
தற்போது கோவில் அருகே உள்ள தெப்பக்குளமும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்துமிடத்தில் குளியலறையும் பூட்டி கிடக்கிறது. இது முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு அவதியை ஏற்படுத்தி உள்ளது.
முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகே உள்ள குடிநீர் குழாயில் வரும் சிறிதளவு தண்ணீரில் பக்தர்கள் தட்டுத்தடுமாறி குளிக்க வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களாக தெப்பக்குளம் பூட்டிக்கிடப்பதால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் அமைந்துள்ள பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், தெப்பக்குளம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
கோவில் வளாகத்தை தூய்மையாக பராமரிப்பதுடன், தேவையான குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூட்டிக்கிடக்கும் கோவில் குளத்தை திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.