என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள்.
பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வராஹியை வழிபடுங்கள்.
வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்தபைரவி வராஹி
ஸ்வ்ப்பணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
என்று சொல்லி வாருங்கள்.
மேலும்...
ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
என்று சொல்லி வழிபடுங்கள்.
அதேபோல்,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வராஹிமுகி ஹ்ரீம்
ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
என்று வராஹி தேவியை தினமும் காலையும் மாலையும் ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள்.
வராஹி காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்
என்று காயத்ரியைச் சொல்லி வராஹி தேவியை தினமும் 11முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வராஹி.

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.நேற்று மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அடுத்த ஆண்டு ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம் என தேவபிரசன்னத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3-வது நாளாக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. கேரளாவைச் சேர்ந்த வாசுதேவன் பட்டத்திரி தலைமையிலான ஜோதிடக்குழுவினர் தேவபிரசன்னம் நடத்தினர்.
3-வது நாளாக நடந்த தேவபிரசன்னத்தில் கூறியிருப்பதாவது:-
கோவிலுக்கு சொந்தமாக பசு வாங்க வேண்டும். வெளியில் இருந்து பால் பெற்று பகவானுக்கு அபிஷேகம் செய்வது ஏற்புடையது அல்ல. எனவே இங்கேயே பசுவை வளர்த்து அதை பராமரித்து, அதன் பாலை பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பால் பாயாசம் சிறப்பாக தயாரித்து சுவாமிக்கு நிவேத்யம் செய்ய வேண்டும்.
துளசி, அரளி, தாமரை ஆகிய மலர்கள் பயன்படுத்தலாம். செவ்வந்தி கூடாது. இங்கிருந்தே மலர்களை பறித்து அவற்றை கட்டி பகவானுக்கு சார்த்த வேண்டும். எனவே கோவிலில் தாராளமாக இடம் இருப்பதால் பூங்கா அமைக்க வேண்டும். பெண் தொடர்பான, நடக்கக் கூடாத சம்பவம் ஏதோ கோவில் வளாகத்தில் நடந்துள்ளதாக பிரசன்னத்தில் காணப்படுகிறது. இனி இதுபோல் நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்வது நல்லது.
இங்கு இசை கருவிகள் இசைக்கும் போது பகவான் முகம் திருப்புகிறார். எனவே நன்கு இசை தெரிந்த இசை கலைஞர்களை வைத்து பூஜை நேரங்களில் இசைக்கப்பட வேண்டும். மக்கள் கலந்து கொண்டு நாம ஜெபத்தில் ஈடுபட வேண்டும். மன்னர் காலத்தில் ஆடி மாதத்தில் கஞ்சியும், பலாக்காயும் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களும் சேர்த்து வழிபாடு செய்து அதை பக்தர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அவை எல்லா நோய்களுக்கும் அருமருந்தாக இருந்துள்ளது. அவை மீண்டும் வழங்க வேண்டும். மேலும் பாயாசம், அப்பம், வடை முதலானவை பகவானுக்கு படைக்க வேண்டும். வழக்கமாக ஆண்டுக்கு 2 முறை விழா நடத்துவது போல் இந்த ஆண்டு ஐப்பசி, பங்குனி மாத 10 நாள் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்தலாம்.
கடவுள் சன்னதியில் எல்லோரும் ஒற்றுமையுடன் நடந்து விழாக்களை நடத்த வேண்டும். எல்லா குறைகளும் அகலும் காலம் இது.
ராமாயண சத்சங்கம், நாம ஜெபம் உடனே தொடங்க வேண்டும். கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டும். மேலும் அனைத்து பரிகார பூஜைகளையும் கும்பாபிஷேகத்துக்கு முன்பு நடத்த வேண்டும். கோவில் பூஜைகள் 2 தந்திரிகளை வைத்து நடத்த வேண்டும்.
கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பு கோவிலோடு தொடர்புடைய வாழ்வச்சகோஷ்டம் மகிஷாசுர மர்த்தினி கோவிலுக்கு விளக்கு வாங்கிக் கொடுத்து தீபமேற்ற வேண்டும். அதுபோல் கோவிலைச் சுற்றி உள்ள ஜடாதீஷ்வர, தளியன் சிவன் கோவில்களில் வழிபாடு நடத்த வேண்டும். வெங்கடாசலபதி சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். வேறு சிலைகள் எதுவும் கோவிலில் பிரதிஷ்டை செய்யக்கூடாது. பாலாலயத்தில் இருந்து உற்சவமூர்த்திகளை கருவறைக்கு மாற்றினாலும் அந்த இடத்தில் பூஜைகள் வைத்து நைவேத்யம் நடத்த வேண்டும்.
தேவபிரசன்னம் தொடங்கிய நாளில் கன்னிராசியில் தங்கம் வைக்கப்பட்டது. தற்போது இறுதி நாளில் சோழி உருட்டியபோது கன்னிராசியில் தங்கம் மலர்ந்ததால் எல்லாமே இனி நன்றாகவே நடக்கும். அஷ்டமத்தில் சந்திரன் ஒன்பதில் சென்றதால் எல்லா தோஷங்களும் அகன்று விட்டது. இனி எல்லாமே நன்மையே. எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும்” என்றனர்.
அப்போது கோவில் பக்தர்கள் சிலர் ”கும்பாபிஷேகத்துக்கு முன்னர் கோவிலில் சாமிக்கு நகைகள் அனைத்தும் அணிவிக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினர். அப்போது பிரசன்னம் பார்த்தவர் ”அது கோவில் நிர்வாகம் தொடர்புடைய விஷயம்” என்றார். உடனே அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார், ”தற்போது கருவூலத்தில் இருக்கும் நகைகள் அணிவிக்கப்படும்” என்றார்.
பின்னர் கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்டது. ஜோதிடர்கள் சோழி உருட்டியும், பஞ்சாங்கம் வைத்தும் இறுதியாக அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி உத்திரம் நட்சத்திரத்தில் காலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தலாம் என கூறினர். இந்த நாள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்ற பின்னர் கும்பாபிஷேக நாளாக அறிவிக்கப்படும்” என கோவில் மேலாளர் மோகன் குமார் தெரிவித்தார்.
பின்னர் திருவிதாங்கூர் தம்புராட்டி லெட்சுமி பாய் பேசுகையில்," நாங்க திருவிதாங்கூர் வம்சத்தவர்களாக இருந்தாலும் பத்மனாபபுரம் கொட்டாரத்தில் எங்கள் முன்னோர் ஆண்ட போது வணங்கிய ஆதிகேசவப்பெருமாளை எப்போதுமே வணங்கி வந்துள்ளோம். இடையே கோவில் பராமரிப்பின்றி இருந்தது. இப்போது கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்தருகிறது "என்றார். பின்னர் வாசுதேவன் பட்டத்திரியிடம் இருந்து கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்ட ஏட்டை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரும், பக்தர்களும் கோவிலை வலம் வந்தனர்.
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கொடிமரம் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இப்போது அதே நாள் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேங்காய், பழம் மற்றும் பூமாலை கொண்டு சென்று அர்ச்சனை செய்வதற்கும், அபிஷேகம் நடக்கும் போது பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனைத்து நாட்களும் திறக்கப்பட்ட நிலையில் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், பழம் மற்றும் பூமாலை கொண்டு செல்ல அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டது.மேலும் பக்தர்கள் கொண்டு சென்ற தேங்காய் பழத்தட்டை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்தனர். இதனால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய பக்தர்களை மட்டுமே நம்பி கோவில் வாசலில் தேங்காய், பழம் மற்றும் பூமாலை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்த 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக கேள்விக்குறியானது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் படத்துடன் தினத்தந்தி நாளிதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக கோவில் ஊழியர்கள் கடை, கடையாக சென்று தேங்காய், பழம் மற்றும் பூக்கள், மாலைகள் தாராளமாக விற்பனை செய்யலாம். கோவிலுக்குள் பக்தர்களுக்கு அர்ச்சனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறினர். இதனையடுத்து வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தினத்தந்தி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் கோவிலுக்குள் பத்தர்கள் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு கோவிலுக்கு அர்ச்சனை மூலம் வருமானம் வரத்தொடங்கியது. அபிஷேகத்தின் போதும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஐப்பசி கார்த்திகையையொட்டி சுப்பிரமணியசாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று முதல் வழக்கமாக காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.இத்தகைய நடைமுறை கடந்த 8 மாதத்திற்கு பிறகு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. முன்பு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இப்போது பழைய முறைப்படி இரவு 9 மணி வரை நடை திறந்து இருக்கும். திருவிழாக்களின் போது சாமி புறப்பாடுகள் கோவிலுக்குள்ளேயே நடத்தப்படுகின்றன.

16 ஆண்டுகளுக்கு பிறகு திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் சமேதராக நாகநாதசாமி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான ராகுபகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ராகு பகவானுக்குரிய பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.
நவக்கிரகங்களில் வலிமையானவராக கருதப்படும் ராகு பகவான் நாகவல்லி, நாக கன்னி என தனது இரு மனைவிகளுடன் இங்கு மங்கள ராகுவாக அருள்பாலித்து வருவது சிறப்பம்சமாகும். ராகு கால பூஜையின் போது இக்கோவிலில் ரகுபகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். அப்போது பால் நீலநிறமாக மாறும் அதிசயம் இன்றளவும் நடக்கிறது.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு ரூ.5 கோடி செலவில், 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்களில் திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகளை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில், ராகு தலம் அர்ச்சகர்கள் உமாபதி, சரவணன், சங்கர், செல்லப்பா, ஸ்ரீதரன், ராஜேஷ்குருக்கள் உள்பட 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதுவார்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினர்.
6 கால யாக சாலை பூஜைகளும் முடிவடைந்த பின்னர் நேற்று காலை 7 மணி அளவில் 13 பரிவார தெய்வ விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு அனைத்து விமானம் மற்றும் ராஜ கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு நேற்று தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் தங்கத்தேர் ஓடாமல் இருந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், 6 மாதத்திற்கு பிறகு நேற்று மாலையில் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, தனது மகள் குறிஞ்சிமலர் பெயரில் தங்கத்தேர் இழுப்பதற்கு பணம் கட்டியிருந்தார். இதையடுத்து இணை ஆணையர் தனது மகளுடன் தங்கத்தேர் இழுத்தார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தங்கத்தேர் கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பஞ்சமி திதி நாளில், வராஹிதேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள்.
சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த ஏழுதேவியரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹிதேவி. பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை விரதம் இருந்து வணங்குவதற்கு உரிய அற்புத நாள். பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். நம்முடைய அனைத்துச் செயல்களிலும் துணையிருந்து நம்மைக் காத்தருள்வாள்.
வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி! அப்போதும் நாம் வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தந்திடுவாள்.
பஞ்சமி திதியில் வாராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள்.
வாராஹிகாயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

என்று காயத்ரியைச் சொல்லி வாராஹி தேவியை 11 முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.
இதையும் படிக்கலாம்... விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா இன்று நடக்கிறது
விசாலாட்சி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகரை வழிபட்டால் கடன்தொல்லை, முன்னோர் சாபங்கள் நீங்கி திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.
விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்திவிழா இந்த கோவிலில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து கலந்துகொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சியளிப்பார். ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்கு முகமாக விநாயகர் காட்சியளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன்தொல்லை, முன்னோர் சாபங்கள் நீங்கி திருமணதடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கே முக்கியத்துவம் என்பதால், மூலஸ்தானத்திற்கு எதிரே சிம்மம் உள்ளது.
பொதுவாக ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் ஆன்மிகத்தை மட்டுமே முன்னிறுத்தியதாக இருக்கும். ஆனால் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் ஆலயத்தில் நடைபெறும் ‘தசரா திருவிழா’, கிராமிய கலைவிழா போன்று நடைபெறும்.
குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.
சிவபெருமானுடன் சேர்ந்து அமர்ந்த கோலத்தில் அம்மன் இருக்கும் அரிய காட்சியை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இறைவன்- ஞானமூர்த்தீஸ்வரர். அம்பாள்- முத்தாரம்மன்.
குலசேகரன்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.
பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கே முக்கியத்துவம் என்பதால், மூலஸ்தானத்திற்கு எதிரே சிம்மம் உள்ளது.
இங்கு நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பல்வேறு வேடங்களை போட்டுக் கொண்டு ஆலயத்திற்கு வருவார்கள்.
தசராத் திருவிழாவின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான இசைக் கருவிகளையும் பார்க்க முடியும்.
விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம், முத்தாரம்மன் ஆலயத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில் நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது இந்த நிகழ்வு, ஆலயத்தின் முன்பாகவே நடத்தப்படுகிறது.
இங்குள்ள முத்தாரம்மன் சிலை, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள சிற்பியின் கனவில், அம்பாளே சென்று செய்யச் சொன்னதாக தல வரலாறு சொல்கிறது.

அம்மை நோயை தீர்க்கும் ஆற்றல் கொண்ட தெய்வம் என்பதால், இந்த அன்னைக்கு ‘முத்தாரம்மன்’ என்ற பெயர் வந்தது.
இதையும் படிக்கலாம்... ஸ்ரீ வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி ஆலயம்- விருதுநகர்
ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை உடனாய மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும்.
மயிலாடுதுறை மயூரநாதா் திருக்கோவில் முன்பு உள்ள, காவிரி தீர்த்தத்தில் ஐப்பசி மாதத்தில் நீராடுவது சிறப்புக்குரியது. ஐப்பசி மாதத்தில் இந்த நதியில், அனைத்து புண்ணிய நதிகளும் வாசம் செய்வதாக ஐதீகம். இந்த மாதத்தில் இங்கு நீராடுவதை `துலா ஸ்நானம்' என்கிறார்கள்.
கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடு பவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். அதற்காகவே அனைத்துப் புண்ணிய நதிகளும், காவிரியில் வந்து உறைகின்றன.
ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே, ‘துலா ஸ்நானம்’ வழிபாடாகும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் காவிரியில் நீராடுவதாக ‘துலாக் காவிரி புராணம்’ கூறுகிறது. முடவன் முழுக்கு எனப்படும் கார்த்திகை மாத முதல் தேதியில், மயூர நாதர் ஆலயத்தில் இருந்து அம்மையப்பனும் அலங்கார ரதத்தில் துலாக்கட்டத்தில் எழுந்தருள்வார். அப்போது காவிரியில் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி நடைபெறும். அந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதனால் நம்முடைய தலைமுறை பாவங்களும், கர்ம வினைகளும், வம்ச சாபம், பெண் சாபம் யாவும் அகலும் என்கிறார்கள்.
புண்ணிய நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப் படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும், ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை உடனாய மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். அதோடு இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி உடனாய சக்தி புரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தால் சிறப்பான பலனைப் பெறலாம்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால் ‘மயிலாடுதுறை’ என்ற பெயர் உண்டானது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்-பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூரத் தாண்டவ திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது.
கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்து வேறுபாடு நீங்கி தம்பதியரிடையே ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இத்தல அம்மனின் திருநாமம் ‘அபயாம்பிகை’ என்பதாகும்.
அமைவிடம்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

சமயக்குரவர்கள் எனப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரும், பல பாடல்களின் வாயிலாக ஈசனைத் தொழுதனா்.
சிவபெருமானின் மீது ஒவ்வொரு வழியில் பக்தியைச் செலுத்தியவர்களாகவும், சைவ நெறியை உலகம் அறியச் செய்தவர்களாகவும் இருப்பவர்கள், சமயக்குரவர்கள் எனப்படும் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இவர்கள் நால்வரும், பல பாடல்களின் வாயிலாக ஈசனைத் தொழுதனா்.
சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களையும் செய்தனர். சைவ நெறியைப் போற்றும் திருப்பாடல்கள் அனைத்தும், பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டபோது, இந்த நால்வரின் தேவார, திருவாசகப் பாடல்களும் முறையாக தொகுக்கப்பட்டன. இவர்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
திருஞானசம்பந்தர்
சமயக்குரவா்கள் நால்வரில் முதன்மையானவராகப் போற்றப் படுபவா், திருஞானசம்பந்தா். இவா் பிறந்த ஊர், சீர்காழி. 3-வது வயதிலேயே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அம்பிகையிடம் இருந்து சிவஞான பால் அருந்தியவா். இவர் வாழ்ந்த காலம் 7-ம் நூற்றாண்டு.
இவா் பாடிய தேவாரப் பாடல்கள்தான், பன்னிரு திருமுறையின் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. ஆம்! முதல் மூன்று திருமுறைகளிலும், திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவா் சிவபெருமானையும், பார்வதியையும் தாய் தந்தையாக நினைத்து பக்தி செலுத்தியவா். 16 வயது வரை வாழ்ந்த இவா், ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர் பெருமணத்தில் உள்ள சிவலிங்கத்தில் தோன்றிய பேரொளி ஜோதியில் கலந்து முக்தியடைந்தார்.
திருநாவுக்கரசர்
சமயக்குரவா்கள் நால்வரில், இரண்டாவதாக வைத்து புகழப் படுபவா், திருநாவுக்கரசா். இவரது இயற் பெயா் ‘மருள் நீக்கியார்’ என்பதாகும். இவரை ‘அப்பா்’ என்றும் அழைப்பார்கள். இவா் வாழ்ந்ததும் 7-ம் நூற்றாண்டுதான். திருஞானசம்பந்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவா் இவா். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் தலத்தில் பிறந்தவா்.
இவரது நாவில் இருந்து பிறந்த இனிய பாடல்களைக் கேட்டு ரசித்ததன் காரணமாக, ‘திருநாவுக்கரசா்’ என்ற பெயரை, சிவபெருமானே சூட்டி அருளினார். பன்னிரு திருமுறைகளில் இவா் பாடிய பாடல்கள் 4, 5, 6 ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவா் ஈசனைத் தலைவனாகவும், தன்னைத் தொண்டனாகவும் கருதி பக்தி செலுத்தியவா். 81 ஆண்டுகள் வாழ்ந்த இவா், திருப்புகலூர் என்ற தலத்தில் முக்தி அடைந்தார்.
சுந்தரர்
சமயக்குரவா்களில் மூன்றாவதாக வைத்து வணங்கப்படுபவா், சுந்தரமூர்த்தி. இவா் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் என்ற திருத்தலத்தில் பிறந்தார். இவரது காலம் 7-ம் நூற்றாண்டின் இறுதியும், 8-ம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிறு பருவத்திலேயே இல்லற வாழ்க்கைக்குள் நுழைய இருந்த சுந்தரரை, முதியவா் வேடத்தில் வந்த சிவபெருமான் தடுத்தாட்கொண்டு, அவரை பக்தி மார்க்கத்தின் வழியில் செல்ல வைத்த திருத்தலமாக திருவெண்ணெய்நல்லூர் இருக்கிறது.
இது திருநாவலூரில் இருந்து 18 கிலோமீட்டா் தூரத்தில் உள்ளது. 18 ஆண்டுகள் வாழ்ந்து, சைவத்திற்கு தொண்டாற்றிய இவா் பாடிய தேவாரப் பாடல்கள், பன்னிரு திரு முறையில் 7-வது திருமுறையாக இடம்பிடித்துள்ளன. இவா் சிவபெருமானைத் தன்னுடைய தோழனாக நினைத்து பக்தி செலுத்தியவா். இவா் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ‘திருஅஞ்சைக்களம்’ என்ற இடத்தில் முக்தி அடைந்தார். இந்த திருத்தலம் தற்போது ‘திருவஞ்சிக்குளம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
மாணிக்கவாசகர்
சமயக்குரவா்களில் நான்காவதாக வைத்து புகழப்படுபவா், மாணிக்கவாசகா். இவா் பிறந்த ஊர், திருவாதவூர். இதனால் இவரை ‘திருவாதவூரார்’ என்று அழைப்பார்கள். இவர் ஆரம்ப காலத்தில் அரிமா்த்தன பாண்டியனின் அரசவையில் முதன்மை அமைச்சராக பணியாற்றியவா். திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவில் தலத்தில் ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, சைவப் திருப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
இவா் வாழ்ந்த காலம் பற்றிய குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலானவா்கள் இவா் வாழ்ந்தது, கி.பி. 9-ம் நூற்றாண்டு என்கிறார்கள். சிலரோ, சமயக்குரவர்கள் நால்வரில் முதன்மையானவா், கி.பி. 3-ம் நூற்றாண்டு இவருடையது என்கிறார்கள். 32 ஆண்டு காலம் வாழ்ந்த இவா் பாடிய பாடல்கள் ‘திருவாசகம்’, ‘திருக்கோவையார்’ என்ற நூல்களாக உள்ளன. இந்நூல்கள், சிவபெருமானே தம் கையால் எழுதும் பேறு பெற்றவையாக திகழ்கின்றன. இவை இரண்டும், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள், படிப்பவா்களின் மனதை கரையச் செய்யும் வகையிலானவை.
இதனால்தான் ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்ற வாக்கியம் உருவானது. மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நிகழ்த்திய சில அற்புதங்கள், ‘திருவிளையாடல் புராணம்’ என்ற சிவபெருமானின் அற்புதங்களில் இடம்பிடித்துள்ளன. இவா் சிதம்பரத்தில், பலா் பார்க்கும் தருணத்தில், சிவலிங்க திருமேனி மீது கலந்து முக்தி அடைந்தார்.

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.
ஓம் ஹ்ரீம் தும் துர்கே துர்கே
ரட்சிணி ஸ்வாஹ;
என்கிற ஸ்லோகத்தை தினமும் சொல்லி வருவோம். காலையும் மாலையும் சொல்லிவருவோம். காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி துர்கையின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி தொடர்ந்து வழிபட்டு வந்தால், நம் கடன் முதலான பிரச்சினையில் இருந்தும் சிக்கல்களில் இருந்தும் நமக்கு நிவர்த்தியைத் தந்திடுவாள் தேவி. கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாள். தாலியை நிலைக்கச் செய்வாள். குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் மேலோங்கச் செய்வாள் துர்காதேவி.