என் மலர்
நீங்கள் தேடியது "caveat pettion"
- வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இந்த மனு வரும் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டமாக உள்ளது.
இதற்கிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் வரும் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த தீர்ப்பும் வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசுடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவையை சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்க தடை விதித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரொக்கப்பரிசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசு தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து யாராவது மேல்முறையீடு செய்தால், மாநில அரசு தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. #PongalCashGift #CaveatPetition






