என் மலர்
- கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது.
- இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸ் அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.
ஆனால் வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனையை விதித்தது.
இத்தானில் படம் ஜனவரி 14 வெளியாகுமா என்ற கேள்வி எழுத்தது. இந்நிலையில், அனைத்து தடைகளும் கிளியரானதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், 'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'ராஜாசாப்' திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.
இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ராஜா சாப் படம் வெளியாகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆன நிலையில், படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அதன்படி, ராஜா சாப் படம் உலகளவில் ரூ.183 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைவர் தம்பி தலைமையில் படத்தின் டிரெய்லர் வெளியானது.
- மாதவிடாய் எனக்கூறியும் உடை மாற்ற அனுமதிக்கவில்லை
- நயன்தாரா ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்
மரியான் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'இன்னும் கொஞ்ச நேரம்' பாடல் காட்சிக்காக கடலில் நீண்ட நேரம் நனைந்தபடி நடித்தபோது, உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்தச் சமயத்தில் தான் மாதவிடாய் காலத்தில் இருந்ததால் மிகுந்த அவதிக்குள்ளானதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் படப்பிடிப்பு தளத்தில் மூன்றே பெண்கள் மட்டுமே இருந்ததாகவும், மாதவிடாய் எனக்கூறியும் உதவியற்ற நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 'மலையாள படப்பிடிப்பு தளத்திலும் இப்படித்தான் இருக்கும். குறைவான அளவே பெண்கள் இருப்பார்கள். அதனால் எந்த படப்பிடிப்பு தளத்திலாவது பெண்களை அதிகம் பார்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிடுவேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது ஆவணப்படத்திற்காக தனுஷிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து நயன்தாரா வெளியிட்ட திறந்த கடிதத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த நடிகைகளில் முக்கியமான ஒருவர் பார்வதி திருவோத்து. இந்த ஆதரவு தொடர்பாக அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டபோது நயன்தாராவைப் போன்ற ஒரு சுய ஆளுமை திறன்கொண்டவர்கள் ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
தனுஷ், பார்வதி திருவோத்து நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் மரியான். பரத் பாலா இப்படத்தை இயக்கியிருந்தார்.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதனால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.
வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது.
அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
- உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைதொடர்ந்து, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
இந்நிலையில், தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில்," ஜன நாயகன் சான்றிதழ் தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" என தணிக்கை வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரையரங்குகள் முன்பு குவிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் பேனருக்கு பாலாபிஷேகம், இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'பராசக்தி' படத்தை பார்க்க அப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் மற்ற நடிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததால் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
முன்னதாக 'பராசக்தி' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க தாமதம் ஆனதால் திட்டமிட்டபடி இப்படம் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், நேற்று முன்தினம் உலகம் முழுவதும் 'பராசக்தி' வெளியானது.
பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், பராசக்தி திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.51 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது.
- இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்
ஆஸ்கார் விருதுகளுக்கு அடுத்தப்படியான முக்கிய விருதுகளில் ஒன்று கோல்டன் குளோப் விருதுகள். சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனால் வழங்கப்பட்டு வரும் விருதுவிழா இந்த ஆண்டு அதன் 83 வது பதிப்பை எட்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைக் கௌரவிக்கும் இந்த விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 27 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் திரைப்படங்களுக்கான 14 விருதுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான 13 விருதுகள் அடங்கும். மேலும் முதல் முறையாக சிறந்த பாட்காஸ்ட் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் "One Battle After Another" படம் அதிக விருதுகளை தட்டிச்சென்றது. "Adolescence" தொலைக்காட்சி பிரிவில் நான்கு விருதுகளை வென்றது, மேலும் "Hamnet" மற்றும் "Sinners" ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளைப் பெற்றன. Hamnet சிறந்த திரைப்பட விருதைப் பெற்றது. ஆங்கிலம் அல்லாத பிறமொழிகள் படத்தில் The Secret Agent விருதை வென்றது. Sinners சிறந்த வசூல் சாதனையில் விருதுபெற்றது. சிறந்த அனிமேஷன் பிரிவில் KPop Demon Hunters விருதை வென்றது. சிறந்த இயக்குநர் விருதை பால் தாமஸ் ஆண்டர்சன் பெற்றறார். இந்த விருதுவிழாவில் இந்தியப் பிரபலங்களில், பிரியங்கா சோப்ரா மட்டுமே கலந்துகொண்டார்.
- மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார்
- அடுத்தாண்டு கோடை விடுமுறையில் மூன்வாக் படம் வெளியாகவுள்ளது.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.
'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மூன்வாக் படத்தின் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும் நாளை (ஜனவரி 13) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களின் முதல் 1 நிமிட இடம்பெற்ற மினி கேசட் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. 'மூன்வாக்' படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'.
- துரந்தர் படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆகிறது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 39 நாட்கள் ஆன நிலையில், துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, துரந்தர் இன்றுடன் உலகளவில் ரூ.1296 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும், இந்தியளவில் ரூ.1011.73 கோடியும், மற்ற நாடுகளில் ரூ.284.10 கோடியும் வசூலாகியுள்ளது.
- 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை
- 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.
- அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்
- கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








