என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் கோவிலில் தேரோட்டம் நடைபெறாமல் விழா கோவில் வளாகத்திற்குள் உள் திருவிழாவாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட நபர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். சித்திரை உற்சவ திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறும். நாளை(சனிக்கிழமை) காலையில் கொடியேற்றம் நடைபெறும். இரவில் காப்புக்கட்டுதலுடன் முதல் நாள் உற்சவம் தொடங்கும்.

    இதைதொடர்ந்து 2-ம் நாள் முதல் 8-ம் நாள்வரை தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி சிம்மம், அனுமார், கருடன், சேஷன், வெள்ளி யானை, தங்க தோளுக்கியானில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறும். 6-ம் நாளான 22-ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறும். 7-ம் நாளான 23-ந்தேதி மாலை சூர்ணாபிஷேகம், தங்க தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 25-ந்தேதி மாலை 4 மணியளவில் திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடைபெறும். இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெறும்.

    26-ந்தேதி தேர் திருவிழா நடைபெறாமல் சுவாமி தங்கப்பல்லக்கில் கோவில் வளாகத்தில் தென்னமர வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். 12-ம் திருநாளான 28-ந்தேதி இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    மேலும் சுவாமி வீதி புறப்பாடு வரும்போது சுவாமியை பின்
    கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஏராளம். கடனை அடைக்க சில குறிப்பிட்ட நாட்கள் உள்ளன. அந்த நாட்களில் கடன் தொகையில் சிறிதளவு செலுத்தினால் விரைவில் கடனை அடைக்க முடியும்.
    செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் எனப்படும்.

    செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ர முகூர்த்தமாகின்றது.

    இந்த காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

    செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறலாம்.
    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சங்ககிரியில் சென்னகேசவ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் மற்றும் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) மலைமீது இருந்து சுவாமியை கொண்டுவந்து மண்டபத்தில் வைத்து கொடியேற்றத்துடன் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.அதன்பிறகு பல்வேறு அலங்காரங்களுடன் தினசரி சாமி வீதி உலா நடத்தவும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி சித்திரை தேர்த்திருவிழா நடைபெறவும் இருந்தது.

    முக்கிய வீதிகள் வழியாக தேர் வடம் பிடித்து இழுத்து வரப்பட்டு தேர் நிலைக்கு வந்து சேரும். இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி மலைமீது சுவாமி எழுந்தருளும் வைபவத்துடன் சித்திரை ேதர்த்திருவிழா நிறைவு பெறும்.

    இந்த நிலையில், சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சங்ககிரி சென்னகேசவ பெருமாள் கோவில் மற்றும் சோமேஸ்வரர் சவுந்திரநாயகி கோவில் சித்திரை தேர்த்திருவிழாவை ரத்து செய்து, சங்ககிரி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கஸ்தூரி அறிவித்துள்ளார்.

    மேலும், 18-ந் தேதி முதல் கோவில் மண்டபத்தில் சென்ன கேசவ பெருமாள் உற்சவர் சிலை, தினசரி பல்வேறு அலங்காரங்களுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும் என்றும், சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.
    கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூரில், மழவர்கள் என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இவர்களில் சிறந்த போர்வீரர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்று அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் ‘திருமழப்பாடி’ என்று மருவியதாக சொல்கிறார்கள்.

    சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.

    தல வரலாறு

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.

    அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

    மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.

    இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நந்தியம்பெருமான்- சுயம்பிரகாசை திருமணம் திருமழப்பாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐயாறப்பரும், அறம் வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்.

    இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    அமைவிடம்

    திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.

    திருமழப்பாடி ஆலய சிறப்பு

    தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.

    ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.

    இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.

    இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணி அளவில் ரிஷப ஹோமம் நடந்தது. அதன் பிறகு நந்தி மற்றும் கொடிமரத்துக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, காலை 6 மணி அளவில் நந்தி வரையப்பட்ட வெண்கொடி கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதைதொடர்ந்து இரவு 7 மணி அளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் பிரகாரத்தில் சாமி, பஞ்சமூர்த்திகளின் புறப்பாடு நடந்தது.

    இத்திருவிழாவில் வருகிற 24-ந் தேதி பட்டாச்சாரியார்கள் மூலம் திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. 25-ந் தேதி நடக்க இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 26-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராம நவமி உற்சவத்தின் 3-ம் நாளில் கோவில் வளாகத்தில் உள்ள ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் 9 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    இதனை தொடர்ந்து உற்சவத்தின் 3-ம் நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது.. மேலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து சாமி தாிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி உற்சவம் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
    மகத்துவமிக்க ரமலானுக்கு ‘ஷஹ்ருர் ரஹ்மத்’ - ‘இறையருள் மிக்க மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. 30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

    இயற்கையாகவே இறையருள், என்றும் எப்போதும் நிறைந்தே காணப்படுகிறது. இறைவனும் திருக்குர்ஆனில் அவ்வாறுதான் தன்னை அறிமுகம் செய்கின்றான்:

    ‘அவன் (அல்லாஹ்) அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்’. (திருக்குர்ஆன் 1:2)

    ஒரு தாய் தன் குழந்தையின் மீது செலுத்தும் அன்பு, கருணையை விட எழுபது மடங்கு அன்பையும், கருணையையும், இறைவன் தமது அடியார்கள் மீது பொழிகின்றான். இதற்கு சான்றாக, தன்னை ஏற்க மறுக்கும் மனிதர்களுக்குக் கூட அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்கி, அவர்கள் மீது அருள்மழை பொழிவதை காணலாம்.

    ‘ஒரு இறை மறுப்பாளர் இறைவனின் வற்றாத கருணையை அறிந்தால், எந்த ஒருவரும் இறையருள் குறித்து நிராசை அடையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இறையருள் குறித்து யாரும் வாழ்வில் நிராசை அடையக்கூடாது என திருக்குர்ஆன் பின்வருமாறு அறிவுறுத்துகிறது:

    ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், இறைவனுடைய அருளில் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக இறைவன் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 39:53)

    இந்த அடிப்படையில் ரமலானின் முதல் பத்தில் இறையருள் அதிகம் இறங்குகிறது. அதை அடைவதற்கு சிறந்த பிரார்த்தனைகள் மூலம் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

    முற்காலத்தில் பாவச் செயல்களால் ஒருவர் தமக்குத் தாமே எல்லை மீறி நடந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது, தம் புதல்வர்களிடம் இறுதி ஆசையை தெரிவித்தார்.

    ‘நான் இறந்ததும் என்னை எரித்துத் தூளாக்கி, பிறகு கடலில், காற்றில் தூற்றுங்கள். இறைவன் மீதாணை! என் மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு எனக்கு அவன் வேதனை அளிப்பான்’ என்றார்.

    தந்தை கூறியபடி புதல்வர்களும் செய்தனர்.

    பிறகு இறைவன் பூமியை நோக்கி, ‘நீ எடுத்ததை கொடுத்துவிடு’ என்று கட்டளையிட்டான்.

    அப்போது அந்த மனிதர் முழுவடிவில் இறைவனிடம் நின்றார்.

    ‘நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?’ என விசாரித்தான்.

    ‘இறைவா, உன் மீதான அச்சம் தான்’ என்று பதிலளித்தார்.

    இறைவன் அவரை மன்னித்தான்.

    ‘ஒரு பெண் ஒரு பூனையை அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் நரகத்தில் நுழைந்தாள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘எந்த மனிதரும் முதல் நபரைப் போன்று இறையருள் மீது அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. மேலும், எவரும் இரண்டாம் நபரைப் போன்று இறையருளை முழுவதுமாக நம்பி நல்லறங்கள் செய்யாமல் இருந்து விடக்கூடாது’ என ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.37 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.37 மணி
    அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலில் விபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது.
    கோவை சின்ன தடாகம் அருகே மலை மீது அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதையடுத்து தினந்தோறும் மண்டல பூஜைகள் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேக விழா கணபதி யாகத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 108 சங்குகளால் முருகனின் வேல் போல அலங்கரிக்கப்பட்டு சங்கு பூஜை நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்தை ஏந்தி கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் கலசத்தில் உள்ள தீர்த்தம் மூலம் மூலவர் சுப்ரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து விபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதையடுத்து மகாதீபாராதனை நடந்தது. முன்னதாக கோவில் முன்புறம் புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. அதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 41 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இதுபோல நத்தம் அருகே திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்திரை மாத கார்த்திகை பூஜை நேற்று நடந்தது. மேலும் கோவில் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை பூஜை நடந்தது.
    சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும்.
    அன்பான சகோதர சகோதரிகளுக்கு நமக்காய் மரித்து உயிர்த்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சிலுவை சுமந்த இயேசுவின் பாடு மரங்களை குறித்து தியானிக்கும் இந்த நாட்களில் அந்த சிலுவையிலிருந்து இம்மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கும் குரலை கேட்க்க நம் செவிகளை சாய்ப்பது நன்மை தரும். இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்[மத்தேயு:16:24].

    சிலுவை என்பது கிறிஸ்துவின் பாடுமரணத்தை நினைவுட்டும் இரட்சிப்பின் சின்னமாக  இருந்தாலும் மறுபுறம்  கிறிஸ்துவின்  அன்பின், மன்னிப்பின், கிருபையின், மகிமையின் சின்னமாய் நம்மை மகிழ்விக்கிறது. தேவன் தம்முடைய ஒரே குமாரனை இந்த உலகத்தில் அனுப்பி நம் எல்லாரையும் இவவசமாய் மீட்டு இரட்சித்தார். நம்முடைய இரட்சிப்பிற்காக கிறிஸ்து இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தை விலைக்கிரயமாய் கொடுத்து சிலுவையில் தொங்கினார். இந்த சிலுவை நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மேன்மையான அழைப்பை கொடுக்கிறது. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்கிற அழைப்பின் குரலே அது.

    ஆம் அன்பானவர்களே நமக்காக சிலுவை சுமந்த இயேசு இந்த மேலான அழைப்பை எல்லா மனிதருக்கும் இலவசமாய் விடுக்கிறார். இரட்சிப்போடு இணைந்தது தான் சிலுவையின்  அழைப்பும். இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இந்த அழைப்புக்கு பாத்திரவான்கள். அந்த மேன்மையான அழைப்பை உணர்ந்து நாமும் அவரை பின்பற்ற வேதம் நமக்கு சொல்லும் ஆலோசனைகளை சிந்திப்போம்.
    தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேர் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் இந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    தஞ்சாவூர் :

    இந்து முன்னணி பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசான சிவம் தலைமையில் மாநகர தலைவர் சதீஷ், ஒரத்தநாடு மணிகண்டன், வல்லம் நகர பொறுப்பாளர்கள் வினோத், சதீஸ்குமார், நாகராஜ், நகர செயலாளர் லட்சுமணன் மற்றும் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று சித்திரைப் பெருவிழா. கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக சித்திரை பெருவிழா நடைபெறவில்லை.‌ எனவே இந்த ஆண்டு பெரிய கோவில் திருத்தேர் திருவிழாவை ஆகமவிதிப்படி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு​ நடத்த வேண்டும்.

    பொதுவாக மக்கள் கூடும் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் திறந்து இருக்கிறது. பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையான தேர்த்திருவிழாவிற்கு மட்டும் தடைவிதிப்பது பெரும்பான்மை மக்களின் மனம் புண்படும் செயலாகவே உள்ளது.

    அதுமட்டுமின்றி இந்த சித்திரை திருவிழாக்கள் முறைப்படி நடைபெறாததால் நாட்டில் நோய் தொற்று, இயற்கை சீற்றம் உருவாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    அதோடு மட்டுமல்லாமல் இந்த திருவிழாவை நம்பி வாழும் சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், கை வினைகலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் சிரமப்படும் உள்ளது. எனவே கலெக்டர் தேர் திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
    கோவிந்தாஷ்டகம் (வைணவம்)

    1. ஸத்யம் ஜ்ஞான மநந்தம் நித்ய மநாகாசம் பரமாகாசம்
    கோஷ்ட ப்ராங்கண ரிங்கணலேல மநாயாஸம் பரமாயாஸம்
    மாயாகல் பிதநாநாகாரம் புவனாகாரம்
    க்ஷ்மாமாநாதமநாதம் ப்ரமணத கோவிந்தம் பரமானந்தம்

    பூதேவி, லக்ஷ்மி தேவியாருக்கு நாதனான கோவிந்தனை வணங்குங்கள். அவர் ஸத்ய-ஞான-அனந்த ஸ்வரூபி, பூர்ணமானவர், மாட்டுத்தொழுவத்தில் தவழ ஆசைப்பட்டவர், களைப்பே இல்லாதவர், மாயையாகப் பலவடிவங்கள் கொண்டவர், உலகே உருவானவர் அவர்.

    2. ம்ருத்ஸ்நா மத்ஸீஹேதி யசோதா தாடன சைசவ ஸந்த்ராஸம்
    வ்யாதித வக்த்ரா லோகித லோகா லோக சதுர்தசலோகாலிம்
    லோகத்ரயபுரமூல ஸ்தம்பம் லோகா லோக மநாலோகம்
    லோகேசம் பரமேசம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

    குழந்தையாய் இருந்தபோது, மண்ணைத் தின்றுவிட்டாயே, என்று யசோதை அவரை அடித்து, அதட்டினாளே! உடனே வாயை திறந்தபொழுது பதினான்கு உலகங்களையும் கண்டு அந்த யசோதையே களித்தாளே! இப்படி மூன்று உலகங்களின் ஆதார ஸ்தம்பம்போல் அமைந்தவரான, அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

    3. த்ரைவிஷ்டபரிபுரக்னம்  பாரக்னம்பவரோகக்னம்
    கைவல்யம் நவநீதாஹாரமனாஹாரம் புவனாஹாரம்
    வைமல்யஸ்புட சேதோவிருததி விசேஷாபாஸ மனாபாஸம்
    சைவம் கேவலசாந்தம் ப்ரணாமத கோவிந்தம் பரமானந்தம்

    மூவுலகையும் பகைக்கும் அசுரரையழித்தவரும், பூபாரத்தையும், ஸம்ஸார நோயையும் அகற்றி கைவல்யம் தருபவரும், உணவேதும் வேண்டாதவரெனினும், உலகுக்கே உணவானவரும், நவநீதம் என்ற வெண்ணெயை உணவாகக் கொண்டவரும், தெளிவாய் இல்லாதவரின் மனதிலும் தெளிந்திருப்பவருமான கிருஷ்ண பரமாத்மாவை வணங்குங்கள்.

    4. கோபாலம் பூலீலா விக்ரஹகோபாலம் குலகோபாலம்
    கோபீகேலந கோவர்த்தன த்ருதிலீலா லாலிதகோபாலம்
    கோபிர்ந்கத்த கோவிந்த ஸ்புட நாமாநம் பஹநாமானம்
    கோதீகோசரதூரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

    அவர் கோபாலன் எனப்படுகிறார். பூதேவியோடு விளையாடும் ஆணழகர், குலபர்வதமானவரும்கூட, கோபியரோடு விளையாடுதல், கோவர்தன மலையை தூக்கி நிறுத்தல் போன்ற விளையாட்டுகளால் யாதவரை மகிழ்வித்தவர், கோவிந்தா, கோவிந்தா எனப் பசுக்களே அழைத்து மகிழும் தூயவர். பல பெயருமுள்ளவர், பசுக்களின் புத்திக்குக்கூட எட்டும் அளவில் உள்ளவர். அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

    5. கோபீமண்டல கோஷ்டீபேதம் பேதாவஸ்தமபேதாபம்
    சச்வத்கோகுர நிர்தூத-உத்கத தூலி தூஸரஸெளபாக்யம்
    ச்ரத்தா பக்திக்ரு ஹீதாநந்தம சிந்த்யம் சிந்தித ஸத்பாவம்
    சிந்தாமணி மஹிமானம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    கோபிகைகளுக்குள் விளையாட்டாகக் கலகம் செய்பவர். வெவ்வேறு நிலைகளிலிருந்தும் வித்யாசம் பாராட்டாதவர். பசுக்கள் குளம்பு கிளப்பிய தூசு படிந்தும், அழகுடன் திகழ்பவர். சிரத்தையான பக்திக்கு மகிழ்பவர், எப்போதும் பக்தர்கள் நலத்தையே எண்ணுபவர், சிந்தாமணியையொத்த பெருமை வாய்ந்தவர், அப்பெருமான். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

    6. ஸ்நான வ்யாகுல யோஷித்வஸ்த்ர முபாதர யாகமுபாரூடம்
    வ்யாதித்ஸந்தீரத திக்வஸ்த்ரா தாது முபாகர் ஷந்தம் தா:
    நிர்தூத த்வய சோக விமோஹம் புத்தம் புத்தே ரந்தஸ்தம்
    ஸத்தாமாத்ர சரீரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    நீராடிக்கொண்டிருக்கும் கோபிகைகளின் துணிகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியவர், அவற்றைப் பெற விரும்பி, துணியில்லாத உடம்புடன் கரையேற தவிக்கும் அந்த கோபியரை இழுத்த வண்ணம் விளையாடுகிறார். அவருக்கு சோகமோ, மோகமோ இல்லை, ஞானமே உருவானவர், புத்தியிலுரைபவர் எங்கும் உள்ளார் என்று மட்டும் உணரத்தக்கவர். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

    7. காந்தம் காரண காரணமாதிமநாதிம் காலகனாபாஸம்
    காலந்தீ கத காலிய சிரஸி ஸுந்ருத்யந்தம் முஹரத்யந்தம்
    காலம் கால கலாதீதம் கலிதாசேஷம் கலிதாதோஷக்னம்
    காலத்ரய கதிஹேதும் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    காரணங்களுக்கெல்லாம் மூல காரணமானவர், முதலானவர். ஆனால் முதல் இல்லாதவர்; கருநீல முகில் போன்ற அழகிய திருமேனி படைத்தவர், யமுனை நதியில் காளிங்கன்மேல் களிநடனம் புரிந்தவர், எல்லா காலமுமானவர், ஆனால் காலத்துளிகளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாம் அறிந்தவர், கலியின் கொட்டத்தை முடக்கியவர். முக்காலங்களிலும் செயல்படும் அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

    8. பிருந்தாவனபுவி ப்ருந்தாரக - கண - பிருந்தா ராதிக வந்த்யாயாம்
    குந்தாபாமலமந்தஸ்மேர ஸுதானந்தம் ஸுமஹானந்தம்
    வந்த்யாக்ஷே மஹாமுனி மானஸ வந்த்யானந்த பதத்வந்த்வம்
    நந்த்யாக்ஷே குணாப்திம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    தேவர்கள், சித்தர்கள் முதலியோரால் போற்றிப் புகழப்பட்ட பிருந்தாவனத்தில் குந்த புஷ்பமென தூய புன்சிரிப்புடன் பேரானந்தம் கொண்டு, அனைத்து முனிவர்கள் மனதிலும் நின்று நிலைபெற்ற திருவடிகளையுடைய, குணக்குன்றான கோவிந்தனை வணங்குங்கள்.

    9. கோவிந்தாஷ்டகமேத ததீதே கோவிந்தார்பித சேதா யோ
    கோவிந்தாச்யுத மாதவ விஷ்ணோ கோகுல நாயக க்ருஷ்ணேதி
    கோவிந்தாங்க்ரிஸ ரோஜ த்யான ஸுதாஜலதௌத ஸமஸ்தாகோ
    கோவிந்தம் பரமானந்தாம்ருத மந்த : ஸ்தம் ஸ தமப்யேதி

    கோவிந்த, அச்யுத, மாதவ, விஷ்ணோ, கோகுலநாயக, கிருஷ்ணன் ஆகிய கோவிந்தன்பால் மனம் வைத்து இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
    ×