என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல்
    X

    வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கேவியட் மனு தாக்கல்

    • வக்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மனு வரும் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சட்டமாக உள்ளது.

    இதற்கிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் வரும் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் எந்த தீர்ப்பும் வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×