என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    5 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன 11 அடி உயர சிவலிங்கம்
    X
    5 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன 11 அடி உயர சிவலிங்கம்

    5 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன 11 அடி உயர சிவலிங்கம்

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவிற்கு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 11 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
    சென்னை :

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவிற்கு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 11 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் தமிழகத்திலேயே முதன் முறையாக 5,001 பான லிங்கங்கள், 1,008 நர்மதா பாண லிங்கங்கள், 108 மரகத லிங்கங்கள் இடம்பெற்று இருந்தன. அத்துடன் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மாணிக்க விநாயகர், ரூ.6 லட்சம் மதிப்புள்ள மரகத லட்சுமி, ரூ.6 லட்சம் மதிப்புள்ள 18 முக ருத்ராட்சம் போன்ற அரிய பொருள்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.

    இதில் 30 வேத விற்பனர்கள் ருத்ர பாராயணம் உள்ளிட்ட சிவபூஜைகளை செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பன்னிரு திருமுறை பாராயணம், கைலாய வாத்திய நிகழ்ச்சி உள்ளிட்டவைகளும் நடந்தது.

    அத்துடன் ஆன்மிகப்பொருட்கள் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் ருத்ராட்சம், சாள கிராமம், மாணிக்கம், மரகதம் போன்றவைகளாலான நவரத்தின சிற்பம், வலம்புரி சங்கு, நர்மதா பாணலிங்கம், தஞ்சாவூர் ஓவியம் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சி வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×