என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று முதல் கோவிலில் தைலகாப்பு உற்சவம் தொடங்குகிறது.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் மற்றும் தேவநாதசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேவநாதசுவாமி எழுந்தருளினார். பின்னர் சாமி உட்புறப்பாடு நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
விழாவில் இன்று(புதன்கிழமை) மூலவருக்கு ஆபரணத் தங்கம் அகற்றி, தைல காப்பு உற்சவம் நடைபெறும். முன்னதாக உற்சவர் தேவநாத சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதை தொடர்ந்து ராஜா அலங்காரம் கலைக்கப்பட்டு மூலவர் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வரைக்கும் சுவாமிக்கு தைல காப்பு சாற்றப்பட்டு வரும்.
அதன் பின்னர் தைலக்காப்பு எடுத்துவிட்டு மீண்டும் பெருமாளுக்கு ஆபரணத்தங்கம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பழனியில் நடைபெறும் தேரோட்டம் கருதப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக, பழனி முருகன் கோவில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா, பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து திண்டுக்கல், பொள்ளாச்சி, தாராபுரம் சாலைகள் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவிந்தனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பழனி தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இதேபோல் கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை கோவிலில் வழிபாட்டுக்கு தடை விதித்தும் அரசு உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, பழனியில் நடைபெறும் தேரோட்டம் கருதப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வர்.
கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு தேரோட்டத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் தைப்பூசத்தையொட்டி பழனியில் நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் உட்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது.
வழக்கமாக ஒவ்வொரு தைப்பூச திருவிழாவின்போதும் விநாயகர், சண்டிகேசுவரர் சிறிய தேரிலும், முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை ஆகியோர் பெரிய தேரிலும் வலம் வருவர்.
இந்த தேரோட்டமானது, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணதிர 4 ரதவீதிகளில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் முதன்முறையாக பக்தர்கள் இன்றி, கோவில் உட்பிரகாரத்தில் சிறிய தேரில் சுவாமி எழுந்தருளி வலம் வந்தார்.
முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4.40 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் 15 நிமிடத்தில் முடிவடைந்தது. மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்க கோவில் வாசல் பூட்டப்பட்டது.
கோவிலில் தரிசன தடை உத்தரவு ஒருபுறம் இருந்தாலும் தைப்பூச திருவிழாவில் பங்கேற்க நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்கு வந்தனர்.
மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் அவர்கள் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து பாதவிநாயகர் கோவில் முன்பு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதேபோல் அதிகாலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் சூரியனையும் வழிபட்டனர்.
தரிசன தடை நேற்றுடன் முடிவடைந்ததால், இன்று (புதன்கிழமை) சாமி தரிசனம் செய்வதற்காக பழனியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளனர். சில பக்தர்கள், சாலையோரம் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டனர்.

ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறிய முடியும்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவர் அறிந்தோ அரியாமலோ செய்யும் வினையின் எதிர்விளைவு தான் தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது.
கோபம்: கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை. பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக கூறினால் கோபம் என்பது ஏமாந்தவர் ஏமாற்றப்பட்டவர்கள் மீது வெளிப்படுத்தும் உணர்வு.
சாபம்: சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். சாபம் என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது தான் சாபம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
கடுமையான இந்த தோஷம் தலை முறை தலைமுறையாக தொடர்ந்து சந்ததியினரை பாதிக்கிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறிய முடியும்.
பெண்கள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் ஆதரவில்லாமல் வாழ்வது அல்லது மரணம் அடைவது, வீட்டிற்கு மருமகளாக வாழ வந்த பெண்ணை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவது, பிறந்த வீட்டிற்கு திருப்பி அனுப்புவது போன்றவை பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன.
பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது. அவள் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது. பெண்களை ஏமாற்றுவது. பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது. கட்டிய மனைவிக்கு துரோகம் இழைப்பது. காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றுவது. பெண்களிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றுவது. மனம் வருந்தும் படியான கடுஞ்சொற்களை பேசி கண்ணீர் விட்டு அழ வைப்பது. உழைக்காமல் பெண்ணின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு உடல் வளர்ப்பதும் காரணங்களாக உள்ளன.
பணத்திற்காக பெண்ணை கொலை செய்வது தாயை பராமரிக்காமல் விட்டு விடுவது. கருவில் உள்ள பெண் குழந்தையை கலைப்பது. நல்ல மாமியாரை பராமரிக்காமல் விடுவது போன்ற பல காரணங்களால் பெண் சாபம் ஏற்படுகிறது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406

தை மாதத்தையொட்டி மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி 2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடந்தது.
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். அருணாசலேஸ்வரருக்கு தை 5-ந் தேதி மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில் கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தினால் ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி 2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேேய நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மேளதாளங்கள் முழங்க 3-ம் பிரகாரத்தில் இருந்து 5-ம் பிரகாரத்திற்கு சாமி எழுந்தருளினார்.
தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அன்னதான கூடம் அருகில் வைத்து சாமியின் சூலரூபமான அஸ்திரதேவருக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது. தொடர்ந்து பால், மஞ்சள், சந்தனம் போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்களின்றி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாமி பிரகார உலா வந்தார்.
வழக்கமாக மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சி திருவண்ணாமலையில் பல்வேறு கிராமங்கள் வழியாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆனால் கொரோனா நடவடிக்கை காரணமாக தொடர்ந்து 2-ம் ஆண்டாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த ஆண்டாவது சாமியை காணலாம் என்று ஆர்வமாக இருந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கால உற்சவ விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி பல்லக்கில் ஏறி புஷ்கரிணியை அடைந்தார். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி முடிந்த பின் பிரணய கால உற்சவம் நடைபெறும். அதன்படி நடந்த விழாவில் உற்சவரான மலையப்பசுவாமி பல்லக்கில் ஏறி புஷ்கரிணியை அடைந்தார். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.
நிகழ்ச்சியில் பெத்தஜீயர் சுவாமிகள், சின்னஜியர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.
யோவான் 4 : 43 முதல் 54 வரை
அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.
கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்றார்.
அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.
இது ஒரு குணப்படுத்தும் புதுமை. அரச அலுவலர் ஒருவருடைய மகனுடைய நோயைக் குணப்படுத்துகிறார். தொலைவு இறைவனின் வல்லமையை எப்போதும் தடுப்பதில்லை, எந்த நோயும் இறைவனுக்கு எதிரே நிற்பதில்லை என்பதை இந்த புதுமை புலப்படுத்துகிறது.
அந்த அரச அலுவலர் ரோம அரசின் படைத் தலைவர்களில் ஒருவனாய் இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யூதர் அல்லாத, சமாரியர் அல்லாத பிற இன மனிதர் ஒருவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்து விண்ணப்பம் வைக்கும் நிகழ்வு இது. அந்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றுகிறார்.
இதன் மூலம் அந்த அரச அலுவலரின் குடும்பம் முழுவதுமே இறைவன் மேல் நம்பிக்கை வைக்கிறது. தனது மகன் உயிர்பிழைத்தான் என்பதை அறிந்ததும் அவன் நின்று விடவில்லை. தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் அவன் இறைவன் பால் திருப்புகிறார்.

தடையை மீறி ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் காண குவிந்தனர். ஆனால் ஜோதி தரிசனம் நடந்த சத்தியஞானசபைக்குள் நுழைய போலீசார் அனுதிக்கவில்லை.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி 151-ம் ஆண்டு தைப்பூச விழா சத்திய ஞான சபையில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதேபோல் காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணி என 6 காலங்களில் கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு ஆகிய 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால், பக்தர்கள் தரிசனத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. வடலூரில் தைப்பூச விழாவில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் தடையை மீறி ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் காண குவிந்தனர். ஆனால் ஜோதி தரிசனம் நடந்த சத்தியஞானசபைக்குள் நுழைய போலீசார் அனுதிக்கவில்லை.
இதனால் சத்தியஞான சபைக்கு எதிரே சற்று தொலைவில் நின்று தரிசனம் செய்தனர். அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட பலர் ஜோதியை தரிசனம் செய்தனர்.
விழாவில் நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற இடத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.

அரசின் உத்தரவு காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் வாசலிலேயே முருகனை வழிபட்டு சென்றனர். அதேவேளை மொட்டை அடித்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தி சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை அரசின் உத்தரவின்பேரில் கடந்த 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலான 5 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதேவேளை வழக்கமான பூஜைகள் அந்தந்த கோவில் வழக்கப்படி நடத்தப்பட்டன. பொதுமக்களும் கோவில்களின் வாசல்களிலேயே நின்று இறைவனை தரிசித்து சென்றனர். அதேபோல கிறிஸ்தவ தேவாலயங்களும், மசூதிகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில் இந்துக்களின் சிறப்புக்குரிய நிகழ்வான தைப்பூச திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தின்போது முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த நாளில் மக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அரசின் தடை உத்தரவு அமலில் இருந்தாலும் தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் நேற்று மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.
சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் மிகுதியாகவே இருந்தது. அரசின் தடை உத்தரவு காரணமாக கோவிலின் நுழைவுவாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ஆனாலும் பக்தர்கள் நுழைவுவாயில் முன்பே விளக்கேற்றி வழிபட்டனர். நுழைவுவாயிலின் முன்பாக உள்ள வேலில் பூக்களை வைத்தும் பூஜித்தனர். இதனால் கோவிலை சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
கோவில் சன்னதி வளாகத்தில் உள்ள குளக்கரை அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே மாவிளக்கு ஏந்தி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்றனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மஞ்சள் சேலை அணிந்தபடி பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். சிலர் வாகனங்களிலும் வந்தனர்.
கோவிலின் உள்ளே தான் மக்கள் செல்லமுடியவில்லையே தவிர கோவிலை சுற்றிலுமே பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. கோவில் கோபுரத்தை தரிசித்த பக்தர்கள், கோவிலை சுற்றியும் வலம் வந்து வேண்டி சென்றதை பார்க்க முடிந்தது. அதேவேளை பக்தர்கள் கூட்டத்தால் கோவில் வளாகத்தை சுற்றியிருந்த கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
தைப்பூசத்தையொட்டி பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சிலர் கற்கண்டு, மாவிளக்கு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் போன்றவற்றை பக்தர்களுக்கு அளித்தனர். கோவில் பிரசாதமே கிடைத்தது போல பக்தர்கள் அதை வாங்கி சாப்பிட்டதை பார்க்க முடிந்தது. பக்தர்கள் அனுமதி இல்லாவிட்டாலும் கோவிலில் வழக்கமான பூஜை நடந்தது. பூஜையின் போது அர்ச்சகர்கள் ஓதும் வேத மந்திரங்கள் ஒலித்ததை கேட்டதும், பக்தர்கள் வெளியே இருந்தே, ‘அரோகரா.... அரோகரா...’ என்று பக்தி முழக்கம் எழுப்பினர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கோவில் வளாகம் அருகே வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத்தும், அதேவேளை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறும் பெண் போலீசார் தீவிரமாக பணியாற்றினர்.
இதேபோல பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் போன்ற சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கோவில் வாசல்களிலேயே ‘அரோகரா...’ கோஷத்துடன் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “தைப்பூச நாளில் முருகனை வழிபட முடியவில்லை என்ற மனக்குறை இருந்தாலும், தெய்வம் குடியிருக்கும் கோவில் கோபுரத்தையாவது வணங்கிட மவந்தோம். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். அதற்கேற்றார்போல தைப்பூச நாளில் கோவில் கோபுரத்தை வழிபட்டு செல்கிறோம். சீக்கிரம் இந்த கொரோனா பேரிடர் ஓய்ந்து பழைய நிலைமை திரும்பவேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும் இருக்கிறது’’, என்றனர்.
அதேவேளை நகர் பகுதிகளில் உள்ள சிறிய முருகன் கோவில்களிலும் நேற்று தைப்பூசத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பலர் கோவில்களுக்கு பால்குடம் ஏந்தியும், காவடி ஏந்தியும், அலகு குத்தி செல்வதையும் பார்க்க முடிந்தது. ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொதுவாகவே தைப்பூச தினத்தன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கோவில்கள் நேற்று திறக்காத நிலையிலும் கோவில் வளாகங்கள் பக்தர்களால் நிறைந்திருந்ததை பார்க்க முடிந்தது.

சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு வாய்ந்த விரத வழிபாட்டு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
சூரியனின் தேர்ப் பாதை வட திசை நோக்கி திரும்பும் காலமே, ‘உத்திராயன புண்ணிய காலம்’ ஆகும். இது தை முதல் நாளில் தொடங்குகிறது. சிறப்பு மிக்க இந்த தை மாதத்தில் பல சிறப்பு தினங்கள் வருகின்றன. அவற்றை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தை கிருத்திகை
கார்த்திகை நட்சத்திரத்தை `கிருத்திகை’ என்றும் சொல்வார்கள். வருடத்திற்கு மூன்று கிருத்திகை நட்சத்திரங்கள் முக்கியத்துவம் பெறும். அது தை மாதத்தில் வரும் ‘தை கிருத்திகை’, கார்த்திகை மாதத்தில் வரும் ‘பெரிய கிருத்திகை’, ஆடி மாதத்தில் வரும் ‘ஆடிக் கிருத்திகை’ ஆகும். தை மாதத்தில் வரும் காா்த்திகை (கிருத்திகை) நட்சத்திரம் அன்று, விரதம் இருந்து கந்தவேலை வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம்
தை மாதத்தில் வரும் பவுர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தை ‘தைப்பூசம்’ என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவபெருமான், நடராஜராக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் `தைப்பூசம்’ என்று சொல்லப்படுகிறது. அதே போல் பார்வதிதேவி, முருகப் பெருமானுக்கு சக்திவேலை வழங்கிய நாளும் தைப்பூசம் என்கிறார்கள்.
தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரியவர். அறிவுக் கடவுள் என்று அவர் போற்றப்படுகிறார். எனவே, பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி அமையும் மாதமான தை மாதத்தில் தைப்பூச தினத்தன்று புண்ணியத் தீர்த்தங்களில் நீராடினால், அறிவாற்றல் பெருகும்.
தை அமாவாசை
மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு, தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்ளும் முக்கியமான தினங்களில், தை அமாவாசையும் ஒன்று. அமாவாசை தினங்களில் ‘ஆடி அமாவாசை’, ‘மகாளய அமாவாசை’, ‘தை அமாவாசை’ ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. தை அமாவாசை அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் முன்னோர் வழிபாடு செய்வார்கள். இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.
ரத சப்தமி
தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி ‘ரத சப்தமி’ அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி நீங்கும்.
பீஷ்மாஷ்டமி
ரதசப்தமிக்கு அடுத்த நாள், அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை ‘பீஷ்மாஷ்டமி’ என்பர். 58 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், வைகுண்ட பதவியை அடைந்த தினம் அது. வேதம் படித்த வித்யார்த்திகள் அனைவரும் மந்திர ரூபமாக பிதாமகருக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த பாக்கியத்தைக் கொடுக்கும். தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் பிதாமகருக்கு தர்ப்பணம் செய்யலாம். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும், நம் முன்னோர்களுக்காக பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) முதல் அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் 13-ந்தேதி வரையிலான மார்கழி மாதம் முழுவதுமாக தினமும் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. மேலும் மதியம் 12 மணிக்கு நடைசாத்தப்பட்டது. மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி தை மாதம் பிறந்தது.
இதனையொட்டி வழக்கமான நேரத்திற்கு நடைதிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினையொட்டி வழிபாடு தலங்கள் மூடப்பட்டது. இந்த நிலையில் நாளை 19-ந்தேதி(புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது.
அதாவது வழக்கப்படி(மார்கழி மாதத்தை தவிர்த்து), தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்படும். பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடைசாத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது. இத்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்...
இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.
இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் இது.
சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலைகள், ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை.
முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.
ஆறுமுகப்பெருமானுக்கு, தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தல பிரம்மபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும்.
இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாள் பிரம்மோற்சவமாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால், சிம்மவர்மன் என்ற மன்னன் சிங்க முகத்தைப் பெற்றான். இதையடுத்து அந்த மன்னன், தினமும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் வேலவனை தரிசித்து வந்தான். இதையடுத்து ஒரு தைப்பூச நாளில், அவனுக்கு காட்சியளித்த முருகப்பெருமான், மன்னனின் முகத்தை மனித முகமாக மாற்றி விமோசனம் அளித்தார்.
இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.
ஆறுமுகன் சிற்பத்தின் கதை
முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் உள்ளதுபோலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். அப்போது உளி பட்டு அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டு, சிற்பிக்கு கண்பார்வை வந்தது என்பது இத்தல சிறப்பு.
தல வரலாறு
படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலை அவரிடமே ஒப்படைக்கக் கூறினார். ஆனால் பிரணவப் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று முருகன் மறுத்து விட்டார். இதையடுத்து சிவன், “அப்படியானால், பிரணவத்தின் பொருளை நீயே பிரம்மனுக்கு எடுத்துரைத்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்து விடு” என்று கூறினார். இதையடுத்து பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்தார், முருகப்பெருமான். இதையடுத்து பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது.

முருகனுக்கு உகந்த வழிபாடுகளில் தைப்பூசமும் ஒன்று. முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச வரலாற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.
தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழ கான குழந்தைகளாயின.
கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார். அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.