என் மலர்

  ஆன்மிகம்

  அய்யா வைகுண்டர்
  X
  அய்யா வைகுண்டர்

  அய்யா வைகுண்டசாமி கோவில்களில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியாம்பகோடு முல்லைப்பள்ளிவிளை அய்யா வைகுண்ட நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
  அரியாம்பகோடு முல்லைப்பள்ளிவிளை அய்யா வைகுண்ட நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பும், பணிவிடையும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதர்மம், மாலை 5.30 மணிக்கு பணிவிடை, 6 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

  நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், அன்னதர்மம், மாலை 5.30 மணிக்கு பணிவிடை, 6 மணிக்கு திருஏடு வாசிப்பும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பும், மாலை 5.30 மணிக்கு பணிவிடையும், சுருள் கொடுப்பும், 6 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு உகப்படிப்பும் தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

  ஆற்றூர் புல்லாணிவிளை அய்யா வைகுண்ட நாராயணசாமி கோவிலில் திரு ஏடுவாசிப்பு திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் பணிவிடையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு திருஏடு வாசிப்பு, உகப்படிப்பு, அன்னதானமும் நடைபெற்றது.

  விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
  Next Story
  ×