என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parvathy Thiruvothu"

    • மாதவிடாய் எனக்கூறியும் உடை மாற்ற அனுமதிக்கவில்லை
    • நயன்தாரா ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்

    மரியான் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 'இன்னும் கொஞ்ச நேரம்' பாடல் காட்சிக்காக கடலில் நீண்ட நேரம் நனைந்தபடி நடித்தபோது, உடை மாற்ற அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்தச் சமயத்தில் தான் மாதவிடாய் காலத்தில் இருந்ததால் மிகுந்த அவதிக்குள்ளானதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அந்தப் படப்பிடிப்பு தளத்தில் மூன்றே பெண்கள் மட்டுமே இருந்ததாகவும், மாதவிடாய் எனக்கூறியும் உதவியற்ற நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 'மலையாள படப்பிடிப்பு தளத்திலும் இப்படித்தான் இருக்கும். குறைவான அளவே பெண்கள் இருப்பார்கள். அதனால் எந்த படப்பிடிப்பு தளத்திலாவது பெண்களை அதிகம் பார்த்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிடுவேன்' என்றும் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக தனது ஆவணப்படத்திற்காக தனுஷிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து நயன்தாரா வெளியிட்ட திறந்த கடிதத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த நடிகைகளில் முக்கியமான ஒருவர் பார்வதி திருவோத்து. இந்த ஆதரவு தொடர்பாக அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டபோது நயன்தாராவைப் போன்ற ஒரு சுய ஆளுமை திறன்கொண்டவர்கள் ஆதாரமின்றி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். 

    தனுஷ், பார்வதி திருவோத்து நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் மரியான். பரத் பாலா இப்படத்தை இயக்கியிருந்தார்.

    • முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.
    • மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இன்று 2-ம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

    வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.





     


    • மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ்.
    • இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ். இவர் ஃபரைடே, லா பாயிண்ட் மற்றும் சேரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார். இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படம் இரண்டு வருடத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடி ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படம் பிரபல ஓடிடி தளமான மனோரமா மாக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

    இப்படம் 5 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. படத்தின் கதையை அர்ச்சனா வாசுதேவ் எழுதியுள்ளார். இப்படத்தில் ஊர்வசி, ஐஷ்வர்யா ராஜேஷ், பார்வதி திருவோத்து, லிஜோமோல் ஜோஸ் மற்றும் ரம்யா நம்பீசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×