search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முளகுமூடு தூய மரியன்னை
    X
    முளகுமூடு தூய மரியன்னை

    முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்கா அறிவிப்பு விழா 20-ந்தேதி நடக்கிறது

    முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் பசிலிக்காவாக அறிவிப்பு விழா வருகிற 20-ந் தேதி நடப்பதாக பேராயர் அந்தோணி பப்புசாமி கூறினார்.
    முளகுமூடு தூய மரியன்னை ஆலயத்தை கடந்த 2020 -ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி ரோமாபுரி வத்திக்கானில் உள்ள திருவழிபாட்டு பேராயம் பசிக்காவாக அறிவித்தது. இதன் மூலம் தமிழகத்தின் சாந்தோம் புனித தோமையார் பேராலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டி புனித லூர்து மாதா பேராலயம், தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம், திருச்சி உலக ரட்சகர் ஆலயம், கோவை கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பேராலயம் ஆகியவற்றின் வரிசையில் 7-வது பசிலிக்காவாகவும், குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவாகவும் முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் திகழ்கிறது.

    இதையொட்டி பசிலிக்கா அறிவிப்பு விழா தொடர்பாக முளகுமூடு ஆலய வளாகத்தில் மறைமாவட்ட பொறுப்பு பேராயர் அந்தோணி பாப்புசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:-

    முளகுமூடு தூய மரியன்னை ஆலயம் 160 ஆண்டுகள் வரலாறு படைத்தது. இந்த ஆலயம் தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாகவும், குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காகவும் அமைவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

    இந்த மகிழ்ச்சியை அதிகாரபூர்வமாக அறிவித்து கொண்டாடும் விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதி மாலை 4 மணிக்கு முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா வளாகத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்று இறையாசீர் பெற அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசு ரெத்தினம், மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின், முளகுமூடு வட்டாரம் முதல்வர் மரிய ராஜேந்திரன், நாஞ்சில் பால் நிலைய இயக்குனர் ஜெரால்டு ஜஸ்டின், முளகுமூடு பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாச்சதாஸ். பங்குத்தந்தை தாமஸ், பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜிமோண்யன் மணி, பொருளாளர் விஜி கலா, துணைச் செயலாளர் ஹெலன் மேரி, ஒருங்கிணைந்த துணைக்குழு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×