என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோவில் முழுவதும் ரூ. 5 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு குடமுழுக்குக்கு தயார் நிலையில் உள்ளது.
வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை கடங்கள் புறப்பாடு நடைபெற்று யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 6 மணிக்கு கடங்கள் புறப்பாடும், 7 மணிக்கு அனைத்து பரிவார விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடக்கிறது. காலை 9 மணிக்கு பிரதான தெய்வங்களுக்கு பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. 9.30 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடக்கிறது 10.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு குடமுழுக்கு நடக்கிறது.
காலை 11 மணிக்கு கோவில் குடமுழுக்கும், தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண மகோற்சவமும், பஞ்சமூர்த்திகள் தீபாராதனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி. நித்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
விரதம் என்பது நாம் ஆயிரம் காரணத்திற்காக இருக்கலாம். ஆனால் பொதுவாக விரதம் மன அமைதிக்காகவும் சுகாதாரத்திற்காகவும் தான். மாதம் ஒரு முறை விரதம் இருப்பது நல்லது. இதனை நம் முன்னோர்கள் உபவாசம் என்று கூறுவார்கள். சரி இப்போது விரதம் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
விரதம் பிடிக்கும் முந்தைய நாள் வீடு முழுவதும் சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து விட வேண்டும்.
விரதம் இருப்பது ஆணாக இருந்தால் குடும்பத்தினரின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். பெண்ணாக இருந்தால் பெற்றோர் அனுமதி பெற்று செய்ய வேண்டும். திருமணமான பெண்கள் மாமியார் அனுமதி பெற்று செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்து 48 நாட்கள் கழித்து தான் பெண்கள் விரதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மாதவிலக்கு முடிந்த ஏழு நாட்கள் கழித்து தான் பெண்கள் விரதம் இருக்க வேண்டும்.
குடும்பம் யாரேனும் தவரி விட்டால் மூன்று மாதங்கள் கழித்து தான் விரதம் இருக்க வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் பிறர் மீது கோபம் கொள்வது ,தவறாக பேசுவது, பிறரை கேலி கிண்டல் செய்வது மற்றும் பெசாமல் இருப்பது அல்லது அதிகம் பேசுவது இவையெல்லாம் கூடாது. இல்லையென்றால் விரதம் பலன் தராது.
விரதத்தின் போது அசைய உணவு சாப்பிடுவது சமைப்பது கூடாது. மேலும் வெற்றிலை பாக்கு போடுவது, சூதாட்டம், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவது எதுவும் கூடாது.
விரதத்தை காரணம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அதிக நேரம் பகல் உறக்கம் கூடாது. அதிக நீராகாரம் குடிக்க கூடாது. முழு நேர இறை வழிபாடு அவசியம்.
இதுபோன்ற அரிய தகவல்களை பெற நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை பின்தொடரவும். பலருடன் பகிர்ந்து கொள்ளவும்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர், திருக்கல்யாண திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு 21 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் வெளி பிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். 9-ஆம் திருநாளான வருகிற 29-ந் தேதி தேரோட்டமும், 12-ம் திருநாளான நவம்பர் 1-ந் தேதி கோவில் மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் அரசு விதிகளின்படி நடைபெறுகிறது.

பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த ஆண்டு (2022) நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை நாட்கள் குறித்த கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
மாசி மாத பூஜைக்காக கோவில் நடை 2022-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8-ந்தேதி திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்ச் 9-ந் தேதி திருவிழா கொடியேற்றம். 18-ந் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.
சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10-ந் தேதி நடை திறக்கப்பட்டு 18-ந் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15-ந்தேதி விஷூ பண்டிகை விழா நடக்கிறது.
வைகாசி மாத பூஜைக்காக மே 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி நடை அடைக்கப்படும்.
சபரிமலை சபரிமலையப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி 8-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆனி மாத பூஜைக்காக 2022 ஜூன் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை சபரிமலையப்பன் கோவில் நடை செப்டம்பர் 16-ந் தேதி திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ந் தேதி நடை திறக்கப்படும். 22-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக மீண்டும் சபரிமலைசபரிமலையப்பன் கோவில் நடை அக்டோபர் 24-ந் தேதி திறக்கப்படும். 25-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

2022-ம் ஆண்டின் மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி சபரிமலை சபரிமலையப்பன் கோவில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இதையும் படிக்கலாம்.. ஐப்பசி மாத பூஜை நிறைவு: சபரிமலை கோவிலில் நடை அடைப்பு
“(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே”. (திருக்குர்ஆன் 18:6)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி நாம் மேலோட்டமாகவே அறிந்திருப்பது என்பது ஓர் நிதர்சன உண்மை. பொதுவாக நபிகளாரை முஸ்லிம்களின் மதகுருவாக, போதகராக பெரும்பாலும் அறிவார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி அல்ல. நபிகளாரின் வாழ்க்கையும் அப்படி இருந்ததில்லை. நபிகளாரைப் பற்றி திருக்குர் ஆன் இவ்வாறு கூறுகிறது:
“முஹம்மது அவர்கள் முழு மனித சமூகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் ஆவார்கள்”. (திருக்குர்ஆன் 21:107)
“முஹம்மது அவர்கள் மக்களின் மீதுள்ள சுமைகளை இறக்க, மக்களிடம் பிணைந்திருக்கும் விலங்குகளை உடைக்க வந்தவர்”. (திருக்குர்ஆன் 7:157)
“மக்களின் உண்மையான வெற்றியில் பேராவல் கொள்பவர்”. (திருக்குர்ஆன் 9:128)
“(நபியே!) இவர்கள் இந்த அறிவுரையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையானால், இவர்களின் பின்னே கவலைப்பட்டு உமது உயிரை மாய்த்துக்கொள்வீர் போல் இருக்கிறதே”. (திருக்குர்ஆன் 18:6)
“மக்களின் அகமும், புறமும் தூய்மைப்படுத்தி வாழ்க்கை கலையை கற்றுக்கொடுத்த மிகச்சிறந்த ஆசான்”. (திருக்குர்ஆன் 62:2)
“யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது”. (திருக்குர்ஆன் 33:21)
தன்னைப் பற்றி கூறும் பொழுது நபிகள் நாயகம் ஓர் உதாரணத்தின் மூலம் இவ்வாறு சொல்கிறார்:
“என்னுடைய உதாரணம் நெருப்பு மூட்டும் ஒரு மனிதனுக்கு ஒப்பானதாகும். அவன் மூட்டிய நெருப்பினால், அதனைச் சூழ்ந்த பகுதி பிரகாசமடைகிறது. அப்போது விட்டில் பூச்சிகள் நெருப்பினுள் விழ ஆரம்பிக்கின்றன. அந்த மனிதன் தன்னால் இயன்ற அளவுக்குப் போராடி அப்பூச்சிகளை நெருப்பினுள் விழாமல் காப்பாற்ற முயல்கின்றான். ஆனால், பூச்சிகளோ அவனையும் மீறி நெருப்புக்குள் விழுந்த வண்ணம் உள்ளன. இவ்வாறே நான் உங்களின் இடையைப் பிடித்து நரகில் விழாமல் தடுத்து நிறுத்த முயலுகின்றேன். நீங்களோ நரகில் புகுந்த வண்ணம் உள்ளீர்கள்”.
மக்கள் நலன், உயர்வு, வெற்றிக்காக அயராது உழைத்த மாமனிதர்தான் நபிகள் நாயகம் அவர்கள். வாழ்க்கையை தனித்தனியாக பிரிக்காமல், முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டிய உத்தம தலைவர். அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என்று வருடத்தில் ஒரு நாள் இல்லாமல் எல்லா நாளும் மக்களின் நலனுக்காக வாழ்ந்து காட்டியவர். வீடு முதல் சமூகம் வரை நபிகள் நாயகம் அவர்கள் ‘நம்பிக்கையாளர், உண்மையாளர்’ என்று போற்றப்பட்டவர்.
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஓர் அழகிய முன்மாதிரியை நாம் அனைவரும் நன்றாக புரிந்து செயல்படும்போது அமைதி, மகிழ்ச்சி என்ற புதிய உலகம் நாம் காணுவோம்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. இல்லற வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை, சமூக வாழ்க்கை முதல் பொருளாதாரம், அரசியல், ஆன்மிகம் என எல்லா துறைகளிலும் வாழ்ந்து, வழிகாட்டி, பாதுகாக்கப்பட்ட ஓர் உயரிய வாழ்க்கை. இத்தகைய சிறப்பு மிக்க மனிதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்ந்து இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவோம், ஆமின்.
நசீர் அதாவுல்லாஹ், சென்னை.

மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு 100 கிலோ சாதத்தால் அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உயிர்களை இயக்கும் சக்தி படைத்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம். அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தவிர மற்ற சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆனால், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிக்கு ஐப்பசி மாதத்தில் வரும் அஸ்வினி நட்சத்திர பிரகாரப்படி நேற்று மாலை அன்ன அலங்காரம் நடைபெற்றது. அதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்த பின்னர் தாயுமானவர் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் 100 கிலோ அரிசி கொண்டு அன்னம் தயார் செய்யப்பட்டு சுவாமியின் திருமேனி மீது படும்படி செய்து, சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாலை 4.45 மணிக்குமேல் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 6.55 மணிவரை பக்தர்கள் தாயுமானவர் சுவாமியை அன்ன அலங்காரத்துடன் தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவு 7 மணிக்கு மேல் தாயுமான சுவாமியின் திருமேனி மீது இருந்த அன்னத்தை ஒரு கூடையில் எடுத்தனர். இரவு 8 மணிக்கு மேல் அந்த அன்னத்தை சிந்தாமணி பகுதியில், காவிரி ஆற்றில் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. மேலும் தாயுமானவர் சுவாமிக்கு அன்ன அலங்காரம் செய்தது போக மீதம் இருந்த அன்னத்தை தயிர்சாதமாக தயார் செய்யப்பட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்...அஷ்டமச் சனி யாருடைய தொழிலை பாதிக்கும்
உலக அளவில் பன்னாட்டு வணிகத்தில் அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிக சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள்.
ஒரு மனிதனுடைய வாழ்வாதாரமே அவர்களுடைய தொழில்தான். சிலர் எந்த தொழில் செய்தாலும் பன் மடங்காக பெருகி கொண்டே இருக்கும். பரம்பரை பரம்பரையாக தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருப்பார்கள்.
உலக நடப்பிற்கு ஏற்ப புதிய தொழில்களாக உருவாக்கி கொண்டே இருப்பார்கள். இவர்கள் தொழிலை கண்டு பிடித்தார்களா? அல்லது தொழில் இவர்களை கண்டு பிடித்ததா? என்று வியக்கும் அளவிற்கு தொழில் துறையில் வெற்றி வாகை சூடுவார்கள்.
உத்தியோகமாக இருந்தால் அரசு அல்லது தனியார் துறை எந்த வேலையாக இருந்தாலும் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் ரிட்டயர்மென்ட் வரை ஒரே வேலையில் இருந்து பெரும் பாராட்டு, புகழ் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் ஏழரை சனி, அஷ்டமச் சனியே வராதோ? என்று எண்ணும் அளவிற்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும்.
சிலருக்கு தொழிலில் திடீர் ஏற்ற, இறக்கம், தடை, தாமதம், பண விரயம், பண இழப்பு, தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள். உலக அளவில் பன்னாட்டு வணிகத்தில் அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிக சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.
வெகு சிலருக்கு தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தொழிலாளிகள் வேலைக்கு செல்லாமல் முதலீட்டாளர்கள் மேல் வழக்கு தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு தொழில் முடக்கமும் தொழிலாளிகளுக்கு வேலை இழப்பு வழக்கும் மிகுதியாகுகிறது.
3 சுற்று அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார்? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனிவராக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.
அப்படி என்றால் அஷ்டமச் சனி யாருடைய தொழிலை பாதிக்கும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
ஜனன கால ஜாதகத்தில் லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரன், சனிக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும், தசா புக்தி சாதகமாக அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. மேலே கூறிய அமைப்புகள் இருந்தும் ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும்.
அஷ்டமச் சனியால் தொழில் பாதிப்பு இருப்பவர்கள் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் இயன்ற தொண்டும் உதவியும் செய்துவர தொழிலில், உத்தியோக உயர்வு உண்டாகும்.

மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.
இதையும் படிக்கலாம்...ஐப்பசி மாத பூஜை நிறைவு: சபரிமலை கோவிலில் நடை அடைப்பு
2021-ம் ஆண்டு நடப்பு மண்டல சீசனை முன்னிட்டு சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் நேற்று வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. கேரளாவில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நேற்று இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
சித்திரை திருநாள் மகாராஜா பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 3-ந் தேதி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
அதன்பின்பு, மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 16-ந் தேதி முதல் மண்டல பூஜை, வழிபாடுகள் தொடங்கும். டிசம்பர் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை மீண்டும் டிசம்பர் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 31-ந் தேதி முதல் மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு சிறப்பு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். அன்று காலை பந்தளம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.

எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
இறைவனே தேடி வந்து குடியிருக்கும் கிராமம்தான் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி என்ற சிறிய கிராமம். இக்கோவில் சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில், கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது. சிவகாசியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரமாகும்.
பெயர்க்காரணம்
150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப்பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள்பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி எனஅழைக்கப்படுகிறது. துலுக்கன்குறிச்சி கிராமத்தில் வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம்.
இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு வனமூர்த்திலிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்துவிட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்திருந்தார். அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் செய்வதற்கு பணம் வாங்குவதில்லை. தர்ம சிந்தனையுடன் வைத்தியத்தின் மூலம் நோய் நீக்கியதால் மக்கள் பக்தியை கண்டு சித்தர் என்று போற்றினார்கள்.
வேலாயுதம் வழக்கம்போல் ஒருநாள் அதிகாலை எழுந்து வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்துவிட்டு முருகனை தரிசனம் செய்ய செல்லும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடக்க முடியாமல் போனது. அதனால் முருகனை தரிசிக்க முடியாமல் தன் இல்லம் வந்து விட்டார். அன்று முழுவதும் வேதனையுடன் இருந்தார்.
இரவு முருகனின் திருநாமத்தை சொல்லியவாறு கண் அயர்ந்த போது கந்தன் கனவில் வந்து வேலாயுதா என்னை காண எங்கும் செல்ல வேண்டாம். நானே உன்னை தேடி வந்து விட்டேன். நீ ஆசையாக பராமரித்து வரும் வாழைத்தோட்டத்தில் ஒரே ஒரு குலை தள்ளிய வாழை மரத்தில் மட்டும் தான் இருப்பதாக சொல்லி மறைந்தார். மறுநாள் காலை வேளையிலும் குளித்து விட்டு தன்னுடைய தோட்டத்தை நோக்கி ஓடிச் சென்றார் மெய் மறந்து செய்வதறியாது திகைத்து நின்றார். காரணம் கனவில் முருகன் கூறிய படி குலையுடன் வாழை மரம் இருந்து அதிசயம் கண்டு மனமுருகி வேண்டி நின்றார். இச்செய்தி பரவியதால் வாழைமரத்தை பக்தர்கள் வழிபட்டனர்.
ஒருமுறை செவல்பட்டி ஜமீன் அரண்மனையில் பிரதான கணக்கு பிள்ளையின் ஒரே மகனுக்கு திருமண விழாவுக்காக அந்த வாழை மரத்தை வெட்டி சென்றனர். ஆனால் வேலாயுதம் வாழைமரத்தை வெட்ட அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் மணமகன் தானே நேரில் சென்று வாழை மரத்தை வெட்டிக் கொண்டு வருவதாக கூறி தோட்டத்துக்கு சென்றார். அவரிடமும் வேலாயுதம் தான் வாழைமரம் தரமுடியாது என்று உறுதியாக கூறினார். ஆனால் வேலாயுதம் சொல்வதைக் கேட்காமல் தன் கையில் இருந்த அரிவாளால் மரத்தை ஓங்கி வெட்டினான்.
அடுத்த கணம் வெட்டிய வாழையிலிருந்து ரத்தம் வெளியேறி நாகமாக மாறி மணமகனின் காலை தீண்டியது. சிறிது நேரத்தில் மணமகன் இறந்துவிட்டான். கணக்குப்பிள்ளை அழுது புரண்டார். தன் மகனை காப்பாற்றுமாறு வேலாயுதம் காலில் விழுந்து கெஞ்சினார். என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று முருகனிடம் கேளுங்கள் என கூறினார். நீங்கள் நினைத்தால் காப்பற்றலாம் என வேண்டினார்கள். வேலாயுதம் தன் கையிலிருந்த பிரம்பால் இறந்த மணமகன் மீது முருகா.. முருகா... முருகா.. என 3 முறை திருநாமத்தை கூறிவிட்டார். உடனே ஒரு அதிசயம் நடந்தது,
இறந்த மணமகன் உயிர் பெற்றான். இதை கண்ட ஜமீன்தார் இந்த இடத்தில் வாழைமர பாலசுப்ரமணியனுக்கு ஒரு கட்டிடம் அமைத்து கொடுத்தார். அதன்படி கோவில் அமைக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேலாயுதம் ஆசி வழங்கினார். அருள்வாக்கு கூறி அனைவருக்கும் நன்மைகள் செய்து வந்தார். இவரது காலத்திற்கு பின்பு அவருடைய மகன் தேரியப்பர் கோவில் திருப்பணியை செய்து வந்தார். ஒருமுறை ஏற்பட்ட திடீர் புயல் மழை நாள் வெள்ளத்தால் கோவில் இடிந்து போனது. இடிந்துபோன கோவிலை புதுப்பிக்கும் வண்ணம் சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டது.
தேரியப்பர் வாரிசுதாரர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகம் தோறும் பால்குடம் எடுத்து வழிபட்டு வருகின்றனர். வாயு மூளையில் உற்சவர் சிலை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் புன்னகை தவழும் முகத்துடன் நின்ற நிலையில் இடது கையை தொடையில் வைத்தபடி வலது கையில் அபய முத்திரை பின்னர் வாழைமரம் இருக்குமாறு அற்புத வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனை துன்பங்கள் நம் மனதில் இருந்தாலும் வாழைமர பாலசுப்ரமணியனை பார்த்த மாத்திரத்திலேயே நொடிப்பொழுதில் காணாமல் போகும் படி வசீகரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

இது திருமண தோஷம், புத்திர தோஷம் நோய்களை தீர்க்கும் நிவர்த்தி தலமாக அமைந்துள்ளது. திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் நோய்நொடி என்று பெருவாழ்வு வாழவும் சகல சவுபாக்கியம் உடன் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ்ந்த ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம் வந்து வணங்கி வளமோடு வாழ்க என வாழ்த்துவோம்.
மருத மரம் நிறைந்த பகுதி என்பதால் இந்த மலை ‘மருதமலை’ எனப்படுகிறது. இங்கு அருள்பாலிப்பதால் முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு.
முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் உண்டு என்பது நமக்குத் தெரியும். மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அவரது 7-ம் படைவீடாக போற்றப்படுகிறது. இங்கு விநாயகரும், முருகப்பெருமானும் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்கள். இந்த ஆலயம் பற்றி இங்கே பார்ப்போம்..
* கோவையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மருதமலை முருகப்பெருமான் திருக்கோவில்.
* இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்த ஆலயம் இது. மலை மீதுள்ள முருகனை தரிசிக்க 837 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
* மருத மரம் நிறைந்த பகுதி என்பதால் இந்த மலை ‘மருதமலை’ எனப்படுகிறது. இங்கு அருள்பாலிப்பதால் முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு.
* சிவன்- அம்பாளுக்கு நடுவில் முருகன் இருப்பதை, ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு என்பார்கள். அந்த வகையில் முருகன் சன்னிதிக்கு வலதுபுறம் பட்டீஸ்வரர், இடதுபுறம் மரகதாம்பிகை சன்னிதிகள் உள்ளன.
* ஆலயத்தின் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி உள்ளது. இவர் சுயம்பு மூர்த்தியாவார், உடல் இல்லாமல் யானை தலையோடு மட்டுமே காட்சி தருகிறார். இவருக்கு அருகில் முழு உருவ விநாயகர் சிலையும் உள்ளது.
* மூலவரான முருகப்பெருமான், ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக்காப்பு என தினமும் மூன்றுவித அலங்காரத்தில் காட்சி தருவார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இந்த மூலவரை தண்டாயுதபாணியாக சுய உருவத்தில் தரிசிக்க முடியும்.
முருகப்பெருமானின் அருள்பெற்றவர், பாம்பாட்டி சித்தர். இவர் வடித்த சிலையே, தற்போது கோவில் மூலஸ்தானத்தில் உள்ளது.
`ஆதி முருகன்’ சன்னிதி தனியாக உள்ளது. இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவருடன் வள்ளி- தெய்வானையும் சுயம்புவாக உள்ளனர். இவருக்கு பூஜை செய்யப்பட்ட பிறகே, மூலவருக்கு பூஜை செய்யப்படும்.
அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கெரக்கட்டை ஆகிய ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்த மரத்தின் அடியில் ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ அருள்கிறார்.
பாம்பாட்டி சித்தருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இவருக்கு, முருகன் பாம்பு வடிவத்தில் காட்சி தந்தார். அதனால் இங்குள்ள நாகர் உருவத்தை, முருகப்பெருமானாகவே நினைத்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘மருது சுனை’ என்று பெயர். ஒரு மருத மரத்தின் அடியில் இந்த சுனை உற்பத்தியாகிறது. இந்த தீர்த்தம்தான், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
திருமண வரம், புத்திரப்பேறு வேண்டுபவர்கள், இங்குள்ள மரத்தில் மாங்கல்யக் கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.

காஞ்சியில் காட்சி தரும் காமாட்சி அம்மன், தனது இரண்டு கால்களை மடக்கி, பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் கரும்பு-வில், தாமரை, கிளி தாங்கி இருக்கிறாள்.
காஞ்சி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது காமாட்சி அம்மன்தான். ‘காமாட்சி’ என்ற சொல்லுக்கு ‘கருணையும், அன்பும் நிறைந்த கண்களை கொண்டவள்’ என்று பொருள். அன்னை பராசக்தி அருளாட்சி செய்யும் சிறப்புமிக்க தலங்களாக இருப்பவை, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி. கலைமகளான சரஸ்வதியையும், திருமகளான லட்சுமியையும் இரண்டு கண்களாகக் கொண்டு, லலிதா திரிபுரசுந்தரியின் பூரண சொரூபமாக இருப்பவள், காஞ்சி காமாட்சி அம்மன். காஞ்சியில் காட்சி தரும் காமாட்சி அம்மன், தனது இரண்டு கால்களை மடக்கி, பத்மாசன நிலையில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் கரும்பு-வில், தாமரை, கிளி தாங்கி இருக்கிறாள்.
பந்தகாசுரன் என்ற அசுரன், கடுமையான தவம் மேற்கொண்டான். அந்த தவத்தால், பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களைக் கொண்டு மூவுலகங்களையும் கைப்பற்றி, தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
அவரோ, ‘பந்தகாசுரனை அழிக்கும் சக்தி படைத்தவள், பராசக்தி மட்டுமே’ என்று கூறினார். இதனால் தேவர்கள், பார்வதியைத் தேடினர்.
அன்னையோ, காமகோட்டம் என்ற காஞ்சிபுரத்தில் ஒரு செண்பக மரத்தின் மீது கிளி உருவத்தில் அமர்ந்து ஈசனை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு வந்து அன்னையிடம் முறையிட்ட தேவர்களிடம், பந்தகாசுரனை அழிப்பதாக உறுதியளித்தாள். அதன்படி 18 கரங்கள் கொண்ட பைரவ ரூபிணியாக உருக்கொண்டு, பந்தகாசுரனை அழித்து, தலையை வெட்டி எடுத்து வந்தாள். அவளது உக்கிர வடிவத்தைப் பார்த்த அனைவரும் நடுங்கினர். இதனால் அழகிய பட்டாடை அணிந்த சிறுமியாக அன்னை மாறினாள். அன்னையின் உத்தரவுப்படி, பந்தகாசுரனின் தலையை ஓரிடத்தில் புதைத்து, அதனருகில் 24 தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்தனர். அதன் நடுவில் அழகிய பீடத்தில் அன்னையின் உருவத்தை வைத்து வழிபட்டனர்.
காஞ்சியில் அன்னை மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். மூல விக்கிரகமாக ஸ்தூல வடிவிலும், அஞ்சன காமாட்சியாக சூட்சும வடிவிலும், ஸ்ரீசக்கரம் என்ற காரண வடிவிலும் அன்னை இங்கு வீற்றிருக்கிறாள். காமாட்சியின் இடது பக்கத்தில் வடக்கு திசை நோக்கியவாறு, அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி, தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவம்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களுக்கும், காஞ்சி காமாட்சி அம்மனே மூல மூர்த்தம் ஆவாள். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களில் அம்பாளுக்கு சன்னிதிகள் இருக்காது. அங்கு அம்மனின் உற்சவ மூர்த்தி மட்டுமே இருக்கும். 8-ம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால், இங்கு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் நடைபெறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் சிறப்புக்குரியது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாத வசந்த உற்சவம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த மந்திரங்களுக்கு உண்டு.
பிறந்த ஜாதகத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலைப் போக்கும் சக்தி சிவ மந்திர ஜெபத்திற்கு உண்டு. சிவபெருமானுக்கு பல மந்திரங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாக்ஷர சிவந்திரம்:
ஓம் நமசிவாய
சிவபெருமானை போற்றிவதில் இந்த மந்திரம் அனைவராலும் அறியப்பட்டது. "நான் சிவபெருமை வழிபடுகிறேன்" என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
ருத்ர மந்திரம் :
ஓம் நமோ பகவதே ருத்ரே
இது ருத்ர மந்திரமாகும். இறைவன் சிவபெருமானின் ஆசிகளைப் பெற இந்த மத்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது ஒரு விருப்பத்தின் நிறைவேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சிவ காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்
இந்து மதத்தில், காயத்திரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். சிவகாயத்திரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மன அமைதிக்காகவும் இறைவன் அருளைப் பெறவும் தினமும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.
சிவா தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத்
க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.
மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய
அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருப்பதால் மனிதனின் இறப்பு குறித்த பயத்தைப் போக்கவும் அவரே உரியவர். ஆகவே மகா மிருத்யுஞ்சய் மந்திரம் இந்த பலனை நமக்கு அளிக்கும்.