலில் சாமி கும்பிட்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்கள் விடிய விடிய சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.