search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை
    X
    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை

    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை

    சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் தமிழ்புத்தாண்டு நாளில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் ஆறுபடைவீடுகளுள் 4-வது படைவீடாகும்.

    இங்கு தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்து வருவதாக ஐதீகம். இத்தகைய சிறப்புடைய இந்த கோவிலில் தமிழ்புத்தாண்டு நாளில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று கோவிலில் திருப்படிகளுக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் பிலவ ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்்தன.

    படி பூஜையையொட்டி மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு தங்க கவசம், வைரவேலுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×