என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசா புத்தியையையும் வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் எப்படி நடைபெறும் என்பதை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கிறது.
முதலாவதாக யாருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. தேவையில்லாத அநாவசியப் பேச்சை குறைக்க வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொதுவாக அஷ்டமத்து சனியில் கடன், நோய் அல்லது எதிரிகளைத் தான் சனிபகவான் கொடுப்பார். கடனையும் எதிரிகளையும் ஓரளவு சமாளிக்க முடியும். ஆனால் நோய் வந்தால் சமாளிக்கவே முடியாது என்பதால் துரித உணவுகள், மது, புகை இந்த மாதிரி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மார்க்கெட் நல்லா இருக்கு, பார்ட்னர்ஸ் பார்த்துக்கு வாங்க நமக்கு எல்லாமே தெரியும் என்று நம்பி புதிய, பெரிய தொழில் முதலீடுகள், ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்தது வேலையில் இருப்பவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு இந்த மாதிரி காரணங்களுக்காக இருக்கும் வேலையை உதறிவிட்டு புதிய வேலைக்கு முயற்சிக்க கூடாது. இந்த நேரம் இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
அஷ்டமச் சனியும் ஆயுளும்
அஷ்டமச் சனியால் ஆயுள் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. உண்மையில் இழுத்துக்கோ பரிச்சுக்கோ என மரணப்படுக்கையில் இருப்பவர்கள் நன்கு தேறி அமர்வார்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டு விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம்.

வருகிற கார்த்திகை மாத சீசனில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதற்கான கூடுதல் வசதிகளை செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்கனவே உள்ள வசதிகள் மற்றும் இன்னும் எதிர்பார்க்கப்படும் வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன்-குருவாயூரப்பன் கோவிலில் உள்ள சன்னிதானம் அரங்கில் நேற்று நடந்தது.
திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு மற்றும் உறுப்பினர்கள் கே.எஸ்.ரவி, பி.எம்.தங்கப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் சென்னையில் உள்ள பல்வேறு ஐயப்பன் கோவில்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், குருசாமிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஐயப்பா பக்த சபை செயலாளர் சசிகுமார், இணை செயலாளர் கே.பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பின்னர் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வரை 1 நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வருகிற கார்த்திகை மாத சீசனில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதற்கான கூடுதல் வசதிகளை செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.
சபரிமலைக்கு பக்தர்கள் தேங்காயில் அடைத்து கொண்டு வரும் நெய்யை அதற்கான கவுண்டரில் செலுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் சற்று மாற்றம் செய்து முன்பு இருந்தது போன்று பக்தர்கள் நேரடியாகவே சன்னிதானத்தில் அவர்கள் கொண்டு வரும் நெய்யை அபிஷேகத்துக்கு வழங்கும் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தங்குமிடம் வசதி, உணவு, போக்குவரத்தையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பம்பை ஆற்றில் குளிப்பது புனிதமாக கருதப்படுகிறது. போக்குவரத்து கடந்த 2 ஆண்டுகளாக பம்பை வரை அனுமதிக்கப்படவில்லை. வரவிருக்கும் சீசனில் பம்பை வரை போக்குவரத்தை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் சபரிமலைக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதிலும் மாற்றம் செய்யப்பட்டு 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அனைவரையும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தகவல் மையம் மீண்டும் முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்
ஐப்பசி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. ஐப்பசி மாதத்தில் (அக்டோபர் - நவம்பர்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஐப்பசி 10 (27.10.2021) புதன் சஷ்டி புனர்பூசம் சித்த காலை 9-10
ஐப்பசி 22 (8.11.2021) திங்கள் சதுர்த்தி மூலம் சித்த காலை 6-7
ஐப்பசி 24 (10.11.2021) புதன் சஷ்டி உத்திராடம் சித்த காலை 9-10.30
ஐப்பசி 29 (15.11.2021) திங்கள் ஏகாதசி உத்திரட்டாதி சித்த காலை 6-7

அக்டோபர் மாதம் 26-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
26-ம் தேதி செவ்வாய் கிழமை :
* தேய்பிறை பஞ்சமி
* சித்தயோகம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* திருநெல்வேலி காந்திமதியம்மன் பவனி
* சந்திராஷ்டமம் - கேட்டை
27-ம் தேதி புதன் கிழமை :
* சித்தயோகம்
* சுபமுகூர்த்தம்
* பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு
* திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
* பெரிய நகசு
* சந்திராஷ்டமம் - மூலம்
28-ம் தேதி வியாழக்கிழமை :
* வாஸ்துநாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை)
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம்- பூராடம்
29-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* தேய்பிறை அஷ்டமி
* திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு
* சந்திராஷ்டமம் - உத்திராடம்
30-ம் தேதி சனிக்கிழமை :
* தேய்பிறை நவமி
* அமிர்தயோகம்
* காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் இத்தலங்களில் திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம் - திருவோணம்
31-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* திருநெல்வேலி காந்திமதியம்மன் தீர்த்தம், இரவு தங்க சப்பரத்தில் தபசு காட்சி
* கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று
* சந்திராஷ்டமம் - அவிட்டம்
1-ம் தேதி திங்கள் கிழமை :
* சர்வ ஏகாதசி
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை
* ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் புறப்பாடு
* சிறிய நகசு
* சந்திராஷ்டமம் - சதயம்

அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.
சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது.
பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிச யத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள். அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.
குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்துவாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.
உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.
அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாதகமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.
அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.
அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும். பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.
எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.

அங்காரகனால் துவங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம். கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.
இதையும் படிக்கலாம்..தடைகள் தீர்க்கும் பஞ்சமி விரத வழிபாடு
இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், இஞ்சிமேடு கிராமத்தில், ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் தனி சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் தனி சன்னதிகள் உள்ளன. இதுபோல் 5 நிலை கொண்ட ராஜகோபுரம், சக்கரத்தாழ்வார் சன்னதி, அலமேலு மங்கை தாயார் சன்னதி, நாகதோஷம் நீங்கும் சன்னதி ஆகியவை கட்டும் கட்டிட திருப்பணிகள் நடந்து வருகிறது. ஸ்ரீ ரங்கசடகோப கட்டிட திருப்பணிகள் மற்றும் கொடி மரம் ஏற்பாடு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
பிரதி மாதம் சுவாதி நட்சத்திரம், மூல நட்சத்திரம் ஆகிய நட்சத்திர நாட்களில் 27 நட்சத்திர தோஷங்கள் நீங்குவதற்கு மகாயாகம் நடத்தப்படுகிறது. இதில் திருமணத்தடை, வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பல்வேறு நன்மைக்காகவும் யாகம் நடத்தப்படுகிறது.
பிரதிமாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் வியாபாரம், திருமணநாள், பிறந்த நாள், குழந்தை வரம், பெயர் சூட்டுதல், நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கும் முன்பதிவு செய்து கொண்டு கோ பூஜையில் கலந்து கொண்டு வழிபடலாம்.
இந்த கோவிலில் புத்தாண்டு திருவிழா, தைமாத திருவிழா, திருப்பாவாடை அன்னக்கூடை திருவிழா, பவுத்திர உற்சவம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, கருடசேவை, கிருஷ்ணஜெயந்தி ஆகியவை முக்கிய விழாக்களாக நடக்கின்றன. மேலும் இந்த கோவிலில் உள்ள ராமர், லட்சுமணர், சீதாதேவி சன்னதி பரத்வாஜ் முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம். ராமர், லட்சுமணர் வைத்திருக்கும் வில்லில் மேல்புறத்தில் நரசிம்மர் திருஉருவம் உள்ளதால், வணங்கி செல்லும் பக்தர்களுக்கு நன்மைகள் நடக்கிறது.
பல்வேறு கோரிக்கைகளை பெருந்தேவி தாயாரிடம் வைத்து மண் அகல்விளக்கில் தீபம்ஏற்றி 48 நாள் மஞ்சள் வைத்து வணங்கி வந்தால் நன்மைகள் நடக்கும்.
இஞ்சிமேட்டை சேர்ந்த ஸ்ரீ சடகோபராமாஜர் தேசிகன், ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர தேசிகன் அகோபலி மடத்தின் 34-வது பட்டம் மற்றும் 42-வது பட்டம் வகித்தார்கள். ஆன்மிக பணிகள் செய்தார்கள்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள சின்னகொழப்பலூரில் இறங்கி இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.
ஆரணி-வந்தவாசி சாலையில் உள்ள சட்டதாங்கல் கூட்ரோடு பெரணமல்லூர் வழியாக இஞ்சிமேட்டிற்கு செல்லலாம்.
சென்னையில் இருந்து 148, 208, 422, 341, 130, 247 காஞ்சீபுரத்திலிருந்து மேல்மலையனூர் செல்லும் வழி, வந்த வாசி-பெங்களூரு அரசு பஸ்சில் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லலாம்.

தமிழகத்திலேயே உயரமாக மேலூரில் 37 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் 37 அடி உயரத்தில் பிரமாண்டமான சஞ்ஜீவன ஆஞ்சநேயர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஆஞ்சநேயருக்கு சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அதைவிட தமிழகத்திலேயே உயரமாக மேலூரில் 37 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பிரமாண்ட சிலை ராட்சத கிரேன் உதவியுடன் பீடத்தில் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்கியது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற தை மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உளவியல் ரீதியாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணமான ஒரு ஆணுக்கு குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற கூடிய வாய்ப்பு குறையலாம்.
அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா? என்பது பலரது சந்தேகம். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்தவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு.
ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.
உளவியல் ரீதியாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணமான ஒரு ஆணுக்கு குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற கூடிய வாய்ப்பு குறையலாம். உழைத்தும் வருமானம் ஈட்ட முடியாமல் போகலாம்.
பெண்களுக்கு கணவர், புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகள் புரியாது. இது தம்பதிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும்.
எட்டாமிடம் என்பது ஆணுக்கு ஆயுள் ஸ்தானம் பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் கோட்சார சனியின் பயணப்பாதையில் ராகு, கேது, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நின்றால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு வாழ்க்கையை கேள்விக் குறியாக்கலாம். மேலும் இந்த காலத்தில் 6,8,12ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் தசா புத்தி நடந்தால் வம்பு, வழக்கு, விவாகரத்து வரைச் செல்லும். இதனால் இரண்டரை ஆண்டு காலம் திருமணத்தை ஒத்திப்போடுவது நல்லது.
இந்த காலகட்டத்தில் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் சனிதான். பலர் சந்தேக புத்தியால் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த கால கட்டத்தில் தான். சனி நேரடியாக சண்டையை உருவாக்காமல் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குவார்.

இது போன்ற பிரச்சினையைத் தவிர்க்க உப்பு இல்லாத உணவை சாப்பிடவும் அல்லது முந்தைய நாள் சமைத்த பழைய உணவை சூடாக்கி சாப்பிட வேண்டும். அத்துடன் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை, இரவு 8- மணி முதல் 9 மணி வரையான சனி ஓரையில் சுவையான உணவுகளை சமைப்பதையும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாம்.. அஷ்டமச் சனி யாருடைய தொழிலை பாதிக்கும்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. 1-ந்தேதி ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். அதேபோல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.
அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இதேபோல, 2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் மற்றும் 8-ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணிவரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளுகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
விழாவின் நிறைவு நாளான 9-ம் நாள் (1-ந் தேதி) நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சந்திர புஷ்கரணி வந்தடைகிறார். நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் ஊஞ்சல் உற்சவ விழா நிறைவடைகிறது.

ஒருவருக்கொருவர் எரிச்சல் மூட்டுதல், பொறாமை (கலா 5:26) போன்றவற்றை தவிர்த்து, தீய இதயத்தை கிழித்து தூயவர்களாக, நல்லவர்களாக, நேர்மையானவர்களாக வாழ உறுதியெடுப்போம்.
“உடைகளை அல்ல, இதயத்தை கிழித்துக் கொண்டு திரும்பி வாருங்கள்“ (யோவேல் 2:13)
உலகிலேயே மிகவும் நீளமான பயணம் என்பது மனிதன் தனக்குள் செல்கின்ற பயணமாகும். மனிதனின் சுய ஆய்வு பயணத்துக்கான காலமே, திருச்சபை வழங்கியுள்ள அருளின் காலமான இந்த தவக்காலம். கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின் பாடுகளை மையப்படுத்தி மனமாற்றத்துக்கான காலமாக இதை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் திருநீற்றுப்புதன் (சாம்பல் புதன்) அன்று தொடங்கி நாற்பது நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த காலம் நீண்ட நெடிய அர்த்தமுள்ள தயாரிப்பை, இறைவனை நோக்கிய பயணத்தை வலியுறுத்துகிறது.
திருவிவிலியத்தில் நோவா காலத்தில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் மழை பெய்தது. (தொ.நூ 7:4) பின் மக்களினம் உருவானது. இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாக பாலைவனத்தில் (இ.ச 8:2) கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர். மோசே சீனாய் மலையில் 40 நாட்கள் தங்கியிருந்து (வி.ப 24:18) திருச்சட்டம் பெற்றார். இயேசு அலகையால் சோதிக்கப்படும் முன் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் (மத் 4:2). தவக்காலத்தின் நாற்பது நாட்கள் என்பது மனம் வருந்தி மனமாற்றம் பெற்று இறைவனின் கொடைகளையும், வரங்களையும் பெறும் காலமாகும்.
கிறிஸ்தவர்கள் சாம்பல் திலகமிட்டு தவக்காலத்தை தொடங்குகின்றனர். சாம்பல் என்பது பாவத்துக்காக மனம் வருந்துவதையும், மனமாற்றத்தையும், நிலையாமையையும் நினைவூட்டுகிறது. தர்மம் செய்து பிறரன்பு செயலில் ஈடுபடுதல், வெளிவேடமற்ற இறை உறவுக்கு வழி வகுக்கும் செபம், பாவத்துக்காக மனம் வருந்தி மேற்கொள்ளும் நோன்பு ஆகியவை இக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்கு முறைகள் ஆகும்.
மனிதனின் நிலையாமை, துன்பங்கள், பாவங்கள், கடவுளன்பு, மன்னிப்பு, செபம், நோன்பு பற்றி சிந்தித்து மனம்மாறி பாவக்கறைகளான “ பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்“ (கலாத்தியர் 5:19-21) வீண் பெறுமை, ஒருவருக்கொருவர் எரிச்சல் மூட்டுதல், பொறாமை (கலா 5:26) போன்றவற்றை தவிர்த்து, தீய இதயத்தை கிழித்து தூயவர்களாக, நல்லவர்களாக, நேர்மையானவர்களாக வாழ உறுதியெடுப்போம். இயேசுவின் வழியில் சமூக அக்கறையோடு புதிய சமுதாயம் படைப்போம்.
கள்ளழகர் கோவிலில் 7 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடினார்கள். கிடாய் வெட்டி பொங்கல் வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 திவ்விய தலங்களில் ஒன்று. கொரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கை புனித தீர்த்தத்தில் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இதையொட்டி தீர்த்த தொட்டியில் பக்தர்கள் நீராடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நூபுர கங்கையில் பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு நேற்று முதல் நூபுர கங்கையில் பக்தர்கள் நீராட அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று கள்ளழகர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நூபுர கங்கையில் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை வழிபட்டனர்.
இது குறித்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த காலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை நிலவியது. தற்போது அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்து உள்ளது. கள்ளழகர் கோவிலில் உள்ள நூபுர கங்கை வற்றாத புனிதமான தீர்த்தமாகும். இங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களாக புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நூபுர கங்கையில் புனித நீராடுவது மன நிம்மதி அளிக்கிறது.நூபுர கங்கை அபூர்வ மூலிகை கலந்த தீர்த்தமாகும். சுபகாரியங்கள், கும்பாபிஷேகம், திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு, தென் மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து செல்வது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அழகர்கோவிலில், பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு நேர்த்தி கடனாக கிடாய் வெட்டி, பொங்கல் வைத்து சாமி கும்பிட அரசு அனுமதி வழங்கி இருப்பதை வரவேற்கிறோம். ராக்காயி அம்மன், சோலைமலை முருகன், கள்ளழகர், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில்களில் வழக்கம் போல் தேங்காய், பழம் வைத்து பூ மாலையுடன் அர்ச்சனை செய்து வழிபடலாம். அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கொரோனா தொற்று குறைந்ததால் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு, காலபூஜை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.
பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் கோவிலில் உள்ள தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு ஆகியவற்றில் கட்டணம் செலுத்தி கலந்து கொள்கின்றனர்.
இந்த தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம், பூஜை பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் தங்களது குழந்தைகள், நோய்நொடி இன்றி வாழ தங்க தொட்டிலில் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உள்ளது. இதற்கு ரூ.300 செலுத்த வேண்டும்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, பழனியில் தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு உள்ளிட்ட முறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா தொற்று குறைந்ததால் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தங்கரத புறப்பாடு, தங்க தொட்டில் வழிபாடு, காலபூஜை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. 6 மாதங்களுக்கு பிறகு மேற்கண்ட வழிபாட்டு முறைகள் தொடங்கப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் தங்கரத புறப்பாட்டில் கலந்துகொள்வதற்கான முன்பதிவும் தொடங்கியது. இதில் 31 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். நேற்று மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.