search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி இந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடந்தது.

    அதன்படி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பசுவும், கன்றும் வாடாவிளக்கு மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கோமாதா பூஜை நடந்தது. அதைதொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள மண்டபத்தில் காய் கனிகள் படைக்கப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    அப்போது, பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×