search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமி-அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.
    X
    சாமி-அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்த காட்சி.

    ராமேசுவரம் கோவிலில் நாளை சாமி-அம்பாள் தேரோட்டம்: இன்று இரவு வெள்ளிதேரோட்டம்

    மாசி மகாசிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை சாமி-அம்பாள் தேரோட்டம் நடக்கிறது. இன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகாசிவராத்திரி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சாமி- அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.தொடர்ந்து மாலை 5 மணி அளவில் சாமி அம்பாள் விலைமதிப்பற்ற முத்தங்கியால் அலங்காரம் செய்யப்பட்டு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் எட்டாம் நாளான மாசி மகா சிவராத்திரியான இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் நடராஜர், சிவகாமி அம்பாள் கேடயத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் சாமி-அம்பாள் வெள்ளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மகா சிவராத்திரியான இன்று ராமேசுவரம் கோவில் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    திருவிழாவின் 9-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×