என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    50 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து விநோத முறையில் வழிபாடு செய்து வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து விநோத முறையில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி, மீன், கருவாடு, முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பெட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோவிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர்.

    கோவில் பூசாரி வாயை கட்டிக் கொண்டு பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்தார்.

    பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
    புதன்கிழமை விரதம் இருப்பவர்கள் புதன்கிழமை விசாக நட்சத்திரத்தன்று புதன் விரதம் தொடங்கி 21 புதன்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு.
    புதன்கிழமை நவகிரகங்களில் புதன் வழிபடக் கூடிய நாள். புதன் பகவான் மனிதர்களுக்கு சுகபோகங்களை அளிக்கும். திருமால் அம்சம் கொண்டவராக இருப்பவர். புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வச் சேர்க்கை கிடைக்கப்பெறுவர்.

    தொழில், வியாபாரத்திற்கு உரிய காரகனாக புதன் இருப்பதால் தொழில் வியாபாரம் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி புகழ் உண்டாகும். புதன் அறிவாற்றலுக்கு அதிபதி என்பதால் இவரை விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.

    புதனுக்குரிய நிறம் பச்சை. இன்றைய தினம் சமையலில் பச்சை பயறை சமைப்பது நல்லது. பச்சை நிறம் கொண்ட காய்கறி, கீரைகளை சமைக்கலாம். புதன்கிழமை விரதம் இருப்பவர்கள் புதன்கிழமை விசாக நட்சத்திரத்தன்று புதன் விரதம் தொடங்கி 21 புதன்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு. இன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து முடித்து உங்கள் வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து பீடத்திற்கு முன்பாக அரிசிமாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும்.

    இக்கோலத்தின் நடுவில் கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து அதற்கு வாசமுள்ள பூக்களை சாற்றி, புது பச்சை நிறத் துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாக வைக்கலாம். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற ஆடை அணிந்து நெய்தீபம் ஏற்றி சந்தன மணம் கொண்ட பத்திகளை கொளுத்தி புதன் பகவானுக்கு உரிய மந்திரங்கள் பாராயணம் செய்து புதன் பகவானுக்கு பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.

    புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்வது சிறப்பு. காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் பூஜை செய்து பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும்.

    பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது. உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி, புதன் பகவானின் ஆசிகளைப் பெற்றுத் தரும். இந்த தானத்தை புதன் கிழமை, புதன் ஓரையில் வழங்குவது மிகவும் விசேஷமானது. காலை 6 - 7 மதியம் 1-2 தானம் செய்ய ஏற்ற நேரம் ஆகும்.
    தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம்தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
    சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழரின் முதன்மை அமைச்சராக இருந்தவர் அன்பில் அநிருத்தராய பிரம்மராயர். அவரது சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள மேல அன்பில் கிராமத்தில் புகழ் பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4-வது தலமாக இது விளங்குகிறது.

    ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று இந்த கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. ஆனால் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சில காரணங்களால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.வி.சம்பத் என்பவர் மூலமாக ரூ.90 லட்சம் மதிப்பில் இலுப்பை மரங்களை கொண்டு 12 அடி 10 அங்குலம் நீளம், 12 அடி 10 அங்குலம் அகலம், 12 அடி 10 அங்குலம் உயரம் என்ற அளவில் சுமார் 20 டன் எடையில் புதிய மரத்தேர் செய்யப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல் கோவிலை சுற்றி வெளிப்பிரகாரத்தில் 984 அடி நீளத்திற்கு புதிய தேரோட்ட பாதை அமைக்கும் பணி ரூ. 98 லட்சம் மதிப்பில் இந்திய கலாச்சார மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் 100 சதவீதம் முடிவுற்ற நிலையில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம் காலை 6 மணிக்கு நடைபெற்றது.

    இந்த புதிய தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மேல அன்பில் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங் கேற்றனர்.

    தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம்தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

    இந்தக் கோவிலில் தேக்கு மரத்தில் புதிய கொடி மரமும் நன்கொடையாளர் சதீஷ் வரதராஜன் என்பவர் மூலம் ரூ.9.90 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது. புதிய கொடிமரத்துக்கு அடுத்த மாதம் மூன்றாம் தேதி கருங்கல் பீடத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 300 ஆண்டுகளுக்குப் பின்னர் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் தேர் வெள் ளோட்டம் நடைபெற் றது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, முறப்பநாடு என்ற ஊர்.
    திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, முறப்பநாடு என்ற ஊர். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது தென்பகுதியில் உள்ள நவ கயிலாயத் தலங்களில் ஒன்றாகும். அதோடு, இந்த ஆலயம் நவக்கிரகங்களில் குரு பகவானுக்குரிய தலமாகவும் விளங்குகிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை அளிக்கும். முருகப்பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட சூரபதுமன் வழியில் வந்த அசுரன் ஒருவன், முனிவர்களுக்கு பெருந்தொல்லை கொடுத்து வந்தான்.

    அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி, முனிவர்கள் பலரும் இத்தல இறைவனின் முன்பாக முறைப்படி நின்று முறையிட்டனர். அதன்பேரில் சிவபெருமான் முனிவர்களுக்கு அருள்புரிந்தார். இதனால் இத்தலம் ‘முறைப்படு நாடு’ என்று வழங்கப்பட்டு, பின்னர் ‘முறப்பநாடு’ என்றானது.

    இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், தனக்கு குதிரை முகத்தோடு பிறந்த பெண் குழந்தையின் நிலையைக் கண்டு கவலை கொண்டான். பல திருக்கோவில்களுக்குச் சென்று வழிபட்ட மன்னன், தன் மகளோடு இந்த ஆலயத்திற்கு வந்து, தட்சிண கங்கை தீர்த்தத்தில் நீராடினான்.

    அப்போது குதிரை முகம் நீங்கி, அழகான முகத்தை அந்தப் பெண் குழந்தை பெற்றது. இத்தலத்தில் உள்ள நந்தியம்பெருமான், அந்தக் குழந்தையின் குதிரை முகத்தை தான் ஏற்றுக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தலத்தில் சிவபெருமானுக்கு எதிரே உள்ள நந்தி சிலை, குதிரை முகத்துடன் காணப்படுகிறது.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும்.
    கரூர் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் கம்பம் ஆற்றில் விடும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியானது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவாகும். இந்த விழாவின்போது கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பக்தர்கள் பூக்களால் ரதங்களை தயார் செய்து மாரியம்மனை அலங்கரித்து மின் விளக்குகள் ஜொலிக்க அலங்கார ரதத்தின் முன்பு நாதஸ் வரம், தவில், பேண்டு வாத்தியங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தியபடி வருவார்கள்.

    அப்படி வரும் போது அம்மன் பல்வேறு அவதாரங்கள் எடுத்தது போல் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த காட்சியை காண கண் கோடி வேண்டும். கரூர் பகுதியில் இருந்து 46 பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும்.

    கொண்டு வந்த பூக்களை கோவிலில் வழங்கி பக்தர்கள் சாமிதரிசனம் செய்வார்கள். அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். இந்த விழாவை காண பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கரூரை நோக்கி படையெடுப்பார்கள்.
    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசாகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வைகாசி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதையும் படிக்கலாம்..சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுவதற்கான காரணங்கள்
    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி!
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!
    ஓம் அரசிளங்குமரியே போற்றி!
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!
    ஓம் அமுதநாயகியே போற்றி!
    ஓம் அருந்தவநாயகியே போற்றி!
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி!
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி!
    ஓம் ஆதியின் பாதியே போற்றி!
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி!
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி!
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!
    ஓம் இமயத்தரசியே போற்றி!
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி!
    ஓம் ஈசுவரியே போற்றி!
    ஓம் உயிர் ஓவியமே போற்றி!
    ஓம் உலகம்மையே போற்றி!
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி!
    ஓம் ஏகன் துணையே போற்றி!
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி!
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி!
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி!
    ஓம் கற்பின் அரசியே போற்றி!
    ஓம் கருணை ஊற்றே போற்றி!
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி!
    ஓம் கனகாம்பிகையே போற்றி!
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி!
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி!
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி!
    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி!
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி!
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி!
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி!
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி!
    ஓம் சக்தி வடிவே போற்றி!
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!
    ஓம் சிவயோக நாயகியே போற்றி!
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி!
    ஓம் சிங்காரவல்லியே போற்றி!
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி!
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி!
    ஓம் சேனைத்தலைவியே போற்றி!
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி!
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய் போற்றி!
    ஓம் ஞானாம்பிகையே போற்றி!
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி!
    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி!
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி!
    ஓம் திருவுடையம்மையே போற்றி!
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி!
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
    ஓம் திருநிலை நாயகியே போற்றி!
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி!
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி!
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி!
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி!
    ஓம் தையல் நாயகியே போற்றி!
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி!
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி!
    ஓம் நல்ல நாயகியே போற்றி!
    ஓம் நீலாம்பிகையே போற்றி!
    ஓம் நீதிக்கரசியே போற்றி!
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி!
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி!
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி!
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!
    ஓம் பசுபதி நாயகியே போற்றி!
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி!
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி!
    ஓம் பார்வதி அம்மையே போற்றி!
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!
    ஓம் பெரிய நாயகியே போற்றி!
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி!
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி!
    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!
    ஓம் மழலைக்கிளியே போற்றி!
    ஓம் மனோன்மணித்தாயே போற்றி!
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி!
    ஓம் மாயோன் தங்கையே போற்றி!
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி!
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி!
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி!
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி!
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி!
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி!
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி!
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி!
    ஓம் வேதநாயகியே போற்றி!
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி! போற்றி!!
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி! போற்றி!!
    தேர்த்திருவிழாவையொட்டி சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் -விநாயகர் கோவில் உள்ளது. இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த 18-ந் தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா 25-ந்தேதி முதல் வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்கள் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா முன்பு சூலக்கல் கிராமத்தை சுற்றியுள்ள 18 கிராமங்களிலுள்ள கோவில்களிலும் 26-ந்தேதி கிடாவெட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடையும் என்பதால் நேற்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளித்தார்.

    மேலும், பெண்கள் கிராமங்களில் மடிப்பிச்சை எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் செஞ்சேரிமலையை சேர்ந்த ஆண் பக்தர் 30 அடி நீல அலகு குத்தி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இதேபோல் மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் ெசலுத்தினார்கள்.

    கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில்18 கிராம பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மஞ்சள் அலங்காரத்தில் இருந்த சூலக்கல் மாரியம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் -விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, செயல் அலுவலர் சுந்தரராசு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோவில் கரூர் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது.
    வரலாற்று புகழ்பெற்ற பழமையான சோழர்கால நகரம் கரூர். சோழர்களும், மதுரை நாயக்க மன்னர்களும், கடைசியாக ஆங்கிலேயரும் கரூரை ஆண்டனர். முற்காலத்தில் கரூர் தங்க நகை வேலைப்பாடுகளுக்கும் வைரம் பட்டை தீட்டுவதற்கும் வர்த்தக மையமாகவும், நகரமாகவும் விளங்கியுள்ளது. அந்த நாட்களில் ரோம் நகரில் இருந்து கரூரில் தங்கம் இறக்குமதியாகி உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மா இங்குதான் தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்பது ஐதீகம். வடக்கே நாமக்கல், தெற்கே திண்டுக்கல், மேற்கே திருச்சி, கிழக்கே ஈரோடு என பல மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது கரூர்.

    கல்யாண வெங்கடராமசாமி கோவில்

    தென் திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடராமசாமி கோவில் கரூர் தாந்தோணி மலையில் சிறு குன்றின்மேல் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. கரூர் நகரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள இக்கோவிலுக்குப் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். அந்த அளவுக்கு இது தெய்வீகம் ததும்பும் ஆலயம்.

    பசுபதீஸ்வரர் கோவில்

    அதேபோல் புண்ணிய சிவத்தலங்கள் ஏழில் ஒன்று கரூர் பசுபதீஸ்வரர் கோவில். இந்தப் பெருமையைப் தேடித்தந்தது பசுபதீஸ்வரர் கோவில். இங்கு சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன் பிரமாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்க மாதா சிற்பமும் சிறந்த வேலைப்பாடுகளுடன் தனித்தன்மை கொண்டதாக திகழ்கிறது.

    மாரியம்மன் கோவில்

    புகளுர் வேலாயுதம்பாளையம் குன்றில் உள்ள கோவிலில் சுப்ரமணியர் எழுந்தருளி உள்ளார். இது கரூருக்கு வடமேற்கில் அமைந்துள்ளது. கரூரின் இதயப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பெரும் புகழ்பெற்றது. இந்த அம்ம னுக்கு வருடா வருடம் மே மாதம் சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கும்பம் எடுப்பார்கள். இந்த கும்பங்கள் கோவிலில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்து செல்லும் வண்ணமயமான காட்சி காண் போரை மெய்சிலிர்க்க வைக்கும். இறைவனுக்கு கும்பம் எடுப்பது தமிழர்களிடம் ஆதி முதல் தொடர்ந்து வரும் ஆன்மிகச்சிறப்பு.

    சைவமும், வைணவமும் சம கால எழுச்சியுடன் கோவில் கொண்டுள்ள இடம் கரூர். பெருமாள், சிவன், அம்மன் கோவில்கள் கரூருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும் தலங்கள் என்பதில் ஐயமில்லை. தொழில் நகரில் கால் பதிக்கும் யாரும் இந்த கோவில்களுக்கு சென்று தங்கள் தொழில் சிறந்து தளைத்தோங்க வேண்டிய பின்னரே தடம் பதித்த வர லாறும் உண்டு என்கிறார்கள் இங்கு வழிபட்டோர் பலர்.
    புனித உபகார அன்னை ஆலய திருவிழாவில் தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது.
    காவல்கிணறு இயேசுவின் திருஇருதய ஆலயம் புனித உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் கொடியேற்றினார்.

    ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு திருயாத்திரை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 8-ம் திருவிழா அன்று காலை திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெற்றது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் உறுதி பூசுதல், மாலை 3 மணிக்கு தேர்பவனி, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் திரளானவர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் ஆரோக்கிய ராஜ், வினித்ராஜா, பங்கு மேய்ப்பு பணி குழுவினர் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.
    காரைக்காலில் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் புராண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    காரைக்காலை அடுத்த அம்ப கரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகிஷ சம்ஹார பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது தேவர்களையும், மக்களையும் கொடுமை செய்த அசுரன் அம்பரனை பத்ரகாளியம்மன் சம்ஹாரம் செய்த புராண நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்பாள் புஷ்ப பல்லக்கு வீதியுலா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மதியம் 12 மணிக்கு மகிஷ சம்ஹார நினைவு வைபவம் கோவிலில் நடைபெற்றது.

    பின்னர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷ பாதிப்பு உள்ளது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்பட காரணம் பலர் சர்ப்பங்களை துன்புறுத்தியவர்கள், கொலை செய்தவர்கள், களவியலில் ஈடுபடும் போது பார்த்தவர்கள், களவியலில் ஈடுபடும் போது பிரித்தவர்கள் என்று பலவிதமான காரணங்களை கூறுகிறார்கள். இதில் 10 சதவீதம் உண்மை இருக்கலாம்.

    உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்பத்தை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோ‌ஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.

    காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கோவில் சொத்தை அபகரிப்பது பசுக்களை, விலங்குகளை வதைப்பது இயற்கையை மாசுபடுத்துவது நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.
    ×