என் மலர்tooltip icon

    வழிபாடு

    புதிதாக செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடந்த காட்சி.
    X
    புதிதாக செய்யப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடந்த காட்சி.

    லால்குடி அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம்

    தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம்தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
    சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழரின் முதன்மை அமைச்சராக இருந்தவர் அன்பில் அநிருத்தராய பிரம்மராயர். அவரது சொந்த ஊரான லால்குடி அருகே உள்ள மேல அன்பில் கிராமத்தில் புகழ் பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் 4-வது தலமாக இது விளங்குகிறது.

    ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று இந்த கோவிலில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வந்தது. ஆனால் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சில காரணங்களால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.வி.சம்பத் என்பவர் மூலமாக ரூ.90 லட்சம் மதிப்பில் இலுப்பை மரங்களை கொண்டு 12 அடி 10 அங்குலம் நீளம், 12 அடி 10 அங்குலம் அகலம், 12 அடி 10 அங்குலம் உயரம் என்ற அளவில் சுமார் 20 டன் எடையில் புதிய மரத்தேர் செய்யப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல் கோவிலை சுற்றி வெளிப்பிரகாரத்தில் 984 அடி நீளத்திற்கு புதிய தேரோட்ட பாதை அமைக்கும் பணி ரூ. 98 லட்சம் மதிப்பில் இந்திய கலாச்சார மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணிகளும் 100 சதவீதம் முடிவுற்ற நிலையில் இன்று புதிய தேர் வெள்ளோட்டம் காலை 6 மணிக்கு நடைபெற்றது.

    இந்த புதிய தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மேல அன்பில் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங் கேற்றனர்.

    தேர் வெள்ளோட்டத்தை தொடர்ந்து அடுத்த மாதம் 12-ம்தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. முன்னதாக அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

    இந்தக் கோவிலில் தேக்கு மரத்தில் புதிய கொடி மரமும் நன்கொடையாளர் சதீஷ் வரதராஜன் என்பவர் மூலம் ரூ.9.90 லட்சத்தில் செய்யப்பட்டுள்ளது. புதிய கொடிமரத்துக்கு அடுத்த மாதம் மூன்றாம் தேதி கருங்கல் பீடத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 300 ஆண்டுகளுக்குப் பின்னர் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோவில் தேர் வெள் ளோட்டம் நடைபெற் றது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×