என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்
    X
    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 5 நாட்கள் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை

    ஆடி 19 (புதன்கிழமை) அன்று நடக்கும் சிறப்பு பூஜைகள் கோவிலின் இணைய தளம் www.salemkottaimariamman/tinfo.in வழியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சேலம் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், ஆடி 18-ஐ முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை மறுநாள் ஆடி-18 (செவ்வாய்கிழமை), வருகிற 4-ந் தேதி ஆடி-19 (புதன்கிழமை), 6-ந் தேதி ஆடி-21 (வெள்ளிக்கிழமை), 8-ந் தேதி ஆடி-23 (ஞாயிறு) மற்றும் வருகிற 13-ந் தேதி ஆடி-28 (வெள்ளிக்கிழமை) ஆகிய 5 நாட்களில் கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், சிறப்பு வழிபாடுகளுக்கும், கோவில் மற்றும் அதன் வளாகங்கள், சுற்றுபுறங்களில் பொங்கல் வைத்தல், கோவில் வளாகத்தில் கூடுவதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

    அதேசமயம், மேற்கண்ட 5 நாட்களில் வழக்கமான பூஜைகள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும். ஆடி 19 (புதன்கிழமை) அன்று நடக்கும் சிறப்பு பூஜையை கோவிலின் இணைய தளம் www.salemkottaimariamman/tinfo.inவழியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×