என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆடி மாத மழையால் ஏற்படும் புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்கிற ஆடிப்பெருக்கு.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.
மேலும் ஆடிப்பெருக்கன்று விரதம் இருந்து இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என்றாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நீராட அனுமதி இல்லை. நதிக்கரை, ஆற்றங்கரைகளில் இன்று மக்கள் வழிபடவும், புனித நீராடவும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று எல்லோரும் அவர்களது வீட்டிலேயே விதம் விதமாக சமைத்து பலகாரம் செய்து, வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுவோம்.
ஆடிப்பெருக்கு நாளில் விரதம் இருந்து கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கன்று புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கை. திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி வணங்குகின்றனர்.
நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம் நடந்த போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவியதால் பல மாதங்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டிருந்தது. வழக்கமான பூஜைகள் நடைபெற்ற போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா 2-வது பரவல் சற்று குறைந்ததால் அருணாசலேஸ்வரர் கோவில் திறக்கப்பட்டு வந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்ததால் திருவிழா நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடாமல் தடுக்கும் வகையில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் நேற்று (1-ந்தேதி) முதல் நாளை (3-ந்தேதி) வரை 3 நாட்கள் முக்கிய கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லவும் திடீரென தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம் நடந்த போதிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இன்று ஆடி கிருத்திகை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தனர்.
அவர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வேதனை அடைந்த பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் கிரிவலம் சென்று விட்டு தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். இதேபோல் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வேதனை அடைந்தனர்.
திடீரென கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியானதால் அதுபற்றி பொதுமக்கள் பலர் அறியாமல் வந்ததாக கூறினர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட காவிரி கரையில் அமைந்துள்ள அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், திதி கொடுப்பதற்கு அனுமதி இல்லை.
கொரோனா 3-வது அலையை தடுக்க முன்னெச்சரிக்கையாக நாளை(செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கும், வழிபாடு செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வருகிற 8-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட காவிரி கரையில் அமைந்துள்ள அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், திதி கொடுப்பதற்கு அனுமதி இல்லை.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

கல்வி ஞானம் கிடைக்கக்கூடிய இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். புத்தியில் தெளிவும் ஞாபக சக்தியும் அதிகரித்து, தெளிவானவர்களாக, திடமானவர்களாகத் திகழ்வீர்கள் என்பது உறுதி!
கல்வியைக் கண்ணுக்கு நிகராகச் சொல்கிறோம். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றார்கள், முன்னோர்கள். கல்வி என்பது தெய்வத்துக்குச் சமமானது. ஒருவீட்டில் கல்விச் செல்வம் இருந்து விட்டால், அங்கே சகல செல்வங்களும் குடியேறிவிடும் என்கின்றன ஞானநூல்கள்.
ஸ்ரீஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா
ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
இந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் பெற்று, புத்திமானாக வாழ்வில் உயர்வீர்கள்.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் 27 நாட்களுக்குப்பிறகு தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தஞ்சை பெரியகோவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வெளிநாட்டினர் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து தஞ்சை பெரியகோவில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது.
அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் தினமும் 4 கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தொற்று குறைந்ததையடுத்து கோவில் கடந்த மாதம் (ஜூலை) 5-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரியகோவில், புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், சுவாமிமலை முருகன் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவிலில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது தெரியாமல் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் முன்பு இரும்பு தடுப்பு கம்பிகள் கொண்டு அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில பக்தர்கள் பெரியகோவில் முன்பு உள்ள சாலை ஓரம் நின்று வழிபட்டனர்.
பெரியகோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 27 நாட்களுக்குப்பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் நேற்று கோவிலில் வழக்கம் போல நடைபெறும் 4 கால பூஜைகள் நடைபெற்றது. கோவில் பகுதியில் போலீசாரும் வழக்கத்தை விட அதிக அளவில் நிறுத்தப்பட்டு அவர்கள் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து அறிவுறுத்தினர்.

ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று முதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி அளவில் கோவிலில் அம்மன் சன்னதி எதிரே மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து புனித நீரால் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.
அதன் பின்னர் கொடி மரத்திற்கு எதிரே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்த பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கார் ராஜாகுமரன்சேதுபதி, ராணி லட்சுமிகுமரன் சேதுபதி, மேலாளர் சீனிவாசன் மற்றும் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைச்செல்வன், செல்லம், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் நாளை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை காரணமாக பக்தர்கள் இல்லாமலே நேற்று கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி ஆடி அமாவாசை அன்று கோவிலில் இருந்து சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனாபரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு காரணமாக சாமி அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் கோவிலின் உள்ளேயே உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்று கோவிலின் 3-ம் பிரகாரத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் வருகிற 9-ந் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ள அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் ராம தீர்த்தம் தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறும் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி கோவிலில் வருகி்ற 11-ந் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி-அம்பாள் திருக்கல்யாணம் 12-ந் தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக 17-ந் தேதி சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் அம்பாள் தங்கப்பல்லக்கு மற்றும் பல விதமான வாகனங்களில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி நான்கு ரத வீதிகளை வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் கட்டுப்பாடு தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் நடைபெறும் சாமி வீதிவுலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் 3-ம் பிரகாரத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டும் ராமேசுவரம் கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவிலின் உள்பகுதியில் நடைபெற்றதுடன் தேரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுக்கும் சம்ஹார ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நன்மை என்கிற ஒரு விஷயம் இருந்தால் அதன் எதிர்பதமாக தீமை என்கிற ஒன்றும் இருப்பது தவிர்க்க முடியாத பிரபஞ்ச விதியாகும். நம் வளர்ச்சியை தடுப்பதற்கும் நமக்குத் தீங்கு விழைப்பதற்கும் நினைப்பவர்கள் பல வகையான மாந்திரீக முறைகளை கையாளுகின்றனர். அத்தகைய மனிதர்கள் நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்.
சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. இந்த ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்.
தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களையும் தேட வேண்டாம். கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்கும்.
சென்னை
கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வார்கள். அவ்வாறு அர்ச்சனை செய்யப்படும்போது அர்ச்சகர்கள் சமஸ்கிருதத்தில் வேதமந்திரங்களை உச்சரிப்பார்கள். இது சமஸ்கிருதம் தெரியாத பக்தர்களுக்கு புரிவதில்லை.
இதனால் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்காக கோவில்களில் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் முறையாக நடைபெறுவது கிடையாது.
தற்போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தமிழில் அர்ச்சனை செய்யும் முறையை தீவிரப்படுத்தி இருக்கிறார். அவரது உத்தரவுப்படி வருகிற 5-ந் தேதி (வியாழன்) முதல் திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்குகிறது.
சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை நடைபெறும்.

இந்த கோவில்களுக்கு சென்று தமிழில் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் இனி தமிழில் வழிபாடு செய்யலாம்.
இதற்காக தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்களையும் தேட வேண்டாம். கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரும், செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு அழைத்து விரும்பும் சன்னதியில் விரும்பும் தெய்வங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
இந்த வசதி தமிழகத்தில் உள்ள முதுநிலை கோவில்களான 47 கோவில்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த கோவில்கள் விபரம் வருமாறு:-
ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்கோவில், பழனி, மருதமலை, திருத்தணி, திருவானைக்காவல், திருவண்ணாமலை உள்ளிட்ட 47 கோவில்கள்.
மேலும் கோவில்களில் குறைகள் இருந்தால் ஆன்லைனில் பக்தர்கள் புகார் செய்யலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை புகார்கள் அனைத்தும் இணைகமிஷனர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

ஆடி 19 (புதன்கிழமை) அன்று நடக்கும் சிறப்பு பூஜைகள் கோவிலின் இணைய தளம் www.salemkottaimariamman/tinfo.in வழியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆடி 18-ஐ முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் ஆடி-18 (செவ்வாய்கிழமை), வருகிற 4-ந் தேதி ஆடி-19 (புதன்கிழமை), 6-ந் தேதி ஆடி-21 (வெள்ளிக்கிழமை), 8-ந் தேதி ஆடி-23 (ஞாயிறு) மற்றும் வருகிற 13-ந் தேதி ஆடி-28 (வெள்ளிக்கிழமை) ஆகிய 5 நாட்களில் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிறப்பு வழிபாடுகளுக்கும், கோவில் மற்றும் அதன் வளாகங்கள், சுற்றுபுறங்களில் பொங்கல் வைத்தல், கோவில் வளாகத்தில் கூடுவதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம், மேற்கண்ட 5 நாட்களில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும். ஆடி 19 (புதன்கிழமை) அன்று நடக்கும் சிறப்பு பூஜையை கோவிலின் இணைய தளம் www.salemkottaimariamman/tinfo.inவழியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிய முறையில் விண்ணேற்பு திருவிழா நடைபெறும்.
கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்தாண்டும் தொடர்வதால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விண்ணேற்பு பெருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமநாயக்கன்பட்டியில் பாளை. மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியுடன் ஆடம்பரமின்றி எளிய முறையில் விண்ணேற்பு திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளான 6-ந் தேதி கொடியேற்றம், 15-ந் தேதி தேர்பவனி மற்றும் நற்கருணைப்பவனி ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்டு 6-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை காலை 6 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டும் நடைபெறும்.
15-ந் தேதி அன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி நடைபெறும். ஏனைய திருப்பலிகள் ஜெபமாலை தோட்டத்தில் காலை 8, 10, 12 மற்றும் இரவு 7 மணிக்கு நடைபெறும். திருப்பலி நிகழ்ச்சிகளை மக்கள் எளிதில் காணும் வகையில் இணையதளம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புனித பரலோக மாதா ஆலய பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்ட் அமல் ரீகன், வண்டானம் பங்குத்தந்தை மாசில்லா மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் அம்மாமண்டபம் படித்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து ஆடிமாத திருவிழாக்களையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஆடி 18-ம் நாளான்று அம்மாமண்டபம் படித்துறை, காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்றும்(திங்கட்கிழமை), நாளையும்(செவ்வாய்க்கிழமை) பக்தர்களுக்கு தடைவிதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பூட்டப்பட்டு, பேரிகார்டு கொண்டு தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் நுழைவு வாயில்களான தெற்கு, கிழக்கு, வடக்குவாசல் பகுதிகளில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு அதில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை இன்றும், நாளையும் சாத்தப்படும் என்றும், பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.இதை தொடர்ந்து கோவிலில் ராஜகோபுரம் முன்பு, தேருக்கு அருகில் கோவிலின் பின்புறம் ஆகிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

10-ந்தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் பிரகார உலாவும் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
பின்னர் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தின் முன்பு பராசக்தி அம்மனை கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பராசக்தி அம்மன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை படிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையின் காரணமாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆடிப்பூர கொடியேற்றம் நிகழ்ச்சி பக்தர்களின்றி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் விநாயகர் உற்சவம் கோவிலில் பிரகார உலா நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உலா நடைபெற உள்ளது. இந்த விழா வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.
10-ந்தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் பிரகார உலாவும் நடைபெற உள்ளது.
வழக்கமாக விழாவின் இறுதி நாளன்று தீ மிதி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தீமிதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.