என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது 5 தேர்களின் வீதி உலா நடைபெறும். இதில் சுப்பிரமணியர் தேர் பழுதாகி விட்டது.
இதையடுத்து பக்தர்கள் உதவியுடன் ரூ.31 லட்சம் செலவில் 11½ அடி உயரத்திலும் 8.9 அடி அகலத்திலும் புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் சித்திரை முதல்நாளான நேற்று நடந்தது.
ஐயாறப்பர் கோவில் கட்டளை விசாரனை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் தேர் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் 4 வீதிகளிலும் உலா வந்து சன்னதியை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் காசாளர் அகோரம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம், காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும்.
ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம், குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
இறைவன்- வாஞ்சிநாதேஸ்வரர், இறைவி- மங்களநாயகி. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து வந்தால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால், பித்ரு தோஷ நிவர்த்தியாகும். ராகு-கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் இத்தல சிறப்பை எடுத்துரைக்கின்றன. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால், பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்களின்றி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மேலும் சமூக இடைவெளி மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக இந்த விழா எளிமையாக நடைபெற்றது. கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பெரும்பாலான கோவில்களில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்படவில்லை.
இருப்பினும் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப் பாடுகளை பின்பற்றி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு மேல் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கோவில் திருக்குளத்தில் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் டிரஸ்டிகள், பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து குளக்கரையில் அஸ்திரத்தேவர் மற்றும் அங்குசத்தேவருக்கு பல்வேறு அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீதர் குருக்கள் தலைமையில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் மூலவர் கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகள் நேரம் தவிர மற்ற நேரங்களில் குறைவான பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போதிய சமூக இடைவெளியுடனும், கட்டாயம் முக கவசம் அணிந்தும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக நேற்று பிள்ளையார்பட்டி கோவிலில் குறைவான பக்தர்கள் மட்டும் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி ராமசாமி செட்டியார் மற்றும் வலையப்பட்டி நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெற்றன. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போதிய சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார்காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது.
புதியதாக திருமணமான தம்பதியரிடம், சில மாதங்களிலேயே கேட்கப்படும் கேள்வியாக இருப்பது, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான். இங்கு விசேஷம் என்பது புத்திர பாக்கியம். அந்த அளவுக்கு பிள்ளைப்பேறு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
திருக்கடையூர் அபிராமி அன்னையை பாடும், அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணியில்லாத உடல், சலியாத மனம், அன்பகலாத மனைவி’ என்பதோடு சேர்த்து, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார். சந்தானம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும். எல்லாவற்றையும் சாதாரணமாக கேட்டவர், குழந்தைப்பேறு என்பதை மட்டும் தவறாமல் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் இருந்தே, அதற்கான முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. ஏனெனில் இந்தத் திருத்தல இறைவனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது, தல புராணம்.
திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள, ஈசனின் ஊர்த்தவ நடனம் நடைபெற்றதும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான். அந்த எல்லை தெய்வத்தின் பெயர், வடபத்திரகாளி அம்மன்.
நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ ஆகும். காசியப முனிவரின் முதல் மனைவியாக அறியப்படுபவர் அதிதி தேவி. இவர் இந்த ஆலய தீர்த்தத்தில் நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்ததன் பலனாகத்தான் புத்திர பாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரனும் கூட, தனது மகனான ஜெயந்தனை, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடிதான் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.
பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். ஒவ்வொரு ஆலயமாகச் சென்று இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கினான். ஒரு முறை திருத்துருத்தியில் உள்ள அமிர்த முகிழாம்பிகை உடனாய சொன்னவாறு அறிவார் திருக்கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த ஈசன், “பரதா! நீ அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று, அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடு. அதோடு அங்கு வீற்றிருக்கும் வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபாடு செய். கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில், திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபாடு செய்தால், மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.
பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.
இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது சேதமானதால், புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, உடனே பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.
இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.
பழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவிரி அம்மன், வள்ளி -தெய்வானை உடனாய முருகர் சன்னிதிகளும் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.
மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இதை காண மதுரை மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் எளிமையாக நடந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இந்த வருடம் சித்திரை திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் என மதுரை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா பாதிப்பின் 2-வது அலை வீசுகிறது. இதனால் தமிழகத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.
முக கவசம், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கோவில் விழாக்களை நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதில் சில கோவில் திருவிழாக்கள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இன்றி எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சுவாமி-அம்மன் வீதி உலா, தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்தது. இது மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்திரை திருவிழாவை பக்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடத்த வேண்டும் என மதுரையில் போராட் டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தீபாராதனை காண்பித்து கொடியேற்றத்தை நடத்தினர்.
இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சித்திரை திருவிழாவில் 22-ந்தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி திக்கு விஜய மும், 24-ந்தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. 26-ந்தேதி வரை நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமி-அம்மன் புறப்பாடு, கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் நடைபெறுகிறது.

ராமேசுவரம் கோவில் சிவ தீர்த்தத்தில் சாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சாமி அம்பாள், விநாயகர், முருகன், நந்திகேசுவரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை 11 மணிக்கு சாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் உள் பகுதியில் உள்ள சிவதீர்த்தபகுதிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து சிவ தீர்த்தத்தில் சாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சாமி அம்பாள், விநாயகர், முருகன், நந்திகேசுவரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜையில் கோவிலின் மேலாளர் சீனிவாசன், சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழ் புத்தாண்டான நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி- அம்பாளை தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். வெளியூரை சேர்ந்த பக்தர்களைவிட உள்ளூர் பக்தர்களின் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.
ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் புத்தாண்டு அன்று சாமி- அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்று அதன் பின்னர் கோவிலின் நான்கு ரத வீதிகளை சுற்றி வீதி உலா வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ராமேசுவரம் கோவிலில் சாமி அம்பாள் ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறாமல் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக தமிழ் புத்தாண்டு அன்று ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் தீர்த்தவாரி பூஜையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும்.
ஒருவருக்கு செல்வம் மற்றும் தங்கம் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவரது ஜாதகத்தில் தெளிவாக தெரியும் குறிப்பாக சிலருக்கு தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் சிலருக்கு தங்கமே வீட்டில் தங்காது. மஞ்சள் உலோகமான தங்கம் வீட்டில் தங்குவதற்கு நவகிரகங்களில் குரு வலுவாக நல்ல இடத்தில் அமைந்திருப்பது முக்கியம். குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம் , குருவின் நட்சத்திரமான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும். இந்த உலோகத்திற்கு உரிய தெய்வம் முருகப்பெருமான் . முருகன் தலத்தல் சென்று வழிபட்டால் தாகம் விரயமாவது தடுக்கப்படும் .
மேலும் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குருபகவானை அவருக்குறிய ஸ்லோகங்களை சொல்லி அர்ச்சிக்க வேண்டும் . தங்கம் விரயமாகாமல் நம்மிடம் நிரந்தரமாக இருப்பதற்கு சில பரிகாரமுறைகள் உள்ளன. தங்கத்திற்கு உரியவர்கள் குருவும் முருகனும் ஆகவே இவர்கள் இருவரின் சக்திகளை ஆகர்ஷணம் செய்து கொள்வது அவசியம் . ஒரு பித்தளை சொம்பில் அரிசி கொண்டைக்கடலை துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து உள்ளே போட்டு ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் வைத்து
ஒரு நாள் விரதம் இருந்து வழிபட வேண்டும் பிறகு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்தின் சென்று முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொண்டு கோவில் அர்ச்சகருக்கு தானமாக கொடுத்து விட வேண்டும் . அந்த நாள் மாலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டை கடலை நெய்வேத்யத்தை வழங்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் தங்கத்தை ஈர்க்கும் ஆகர்ஷணம் வரும்.
மேலும் குறிப்பிட்ட சில நறுமணங்கள் தங்கத்தை ஈர்க்கும் சக்தி பெற்றது. பெருமாளுக்கு உகந்த துளசி பச்சை கற்பூரம் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு செம்பு பாக்கிரத்தில் போட்டு வைத்தால் தங்க ஆகர்ஷணம் ஏற்படும். முடிந்தால் இதில் சிறிய தங்கத்தை போட்டு வைக்கலாம். அமாவாசை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து இதை செய்து அடுத்த பெளர்ணமி வரும் வரை வைத்திருக்க வேண்டும். இதை பணம் நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம் இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். இதன் நறுமணம் அந்த இடம் முழுதும் பரவுமாறு இருக்க வேண்டும். இதை அடிக்கடி செய்து வருவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் .

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் தமிழ்புத்தாண்டு நாளில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடைவீடுகளுள் 4-வது படைவீடாகும்.
இங்கு தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்து வருவதாக ஐதீகம். இத்தகைய சிறப்புடைய இந்த கோவிலில் தமிழ்புத்தாண்டு நாளில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று கோவிலில் திருப்படிகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் பிலவ ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்்தன.
படி பூஜையையொட்டி மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்க கவசம், வைரவேலுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா வருகிற 20-ந் தேதி நடப்பதாக பேராயர் அந்தோணி பப்புசாமி கூறினார்.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை கடந்த 2020 -ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி ரோமாபுரி வத்திக்கானில் உள்ள திருவழிபாட்டு பேராயம் பசிக்காவாக அறிவித்தது. இதன் மூலம் தமிழகத்தின் சாந்தோம் புனித தோமையார் பேராலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டி புனித லூர்து மாதா பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், திருச்சி உலக ரட்சகர் ஆலயம், கோவை கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயம் ஆகியவற்றின் வரிசையில் 7-வது பசிலிக்காவாகவும், குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகவும் முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் திகழ்கிறது.
இதையொட்டி பசிலிக்கா அறிவிப்பு விழா தொடர்பாக முளகுமூடு ஆலய வளாகத்தில் மறைமாவட்ட பொறுப்பு பேராயர் அந்தோணி பாப்புசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 160 ஆண்டுகள் வரலாறு படைத்தது. இந்த ஆலயம் தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாகவும், குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காகவும் அமைவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.
இந்த மகிழ்ச்சியை அதிகாரபூர்வமாக அறிவித்து கொண்டாடும் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி மாலை 4 மணிக்கு முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா வளாகத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்று இறையாசீர் பெற அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம், மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன், நாஞ்சில் பால் நிலைய இயக்குனர் ஜெரால்டு ஜஸ்டின், முளகுமூடு பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாச்சதாஸ். பங்குத்தந்தை தாமஸ், பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோண்யன் மணி, பொருளாளர் விஜி கலா, துணைச் செயலாளர் ஹெலன் மேரி, ஒருங்கிணைந்த துணைக்குழு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது.
அதன்படி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பசுவும், கன்றும் வாடாவிளக்கு மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கோமாதா பூஜை நடந்தது. அதைதொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள மண்டபத்தில் காய் கனிகள் படைக்கப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது, பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர்.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கொரோனா பரவலால் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று அதிகாலையிலேயே குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் பலரும் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று சாமியை வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவலால் நேற்று கோவிலில் கனி காணும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை தாணுமாலயனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு நித்ய காரிய பூஜை நடந்தது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 7 மணிக்கு பிறகு கோவிலுக்குள் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்ட கோவில்களின் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஆய்வாளர் கோபாலன் மற்றும் கோவில் பணியாளர்கள் சாமி தரிசன ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைெபற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் உள்பிரகாரத்தில் கனி காணும் நிகழ்ச்சிக்காக கண்ணாடி முன்பு பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கனி கண்டு வழிபட்டனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் பரவலையடுத்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகவும் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இருப்பினும் கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.