என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்றுஇரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றுஇரவு முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்றுஇரவு 10 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.

    அப்போது பெருவுடையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதேபோல தஞ்சையில் உள்ள மற்ற சிவன்கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவையாறு சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவில், திருப்பழனம் ஆபத்சகாயாயேஸ்வரர் கோவில், திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில், திருவேதிகுடி வேதபுரேஸ்வரர் கோவில், கண்டியூர் பிரம்மசிரி கண்டீஸ்வரர் கோவில், திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவில், தில்லைஸ்தானம் நெய்யாடிப்பர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் 4 கால பூஜை விடிய, விடிய நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
    மகா சிவராத்திரியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. அதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நேற்று நள்ளிரவு முதல் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறக்கப்பட்டு வழக்கம்போல் அபிஷேக ஆராதனைகளுடன் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு முதல் கால அபிஷேகம் இரவு 10 மணி தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால அபிஷேகம் 11 மணி முதல் 11.45 வரையிலும், 3-வது காலம் 12 மணி முதல் 12.45 வரையிலும், 4-வது காலம் 1 மணி முதல் 1.45 மணி வரையிலும் நடந்தது.

    மேலும் சுந்தரேசுவரர் சுவாமிக்கு முதல் கால அபிஷேகம் இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-வது காலம் 12 மணி முதல் 12.45 வரையிலும், 3-வது காலம் 1 மணியில் இருந்து 1.45 மணி வரையிலும், 4-வது காலம் 2 மணி முதல் 2.45 மணி வரையிலும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதைெதாடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாமம் பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடந்தது.

    இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசிவீதி தென்திருவாலவாய திருக்கோவில், திருவாதவூர் திருமறை நாதர் சாமி கோவில், ஆமூர் அய்யம்பொழில்ஈஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தன.

    மேலும் கொரோனா தொற்று காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்துள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி சன்னதி அர்த்த மண்டபத்தில் அபிஷேக நேரத்தில் பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்யும் முறை (அமர்வு தரிசனம்) ரத்து செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு மேல் சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. அதைதொடர்ந்து இரவு 10 மணிக்கு சாமிக்கு முதல் கால பூஜையில் சங்காபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களுடன் இரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 2 - மணிக்கு 3 கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தது. மேலும் 1008 சங்காபிஷேகம் மற்றும் யாகம் நடைபெற்றது.

    மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை கோவிலின் கருவறைக்கு எதிரிலுள்ள 3 துவாரங்கள் வழியே சூரிய கதிர்கள் சென்று மூலவரை தழுவி செல்லும் நிகழ்வு, காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரையிலும், பின்னர் 7 மணி முதல் 7.10 மணி வரை, தலா பத்து நிமிடங்கள் சூரிய கதிர்கள் மூலவரை தழுவி செல்லும். இந்த அரிய நிகழ்வு நேற்று தொடங்கியது. சிவராத்திரி நாளான நேற்று காலையில் நடைதிறக்கவும் முதலாவதாக சூரியகதிர்கள் சென்று முக்தீஸ்வரரை வழிபட்டது.

    இதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் சூரிய வழிபாட்டை தரிசிக்க அனுமதிக்கவில்லை. காலை 7.15 மணிக்கு பிறகு வெளியே காத்திருந்த பக்தர்கள் சமூக இடைவேளி விட்டு ஒருவர் பின் ஒருவராக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதே நிகழ்வு இந்தாண்டு செப்டம்பர் மாதம் 19-ம்தேதி தொடங்கி 30-ம் தேதியும் காலையில் நடைபெறும். ஆண்டுக்கு 2 முறை இந்த நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவிற்கு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 11 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
    சென்னை :

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவிற்கு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 11 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் தமிழகத்திலேயே முதன் முறையாக 5,001 பான லிங்கங்கள், 1,008 நர்மதா பாண லிங்கங்கள், 108 மரகத லிங்கங்கள் இடம்பெற்று இருந்தன. அத்துடன் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மாணிக்க விநாயகர், ரூ.6 லட்சம் மதிப்புள்ள மரகத லட்சுமி, ரூ.6 லட்சம் மதிப்புள்ள 18 முக ருத்ராட்சம் போன்ற அரிய பொருள்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.

    இதில் 30 வேத விற்பனர்கள் ருத்ர பாராயணம் உள்ளிட்ட சிவபூஜைகளை செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பன்னிரு திருமுறை பாராயணம், கைலாய வாத்திய நிகழ்ச்சி உள்ளிட்டவைகளும் நடந்தது.

    அத்துடன் ஆன்மிகப்பொருட்கள் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் ருத்ராட்சம், சாள கிராமம், மாணிக்கம், மரகதம் போன்றவைகளாலான நவரத்தின சிற்பம், வலம்புரி சங்கு, நர்மதா பாணலிங்கம், தஞ்சாவூர் ஓவியம் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சி வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    சிவராத்திரியான இன்று இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும்.
    சிவராத்திரி பூஜை மாலை 6 மணிக்குத் தொடங்கி மறு நாள் காலை 6 மணி வரையிலும் நான்கு காலமாகச் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் அதற்குரிய அபிஷேக, அர்ச்சனைப் பொருள்கள், நைவேத்தியத்தைச் சமர்ப்பித்து, ஸ்தோத்திரம் பதிகப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும்

    இங்ஙனம் இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும். சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம். சிவராத்திரி அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலான கோயில்களில் நடைபெறுகின்றன. அவற்றைக் கேட்டு மகிழலாம்.

    சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால்கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

    சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் - லிங்கோற்பவ காலம். இவ்வேளையில் சிவலிங்க திருவடிவின் மகிமைகளைப் படிப்பதும் சிந்திப்பதும் சிறப்பு!

    சிவராத்திரி அன்று, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம நேரத்திலும், சிவபெருமானை முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
    சிவராத்திரி அன்று, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம நேரத்திலும், சிவபெருமானை முறைப்படி அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். 4 கால வேளைகளையும், அவற்றில் செய்ய வேண்டிய வழிபாடுகளையும் பற்றி பார்ப்போம்.

    முதல் ஜாமம் (மாலை 6 முதல் இரவு 9 மணி வரை): இந்த கால வேளையில் ஈசனுக்கு, பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பஞ்ச கவ்யம் என்பது, பசும் பால், பசு நெய், பசுவின் சிறுநீர், பசு சாணம், பசு தயிர் ஆகியவை கலந்து செய்யப்படும் ஒருவித மருந்துப் பொருளாகும். அதோடு அகில் குழம்பும், வில்வமும் அணிவிக்க வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை படைக்க வேண்டும். இந்த வேளையில் 4 வேதங்களில் முதன்மையான ரிக் வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

    இரண்டாம் ஜாமம் (இரவு 9 மணி முதல் 12 மணி வரை):- இந்த கால வேளையில், பஞ்சாமிர்தம் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், தயிர், சர்க்கரை, பால், நெய் ஆகிய ஐந்தும் சேர்ந்ததுதான் ‘பஞ்சாமிர்தம்.’ பெரும்பாலானவர்கள் தயிருக்கு பதிலாக வாழைப்பழத்தையே தற்போது சேர்த்து பஞ்சாமிர்தத்தை செய்கிறார்கள். மேலும் இந்த பூஜை நேரத்தில் இறைவனுக்கு சந்தனமும், தாமரைப்பூவும் அணிவிக்க வேண்டும். அதோடு பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படும் துளசி இலையைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சனை செய்வார்கள். நைவேத்தியமாக பாயசம் செய்து படைக்கலாம். வேதங்களில் 2-வதாக உள்ள யஜூர் வேதத்தை பாராயணம் செய்யலாம்.

    மூன்றாம் ஜாமம் (நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை):- இந்த கால வேளையில், தேன் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியது. இந்த அபிஷேகத்தை செய்வதன் மூலமோ, கோவிலுக்குச் சென்று பார்ப்பதன் மூலமோ தேன் போன்ற இனிப்பான வாழ்க்கையை இறைவன் நமக்குத் தந்தருள்வான். மேலும் அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லைப் பூ ஆகியவற்றை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். மூன்று இலைகள் கொண்ட, வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக எள் சாதத்தை படைக்கலாம். இந்த ஜாம வேளையில், மூன்றாவது வேதமாக கருதப்படும் சாம வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்காம் ஜாமம் (அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை):- இந்த கால வேளையில், கரும்புச் சாறு கொண்டு, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது சிறப்பான பலனைத் தரும். இத்துடன் அரைத்த குங்குமப் பூவுடன், நந்தியாவட்டை மலர் அணிவிக்க வேண்டும். மேலும் நீலோத்பவ மலர் கொண்டு இறைவனை அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். நைவேத்தியமாக சுத்தமான அன்னத்தை ஈசனுக்கு படைக்கலாம். இந்த நான்காம் ஜாமத்தில், வேதத்தில் கடைசி வேதமாக தொகுக்கப்பட்ட அதர்வண வேதத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும்.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ‘சிவாலய ஓட்டம்’ மிகவும் பிரசித்திப்பெற்றது. அங்குள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று காலை முதல் சிவராத்திரி இரவு மற்றும் மறுநாள் அதிகாலை வரை ஓடிச்சென்று வழிபடுவதே ‘சிவாலய ஓட்டம்’ ஆகும். இந்த ஓட்டமானது சுமார் 118 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது. சிவராத்திரி அன்று காலையில் காவி வேட்டியும், காவித்துண்டும் தரித்து, ருத்திராட்சம் அணிந்து, வெறுங்காலுடன் சிறிய பையில் விபூதி எடுத்துக்கொண்டு, பனை ஓலை விசிறியுடன் சிவாலய ஓட்டத்தை அடியவர்கள் தொடங்குவார்கள்.

    சிவாலய ஓட்டத்தின் முதல் கோவிலான முஞ்சிறை திருமலை சூலபாணி மகாதேவர் திருக்கோவில், நாகர்கோவில் -திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து தேங்காய்பட்டணம் செல்லும் வழியில் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களின் சிவாலய ஓட்டத்திற்கு தேவையான விசிறி, திருநீற்று பைகள் கிடைக்கின்றன.

    முஞ்சிறையில் இருந்து அடுத்த சிவாலயமான திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில்,10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திக்குறிச்சியில் இருந்து அடுத்த சிவாலயமான திற்பரப்பு வீரபத்திரர் மகாதேவர் திருக் கோவில், அருமனை எனும் ஊர் வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. திற்பரப்பில் இருந்து அடுத்த சிவாலயமான திருநந்திக்கரை நந்திகேஸ்வரர் திருக்கோவில், குலசேகரம் சந்திப்பு வழியாக 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருநந்திக்கரையில் இருந்து அடுத்த சிவாலயமான பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் திருக்கோவில், 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    பொன்மனையில் இருந்து அடுத்த சிவாலயமான திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி மகாதேவர் திருக்கோவில், குமாரபுரம், முட்டைக்காடு வழியாக 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருப்பன்னிப்பாகத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில், அடுத்த சிவாலயமான கல்குளம் என்னும் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் உள்ளது.

    கல்குளத்தில் இருந்து அடுத்த சிவாலயமான மேலாங்கோடு காலகாலர் திருக்கோவில், 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மேலாங்கோடு திருத்தலத்தில் இருந்து அடுத்த சிவாலயமான திருவிடைக்கோடு எனும் வில்லுக்குறி சடையப்பர் திருக்கோவில், 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருவிடைக்கோடு திருத்தலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில், அடுத்த சிலவாயமான திருவிதாங்கோடு நீலகண்ட சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

    திருவிதாங்கோடு திருத்தலத்தில் இருந்து கோழிப்போர் விளை, பள்ளியாடி வழியாக 6 கிலோமீட்டர் தூரம் சென்றால், அடுத்த சிவாலயமான திருப்பன்றிக்கோடு பக்தவச்சலர் திருக்கோவிலை அடையலாம். திருப் பன்றிக்கோடு திருத்தலத்தில் இருந்து கடைசி சிவாலயமான திருநட்டாலம் சங்கரநாராயணர் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
    சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும்.
    11-3-2021 மகா சிவராத்திரி

    சிவபெருமானுக்கு, திங்கட்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘சோமவார விரதம்’, தீபாவளி அமாவாசையை ஒட்டி வரும் ‘கேதார கவுரி விரதம்’, மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை விரதம்’, தை மாத பூசத்தன்று வரும் ‘பாசுபத விரதம்’, பங்குனி மாதத்தில் வரும் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று பல விரதங்கள் இருந்தாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் ‘மகா சிவராத்திரி’ முதன்மையானதாகத் திகழ்கின்றது.

    ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. அந்த ஊழிக்கால இரவு வேளையில் பார்வதி தேவியானவள், சிவபெருமானை நினைத்து நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த இரவே `மகா சிவராத்திரி' என்று சொல்லப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி கொடுத்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, “நான் உங்களை பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் உங்கள் பெயரிலேயே ‘சிவராத்திரி’ என்று கடைப்பிடிக்க வேண்டும். அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை உதிக்கும் வரையான கால நேரத்தில், உங்களை பூஜிப்பவர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்” என்று வேண்டினாள். அதன்படியே இந்த சிவராத்திரி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

    பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை கொடுத்துவிட்டு வீடு திரும்பவேண்டும். வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அல்லது கோவில்களில் நடைபெறும் நான்கு ஜாம சிவ பூஜையில் கலந்துகொள்ளலாம்.

    வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். காட்டின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தும், அவனுக்கு ஒரு விலங்கு கூட கிடைக்கவில்லை. பொழுதும் இருட்டிவிட்டது. புலி நடமாட்டம் உள்ள காடு என்பதால், ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தான். அது வில்வ மரம். அப்போது அங்கு வந்த புலி ஒன்று, அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால், தூங்காமல் இருந்தான். தூக்கம் வராமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தான்.

    அவன் போட்ட இலைகள் எல்லாம், மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி ஆகும். அவன் தனக்கே தெரியாமல் இரவு முழுவதும் கண் விழித்து இருந்து சிவலிங்கத்தின் மீது வில்வ இலையை போட்டு அர்ச்சித்து, வழிபாடு செய்திருந்தான். அதன் காரணமாகவே அவனுக்கு முக்தி கிடைத்ததாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. எனவே மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகி விடும்.
    மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை சாமி-அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. இன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சாமி- அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சாமி அம்பாள் விலைமதிப்பற்ற முத்தங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் எட்டாம் நாளான மாசி மகா சிவராத்திரியான இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடராஜர், சிவகாமி அம்பாள் கேடயத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் சாமி-அம்பாள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மகா சிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவில் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    திருவிழாவின் 9-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இரட்டிப்பான ஆசீர்வாத்தை நாமும் பெற்றுக்கொள்வோம் ஆமென்.
    இந்த தவக்காலத்தில் யோபுவை குறித்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதை சற்று தியானித்து பார்ப்போம். யோபு உத்தமனும், தேவனுக்கு பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். அவனுக்கு 7 மகன்களும், 3 மகள்களும் இருந்தன. சொத்துக்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தன. மேலும் ஆடு, மாடு, ஒடடகம், கழுதைகள் என கால்நடைகளும் ஆயிரக்கணக்கில் இருந்தன. இதனால் வேலையாட்களும் அதிகமாய் வேலை செய்தனர். இப்படி இருந்ததினால் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தான். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இவ்வளவு சொத்து, சுகம் இருந்தும் அவன் தேனுக்கு மிகவும் பயபக்தியுடன் காணப்பட்டான். இதனால் இன்பமாக வாழ்ந்து வந்தான்.

    இப்படி இருந்து கொண்டிருந்த யோபுக்கு திடீரென சோதனை காலம் ஆரம்பித்தது. அவன் வளர்ந்து வந்த கால்நடைகளை எல்லாம் உறவினர்கள் திருடிச்சென்று விட்டனர். பெற்ற பிள்ளைகள் எல்லாம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து விட்டனர். யோவுக்கோ உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை பருக்கள் தோன்றி அகோரமான நோய்க்கு ஆளானான்.

    இப்படி இருந்த போது அவனின் மனைவியோ யோவுவை பார்த்து தேவனை வெறுத்து உயிரை விடும் என்று வேண்டிக்கொண்டான். ஆனால் யோபுவோ, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். இப்படி துன்ப காலத்தை அனுபவித்த யோபு எந்த நிலையிலும் கடவுளை வெறுக்கவும் இல்லை. எந்தவித பாவமும் செய்யவில்லை. இதனால் யோபுவுக்கு இன்ப காலத்தில் இருந்த செல்வம். பிள்ளைகள் என இருமடங்காக கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    ஆம் தேவ பிள்ளைகளே நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம். ஆனால் நமக்கு இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஆனால் துன்பம் வரும் போது கடவுளே இல்லை என்கிற அளவுக்கு பேசுவோம். இப்படி இருக்காமல் நாமும் யோவுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து இரட்டிப்பான ஆசீர்வாத்தை நாமும் பெற்றுக்கொள்வோம் ஆமென்.

    சகோ. கிங்ஸ்ஸி, கே.செட்டிபாளையம்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) மகாசிவராத்திரி உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தர், காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து இரவு குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) மகாசிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 4 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை ஏகாந்தமாக தேரோட்டமும் (போகி தேர்), காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நந்தி வாகன சேவையும் நடக்கிறது.

    மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி கோவிலில் அதிகாலை 5.30 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையிலும், மாலை 4.30 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
    மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளில் ஹம்ச, சேஷ வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை ஹம்ச வாகனம் என்ற அன்னப்பறவை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அனைத்துச் சிவன் கோவில்களில் லிங்க திருமேனியை வால் மற்றும் உடல் பகுதியால் சுற்றியவாறும், தலையை படம் விரித்தப்படி ஆடும் பைந்நாகமாகவும் இருப்பது சேஷம் என்ற நாகம். பிரபஞ்சத்தையே ஆளும் பெருந்தகைக்கு பாதுகாப்பாகவும், அடி தொழுது பூஜிக்கும் காவலனாகவும், வாசம் மிகு வாய்க்காற்றால் தூபமிடுபவன்.

    தன் உடலில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்பவன். நாக்குகளால் ஆலவட்டம் வீசுபவன். படத்தால் குடைப்பிடிப்பவன். லிங்க திருமேனியை அலங்கரித்து ஆராதனை செய்பவன் சேஷன். கழுத்தில் சுற்றியபடி படமெடுத்து ஆடும் சேஷனை பெருமைப்படுத்தும் விதமாக சிவன் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.

    உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில் வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம், வீடு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தலமாக உள்ளது.
    திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.

    இந்த கோவில் மூலவர் “வீரட்டானேஸ்வரர்.” அம்மன் “பரிமளநாயகி.” பிருந்தை என்னும் சொல்லுக்கு “துளசி” என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம்.

    வீடு கட்டும் முன் ஏதும் பிரச்சனை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.
    ×